மீனாட்சிபுரம் மதம் மாற்றம் அதனால் பயன் இல்லை என்பதை காசிற்காக மதம் மாறியோரை பழைய முஸ்லிம்கள் ஒதுக்கும் வரலாற்றை ஒரு முஸ்லிம் மாறியவரே எழுதிய நாவல்
"
கருப்பாயி என்கிற நூர்ஜஹான்"
மினாட்சிபுரம் ரஹ்மத் நகராகி 32 ஆண்டுகள் கடந்துவிட்டன. அம்மக்களின் சமூக நிலையைக் காலம் என்ன செய்திருக்கிறது? புத்தகத்திற்குள் போகலாம்.
காமாட்சிபுரத்தில் (மீனாட்சிபுரத்தில்) முதல் முதலாக மதம்மாறிய தேவேந்திரகுல வேளாளர் குடும்பங்களில் ஒன்று கருப்பசாமி என்பவரின் குடும்பம். மதமாற்றத்தை அடுத்து தம்பெயரை காதர் என்றும், தன் மகள் கருப்பாயியின் பெயரை நூர்ஜஹான் என்றும் மாற்றிக் கொண்டவர். தம் மகளை உயர்கல்வி படிக்க வைத்த இவரால் உரிய வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. காரணம், இவர் ‘நவ்முஸ்லீம்’ (புதிய இஸ்லாமியர்), அதுவும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திலிருந்து மதம்மாறியவர் என்பதுதான்.
தனக்கு மணம் முடிக்க மணமகனைத் தேடி அலையும் தந்தையின் துயரத்தைப் பொறுக்க இயலாது நாற்பது வயதைக் கடந்த அவரது மகள் நூர்ஜஹான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். மகளின் பிரிவைத் தாங்க இயலாத காதரும் அவரது மனைவியும் நஞ்சுகுடித்து இறந்து போகிறார்கள். காதரின் கொழந்தியாள் ‘பன்னீர்’ மதம் மாறாதவள். ஆனாலும் காதரின் மகள் நூர்ஜஹான் மீது அன்பைப் பொழிபவள். நூர்ஜஹானின் பிரிவைத் தாங்க இயலாது கிணற்றில் விழுந்து அவளும் தற்கொலை செய்து கொள்கிறாள்.
அடுத்தடுத்து நிகழும் இந்த நான்கு தற்கொலைகள், நாவலை வாசிப்பவனின் உள்ளத்தில் சோக உணர்வைத் தோற்றுவிக்கின்றன. நூர்ஜஹானின் தற்கொலை, அவளது பெற்றோர் மற்றும் சித்தி பன்னீரின் தற்கொலை, அவர்களது சவ அடக்கம் என அனைத்து நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. இந்த ஒரு நாள்தான் நாவல் நிகழும் காலமாகும். ஆனால் உரையாடல்கள் வாயிலாக முப்பதாண்டுகால நிகழ்வுகளையும், மதம் மாறியோர் எதிர்கொள்ளும் ஓர் முக்கியப் பிரச்சனையையும் இந்நாவல் பேசுகிறது.
தமது சாதி அடையாளத்தையும் துறந்து இஸ்லாத்தை தழுவியவர்களை அன்புடன் வரவேற்ற பரம்பரை இஸ்லாமியர்கள், திருமண உறவு என்று வரும்பொழுது தம் அடையாளத்தைத் துறக்க விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நவ்இஸ்லாமியர்களின் பூர்வீக சாதி அடையாளத்தை மறக்கவும் இல்லை. நவ்இஸ்லாமியர்களின் உரையாடல்கள் வாயிலாக இவ்வுண்மையை நாவலாசிரியர் ஆங்காங்கே பதிவு செய்து உள்ளார்.
‘//நவ்முஸ்லிமெல்லாம் ராவுத்தராயிட்டா அப்புறம் ராவுத்தர் என்னாவதுன்னு’ (பக்கம் 56) கேட்டு அசிங்கப்படுத்தினர்.//
மீனாட்சிபுரத்தில் 1960களிலேயே ஒரு முறை மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களின் சமூக நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ‘தாழ்த்தப்பட்டவன் கிறித்தவன் ஆனால், இன்னொரு தாழ்த்தப்பட்ட கிறித்தவர் தான் பெண் கொடுத்து, பெண் எடுக்கிறார். ஒரு நாடார் கிறித்தவர், தாழ்த்தப்பட்ட கிறித்தவர் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் தான் இம்முறை நாங்கள் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தோம். தீண்டத்தகாதவன் என்ற வித்தியாசம் இல்லை பாருங்கள்’ என்றார்கள்.
உண்மைதான். சாதியிடம் கிறித்தவ மதம் தோற்றுத்தான் போனது. நாட்டின் பிரதமரைக் கூட கைம்பெண் என்பதற்காக இடையில் திரை கட்டி முகத்தைப் பார்க்காமல் பேசியது இந்து மதம். பாதிரியார் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக கடவுளைக் கூட பார்க்காமல் கோவிலில் முதுகு திரும்பி உட்கார்ந்தது கிறித்தவ மதம்.
மீனாட்சிபுரம் சம்பவத்தில் திருமா ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார், அவர் விருப்பம் ஆய்வு செய்தார் வாங்கினார்
ஆனால் கீழவெண்மணி படுகொலைமுதல், முதுகுளத்தூர் கலவரம் முதல் பாபர் மசூதி இடிப்பு வரை ஏகபட்ட சம்பவங்கள் டாக்டர் பட்டம் வாங்க தயாராக இருக்கின்றன
ஆராய்ச்சி செய்யத்தான் யாருமில்லை, செய்துவிட்டு இருக்க போவதுமில்லை
ஆனாலும் மீனாட்சிபுரத்தில் தலித்துக்கள் மதம் மாறினார்கள் என்பதற்காக ஆராய்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய திருமா, அதே நெல்லைமாவட்டத்தின் கொடியங்குளம் படுகொலைகள் இன்னபிற சம்பவங்களுக்காக ஏன் டாக்டர் பட்டம் வாங்கவில்லை என கேட்க கூடாது
மீனாட்சிபுரம் சம்பவம் வாஜ்பாய் முதல் அன்றைய முதல்வர் ராமசந்திரன் வரை அலறியடித்து ஓடிவர செய்த மதமாற்ற சம்பவம் என்பதால் திருமாவின் ஆராய்ச்சி இருந்தது
மற்ற சம்பவங்களில் மதம் இல்லாமல் வெறும் சாதிமோதல் என்பதால் திருமாவிற்கு டாக்டர் அல்ல, கம்பவுண்டர் பட்டம் வாங்க கூட ஆசை இல்லை
No comments:
Post a Comment