Dr.அலிசினா தன்னை ஒரு ஈரானிய முஸ்லீம் என்று அறிமுகம் செய்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமையும், அதன் நிறுவனர் முஹம்மதுவையும் அவரது போதனைகளையும் www.faithfreedom.org மூலம் மிகக் கடுமையாக விமர்சனங்களையும் கட்டுரைகளையும், விவாதங்களையும் வெளியிட்டுவருகிறார்.
http://iraiyillaislam.blogspot.com/2012/08/blog-post_28.html
நூல் படிக்க இணைப்புகள் தமிழில் ஆங்கிலத்தில்
நூல் படிக்க இணைப்புகள் தமிழில் ஆங்கிலத்தில்
முஹம்மதுவின்மீதான தனது குற்றச்சாட்டுகளை மறுத்து நிறுவுபவர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையைஅறிவித்துள்ளார். இந்த வினாடிவரை, நூற்றி ஐம்பது கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிலிருந்து ஒருவராலும் அலிசினாவின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.முஹம்மது, கடவுளின் தூதரென்பதில் திடமான நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமியர்கள் எவரேனுமிருந்தால் சவாலை எதிர்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கற்றறிந்த அறிஞராக இல்லையென்றாலும் இப்பொழுதும் பரிசை வெல்லமுடியும். அலிசினா அவர்களுடன் விவாதம் செய்ய ஒரு அறிஞரை நீங்கள் சம்மதிக்கச் செய்யவேண்டும். அவர், முஹம்மதின் மீதானஅலிசினா அவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து நிறுவ வேண்டும் அல்லது முஹம்மது கடவுளின் தூதர்தான் என்பதை நிறுவ வேண்டும்.
முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிற்கு முஸ்லீம்கள் உண்மையை உணர்ந்து இஸ்லாமைவிட்டு வெளியேறுகின்றனர். இன்று லட்சக்கணக்கான முன்னாள் முஸ்லீம்கள் இஸ்லாமின் (மறைக்கப்பட்ட) உண்மைகளை கேள்வி கேட்கின்றனர். தங்களது விமர்சனங்களை உயிருக்கு அஞ்சாது முன்னெப்போது இருந்திராத அளவிற்கு உலக அளவில் வெளியிடுகின்றனர். முன்னாள் முஸ்லீம்களின் இந்த கேள்விகள் பதிலளிக்கப்படவில்லையெனில் இஸ்லாமின் வீழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானதே.
Dr.அலிசினாவின் சவால்
Dr.அலிசினாவின் சவால்
இந்த தளத்தை(www.faithfreedom.org) நீக்கிவிடும்படி சில நேரம் என்னை கெஞ்சுகிற, சில நேரம் எனக்கு கட்டளையிடுகிற கோபமான முஸ்லிம்களிடமிருந்து எனக்கு பல மின்னஞ்சல்கள் வருகின்றன. கோரிக்கை வைப்பது, பயமுறுத்துவது ஆகிய இரண்டையும் வன்முறையை நாடும் மன நோயின்(psychopathology) அறிகுறிகள் என்றே நான் கருதுகிறேன். பயமுறுத்துவதை கொண்டு வாதிடுவது (Argumentum ad baculum ), பரிதாபத்தை கொண்டு வாதிடுவது( argumentum ad misericordiam) ஆகிய இரண்டுமே தர்க்க ரீதியில் தவறான வாதங்களாகும்.
இந்த தளத்தை நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, இதை நான் நீக்கிவிடவேண்டும் என்று விரும்பினாலோ, பயமுறுத்துபவராகவோ அல்லது பாதிக்கப்பட்டவராகவோ செயல்படுவதற்கு பதிலாக, முகம்மதுவுக்கு எதிரான என்னுடைய குற்றசாட்டுகளை தர்க்கரீதியாக தவறென்று நிரூபியுங்கள். நான் இந்த தளத்தை நீக்கிவிடுவதுமட்டுமல்ல, இஸ்லாம் உண்மையான மதம் என்று நான் வெளிப்படையாக அறிவித்துவிடுவேன். மேலும் 50,000 அமெரிக்க டாலர்களையும் வழங்குவேன்.
முஹம்மது இப்படிபட்டவராக இருந்தார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன் :
தன்னை மட்டுமே உயர்வாக எண்ணும் மன நோயாளி(narcissist)
பெண்களை வெறுப்பவர் (misogynist)
கற்பழிப்பவர் (rapist)
குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்பவர் (pedophile)
அதீத பாலுறவு வெறி கொண்டவர் (lecher)
கொடூரமாக வேதனை செய்பவர் (torturer)
கூட்டு கொலை செய்பவர் (mass murderer)
தனி நபர் வழிபாட்டு தலைவர் (cult leader)
ஆளை அனுப்பி கொலை செய்பவர் (assassin)
பயங்கரவாதி (terrorist)
பைத்தியக்கார்ர் (madman)
கொள்ளை அடிப்பவர் (looter)
நான் பல முஸ்லிம்களோடு விவாதம் புரிந்துள்ளேன். இஸ்லாமை அவர்கள் பாதுகாப்பதை இரண்டு வகைகளாக சுருக்கலாம் :
அ. முஹம்மதின் குற்றங்களை பற்றிய கதைகளை விவரிக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிராகரிப்பது (உதாரணம் : அடிபணிந்தோர்களின் (Submitters) தலைவரான எடிப் யுக்செல் என்பவருடனான விவாதம்)
ஆ. சார்பு அறவியல்(moral relativism) மற்றும் சூழ்நிலைக்கேற்ற ஒழுக்கநெறிகள்(situational ethics), எ.கா., "அந்த நாட்களில், குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்வது, ஆளை அனுப்பி கொலை செய்வது, கற்பழிப்பு, கொள்ளையிடுவது, படுகொலை செய்வது, பொய்யுரைப்பது, என்பவை எல்லாம் சாதாரண வழக்கங்கள், எனவே மற்ற எல்லோரும் செய்ததையே அவரும் செய்ததால் முஹம்மது குற்றமற்றவர் என்பதே". முகம்மதுவுக்கு கண்டனம் தெரிவிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உரிமை பாராட்டுவதற்காக, தங்க விதியின் ஏற்பு தன்மையையே கேள்விக்குறியாக்கும் அளவுக்குக்ம் முஸ்லிம்கள் செல்கின்றனர். மற்ற வார்த்தைகளில், எது நன்மை, எது தீமை என்பதை யார் கூறமுடியும்? அதை முடிவு செய்வது இறைவனின் தூதரை சார்ந்தது.(உதாரணம் : யமின் ஜகரியா உடனான விவாதம்).
இஸ்லாமின் அரணாக முஸ்லிம்கள் வைப்பது முதன்மையான இந்த இரண்டு வாதங்களே. பகுத்தறியும் எந்த நபரும் அவைகள் தர்க்கரீதியாக தவறான வாதங்கள் என்பதை காண்பார்.
இந்த குற்றசாட்டுகள் மறுக்கமுடியாதவை. அவைகள் இஸ்லாமிய மூல ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளன, அந்த வகையில் வாக்குமூலத்தை போன்று அவை நன்மையானவை என்று நீங்கள் எளிதாக அவற்றை பொய்யென்று நிரூபிக்கமுடியாது. ஒரு குற்றவாளியை, அவன் வாக்குமூலம் கொடுத்தபிறகு, குற்றமற்றவர் என்று நீங்கள் விடுவிக்க முடியாது, புத்திசுவாதீனமின்மை என்று நீங்கள் கோரிக்கை வைத்தால் ஒழிய, இதுதான் என்னுடைய நோக்கமும்.
முஸ்லிம்கள் அடிக்கடி கேட்கின்றனர் : முகம்மதுவுக்கும் இஸ்லாமிற்கும் எதிரான உன்னுடைய குற்றசாட்டுகளை பொய்யென்று நிரூபிக்கும் முயற்சி வெற்றி அடைந்ததா, இல்லையா என்பதை யார் தீர்ப்பு வழங்குவது? வாசகர்களே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள். ஒரு அணியினர் மற்ற அணியினருக்கு பயப்படாமல் இரண்டு வாதங்களும் முன்வைக்கப்படும்போது, எந்த அணியினர் சரியானவர்கள் என்பதை காண்பது கடினமல்ல. இந்த தளத்தில் விவாதங்களை வெளியிடுவேன். என் எதிரணியினர் அவைகளை எந்த இஸ்லாமிய தளத்திலும் வெளியிடும்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். நேருக்கு நேரான வாதங்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை தயவுகூர்ந்து குறித்துக்கொள்ளுங்கள். விவாதங்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.
மூல ஆசிரியர் : அலி சினா
தமிழாக்கம் : ஆர்ய ஆனந்த்
No comments:
Post a Comment