Sunday, August 2, 2020

தமிழர் பண்பாட்டை சிதைக்கும் திராவிட கயமைப் பாடங்கள்

தமிழரின் இரண்டு தலைமுறையை சிதைத்த திராவிடம் எனும் நச்சுப் பொய்யர்கள் கையில் பாட புத்தகங்கள், தமிழை - தமிழரை அழிக்கவே திராவிடம் என நிருபிக்கிறது

Karthikeyan Thinniam -Thanks
தமிழகத் தமிழ்ப் பாடங்கள் - 1
தற்போது மத்திய அரசு தமிழ்ப் பாடங்களில் இருந்து சில பகுதிகளை நீக்கியது பற்றி சிலர் புலம்பி வருகின்றனர். கடந்த 50 வருடங்களில் திமுக அரசு- குறிப்பாக கலைஞர் அரசு- அமைந்த பிறகு எப்படி தமிழ்ப் பாடப் புத்தகங்கள் வழியே மாணவர்களுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்பதை அறிந்து கொண்டால் இந்த புலம்பல் எவ்வளவு போலியானது என்று புரிந்து கொள்ளலாம். இந்த மாணவர் சமூகம் எவ்வளவு பயங்கரமான திசையில் இழுத்துச் செல்லப் பட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் அறிந்து கொள்ளலாம்.
இது பல நாட்களாக நான் சிந்தித்து வந்த பதிவு. இந்தப் பதிவுகளைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்க இருக்கிறேன். வாசகர் ஆதரவுகள், லைக்குகள், கமெண்ட்டுகள பற்றி எல்லாம் கவலைப் படப் போவதில்லை. எனக்கு சரி என்று பட்டதை எழுதுகிறேன். விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.
புதிய பாடத் திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பாக தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் பற்றிக் கூறலாம் என்று திட்டம். முதலில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஆரம்பிப்போம். இதுதான் விடலைப் பருவம் அல்லது ஆங்கிலத்தில் Adolescent என்று கூறப்படும் பருவம். கருத்துக்கள் மனதில் ஆழமாகப் பதியும் வயது.
இதில் கொடுத்துள்ள ஒரு பாடம் இராவண காவியம். இதில் வெறும் நிலங்கள் பற்றிய வர்ணனைப் பாடல்கள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளன. ஆனால் இதன் பின்புலத்தைப் பார்ப்போம்.
இராவண காவியம் என்ற பெயரை சத்தியமாக இதற்கு முன் நான் கேள்விப் பட்டத்தில்லை. புலவர் குழந்தை என்ற பெயரும் அப்படியே. இந்த பதிவைப் படிப்பவர் யாரேனும் கேள்விப்பட்டு இருந்தால் எழுதலாம்.
இந்த நூலைப் பற்றி அந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்பு கீழே உள்ளது.
“இருபதாம் நூற்றாணடில் தோன்றிய தனித் தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இந்நூல் ஐநது காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது. தந்தை பெரியாரின் வேணடுகோளுககிணங்க 25 நாட்களில் இவர திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.“
இதைப் பற்றி தமிழ் விக்கிப் பீடியாவில் கண்ட கீழ்க் கண்ட விஷயம்தான் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இராவண காவியம் 1948 ஜூன் 2ம் தேதி காங்கிரஸ் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டது. 1971ம் ஆண்டு தமிழக அரசு இந்த தடையை நீக்கியது.
1971ல் யார் முதல்வர் என்று யோசித்தால் இந்தத் திட்டமிடலின் ஆரம்பம் எங்கே என்று தெளிவாக விளங்கும். ஆம் நம் மாண்பு மிகு கலைஞர் கருணாநிதி அவர்களேதான்.
இந்த “காவிய”த்தின் கதைச் சுருக்கமும் அங்கு (விக்கிபீடியாவில்) கொடுக்கப் பட்டுள்ளது.
அதில் இருந்து ஒரு சிறிய பகுதி.
“இராமர் ராவணனின் தங்கையாகிய காமவல்லியைக் கண்டு மோகித்து தவறான வழிக்குக் கூப்பிட்டு அவள் இணங்காததால் அவள் உறுப்புக்களை அறுத்துக் கொலையும் செய்து விடுகிறான்.”
இப்படிப் போகிறது கதை.
இதில் ஆசிரியருக்குப் பாராட்டு வேறு. “இந்தக் காவியம் ராவணன் மற்றும் அவன் குடும்பத்தார் மீது விருப்பத்தைத் தூண்டும் வகையிலும், ராமர் மற்றும் அவரைச் சேர்ந்தவர் மீது வெறுப்பைத் தூண்டும் வகையிலும் திறமையாக எழுதப் பட்டுள்ளது.”
இப்போது புரியும் இதைப் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி மூளைச் சலவை செய்யப் படும் என்று.



தமிழகத் தமிழ்ப் பாடங்கள் - 2
அதே ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்தின் பாடங்களில் வரும் சில சிறுவர்கள் சிறுமியர் பெயர்களைப் பார்ப்போம்.
முதல் பாடத்தில் உரையாடல் என்ற பகுதியில் மூன்று பேர் உரையாடுவதாக அமைந்துள்ளது. அந்த மூவரின் பெயர்கள் ஆவன: ஆனந்தி, மும்தாஜ், டேவிட்.

அதே பாடத்தில் இலக்கணப் பகுதியில் வரும் பெயர்கள்: எட்வர்டு, மீனா, கலா, மகிழ்நன், நிலவன், கண்ணன், முகமது, குமுதா, அப்துல், கவிதா, குமரன், வைதேகி, பூங்குழலி, மதியழகன், நீலன், மாலன்
இரண்டாம் பாடத்தில் ஒரு கருத்தரங்கம். அதில் பங்கேற்பவர் பெயர்கள்:
வெண்மதி, கலைச் செல்வி, ஆமீனா, மெர்சி, முகிலன்.
மூன்றாம் பாடத்தில் பட்டி மன்றத்தில் பேசுபவர்கள்: : பூங்குன்றன், கலைவாணன், பாத்திமா, முத்து, செல்வன், அன்புமேரி
இன்னும்: சுசீலா, கமீலா, சுல்தான், பூங்கொடி, மலர்க்கொடி, பாலு, நிர்மலா, இனியன், மதீனா, பவளவிழி, சுடர்க்கொடி, தணிகாசலம், மூர்த்தி, கீர்த்தனா
மேற்கண்ட பெயர்களில் கண்ணன், வைதேகி தவிர அனைத்துப் பெயர்களிலும் எந்த கடவுள் பெயரும் வந்து விடாதபடி கவனமாகக் கையாளப் பட்டுள்ளது. அனைத்து மத பெயர்களும் இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஹிந்து மதப் பெயர்கள் மட்டும் பொதுப் பெயர்களாகவும் எந்தக் கடவுளையும் குறிக்காதவையாகவும் இருப்பதைத்தான் புரிந்து கொள்ள முடிய வில்லை
இந்த இரண்டாம் பாடத்தில் உள்ள கவிதைப் பேழை என்னும் பகுதியில் பெரிய புராணத்தில் இருந்து ஆறு பாடல்கள் கொடுக்கப் பட்டுள்ளன. உடனே சிவன் புகழோ சிவனடியார் புகழோ கூறப் பட்டு உள்ளது என்று நினைத்து விட வேண்டாம். நாட்டுச் சிறப்பு என்ற அதிகாரத்தில் இருந்து மட்டுமே பாடல்கள். இயற்கை வளமும் நீர் வளமும் மட்டுமே விவரிக்கப் படும். மறந்தும் கூட எந்த கடவுளின் பெயரும் வந்து விடாது. அதில் உள்ள முன்னுரையைப் பாருங்கள்.
“வரப்புயர நீர் உயரும்; நீருயர நெல் உயரும்; நெல்லுயரக் குடி உயரும். உயர்ந்த குடியாக, நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கி்றது.
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கி்றது பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின்
சி்றப்பை இயற்கை எழிற் கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது.”
அதாவது பெரிய புராணத்தின் நோக்கமே சோழநாட்டின் நீர்ச் சிறப்பை விளக்குவதுதான். சிவனோ சிவனடியார்களோ அவர்கள் பக்திச் சிறப்போ அல்ல.
இந்தப் பாடத்தின் பிற்பகுதியில் இருக்கும் நூல்வெளி என்ற தலைப்பில் நூற்குறிப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
“சுந்தரரின் திருத்தொணடத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது. இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியாரகளின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. . இவ்விரண்டு நூல்களையும் அடிப்படையாக்க் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொரு அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது பெரிய புராணம் என்று அழைக்கப் படுகிறது. “
இதில் சிவன் என்ற பெயரோ இறைவன் என்றோ எங்காவது குறிப்பிடப் பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். வெறும் அடியார் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்க வேண்டும். ஆனால் விமரிசனத்துக்கும் ஆளாகக் கூடாது. புத்தகத்தை மேலோட்டமாகப் பார்க்கும் எவரும், “அட, பெரிய புராணம், கம்ப ராமாயணம் எல்லாம் வந்திருக்கிறதே.” என்று சந்தோஷப் பட்டுக் கொள்வர்.

தமிழகத் தமிழ்ப் பாடங்கள் – 3
ஒன்பதாம் வகுப்பின் ஒன்பதாம் பாடத்தின் தலைப்பு “அறம், தத்துவம், சிந்தனை”.
அறம்:
தமிழகத்திலே அறத்தைப் பற்றிக் கூறியவர் என்றால் பெரியாருக்கு மேல் யார் உளர்? பெரியாரின் சிந்தனைகள்தான் இதில் முதல் பகுதி. இதில்தான் அரசே 50 வருடங்களாக அங்கீகரித்து வந்த பொய்யும் இடம் பெற்றிருக்கிறது.
“27.06.1970 ஆம் ஆணடு ஐக்கிய நாடுகள சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரை “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.”
இது பல ஆண்டுகளுக்கு முன்பே ஐயம் திரிபற பொய்யென்று நிரூபிக்கப் பட்டு விட்டாலும் இன்றளவும் நம் மாணவ மணிகள் இதைக் கற்று வருகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெரியார் தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்துவது பற்றிக் கூறியது இப்பாடத்தில் விவரமாக இடம் பெற்றிருக்கிறது. நல்ல வேளையாக அவர் சிலப்பதிகாரத்தைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் கூறியது இடம் பெறவில்லை.
இந்தப் பெரியாரின் சிந்தனைகள் பாடம்தான் இப்போது மத்திய அரசு பாடத் திட்டத்தில் நீக்கப் பட்டு விட்டது என்று பல திராவிடத் தலைவர்கள புலம்புகின்றனர்.
தத்துவம் / சிந்தனை
சிந்தனை என்று வந்தால் இந்தியாவிலே சிந்தித்தவர் எவருமே கிடையாது. ஆகவே சீன ஞானி லா வோட்சுவின் தாவோ தே ஜிங் தத்துவம் பற்றிய கவிதை கொடுக்கப் பட்டுள்ளது. சிந்தனை பற்றி இதில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கத்தையும் பாருங்கள்.
“லா வோட்சு, சீனாவில் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர். சீன ஞானி கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர். அக்காலம், சீனச் சிந்தனையின் பொற்காலமாக இருந்தது. லா வோட்ஸு தாவோவியம் என்ற சிந்தனைப் பிரிவைச் சேர்ந்தவர். ஒழுக்கத்தை மையமாக வைத்து கன்பூசியஸ் சிந்தித்தார். லா வோட்ஸுவோ இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை முன் வைத்தார். தாவோவியம் அதையே வலியுறுத்துகிறது.”
அதாவது ஒழுக்கத்தைப் பற்றி எல்லாம் கவலை இல்லை. இன்றைக்கு எப்படியும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற “உயர்ந்த” தத்துவம் ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப் படுகிறது.
இதே புத்தகத்தில் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியில் இருந்து இரண்டு பாடல்கள் இருப்பதையும் குறிப்பிடவேண்டும். கனாக் கண்டேன் தோழி நான் என்று வரும் இரண்டு பாடல்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
இதைப் பற்றிய முன்னுரை இதோ.
“பக்தி இலக்கியம் உணர்சசி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியததின் பணியாக இருந்தது. இறையை நாயகனாக எண்ணி நாயகி பாவததில் பாடுவதும் காணப்படுகிறது. இப்பாவததில் பெண் கவிஞர் ஒருவர் பாடுவது உண்மைக் காதலெனக் கருதவைக்கிறது. ஆண்டாள் பாடியதால் அவர் திருமால் மீது காதல் கொண்டு பாடியதாகக் கொள்கின்றனர். அழகியலுக்கும் பக்திக்கும் இடம் தருகிற ஆண்டாள் கவிதைகள் கற்பவர் மனதைக் கவர்கின்றன.”
இந்தப் புத்தகத்தில் இறைவன் என்று இல்லாவிட்டாலும் இறை என்ற சொல்லும் பக்தி என்ற சொல்லும் இடம் பெறும் ஒரே பக்கம் இதுதான்.

//ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு- மடத்தனமான பேச்சு மூடச் செயல்  தொடர்ந்தால் சட்டப்படி கைது, கிரிமினல் நடவடிக்கை என, ஆனால் மடத்தன சிந்தாஇயாளரைப் போற்றி சற்றும் உண்மை இல்லதபடிக்கு அவருக்கு யுனஸ்கோ விருது என அம்மணமாக திராவிடப் பொய்கள் உடைந்தன. வைக்கத்தில் சென்னை மாகாணப் பிரதிநிதியாக கலந்துகொண்டமை தவிர அங்கு ஈவெரா எதையும் செய்யவில்லை//
தமிழகத் தமிழ்ப் பாடங்கள் – 4
https://www.facebook.com/karthikeyan.thinniam/posts/3161894087258073
இப்போது எட்டாம் வகுப்புப் பாடங்களைப் பார்ப்போம். முதல் பாடத்தில் ஒரு பாரதியார் பாடல்.
“வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே” என்று தொடங்கும் அருமையான பாடல். இது சரியாகத்தானே உள்ளது. தமிழைப் பற்றிய தமிழ்ப் பாடல், அதுவும் பாரதியார் பாடல். இதில் என்ன தவறு என்று தோன்றும். மிக்க மகிழ்ச்சியே. ஆனால் அதில் உள்ள “நூல் வெளி” என்று பாரதியாரைப் பற்றிய குறிப்பு கீழே உள்ளது. அதைப் படியுங்கள்.
நூல் வெளி
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி. சுப்பிரமணிய பாரதியார். இநதியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மடடுமன்றி, சநதிரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீடடுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனி, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்நதுள்ளார். இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
நன்றாகக் கவனியுங்கள். பாரதியாரின் நூற்றுக் கணக்கான தேசிய பாடலகளைப் பற்றியோ, கண்ணன், பராசக்தி போன்ற இறைவனைப் பற்றி எழுதிய பாடல்கள் பற்றியோ எந்த வித குறிப்பும் இல்லை. ஆனால் அவருக்கு பாரதிதாசன் கொடுத்த விருதுகள் மட்டும் விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்திலும் அனைத்துப் பாடங்களிலும், உரையாடல்களில் வரும் பெயர்கள் யாவையும் எந்த ஹிந்துக் கடவுளோடும் தொடர்பு படுத்த முடியாத வகையில் எடுத்தாளப் பட்டுள்ளன.
இதோ ஒரு தேவாரப் பாடல். சுந்தரர் எழுதியது.
பண்ணின்த மிழ் இசை பாடலின் பழவெய் முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக் கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும் திருக் கேதார ம்என் னீரே.
- சுந்தரர்
நூல் வெளி பகுதியில் சில வரிகள்:
தே + ஆரம் – இறை வனுக்குச் சூட்டப்ப டும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்ப து பத்துப் பாடல்களைக் கொண்டது.
இந்தப் பாடலிலும் எந்த இறைவனின் பெயரும் வராமல் பார்த்துக் கொள்வதோடு, தேவாரம் என்னும் சொல்லுக்கே இனிய இசை என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் விளக்கியுள்ளனர்.
வடக்கே இமயமலையில் இன்றும் 12 மணி நேர நடைப் பயணத்திலேயே பெரும்பாலோர் செல்லும் கேதார நாதரைப் பற்றி 1300 ஆண்டுகள் முன்னால் வாழ்ந்த சுந்தரர் பத்துப் பாடல்கள் பாடியிருப்பது எவ்வளவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விஷயம்? இன்றும் கேதார்னாத் கோவில் அருகே தமிழில் இந்தப் பதிகப் பாடல்கள் பொறித்த கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறப் படுகிறது. இறை எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக இதையெல்லாம் கூறாமல் இனிய இசை என்ற பெயரில் ஒரு தேவாரப் பாடலைக் கொடுத்து உள்ளனர்.