மைநாரிட்டி மக்களுக்கு சீட்டு தராவிடில் எதற்கு சலுகைகள்கிறிஸ்துவ முஸ்லிம் மக்களக்கு குறைந்த பட்சம் 50% சீட்டு கொடுக்கும் ஆணையை எதிர்த்து வழக்கு - நீதிமன்றமும் தடை.
மைநாரிட்டி மக்களுக்கு சீட்டு தராவிடில் எதற்கு சலுகைகள்
சென்னை: சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகளை வகுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன்படி, சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவீதம் சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆப் மேரி கல்வி நிறுவனத்தின் தலைவர் கன்னியாஸ்திரி சிறியபுஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.அருள்மேரி ஆஜராகி, சிறுபான்மை பள்ளிகள் துவங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையை தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால், அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment