URBAN NAXALS - VIVEK AGNIHOTRI
அருணா ராய், அருந்ததி ராய், பிரசாந்த் பூஷன், ஜிக்னேஷ் மேவனி மற்றும் பலர் ஆகஸ்ட் மாதம் 30 தேதி 2018 அன்று டில்லி பிரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். காரணம், ஐந்து சமூக ஆர்வலர் அல்லது போராளிகளை ஆதரித்து. அத்தோடு பீமா கோரேகான் கலவரங்களை ஒட்டி சில ரெயிடுகள் நடந்தன, அதையும் கண்டித்து.
இந்த வாரத்தில் இரு பெரும் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நக்சல்களின் வரலாற்றில் நடந்தன. வரலாறு காணாத அளவுக்கு பெரும் சோதனைகளும், கைதுகளும் நடந்தன. கைதான எல்லோரும் நகர்ப்புற நக்சல்கள்.
என்னுடைய ஒரு ட்வீட் பல நூறு நகர்ப்புற நக்ஸல்களை குழப்பி, வெளியே வரச்செய்தது. அதிலுள்ள பலர், இந்த கைதுகளை கண்டித்திருந்தனர். நாட்டின் எதிரியை யார் ஆதரிப்பார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வரலாற்றை புரட்டினால் இந்த கேள்வி பல ஆயிரம் ஆண்டுகளாக பல முறை கேட்கப்பட்டுவிட்டது. அந்த கேள்விக்கு விடை தெரியுமுன், இந்த அதிரடி சோதனைகளுக்கும், கைதுகளும் உண்டான காரணத்தை தெரிந்துகொள்வோம்.
இந்த நக்சலிசத்தின் ஆயுள் 50 ஆண்டுகளுக்கும் மேலானது. இதன் வரலாற்றை புரட்டினால் எல்லா பக்கங்களிலும் அமைதியின்மை, கொலைகள், அழிவுகள், பலாத்காரங்கள், தீ வைப்பு, கொள்ளை, அப்பாவி குழந்தைகளை கொல்வது என்றுதான் இருக்கும். சுதந்திர இந்தியாவின் துரதிருஷ்டம் அரசியல் சாதுரியமற்ற அரசியல்வாதிகள், சோம்பேறி அறிவுஜீவிகள், முற்றிலும் செல்லரித்த நான்காம் தூண், வேலையே செய்யாத அரசு இயந்திரம், எல்லாமாக சேர்ந்து இந்த நக்சலிச பிசாசை தீனி போட்டு வளர்த்தது. இன்று இது பாரதத்தில் உள்ள உட்புற பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் மிகப்பெரியதாக வடிவெடுத்துள்ளது. இது பயங்கரமானது, ஆபத்தானது, காட்டுமிராண்டித்தனமானது.
நக்சல்கள் பற்றி அறியாதவர்கள் மாவோயிஸமும் நக்சலிசமும் ஒன்றே என்று அறிக. இது இடதுசாரிகளால் எப்போதும் கொண்டாடப்பட்டு, ஆதரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இல்லாவிடில், எப்படி ஒரு பயங்கரமான, காட்டுமிராண்டி கூட்டம் 50 ஆண்டுகளாக ஒரு சுதந்திர நாட்டில், அமைதியை விரும்பும் நாட்டில், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாட்டில் இயங்க முடியும்?
இடதுசாரிகள் என்றாலே அமைப்பை கேள்வி கேட்பவர்கள். அவர்களுடைய அமைப்பில் பெரும் ஊழலும், லஞ்சமும் இருந்தாலும் அதை அவர்கள் கேட்கமாட்டார்கள், கேட்கவும் முடியாது. அதனால் அவர்கள் எல்லோருமே, பிற்போக்குடைய, வன்முறை கொள்கையுடையவர்கள். அவர்களது கொள்கைகள், சித்தாந்தங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாதிகளும், மாவோயிஸ்டுகளுக்கு, பிரிவினைவாதிகளுக்கு, தேசவிரோத சக்திகளும் கடத்திவிட்டார்கள். அவர்களுக்கு அந்த பயங்கரவாதிகளோடு இணங்கி போவதை தவிர வழியே இல்லை.
இடதுசாரிகளும், சுதந்திர விரும்பிகளும் நக்சல்களின் அழுத்தத்துக்கு பணிந்து அவர்களது 'அலுவல் முக'மாக செயல்பட்டு வருகிறார்கள். மனித நாகரீகத்துக்கு அப்பாற்ப்பட்ட, பயங்கரமான செயல்பாடுகளை ஆதரிக்கும் இவர்கள் எப்படி சுதந்திர விரும்பிகள் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்பது நமக்கு புரியாத விஷயங்களில் ஒன்று.
சாய்பாபா, என்ற துணை பேராசிரியர் டில்லி பல்கலைக்கழகத்தில் கைதானார். அவரிடமிருந்து சில மிக முக்கியமான ஆவணங்கள் கிடைத்தன. அதில், தெளிவாக தீர்மானமாக இந்தியாவில் செய்யும் புரட்சி வேலைகள் எல்லாமே அரசு இயந்திரத்தை கைப்பற்றுவதற்காகத்தான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை செயல்படுத்த, மக்கள் இராணுவத்தை உருவாக்கி அதன் மூலம் இந்திய இராணுவத்தை அழித்தொழித்து, இங்கு மக்களுக்கான ஜனநாயக நாட்டை ஸ்தாபிக்க வேண்டுமென்று இருந்தது.
அத்தோடு நிற்கவில்லை விஷயம். அதில், 'மக்களின் இந்த போரின் லட்சியமே இந்த நாட்டின் இராணுவத்தை, காவல் கட்டுப்பாடுகளை, அரசு இயந்திரத்தை முற்றிலுமாக அழிப்பது' என்கிறது.
இதை எப்படி எட்டுவது? தெளிவாக விளக்குகிறார்கள். எல்லையோர மாவட்டங்களில் அரசு இயந்திரம் பலமற்று இருப்பதால், தங்கள் இருப்பை அங்கு முதலில் ஸ்திரமாக்கிக்கொண்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்தை பெரிது படுத்தி நகரத்தை மடக்குவதாக திட்டம்.
நக்சல்கள் ஜிஹாதிகளை போல அல்ல. படித்தவர்கள், புத்திசாலிகள், நன்கு பேசத்தெரிந்தவர்கள், அரசியல் புரிந்தவர்கள், போர் தந்திரமறிந்தவர்கள், நாட்டின் பூகோளத்தை அறிந்தவர்கள்.
அவர்கள் காடுகளில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மோசமாக இருக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருப்பதால், இராணுவமும் இல்லாததால், அப்படிப்பட்ட இடங்களே தங்களுக்கு அரணாக இருக்கும் என்று உணர்ந்து அங்கிருந்து செயலாற்றுகின்றனர்.
தங்கள் எதிரியான இந்தியாவை எதிர்க்க, அடர்ந்த காடுகளை தங்கள் இருப்பிடமாக, பயிற்சி களமாக கொண்டுள்ளனர். அந்த பகுதிகளை அவர்கள் 'விடுவிக்கப்பட்ட பகுதி' என்கின்றனர். இங்கிருந்துதான் இந்தியாவின் மற்ற பகுதிகளை தாக்க போர்க்குழுக்களை தயார் செய்கின்றனர். அவர்களில் சாமானிய தொழிலாளர்கள், சிந்தனையாளர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்ட துறைகளை சார்ந்தவர்களாக ஆகி தத்தம் துறைகளில் ஊடுருவ செய்கின்றனர். மிக முக்கியமாக, போர்க்குணம் கொண்ட மாணவர்களை ஆயுதமேந்த தயார்படுத்துகின்றனர்.
நகரங்களில் வளர்க்கப்பட்ட பலர், இது போன்ற தொலைநோக்குள்ள திட்டங்களை கேட்டு நகைப்பார்கள். காரணம், அவர்களுக்கு இது பற்றிய கற்பனையே கிடையாது. சொல்லப்போனால் என்னவென்றே தெரியாமல் என்னுடைய 'நகர்ப்புற நக்சல்கள்' அமைப்பில் சேர்ந்தவர்களை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்.
அவர்கள் எண்ணுகிறார்கள் இந்த 'நகர்ப்புற நக்சல்கள்' என்ற அமைப்பு தங்கள் எதிர்ப்பை காட்டவென்று. இல்லை, அப்படியில்லை.
சிக்கிய முக்கிய ஆவணங்களில் 13ஆம் பிரிவில் மிக விவரமாக இந்த நகர்ப்புற நக்சலிசம் என்பது தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளக்குகிறார்கள். இதில் எப்படி துல்லியமாக திட்டமிட்டு, நிதானமாக காவல்துறையில் சேரவேண்டும், எப்படி இராணுவத்தில், அரசாங்கத்தில், நிர்வாகத்தில், சட்டத்துறையில், கல்வித்துறையில் சேரவேண்டுமென்று விளக்குகிறது.
அதனால்தான், கிராமப்புற பகுதிகளில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து, தயார் செய்து நகரங்களுள் ஊடுருவ வைக்கிறார்கள். அவர்களும், சாமானியர்களோடு சாமானியர்களாக கலந்து 'கண்களுக்கு புலப்படாத எதிரிகளாக' ஆவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் போராளிகள் அவ்வப்போது கொள்கை விளக்க , அரசியல் மற்றும் இதர பயிற்சிகளுக்காக முகாம்களில் பங்கேற்க சொல்லி அனுப்பி வைக்கப்படுவார்கள். சில தவறுகளால் பகுதி நேர மற்றும் முழு நேர புரட்சியாளர்களின் நிறம் வெளிப்பட்டால் (அ) சிக்கிக்கொண்டால், அவர்கள் உடனடியாக தலைமறைவாவார்கள்.
கபீர் கலா மன்ச் போன்ற முகப்பு அமைப்புகள் எல்லாமே கலாச்சார, பண்பாட்டு விளக்க அலுவலகங்கள் போல இருக்கும். ஆனால், அவர்களது திட்டமும், கொள்கையும் ஆள் தேடுவதும், பயிற்சியளிப்பதும், சரியான நேரத்தில் தாக்குவதுமாகும். இதற்காக அப்பாவி ஆதிவாசிகளை ஏமாற்றி 110 கோடி ரூபாய்வரை வசூல் செய்துள்ளார்கள்.
சமூக வலைத்தளங்கள் வந்த பின்னர் அவர்களுடைய சாதுரியம் என்னவென்றால், சிக்கியவுடன் சட்டென்று இருட்டுக்கு போய்விடுவார்கள். அவரையே, அவரது புகைப்படங்களையோ, தகவல்களையோ எதையுமே லேசில் பார்க்க முடியாது. காணாமல் போனது போல இருக்கும். ஆனால், மறைந்திருப்பார்கள்.
இதெல்லாமே 'ஊடக ஏற்பாட்டாளர்களால்தான்' நடக்கிறது. இதென்ன ஏற்பாட்டாளர்கள் என்று பார்க்கிறீர்களா? இவர்களெல்லாம் சிறுசிறு ஊடக நிறுவனங்களை நடத்தி வருவார்கள். ஆனால், யாருக்கும் நிருபருக்குண்டான தொகுத்து, பயிற்சி, விளம்பரம் எதுவுமே இருக்காது. ஆனால் இவர்கள்தான் கருத்தை உருவாக்கக்கூடிய அறிவும், சக்தியும் படைத்தவர்களாக, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடக்கூடியவர்களாக, மாணவர் தலைவர்களாக மேலும் விஷயங்களுக்காக திட்டம் வரையக்கூடிய காரணகர்த்தாவாக இருப்பார்கள். இவர்கள் பல்முகம் கொண்டவர்கள். பெண்மை, சுதந்திரம், பேச்சுரிமை போன்றவைதான் பாதுகாப்பானது. பெரிதாக படிப்பறிவோ, பட்டறிவோ இருக்கவேண்டாம். காள்காளென்று கூச்சல் போட தெரிந்திருந்தால் போதும்.
தவிர, இந்த பெண்சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்றவை மக்களை 'எதிரிக்கு எதிராக' பெருமளவில் திரட்ட உதவியாக இருக்கிறது.
இவர்களெல்லாம் மீம்ஸ் உருவாக்குகிறவர்களாக, சமூக வலைத்தளங்களில் கருத்தும், கருத்துப்படமும் போடுகிறவர்களாக, கவிதை எழுதுகிறவர்களாக, பெண்மை முகாம்கள், போராட்டங்கள் நடத்துகிறவர்களாக இருப்பதை காண முடியும். சில சமயம் இவர்களை ஏதோ காங்கிரஸ்கரரென்றோ, அல்லது RSSகாரர் என்றோ எண்ணி கடந்து செல்ல எண்ணுவோம். அப்படி அல்ல விஷயம். அவர்களின் வேலையே தொடர்ந்து பாரத பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கேள்வி கேட்பதுமாக இருக்கும். குடும்பம், சமுதாயம் போன்றவற்றை கேள்வி கேட்டு, இளைஞர்களை வேறு வழிக்கு மாற்ற கூடிய விஷயமே அல்லவே?
அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அடுத்தவர்களை மிகவும் கட்டுப்படுத்தும் அதே சமயம் ஆபத்தானவர்களாக இருப்பது புரியும்.
நாகரீகமான, படித்த, மன அழுத்தங்கள் நிறைந்த நகரத்தில் வாழ்பவருக்கு இந்த மன அழுத்தத்திலிருந்து பரிபூரண விடுதலை வேண்டும். அதனாலேயே, யாராவது விடலைக்குரிய விடுதலை போல பேசினால் சட்டென்று கவரப்பட்டுவிடுகிறார்கள். இவ்வாறு கவரப்பட்டவர்கள் நகர்ப்புற நக்ஸல்களை ஆதரிப்பதை உணரும்போது, அவர்கள் இந்த நாடே அந்த நகர்ப்புற நக்ஸல்களை ஒடுக்குவதற்காக எண்ணுகிறார்கள்.
இவர்களுக்கு புரியவே போவதில்லை எண்ணக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. அதுதான், இந்த நகர்ப்புற நக்சல்கள் இந்தியா மீது தொடுக்க திட்டமிடும் போர் பற்றியது. கடந்த வார கைதில் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆதரவாளர்களுக்கு என்ன தெரியாதென்றால் அவர்களால் தங்கள் வாழ்க்கை தரம் மேம்பட்டது எனக்கூடிய ஒருவரை கூட காட்ட முடியாது. அவர்களுக்கு தெரியாமலே #MeTooUrbanNaxal போன்ற ஹேஷ்டேக்குகளை ஆதரிப்பதன் மூலம் இந்திய இராணுவத்தை கொல்லக்கூடிய அமைப்பை ஆதரிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆதரவுகளால் பயங்கரவாத பணப்பரிமாற்றத்தை சற்று சுலபமாகி கொடுத்துள்ளார்கள். அவர்கள் அறியாமலேயே, நேரடியாக, மறைமுகமாக இந்தியாவுக்கு எதிரான போருக்கு தயாராவோரை ஆதரித்து, உதவியுள்ளார் என்பதே.
அவர்கள் அப்பாவிகள், விவரமற்றவர்கள், நிலைமையின் தீவிரமறியாதவர்கள் என்று நம்புகிறேன். நகர்ப்புற நக்ஸல்களுக்கும் அதுதான் வேண்டும். குழம்பிய, அறியாத, தவறாக வழிநடத்தப்பட்ட நகரத்தவர்கள், கொள்கை போதையால் பீடிக்கப்பட்டவர்கள் வேண்டும். அப்போதுதான், அவர்கள் தாக்குதலுக்கு அழைக்கும்போது ஒரு கணமும் யோசிக்காமல் இறங்குவார்கள்.
இது ஒரு பழைய சூழ்ச்சி முறை. திருடன் ஒருவன் அடையாளம் காணப்பட்டால் எல்லோரையும் பார்த்து இவனும் திருடன் திருடன் என்று கூச்சல் போடவேண்டும். அப்படி செய்தால், எல்லோரும் குழம்பி யார் திருடன், யார் அப்பாவி என்று எல்லோரும் குழம்பிவிடுவார்கள்.
அப்படியென்றால் திருடனை எப்படி பிடிப்பது? முதலில் கத்தியவனை பிடிக்கவேண்டும். இந்த #MeTooUrbanNaxal அழைப்பில் யார்யார் ஆபத்தானவர்கள் என்று எப்படி அறிவது என்றால், யார் இதை துவக்கினார்கள் என்று கண்டுபிடித்தால் போதும். யார் தங்களை பின்னர் இருட்டில் தள்ளிக்கொண்டார்கள் என்று கவனித்தால் போதும். அங்குதான் குற்றவாளி யாரென்ற க்ளூ இருக்கிறது.
நேற்று நடந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஜனநாயகத்துக்கு ஒரு துக்க நாள். பெரும்பாலோர் அப்பாவிகளான இருக்கவே வாய்ப்பு அதிகம். பின்னாளில் வருந்துவார்கள் என்று எண்ணுவோம்.
ஆனால், இந்த பின்னர் வருந்துவது நமக்குரிய விசேஷ விஷயம். முகலாயர்களிடம் நாட்டை இழந்தோம். வருந்தினோம். பின்னர் பிரிட்டிஷாரிடம் இழந்தோம். வருந்தினோம். பின் பிரெஞ்சு, போர்த்துகீசியர்கள். வருந்தினோம். சுதந்திரத்துக்கு பின்னர் கண்ணுக்கு தெரியாத USSR KGB போன்ற அந்நியநாட்டு உளவுத்துறைகளிடமும், ஊழல் பெருச்சாளி குடும்பங்களிடமும் இழந்தோம். இன்னமும் வருந்துகிறோம்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, யாரோ பொறுப்பற்ற குடிமக்களாலும், நேர்மையற்றவர்களாலும் நாம் தோற்று, இழந்து தொடர்ந்து வருந்திக்கொண்டே இருக்கிறோம். இனியாவது மாறுவோமா?
https://www.facebook.com/photo.php?fbid=1192417407566183&set=a.150938671714067&type=3
No comments:
Post a Comment