Tuesday, January 31, 2023

பூம்புகார் 15000 ஆண்டுகள் பழமையானதா?

 கடலடி பூம்புகார்தான் உலகின் பழைய நகரமா?

பூம்புகார் ஆராய்ச்சி பரப்பல் கதைகள் பற்றி சேலம் பெரி. பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர். ராம்குமார் கருத்து
Geo-archeology துறையில் உலகளவில் மதிக்கப்படும் விஞ்ஞானியான , நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகளையும் , குறிப்பிடத்தக்க ஆய்வு புத்தகங்களையும் எழுதிய பேரா. ராம்குமாரின் பதிவு
கொஞ்சம் உண்மை, நிறைய பொய். பொய் பொய்களா சொல்லி, தமிழ், தமிழன் தன்மான உணர்ச்சி, தமிழ் கலாச்சாரத்தின் தொன்மையை குறித்த பெருமிதத்தை அதீதமாக தூண்டிவிட்டு, சுயதம்பட்டம், அறிவியர்ப்பாற்பட்ட தரவுகளை தன் இஷ்டத்துக்கு வளைப்பது, புகழ், ஆய்வுத்திட்ட நிதி உதவிக்காக அறிவியல் சஞ்சிகைகளில் எழுதாமல், கருத்துருக்களை பன்னாட்டு அறிஞர் தர சோதனை செய்யாதிருக்கும்போதே, அறிவியல் உண்மை, புதிய கண்டுபிடிப்புகள் போல பாமரமக்கள் படிக்கும் லோக்கல் நியூஸ் பேப்பர்களில் எழுதுவது, அவ்வாறு பிரசுரமான துண்டு செய்திகளை ஆதாரம்போல காண்பித்து ஆய்வுத்திட்டநிதி வழங்கும் நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பது என்பது சில காயலாங்கடை பேராசிரியர்கள் பன்னெடுங்காலமாக பின்பற்றிய, காலாவதியான வழிமுறை. அதன் முன்னோடி மீண்டும் கடைவிரித்திருக்கிறார்.
புகார் துறைமுகம், கட்டிட இடிபாடுகள் கடலுக்குள் இருப்பது 1990களில் பேராசிரியர் ராஜன் காலத்திலிருந்தே நிறுவப்பட்டு உள்ள உண்மை. அதன் காலம் சங்ககாலம், ஆனால், சங்ககாலத்தின் காலவரையறை தற்காலத்திலிருந்து 2600 ஆண்டுகளுக்கு முன்பிருக்கக்கூடும் என்று தெரிந்திருந்தாலும், எந்த கரிம அல்லது வேறுவகையிலான, அறிவியல்முறையிலான காலநிர்ணயமும் இல்லாமல், 15000 வருடம் பழமையான என்று ஒரு புதிய ஓட்டை உடைசலுக்கு தமிழன் நாகரிக கூவல் ஆரம்பித்திருக்கிறது.
அதோடு நில்லாமல், குமரிக்கண்டம், லெமுரியா, என்று இல்லாத ஊருக்கு, போகாதவழியை சொல்லி, காசு பிடுங்க, தமிழன், தமிழ், என்று உணர்ச்சிகளை தூண்டிவிட ஒரு குரூப்பு ஆரம்பிச்சிருக்குது. ஜாக்கிரதையாய் இருந்துக்குங்க மக்களே. நம்பி சில்லறையை சிதறவிட்டுடாதீங்க.
அதுக்குமேல, புகார்தான் நம் நாட்டின், ஏன், உலகின் முதல் நகரம் என்று வேறு கிளப்பிவிடுறானுங்க இந்த திடீர்-குபீர் பழம்பெரும் ஆய்வாளர்கள். ஒரிசா பாலு பரவாயில்லை போல இருக்கு இவனுங்க கிளப்புறா பீதிக்கு. அட, ஹீலர் பாஸ்கர கூட நம்பலாம் போல இருக்கு. அப்படி ஒரு புது பீதியை கிளப்பி விட்டிருக்கானுங்க.
ஒருபேச்சுக்கு பழமையான நகரம் என்று வைத்துக்கொண்டாலும், அந்த பழமையான நகரத்துக்கு வணிகத்துக்கு வந்தவன் என்ன அமேசான் காடுகளிலிருந்து, ஆப்பிரிக்க பாலைவனத்திலிருந்து சிம்பன்ஸீக்களா வந்தன? மனிதர்கள்தானே? அவர்களும் நகரவாழ்க்கை, கடல்வழி, கப்பல்போக்குவரத்து தெரிஞ்சவங்கதானே! இதுகூட யோசிக்காம பத்திரிக்கைகளில் இதையெல்லாம் பிரசுரிப்பாங்கன்னு கேக்காதீங்க.
இன்னும் நிறைய விவகாரமான முட்டாள்தனங்கள் இருக்கு, பொதுவெளியில் அதெல்லாம் வேண்டாமே என்று பார்க்கிறேன்.
இது எல்லாத்தையும் மேலைநாட்டுக்காரன், அட் லீஸ்ட் வடக்கன், அட, அதை விடுங்க, தமிழ் தெரிஞ்ச ஆராய்ச்சியாளர்கள் படிச்சாங்கன்னா, வாயால சிரிக்கமாட்டாங்க. வேற எதாலன்னு கேக்காதீங்க. அட நாலுபேரு சிரிச்சா, சிரிச்சிட்டுப்போறாங்கன்னு விட்டுடலாம். இப்படி அறிவியலார், பேராசிரியர் போர்வையில், இப்படி பொய் புழுகிக்கிட்டிருந்தா, பின்னால நிஜமான கணிப்புகள், நிஜமான தரவுகள் அடிப்படையிலான விஷயங்கள், கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது, அவற்றையும் வெளியுலக அறிவியலார் அவையும் இப்படியான உடான்சு என்று முத்திரைக்குத்தி விரட்டிவிட மாட்டாங்க?
இவனுங்க சொல்றது எப்படி இருக்குதுன்னா, சுமார் பதினைஞ்சாயிரம் வருடத்துக்குமுன்னர், வீடு, மாடி, மாடமாளிகைகளும், சுற்றுச்சுவர் உள்ள பெரியகுடியிருப்பு தொகுதிகளும், பல்வேறு துறைமுகங்களும் கட்டிவாழ்ந்தது, சுமார் ரெண்டாயிரத்துஆறுநூறு வருடங்களுக்கு முன்னர் இருந்த மனிதர்கள்! ஏண்டா, நாலு படத்தை வச்சிக்கிட்டு, டைம் டிராவல் பண்ணுறீங்களான்னு யாரும் கேக்கறதுக்குள்ள ஓடிருங்க.


ஆனால், இந்த ஆய்வை முற்றிலும் ஏற்க மறுக்க மறுக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் செல்வக்குமார் கூறுகையில், ”இது உறுதிபடுத்தப்படாத ஆய்வாக இருக்கிறது. சில அறிவியல் ரீதியாக படங்களை வைத்துக்கொண்டு அதனை சொல்கின்றனர். அங்கு தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதுவரை இதனை ஒரு யூகமாகத்தான் கருத வேண்டும். ஏனெனில், 15,000 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு நகரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொல்லியல் ஆய்வுகளில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் நமக்குக் கிடைத்திருக்கிற சான்றுகளின்படி நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள் குழுவாகத்தான் இருந்திருக்கிறோம். கற்கால கருவிகள் தான் கிடைத்திருக்கின்றன. அப்போது உலோகமே இல்லை. அந்த காலத்தில் இதுவரை கட்டிடப் பகுதிகள் கிடைக்கவில்லை. 15000 ஆண்டுகளுக்கு முன்பு என்பது மிகமிகப் பழமையான காலக்கட்டம்” என்கிறார்.

இந்த ஆய்வில் கிடைத்துள்ள படங்களில் உள்ள அமைப்புகள் இயற்கையானதா அல்லது மனிதர்கள் உருவாக்கியதா என்பது தெரியவில்லை என்றும் அடுத்தக்கட்ட ஆய்வுகள் செய்யும்போதுதான் அதனை உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் அவர்.

படங்களை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்திக்கொள்ள முடியும் என்பது செல்வக்குமார் போன்ற தொல்லியல் ஆய்வாளர்களின் வாதமாக உள்ளது. 

பூம்புகாரில் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வுகள் குறித்து பேசிய அவர், “இந்திய தொல்லியல் துறை, தேசிய கடலாய்வு நிறுவனம் ஏற்கனவே பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில், கி.மு. 300 மற்றும் அதற்குப் பிந்தைய காலக்கட்டத்திலான உடைந்த கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புத்த விகாரை குறித்த சான்றுகள் உள்ளன. இந்த சான்றுகளை தெளிவாக நாம் பார்க்க முடியும். ஆனால், இந்த சமீபத்திய ஆய்வில் நீருக்கடியில் கிடைத்துள்ள படங்களை வைத்து சொல்கின்றனர். ஆனால், அதனை நாகரிகம் என கூறுவதற்கு நமக்குக் கூடுதல் ஆதாரங்கள் வேண்டும்.” என தெரிவித்தார்.

கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது சாத்தியம் என்று கூறும்  அவர், அதற்கு நிறைய பொருட்செலவாகும் என தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வையொட்டி இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. பூம்புகாரில் துறைமுகம் இருந்திருக்கிறது என்றால், அவர்கள் வேறு எந்த துறைமுகத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்? இந்த துறைமுகம் பழமையானதா அல்லது அவர்கள் தொடர்பு வைத்திருந்த துறைமுகம் பழமையானதா போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும், அங்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் கட்டிட அமைப்புகள் என்ன பொருளால் ஆனவை என்பது குறித்தும் இந்த ஆய்வில் ஆவணப்படுத்தப்படவில்லை. 

கீழடி, சிவகளை உள்ளிட்ட அகழாய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள் கண்கூடாக உள்ள நிலையில், இந்த ஆய்வுக்காக ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்பதும் எதிர்வாதமாக இருக்கிறது.

Thursday, January 26, 2023

Date of Tholkappiyam - Prof. B.G.L.Swamy

பேராசிரியர் B.G.L.சுவாமி (பிரசிடென்சி கல்லூரி முன்னாள் முதல்வர்) தொல்காப்பியத்தின் காலம் என்ற கட்டுரை

 
       

Sunday, January 22, 2023

சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவை, லலிதா சஹஸ்ரநாம வர்ணனை

 சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவை, வேட்டுவ வரியில் லலிதா சஹஸ்ரநாம வர்ணனை கொற்றவை மேலே ஏற்றி உள்ளார்    - பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார்

பத்துப்பாட்டு நூல்களில் வடசொல், பிறமொழி சொற்கள்