Monday, October 26, 2020

சங்க இலக்கியத்தில் பண்டைத் தமிழரிடம் சதி - பெண்கள் உடன்கட்டை ஏறுதல்

 பண்டைத் தமிழரிடம் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். ணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும்.

புறநானூறு பாடல் 246:–

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.

பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

 பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத, பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள். சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவி யர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.

.... பெண்டிரும்

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!

என்று புறநானூற்றின் 62-ஆம் பாடல் சாற்றுகிறது.

தொல்காப்பியத்தின்

‘நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇ’

 (புறத்திணையியல், நூற்பா-19)

https://www.akavizhi.com/p/blog-page_11.html

வீராபாண்டியில் சதிக்கல் கண்டுபிடிப்பு. கணவன் இறந்தவுடன் மனைவியையும் உடன் கட்டை ஏற வைக்கும் சதியில் இறந்த மனைவியின் நினைவாக வைக்கப்படும் சதிக்கல் (சதிமாதா வழிபாடு) அது. கல்லின் மேற்புறம் சந்திரரும் - சூரியரும் இருந்தால் அது சொர்க்கத்தைக் குறிக்கும். சில கற்களில் கூடுதலாக ஏதேனும் ஒரு கடவுளின் சிற்பமும் இணைந்திருக்கும். கணவனோடு உடன் கட்டை ஏறும் பெண் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை சிற்பங்கள் விளக்குகின்றன. ஒரு வீரனின் மனைவி, அவன் உடலோடு சேர்த்து எரிக்கப்பட்டதன் நினைவாக நிறுவப்பட்ட கல் அது.


4 # கம்பம் அருகிலுள்ள புதுப்பட்டியில் வீரக்கல் மற்றும் சதிக்கல் கிடைத்துள்ளது. கம்பம் சாலையில் அமைந்துள்ள சாலையோர வழிபாட்டிடத்தில் இவ்விரு கற்களும் இருந்தன.
உசாத்துணை
3.http://puram400.blogspot.com/ 
5. https://www.akavizhi.com/p/blog-page_11.html


 






சங்க கால இறைவன் சுடுமண் சிற்பங்கள்- தமிழக தொல்லியல் துறை நூல்



இவற்றில் கொற்றவை எனும் தாய் தெய்வம், அபயமுத்திரையுடன் பெண் தெய்வம் எல்லாம் பொஆ 1ம் நூற்றாண்டு;

கீழடி 

3ம் நூற்றாண்டு யக்ஷன்.6ம் நூற்றாண்டு தக்ஷிணாமூர்த்தி மற்றும் குழந்தை கிருஷ்ணன் சிறப்பானவை





வள்ளுவர் கால பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும்- தொல்லியல் அறிஞர் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)

 

பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும்- தொல்லியல் அறிஞர் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)


மார்க்சீய அறிஞர் கணபதி அவர்கள் தொல்லியல் அடிப்படையில் - கல்வேட்டுகள், செப்பேடுகள் இத்தோடு சங்க இலக்கியம் - இரட்டை காப்பியம் என தொடர்பு படுத்தி - தமிழக மன்னர்கள் பயன்படுத்திய நீதி - சட்ட நூல் வழிகாட்டிகள் மனுஸ்மிருதி போன்ற வடமொழி நூல்கள் தான் எனத் தெளிவாய் காட்டியுள்ளாரே
வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46
அரசியல் நூல்களை  636, 693, 743, 581, 727
பொதுவாக   நூல்களை 533, 401, 726, 783, 373
மருத்துவம் சம்பந்தமானவை 941..
திருக்குறள் இருக்கும் முதலில் எழுதப்பட்ட மிகவும் பழமையான உரை மணக்குடவர் உரை (10நூற்றாண், சமணரான மணக்குடவர் திருக்குறளை வேத தர்ம சாஸ்திர ஞானமரபில் வந்ததாகத்தான் பொருள் செய்துள்ளார்.
வள்ளுவர் பல்வேறு திருக்குறளில் முந்து நூல்களை சுட்டிக் காட்டுகிறார்.
அவை முறையே











புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.                  குறள் 183:   புறங்கூறாமை



மணக்குடவர் உரை:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

அறநூல் எனும் தமிழ் சொல் வடமொழியின் தர்ம சாஸ்திரங்களைக் குறிக்கும், இவற்றை அந்தணர்கள் எழுதியவை.
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60…
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து தர்ம சாஸ்திரபடி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது.
 வள்ளுவரும் இதைத் தெளிவாக உரைப்பார்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.             குறள் 543:  செங்கோன்மை
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.              குறள் 560:        கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்       குறள் 134:      ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
திருக்குறளை இழிவு செய்யும்  தமிழர் மெய்யியல் விரோத அராஜக உரைகள்
திருக்குறள் வேதங்களை - பிராமணர்களை குறிக்கும் சொற்களுக்கு அதன் நேரடி பொருள் உரையில் தராமல் மதச் சார்பற்ற முறையில்  பொருள் செய்யும் தமிழ் கயமை
மறை குறள் 27
பார்ப்பான், ஓத்து குறள் 134
அந்தணர் நூல் அறம் - குறள் 543
அறுதொழிலார் நூல்  - குறள் 560