Monday, June 26, 2023

சங்க காலத் தமிழர் மரபில் வேதங்களும் அர்ச்சகர் கல்வியும்

 ஆவினன்குடியிலிருந்து  ஏரகத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார் நக்கீரர்.

பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை		150
புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்		155
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய		160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர			165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு

வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை		170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்		175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை		180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து		185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்	190
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தே கள் தேறல்		195
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
 இணைத்த கோதை அணைத்த கூந்தல்		200
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய		150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல			155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -

நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள			160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக,			165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து

காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே				170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்					175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை

(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,	180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,						185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி

பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,			190
அழகினையுடைய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை				195
மலையிடத்தேயுள்ள சிறிய ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,
விரலின் அலைப்பால் மலர்ந்தமையால் வேறுபடுகின்ற நறிய மணத்தையுடைய
ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,

பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,				200

ஆவினன்குடியில் தேவர்களின் வருகையைக் கூறினார். அந்த வானுலகத் தேவர்களும் முனிவர்களின் பின்னாலேயே செல்கிறார்கள். கன்றைக்காட்டி பால் கறப்பதுபோல், தவத்தில் சிறந்த முனிவர்களை முன்னே விட்டு, முருகனின் அருளைப்பெற நினக்கிறார்கள்! இதுவும் பொருள் பொதிந்த செயல். இந்த உலகில் புரிந்த புண்யச் செயல்களுக்காக மேலுலகப் பதவியைப் பெற்றவர்கள் இந்த தேவர்கள்.அந்த உலகில் அவர்கள் புதிதாய்ச் செய்யும்  நல்வினை எதுவும் இல்லை! இவ்வுலகில் தவம் செய்வோரே அத்தேவர்களைவிட மேலானவர்கள்.


இக்கருத்தை சாத்தனார் மணிமேகலையில் ஒரு இடத்தில் அழகாகச் சொல்கிறார். ஆபுத்திரன் புரிந்த புண்யத்தினால் அவனுக்கு இந்த்ர பதவியே கிடைத்துவிடும் நிலை ஏற்பட்டது! தன் பதவிக்கு ஆபத்து வந்ததை உணர்ந்த இந்த்ரன், இதைத் தடுப்பதற்காக தளர்ந்த  நடையுடன் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கையோர் மறையோன் வேஷத்தில்  ஆபுத்திரனிடம் வருகிறான்.'அப்பா, நான் இந்த்ரன். நீ ஏற்கெனவே அதிக தானங்கள் செய்துவிட்டாய், அதற்குரிய பலனை உனக்குத் தருவேன்' என்கிறான். ஆபுத்திரன் அவனை எள்ளி நகைக்கிறான். 'ஐயா பெரியவரே. உங்கள் உயர்ந்த உலகத்திலே நீங்கள் என்ன செய்துகிழித்து விட்டீர்கள்! இந்த உலகில் செய்த புண்யத்தின் பலனை அங்கே அனுபவித்து வருகிறீர்கள்.நீங்கள் என்ன தரவியலும், வந்த வழியே திரும்பும்' என்கிறான்!


ஈண்டு செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்

காண்டகு சிறப்பின் நும் கடவுள ரல்லது

அறஞ்செய் மாக்கள் புரங்காத் தோம்புனர்

 நற்றவஞ்செய்வோர் பற்றற முயல்வோர்

யாவருமில்லாத் தேவர் நன்னாட்டுக்கு

இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

உண்டி கொல்லோ,உடுப்பன கொல்லோ

பெண்டிர் கொல்லோ, பேணுநர் கொல்லோ

யாவையீங்களிப்பன!


நல்ல நாடு என்றால் அங்கே தானமும் தவமும் இருக்கவேண்டும், அறம் தழைக்கவேண்டும். அறச் செயலில் ஈடுபட்ட பெரியோர் தேவர்களைவிடச் சிறந்தவர்கள். முனிவர்களை முதலில் சொன்னதன் வாயிலாக இதை நமக்கு அறிவுறுத்தினார் நக்கீரர் இங்கு ஏரகத்தில் வேறொருவகையில் அறம் செய்பவர்களைப் பற்றிச் சொல்கிறார்.


முனிவர்களுக்கு அடுத்தபடியாக அறவாழ்க்கையிலேயே ஈடுபட்டவர்கள் அந்தணர்கள். அந்தணர் என்போர் அறவோர் என்பார் வள்ளுவர்.இவர்கள் வாழ்க்கை முழுதுமே அறத்திற்காகவே அர்ப்பணிக்கப் பட்டது. ஏரகத்தில் அந்தணர்கள் செய்யும் வழிபாடு பற்றிச் சொல்கிறார் நக்கீரர். பதின்மூன்றே வரிகள் அடங்கிய இப்பகுதியில் பல அரிய விஷயங்களைச் சொல்கிறார்.


இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி


அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை


மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து


இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல


ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்

புலராக் காழகம் புலர் உடீஇ

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து


ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி


விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து

ஏரகத்து உறைதலும் உரியன், 



பல அரிய விஷயங்கள் இங்கே வருகின்றன.


இருமூன்று எய்திய இயல்பினின் == அந்தணர்களுக்கென்று விதிக்கப்பட்டது

ஆறு தொழில்கள்.அறு தொழிலோர் என்பார் வள்ளுவர். வேதம் ஓதுதல் ஓதுவித்தல். வேள்விகள் செய்தல், செய்வித்தல், தானம் ஏற்றல். கொடுத்தல் என்பவையே இத்தொழில்கள். இவற்றைத் தொழில்கள் என்பதைவிடக் கடமைகள் என்பதே பொருந்தும்.ஏனெனில், இவை பொருள் ஈட்டுவதற்கான சாதனங்கள் அல்ல.தானம் வாங்குவதற்கும் பல கட்டுப்பாடுகள். யாரிடத்திலும், எல்லாவற்றையும் தானமாகப்பெறக்கூடாது, தானமாக வந்ததையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் நெறிமுறைகள்.



வழாஅது  ==  இந்த அந்தணர்கள் இந்த நெறிமுறையிலிருந்து  வழுவாதவர்கள். நெறியிலிருந்து தவறி, வெறும் பெயருக்கு பிராம்மணனாக இருப்பவன் "ப்ரம்ம பந்து" என்று உபனிஷதத்தில் வரும்.


மறப்பினும் ஒத்து கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்  கெடும்

என்பார் வள்ளுவர். (குறள் 134) 

இங்கு வரும் அந்தணர்கள் கடமையிலிருந்து தவறாதவர்கள்.


இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி == இவர்கள் தந்தை, தாய் இரு வழியிலும் நானாவித கோத்ரங்களைச் சேர்ந்த பழைய வம்சாவளியினர். தொல்குடி= பழைய குடியில் வந்தவர்கள். இவர்கள் பூர்வீகக் குடியைச் சேர்ந்தவர்கள்.

தொல்குடி என்பதால் இவர்கள் பரம்பரையாக அங்கேயே இருப்பவர்கள் என்று ஆகிறது.


[இவர்கள் பெயரும் பொதுவாக அந்த ஊரின் சாமிபெயராகவே இருக்கும். சிதம்பரத்தில் கனகசபை, நடராஜன், குஞ்சிதபாதம்.மதுரையில் சோமசுந்தரம், சுந்தரேசன்.திருவாரூரில் த்யாகராஜன். திருவிடைமருதூரில் மஹாலிங்கம்.சேலத்தில்  சுகவனேஸ்வரன், நெல்லையில் காந்திமதி இப்படித்தான் அந்தந்த ஊர்க்குடிகள் பெயர்வைப்பார்கள்! இப்பொழுது மாறிவிட்டது!]

அறு  நான்கு இரட்டி === 6X4X2 == 48

இளமை நல்லியாண்டு  ==வருஷங்கள் வரையிலும் இளமையில்

ஆறினிற் கழிப்பிய  ==ப்ரம்மச்சரிய ஆச்ரமத்தில் நின்று அந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிய வர்கள்.


இது நக்கீரர் நமக்குச் சொல்லும் புதிய செய்தி! பொதுவாக, 24 வயது வரையில் ப்ரம்மச்சரிய நிலையில் நின்று வேதக்கல்வி பயிலவேண்டுமென்பதே மரபெனச் சொல்வார்கள்.மநு தர்மத்தில் வாழ்க்கையின் கால்பகுதியோ அல்லது 36 வருஷங்கள் வரையிலோ எனச் சொல்லியிருக்கிறது. இங்கு நக்கீரர் 48 ஆண்டுகள் எனத் தெளிவாகச் சொல்லுகிறார். எனவே இது மிகப்பழைய காலத்தில் நிலவிய நிலையாகத் தெரிகிறது. அப்படியென்றால், திருமுருகாற்றுப்படை மிகவும் பழைய  நூல் என்பது தெளிவு!


அறன் நவில் கொள்கை === எப்பொழுதும் தர்மம் பற்றியே பேசும் கொள்கை  உடையவர்கள்


மூன்று வகை குறித்த முத்தீ== ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்னி என்று குறிக்கப்பட்ட முவ்வெரிகளை  மூவேளையிலும்  ஓம்பியவர்கள்


செல்வத்து == அதையே செல்வமாக உடையவர்கள்


இருபிறப்பாளர் ==உபநயனம் ஆனதினால் இரண்டாவது பிறப்பு எய்தியவர்கள்


பொழுது அறிந்து நுவல == தக்க சமயத்தை (முகூர்த்தம், நல்லவேளை) அறிந்து, மந்திரங்களால் துதிக்கின்றனர்.


ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண் ஞாண்= மும்மூன்று நுண்ணிய இழைகளால் ஆகிய முப்புரி நூல் அணிந்தவர்கள்


புலராக் காழகம் == உலராத, ஈர ஆடையை


புலர உடீஇ== தம் உடலிலேயே உலரும்படி உடுத்தியிருக்கிறார்கள்' 


இதுவும் நமக்கு புதிய செய்தி. பிராமணர்கள் ஈர ஆடையுடனோ. ஒற்றை ஆடையுடனோ  தெய்வ வழிபாடு செய்யமாட்டார்கள். உலர்ந்த ஆடையுடன்தான் வழிபாடு செய்யவேண்டும் என்பது நியதி. இங்கு நக்கீரர் கூறும் விஷயம் பற்றி எதுவும் அறிய இயலவில்லை.


உச்சிக் கூப்பிய கையினர் = கைகளைத் தலைக்குமேல் தூக்கிக் கும்பிடுகின்றனர்.


தற் புகழ்ந்து= முருகனைப் புகழ்ந்து


ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி== ஆறு அக்ஷரங்களைக் கொண்ட, உபதேசமாகப்பெற்ற அரிய வேத மன்த்ரத்தை ["கேள்வி" என்றதனால், இந்த மன்த்ரம் நூலைக் கற்று வந்ததல்ல, உபதேசமாகச் செவி வழி பெற்றது என்பதைக் குறிப்பிடுகிறார். மன்த்ரங்களை இவ்வாறு தான் குருமூலமாக உபதேசமாகப் பெறவேண்டும்.]


இந்த ஆறெழுத்து -ஷடாக்ஷரம்-மன்த்ரம் எது? சரவணபவ என்பதே இது எனச் சொல்வார்கள். ஆனால் நச்சினார்க்கினியர் 'நமோ குமராய ' எனக் கூறுகிறார்.


நாஇயல் மருங்கின் நவிலப் பாடி== நாக்கு நன்கு புரளும்படியாக (ஸ்பஷ்டமாக) பலமுறையும் கூறி


[பொதுவாக, உபதேசம் பெற்ற மன்த்ரங்களை உரக்கச்சொல்ல மாட்டார்கள்.மனதிற்குள்ளேயே ஜபிப்பார்கள். அஞ்செழுத்தையும்  'நெஞ்சகம் நைந்து நினைமின்' என்கிறார் சம்பந்தர். இங்கே நாஇயல் மருங்கின் என்பதால் இந்த மன்த்ரங்களைத்தவிர  தோத்திரங்களையும் நன்கு உரக்கச் சொல்கிறார்கள் எனக் கொள்ளலாம்.]


விரையுறு நறுமலர் ஏந்தி== வாசனை மிக்க நல்ல மலர்களினால் வழிபடுகிறார்கள். பிராமணர்கள் மணமற்ற மலர்களை அர்ச்சனைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்.


மன்த்ரம் சொல்லி மலரிட்டு வழிபடுகிறார்கள் என்பதால், அந்தணரின் வைதீக மரபுப்படி, "மன்த்ர புஷ்பம் "  (யோ பாம் புஷ்பம் வேத எனத் தொடங்கும் ) ஓதி மலர் சாற்றுகிறார்கள் என்பது பெறப்படுகிறது.


பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன்== இந்த வழிபாட்டை மிகவும் விரும்பிய முருகன், இவ்வாறு ஏரகத் தலத்தில் இருப்பதையும் உரிமையாகக் கொண்டவன். 


திருவாவினன் குடியில் முனிவர், தேவர்களீன் வழிபாட்டையும் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்ட முருகன், இங்கு திருவேரகத்தில், வேத மன்த்ரங்களுடனும்  ஸ்தோத்ரங்களுடனும் கூடிய அந்தணர்களின் வைதீக வழிபட்டையும் உவந்து ஏற்கிறான்.


இதோடு மட்டும் அல்ல- அதா அன்று  என்று தொடர்கிறார் நக்கீரர்.







View of the Vimanam of the temple from the first level

By UnreachableHost  (Own Work)CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.


எது ஏரகம்?


இன்று ஸ்வாமிமலையே ஏரகம் எனக் கருதப்படுகிறது.ஆனால் இது இயற்கையான மலை அல்ல. செயற்கையாக அமைக்கப்பட்ட கல் கட்டடம். அவ்வளவு புராதனமானதாகவும் தெரியவில்லை.நச்சினார்க்கினியர் (6/7 வது நூற்றாண்டு)உரையில் இது மலை நாட்டில் உள்ள தலம் என்று எழுதியிருக்கிறார். மலை நாடு என்றால், சேர நாடாகவும் இருக்கலாம். கொங்கு நாடாகவும் இருக்கலாம்- அங்கும் மலைகள் உண்டு.இவற்றைத் தொடர்ந்து , இன்றைய கர்னாடகாவில் மேற்குமலைப் பகுதியில் "ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யா" என்றே ஒரு க்ஷேத்திரம் மிகப் பிரஸித்தமாக விளங்குகிறது. அதன் அருகில் குமார பர்வதம் என்ற மலையும் இருக்கிறது. கும்பகோணத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு இந்த சுப்ரஹ்மண்யரே குலதெய்வமாகவும் இருக்கிறார்!




A view of Kumara Parvata.https://thetimetiliveinisnow.files.wordpress.com.



ஆனால் நம் அருணகிரி நாதர் ஸ்வாமிமலையையே ஏரகம் எனப் பாடியிருக்கிறார். காவிரிக் கருகில் உள்ளது எனவும் கூறியிருக்கிறார்.

ஏரக வெற்பெனு மற்புதமிக்க சுவாமிமலை ,

தனி காவிரிக்கு வட பாரிசத்தில், 

என்றெல்லாம் சந்தேகத்துக் கிடமில்லாமல் பாடியிருக்கிறார்.



 இந்த இடத்தில்தான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைத்ததாகவும், அவரும் வாதில் வென்று முருகன் பாத தரிசனம் பெற்றதாகவும் சொல்வார்கள்.


தகையாது எனக்கு உன்

அடி காண வைத்த

தனி ஏரகத்தின் முருகோனே


என்று அவர் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.


நமக்கு இதுவே போதும்!

Friday, June 23, 2023

வேதங்கள் வழி அறவழி அறிவுக்குடி பிராமணர்களைப் போற்றும் சங்க இலக்கியம்

 வேதங்கள் வழியில் அறவழி அறிவுக்குடி பிராமணர்களைப் (அந்தணர் - பார்ப்பனர் - ஐயர்) போற்றும் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம்

திருவள்ளுவர் நல்ல நாட்டின் இலக்கணம் என சென்கோன்மை அதிகாரத்தில்அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.              குறள் 543: செங்கோன்மை
அந்தணர் போற்றும் வேதங்களிற்கும் அவற்றினின் எழுத தர்ம சாஸ்திர நீதி நுல்ல்களிற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.

மோசமான ஆட்சியில் விளைவு என கொடுங்கோன்மை அதிகாரத்தில் கூறியது
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.              குறள் 560: கொடுங்கோன்மை.

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் அந்நாட்டில் பசுக்கள்தரும் பயன்கள் குறையும்; அந்நாட்டு பிராமணர்கள் வேதங்களை மறந்து விடுவர்





  
 




Sunday, June 11, 2023

திருக்குறளும் சங்க இலக்கியமும்

 தமிழ் மொழியின் மிகத் தொன்மையான இலக்கியங்கள் - பத்துப்பாட்டு & எட்டுத்தொகை நூல்கள்- சங்க இலக்கியம் ஆகும். இவற்றினை ஆராய்ச்சி செய்த தமிழ் அறிஞர்கள்- இவற்றில் மிகப் பழமையான நூல்களில் யாப்பு வளர்ச்சி இல்லாத தொடக்க கால இலக்கியமாகவும் அதே நேரத்தில் பரிபாடல் கலித்தொகை போன்றவை மிகவும் வளர்ச்சி அடைந்த நிலை என உள்ளது என்பதை உறுதி செய்து உள்ளனர்.

பாட்டுத்தொகை நூல்கள் வெகுஜன இலக்கியமாக அகம்-புறம் என அமைந்து உள்ளது. 

1.அகம் என்பது வீட்டிற்கு உள்ளே என தலைவன்- தலைவி காதல், திருமண வாழ்க்கைப் பற்றி அமைந்தவை

2.புறம் -வீட்டிற்கு வெளியே - அரசன், போர் தலைவர் பற்றி அரசாட்சி, போர், வீரம் போன்ற செய்திகள் கொண்டவை.


ஐங்குறுநூறு 4, ஓரம்போகியார்மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது
வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க, பார்ப்பார் ஓதுக,
என வேட்டோளே யாயே, யாமே,
பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க, என வேட்டேமே.

Ainkurunūru 4, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero
Long live Āthan!  Long live Avini!
May enemies eat grass!
May Brahmins chant!
So desired my friend!

We desired that the chest of the
man, from the town where
sugarcane blooms and paddy mature,
not become common property.

Notes:  The unfaithful hero returns home to the heroine who accepts him.  He asks the heroine’s friend about how the heroine managed in his absence.  The heroine’s friend utters these words which reveal the fine traits of the heroine.   உள்ளுறை:  பழைய உரை: பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையுடைய ஊரன் என்றது, ஈன்று பயன்படாத பொது மகளிரையும் பயன்படும் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு.  இலக்கணக் குறிப்பு:  ஆர்க, ஓதுக – வியங்கோள் வினைமுற்றுக்கள், வேட்டோள் – வேட்டாள் என்பது வேட்டோள் எனத் திரிந்தது, யாமே – ஏகாரம் பிரிநிலை, exclusion, யாயே – ஏகாரம் தேற்றம், certainty, வேட்டோளே – ஏகாரம் அசை நிலை, an expletive, ஆகற்க – வியங்கோள் எதிர்மறை, negative command, வேட்டேமே – ஏகாரம் அசை நிலை, an expletive.

Meanings:   வாழி ஆதன் – long live Āthan, வாழி அவினி – long live Avini, பகைவர் புல் ஆர்க – may enemies eat grass, பார்ப்பார் ஓதுக – may Brahmins chant, என – thus, வேட்டோளே – she desired, யாயே – friend, யாமே – we, பூத்த கரும்பின் – with flowering sugarcanes, காய்த்த நெல்லின் – with mature rice paddy, கழனி ஊரன் மார்பு – the chest of man from the town with fields, பழனம் ஆகற்க – may it not become common land, என – thus, வேட்டேமே – we desired


குறுந்தொகை 106, கபிலர்குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்,
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று, வாழி தோழி, நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு  5
தான் மணந்தனையம்’ என, விடுகம் தூதே.

Kurunthokai 106, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend
May you live long, my friend!
My husband from the land
where white fig trees with
thin aerial roots spread
white roots on boulders,
appearing like waterfalls
that flow down mountains,
has sent me a message
from his heart,
with words without blemish.

Let us accept it like fire that
accepts ghee, and send him the
message that I am just like the
day he united with me.

Notes:  குறிஞ்சியுள் மருதம்.  Marutham in Kurinji.   The heroine said this to her friend on seeing a message from her husband who had separated due to his relationship with his concubine.  பரத்தையிற் பிரிந்த தலைவனின் தூது கண்டு தலைவி தோழியிடம் கூறியது.  இரா. இராகவையங்கார் உரை – பேராசிரியர் இதனைக் கற்பாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23), இளம்பூரணர் இதனைக் களவாகக் கொள்ளல் காண்க (தொல்காப்பியம் களவியல் 2).  நாமும் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – உம்மை இறந்தது தழீஇயது.  தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடு இருந்தவாறே இப்பொழுதும் குறைவின்றி இருப்பேம் என்றமையின் அவனை ஏற்றுக்கோடற் குறிப்புப் பெற்றது.  இற்றி மர விழுது:  குறுந்தொகை 106 – புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும்,   நற்றிணை 162 – வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழிநார் ஊசலின் கோடை தூக்குதொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் அகநானூறு 345 – ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம்.

Meanings:  புல் வீழ் – thin aerial roots hanging, dull colored aerial roots, இற்றி – இச்சி, white fig tree, Ficus talboti, கல் – rocks, இவர் – spreading, வெள் வேர் – white roots, வரை – mountain, இழி – flowing down, அருவியின் – like the waterfalls (இன் உருபு ஒப்புப் பொருளது), தோன்றும் – appearing, நாடன் – the man from the country, தீது இல் நெஞ்சத்து – from a heart without blemish, கிளவி – words, நம் வயின் – to us, வந்தன்று – they have come, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – O friend, நாமும் – and let us (உம்மை இறந்தது தழீஇயது), நெய் பெய் தீயின் – like fire on which oil/ghee has been poured (தீயின் – இன் உருபு ஒப்புப் பொருளது), எதிர்கொண்டு – accepting it, தான் மணந்தனையம் – the same like when he married me, the same like when he united with me, என – thus, விடுகம் – let us send, தூது – a message, ஏ – அசைநிலை, an expletive



ஐங்குறுநூறு 387, ஓதலாந்தையார்பாலைத் திணை  – அந்தணர் செவிலித்தாயிடம் சொன்னது
‘அறம் புரி அருமறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்!’ என்று

ஒண்தொடி வினவும் பேதையம் பெண்டே,
‘கண்டனெம் அம்ம! சுரத்திடை, அவளை
இன்துணை இனிது பாராட்டக்
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே’.

Ainkurunūru 387, Ōthalānthaiyār, Pālai Thinai – What a Brahmin said to the foster mother
Oh naive woman who says,
“I bow respectfully to you, oh Brahmin
of lofty principles, whose tongue recites
the precious Vedas that preach virtue!
Have you seen my daughter wearing
bright bangles?”

Listen!  I have seen your daughter on the
wasteland path, crossing the bright
mountain with tall peaks,
with her sweet companion who praises her.

Notes:  A Brahmin man who saw the heroine and hero in the wasteland, utters these words to the worried foster mother who goes looking for the couple.  இலக்கணக் குறிப்பு:  அந்தணிர் – விளி, an address, தொழுவல் – தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending, ஒண்தொடி – அன்மொழித்தொகை, பேதையம் – அம் சாரியை, கண்டனெம் – தன்மைப் பன்மை வினைமுற்று – first person plural verb ending, அம்ம – கேட்பித்தல் பொருளில் வந்த இடைச்சொல், a particle which means ‘listen’, இறந்தோளே – ஏகாரம் அசை நிலை, an expletive.  அறம் புரி (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நல்லறத்தை விரும்பிச் செய்வதற்குக் காரணமான, அ. தட்சிணாமூர்த்தி உரை, ஒளவை துரைசாமி உரை – அறத்தைச் சொல்லும்.

Meanings:   அறம் புரி – desiring virtue, with virtue, proclaiming virtue, அருமறை – precious Vedas, rare Vedas, நவின்ற நாவின் – with an uttering tongue, திறம் புரி கொள்கை – with good principles, அந்தணீர் – oh Brahmin, தொழுவல் என்று – I bow to you with respect, I say vanakkam to you, ஒண்தொடி – woman wearing bright bangles, வினவும் பேதையம் பெண்டே – oh naive woman who is asking, கண்டனெம் – we saw, அம்ம – listen, சுரத்திடை – on the wasteland path, in the wasteland, அவளை – your daughter, இன்துணை – sweet partner, இனிது பாராட்ட – praising her sweetly, குன்று உயர் பிறங்கல் மலை – bright mountain with tall peaks, இறந்தோளே – she passed


அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று

ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட 5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே

# 387

அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே! உங்களைத் தொழுகிறேன் என்று

ஒளிரும் தோள்வளைகளை அணிந்த உன் மகள் பற்றிக் கேட்கும் பேதையாகிய பெண்ணே!
கண்டோம், வரும் வழியிடையே அவளை,
தனது இனிய துணையானவன் இனிமையுடன் பாராட்ட,
குன்றுகள் உயர்ந்துநிற்கும், வெயிலில் ஒளிவிடும் மலைகளைக் கடந்து சென்றாள்.

# 74 பாட்டு 74
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல்
வேறு படு திருவின் நின் வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம்		5
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து			10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன்
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப			15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில்
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய			20
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்			25
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர
கூறினை பெரும நின் படிமையானே
# 74 பாட்டு 74
வேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;
நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட
திருமகளினின்றும் வேறு பட்ட மற்றொரு திருமகளாகிய உன் தேவி உன் குலம் வாழும்பொருட்டு -
கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,
பந்தல் என்ற ஊர் தந்த பலரும் புகழும் முத்துக்களையும்,
பெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி,
அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
தீய பாகங்களைக் களைந்துபோட்டு, எஞ்சிய வட்டமாக அறுத்த ஒளிவிடும் தோலின்
சுற்றளவாய் அமைந்த விளிம்பில் வகை வகையாகக் கட்டி,
கூர்மையை உடைய ஊசியால், உள்புறத்தில் தைத்து, தொழிலில் வல்லவன்
சூடுவதற்குரிய நிலையை உண்டாக்கி, ஒளி திகழும் தோற்றத்தை உண்டாக்குவதால்
விசும்பில் பறக்கும் வழக்கத்தையுடைய பருந்து ஊன் என்று கொத்தித்தின்ன முனையும்படியாக
மணிகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்ற அழகிய மணி சேர்ந்த நல்ல தோளையும்,
ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும், ஒளிவிடும் நெற்றியையும் கொண்ட உன் தேவி - கருவில் அமைத்து
எண்ணப்படும் மாதங்கள் பத்தும் முடிவடைந்து, இருவகை அறிவும் அமைந்து,
நற்பண்புகளும் நடுவுநிலைமையும் உள்ளிட்ட பிற பண்புகளும்,
நாட்டினைக் காப்பதற்கு அமைந்த அரசியலறிவு முதலியவற்றையும் கற்றுத் தேர்ந்த
சிறப்பு நிறைந்த புதல்வனைப் பெற்றுள்ளாய், இந்த உலகத்து மக்களுக்கு;
அரசர்க்குரிய அரிய கடமைகளைச் செய்து முடித்த, போரினை விரும்பும் வலிமையுடையவனே!
மேற்கூறிய கேள்வி, வேள்வி, மக்கட்பேறு ஆகிய அவற்றைக் கண்டு வியப்புறவில்லை, உன்னிடம்;
உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான புரோகிதனை,
கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி
நாட்டிலிருந்து வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டுக்குத் தவத்தினை மேற்கொண்டு செல்லும்படி
கூறி அனுப்பிவைத்தாய், பெருமானே! உன் தவ ஒழுக்கத்தால்.

# 130
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனின் தோன்றிய இவை என இரங்க
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல்
நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல			5
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை
இ மாலை
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்
# 130
நல்லொழுக்கமும், வாய்மையும், நல்ல நடுவுநிலையும்
இவனிடத்தில் காணப்பட்ட நற்பண்புகள் என்று உலகத்தார் இரங்கிச் சொல்லும்படி,
சிறப்பானவற்றை மிகவும் நாடி, பொய்யை அழித்து, இனிதே ஆண்ட
அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல,
நிறைந்த ஒளிக்கதிர்களைக் கொண்ட ஞாயிறு மறைவதால் அதனோடு பகல்காலமும் செல்ல,
ஒன்றையுமே கல்லாமல், வயதுமட்டும் ஆனவனின் அறிவுக்கண் இல்லாத இருள் படர்ந்த நெஞ்சம் போல
புன்மையான இருள் பரவத்தொடங்கும் வருத்தம் கொள்வதற்குக் காரணமான மயக்கத்தைத் தரும் மாலை வேளை;
இந்த மாலைப் பொழுதில்,
அந்தணர் செந்தழல் வளர்க்க, என்

  முக்கண் (2)
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16
#181 பாலை பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ			5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன்			10
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை			15
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவை துறை-கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசை				20
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த				25
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே
#181 பாலை பரணர்
செல்லுவதற்குக் கடினமான காட்டையும் கடக்கத் துணியமாட்டாய்!
எனக்குப் பின்னே நின்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தாயென்றால்
நீ மட்டும் போய் அவளிடம் எனது இந்த நிலைமையைக் கூறு! நெஞ்சமே! பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிகுந்த பெரிய சேனையையுடைய
போரில் கொல்வதில் வல்ல மிஞிலி என்பவனுடன், போர்க்களத்தில் வேலைச் செலுத்தி,
முருகனைப் போன்ற வலிமையுடன் குருதியால் போர்க்களம் சிவக்கப் போரிட்டு
ஆய் எயினன் என்பவன் இறந்துபட, ஞாயிற்றின்
ஒளிவிடும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாதபடி மறைய, ஒரே தன்மையாக
புதிய பறவைகளின் ஒலிமிகுந்த பெரும் கூட்டம்
விசும்பிடம் மறையும்படி வட்டமிட்டு ஒன்றுகூடி -
பூக்கள் விரிந்த அகன்ற துறையினில் அம்பு போன்ற விசையுடன் விரைந்து வரும் நீரானது
காவிரியாகிய பெரிய ஆற்றின் நுண்மணலை வாரிக் கொணர்ந்து வந்து குவித்து
மேடாக்கிய குவியலான வெண் மணலையும்,
புது வருவாயை உடைய ஊர்களையும் உடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் 
பாதுகாக்கப்படும்,
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட
பொய்கையைச் சூழ்ந்த பொழிலினில், இல்லத்திலுள்ள பேதை மகளிர்
கையாலே செய்த மணல்பொம்மையையுடைய துறையினில் வந்து தங்குகின்ற -
மகரக் கொடியினை உச்சியில் கொண்ட, வானை உரசிக்கொண்டு நிற்கும் கோட்டை 
மதிலையும்,
உச்சிப்பகுதி அறியப்படாதபடி மிகவும் தூரமாக உயர்ந்து நிற்கும் நல்ல மாடங்களையும்
புகார் என்னும் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டில் உள்ளதாகும் - விற்பவர்களின்
நறுமணப் பண்டங்களின் மணங்கள் மணக்கின்ற, வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையும்
மூங்கிலைப் போன்ற அழகையுடையதாய் வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய 
தோளினையும் உடைய
நம்மைப் பிரிந்ததால் துன்பம் மிக்கு இருக்கும் நம் காதலி அமர்ந்திருந்த
மலர் மணம் கமழும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம் - (புகார் நன்
 நாட்டதுவே)
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே - புறம் 6/18
# 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்	5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க		10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்		15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய	25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே
# 6 காரிகிழார்
வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் 
முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள்
 அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.


 
    முக்கண்ணான் (2)
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் - கலி 2/4
#2
தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்		5
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில்
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய

இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய			10
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என		15
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என

கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ		20
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை என இவள்
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல்
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று			25
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி என்
சொல் வரை தங்கினர் காதலோரே
#2
உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
அடங்காத அவுணர்களின் ஆணவத்தை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்,
கூற்றுவன் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் 
கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர்
 வீசும் ஞாயிறு சுட்டுப்பொசுக்குவதால்,
பிறரால் சினந்து அழிப்பதற்கு முடியாத, மழுவினை ஏந்திய அந்தச் சிவன் சினந்து 
நோக்கியதும், அந்தக் கோட்டைகள்
இடியால் தாக்கப்பட்டு பொடிப்பொடியானது போல மலைகள் வெப்பத்தால் வெடிபட்டு,
 வழிச்செல்வார்
செல்வதற்கு இயலாதவாறு பாதையை அடைத்துக்கொண்டு கிடக்கும் அனல் வீசும் 
செல்வதற்கரிய வழியில்,
உன்னை மறக்கமுடியாத காதலையுடைய இவள் இங்கு வருந்தித் தனித்திருக்க,

இவளை விட்டுச் செல்ல துணிந்துவிட்டாய், நான் சொல்வதைக் கேட்பாயாக, ஐயனே!
இருக்கும் செல்வம் தீர்ந்துவிட்டதால், இனி கேட்பவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது
 இழிவு என்று எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
நிலைபெற்ற கற்பினையுடையவளும், நீ பிரிந்தால் உயிர்வாழ மாட்டாதவளுமாகிய இவளின்
முலைகளையுடைய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
'இல்லை' என்று கேட்டுவந்தோர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது இழிவு என்று 
எண்ணி
மலைகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
தொன்மையான நெறிகளினின்றும் வழுவாமல், நீயே துணை என்று நின்னை மணந்த 
இவளின்
தழுவுதற்கு இனிய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் -
போக்கிடமின்றி உன்னிடம் பொருள் கேட்டு வருபவர்க்கு ஒன்றுமே கொடுக்க முடியாதிருப்பது 
இழிவு என்று எண்ணி

காட்டுவழிகளைக் கடந்து சென்று தேடக் கருதிய செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ?
அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய 
இவளின்பருத்த மென்மையான தோள்களை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே 
அல்லாமல் -என்று நான் உனக்குச் சொல்லும்படியாக, இவள்
துன்பம் கொண்டு வருந்தவும், நீ பொருளை நாடிச் செல்வது
அன்புடைய செயல் ஆகாது என்று நான் சொல்ல, உன்மேல் அன்புகொண்டு
குத்துக்கோலுக்கும் அடங்காமல் செல்லும் களிற்றியானை
யாழின் இசைக்கு அடங்கி நிற்பது போல, தலை தாழ்த்தி, உன்
மாறாப் பேரழகு பாழாகிப்போவிடுமோ என்று அச்சங்கொண்டு, என்னுடைய
சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் போவதை விடுத்து இங்கேயே தங்கிவிட்டார் உன் காதலர்.
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் - கலி 104/12
# 104
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய			5
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி

திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும்		10
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்			15
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல
புரிபு_புரிபு புகுத்தனர் தொழூஉ
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
# 104
மிகுந்த அலைகள் மேலேறியதால் தன் நிலத்தைக் கடல் கவர்ந்துகொள்ள,
மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,
சோழனின் புலிச் சின்னத்தோடு, சேரனின் வில் சின்னத்தையும் நீக்கி, புகழ்மிக்க கயல்
 சின்னத்தை அங்குப் பொறித்து,
தன் வலிமையினால் பகைவரை வணங்கச் செய்த வாட்டமுறாத தலைமைப் பண்பையுடைய
 பாண்டியனின்
பழைமையான புகழை நிலைநிறுத்தின குலத்தோடு தோன்றின
நல்ல பசுவினத்தின் ஆயர்கள் ஒன்றாகக் கூடி எல்லாரும்,
விண்ணைத் தோயும்படி ஓங்கிய பிரகாசமாய் ஒளிவிடும் பனைக்கொடியினையுடைய
பால் நிற வண்ணனாகிய பலராமன் போல் குற்றமற்ற வெள்ளைநிறக் காளையும்,
பகைவரை மாய்ப்பதில் சிறந்து விளங்கிய, பொன்னால் புனைந்த புகழ்பெற்ற சக்கரப்
படையையுடைய

திருமகள் உறையும் மார்பையுடைய திருமாலைப் போல் திறம் கொண்ட கருமையான
 காளையும்,
மிகுதியாய் ஒளிரும் தாழ்ந்த சடையினையும், ஒருபக்கத்தில் வீற்றிருக்கும் பிறை போன்ற 
நெற்றியையுடையவளையும் உடைய
முக்கண்ணனின் நிறம் போல பகைமையுணர்ச்சி மிகுந்த கபிலை நிறக் காளையும்,
பெரிய கடலைக் கலக்கி மாமரத்தை வெட்டின மீளாத போரையுடைய
வேலில் வல்லவனான முருகனின் நிறத்தைப் போல அச்சந்தரும் சிவப்புக் காளையும், இவை
 போன்ற
போரிடும் குணமுள்ளவைகளும், பிற காளைகளும்
பல்வேறு நிறங்கள் கொண்ட பலவகை மேகங்கள் ஒன்றுகூடியதைப் போல
மிகவும் விருப்பத்துடன் ஒவ்வொன்றாக நுழையும்படி விட்டனர் தொழுவிற்குள்;
அவ்விடத்தில், "முள் போன்ற கூரிய பற்களைக்கொண்ட அழகியான இவளைப் பெறுவான்,
 இந்த ஒப்பில்லாத
வெள்ளைக் காளையின் கழுத்தை அணைபவன்;
# 228 ஐயூர் முடவனார்
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்		5
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்		10
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே		15
 228 ஐயூர் முடவனார்
மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே! மண்பாத்திரங்களைச் செய்யும் குயவனே!
இருள் ஓரிடத்தில் செறிவாய் நின்றதைப் போல் கரிய நிறத்தில் திரண்ட மிகுந்த புகை
அகன்ற பெரிய ஆகாயத்தில் சென்று தங்கும் சூளையையுடைய
அகன்ற இடத்தையுடைய பழைய ஊரில் மண்பாத்திரங்கள் செய்யும் குயவனே!
நீ என்ன பாடு படுவாயோ? நீ இரங்கத் தக்கவன்.
நிலமெல்லாம் பரப்பிய மிகப் பெரிய படையையுடைய,
புலவர்களால் புகழப்பட்ட பொய்மை இல்லாத நல்ல புகழையுடைய,
விரிந்த கதிர்களையுடைய ஞாயிறு, வானத்தில் ஊர்ந்து ஏறுவது போன்ற
தொலைவிலும் விளங்கும் சிறப்பையுடைய சோழர் குலத்தின் வழித்தோன்றல்
கொடி அசைந்தாடும் யானைகளையுடைய மிகப் பெரிய வளவன்
தேவருலகம் அடைந்தானாக,
அவனை அடக்கம் செய்வதற்கேற்ற இடம் அகன்ற தாழியைச்
செய்ய விரும்பினாய் என்றால், எப்படியும்
பெரிய நில உலகத்தைச் சக்கரமாகவும், பெரிய இமயமலையை
மண்ணாகவும் கொண்டு உன்னால் அந்தத் தாழியைச் செய்ய முடியுமா? 
- (நீ இரங்கத் தக்கவன்.)

வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும் - வஞ்சி:28/175
 வழிவழி சிறக்க வய வாள் வேந்தே        170
அரும் பொருள் பரிசிலேன் அல்லேன் யானும்
பெரும் பேர் யாக்கை பெற்ற நல் உயிர்
மலர் தலை உலகத்து உயிர் போகு பொது நெறி
புல வரை இறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழி நினக்கு அளிக்கும்        175
நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான்
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும்
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே
 
திருமுருகாற்றுப்படை
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு	105	
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,				105
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்,
விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை; இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை;
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை;

# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்			5
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட			10
புல புல்வாய் கலை பச்சை
சுவல் பூண் ஞான் மிசை பொலிய
மறம் கடிந்த அரும் கற்பின்
அறம் புகழ்ந்த வலை சூடி
சிறு நுதல் பேர் அகல் அல்குல்			15
சில சொல்லின் பல கூந்தல் நின்
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது			20
நீர் நாண நெய் வழங்கியும்
எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும்
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை		25
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின்
பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்		30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே
# 166 ஆவூர் மூலம் கிழார்
நன்கு ஆராயப்பட்ட மிக நீண்ட சடையினையுடைய
முதிய இறைவனது வார்த்தைகளைவிட்டு விலகாமல்
அறம் ஒன்றையே சார்ந்து, நான்கு பகுதி உடையதாகி
ஆறு அங்கங்களாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு
மாறுபட்டவைகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி
அவரது உண்மை போன்ற பொய்யை உணர்ந்து
அப்பொய்யை உண்மை என்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி
இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறையில்லாமல் செய்து முடித்த
புகழ் நிறைந்த சிறப்பையுடைய அறிவுடையோர் மரபில் வந்தவனே!
வேள்வித் தொழிலுக்காக நீ போர்த்த
காட்டில் வாழும் கலைமானின் தோல்
நீ தோளின் மேல் அணிந்திருக்கும் பூணூலின் மேல் பொலிவுற்று விளங்க,
அறமற்றவைகளைக் கடிந்து நீக்கிய பெறுவதற்கரிய கற்பினையும்
அறநூல்கள் புகழ்கின்ற, யாகபத்தினிகள் நெற்றியில் அணியும் அணியான சாலகத்தைச் சூடி
சிறிய நெற்றியினையும், பெரிய அகன்ற அல்குலையும்
சிறிதளவான பேச்சையும், நிறைந்த கூந்தலினையும் உடைய உன்
நிலைக்கு மனமொத்த உன் துணையாகிய மனைவிமார்
தத்தமக்கு அமைந்த ஏவல் தொழிலைக் கேட்டுச் செய்ய,
காடோ, நாடோ அந்த அந்த இடத்தில்
காடென்றால் காட்டுப்பசு ஏழுடனும், நாடென்றால் நாட்டுப்பசு ஏழுடனும் குறையே இல்லாமல்
தண்ணீரைப்போல நெய்யை வழங்கியும்,
எண்ணிறந்த பல வேள்விகளைச் செய்தும்
மண் தாங்காத புகழ் பரப்பியும்
பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்வி முடிந்த காலத்தில்
விருந்தினர்க்கு விருந்து செய்த உன் திருத்தமான மேம்பட்ட நிலையை
யாம் இன்றுபோல் எந்நாளும் காண்போமாக, மேற்கில்
பொன் விளையும் உயர்ந்த குடகு மலையில் மேகங்களின் இடி முழங்கினால்
பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில் 
உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
மூங்கில் வளரும் இமயம் போல
நீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்

பதிற்றுப்பத்து 21, *அடு நெய் ஆவுதி*, பாடியவர்: பாலைக் கெளதமனார்பாடப்பட்டவர்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: செந்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்

சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்,
காலை அன்ன சீர் சால் வாய்மொழி,
உருகெழு மரபின் கடவுள் பேணியர்,  5
கொண்ட தீயின் சுடர் எழுதோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி,
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண் மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை  10
குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்பக்,
கடல் ஒலி கொண்டு, செழு நகர் நடுவண்
அடுமை எழுந்த *அடு நெய் ஆவுதி*,
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு, வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி,  15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்,
மாரி அம் கள்ளின் போர் வல் யானைப்
போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்புச் சிறந்து,
நன்கலந் தரூஉம் மண்படு மார்ப!
முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர்  20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிக்,
கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்,
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை!
பல் பயன் தழீஇய பயங் கெழு நெடுங்கோட்டு,  25
நீர் அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச்,
சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந!
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து  30
நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக!
மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஒரீஇயின போல விரவு மலர் நின்று,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,  35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத்தோள், இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.

Pathitruppathu 21, Poet: Pālai Kouthamanār, King: Palyānai Selkezhu Kuttuvan, Smoke from Cooking with Ghee

Words, interpretations, astrology, Vedas and a contained
heart that learned, are what holy men honor.  These five
give them principles to live by, without hurting others, and
to be virtuous.

These esteemed sages are noble, truthful and dependable
like the morning sun.  They worship gods and perform rituals
according to their strong traditions.  The bright flames they
light for oblations that yield benefits, are like reflections of
their inner desires.  Beneficial smoke rises from their ritual
fires.

Smoke also rises from the huge palace courtyard where
goat meat with white fat chopped on wooden boards, sold by
goat sellers, is roasted in ghee with sizzling sounds, roaring
endlessly like the ocean, to feed those who come, so that they
do not have to go elsewhere to eat.

Fragrant smoke from both fires rises to the skies and the gods
in the upper world are happy.

Oh victorious king of a fertile country where beneficial rains
never fail!  Where fine toddy is poured like rainwater!  You
led your troops in battles with trained war elephants, as battle
drums covered with leather resounded and warriors clamored,
staining your chest with enemy soil.  You brought back spoils
of wars and gifted fine ornaments to those around you.

Oh king of Pūliyars!  Oh lord of Seruppu Mountain with the
same name as that which is worn on feet, where cattle herders
wearing jasmine garlands let their cattle herds graze on grass
in the vast land, and pick sparkling gems from the forests with
lofty mountains!  You are a body shield to your warriors wearing
many kinds of garlands!

Oh king of the lofty Ayirai Mountain with the same name as the
fish that does not fear the hunting storks that look from afar, 
with blocking vertical peaks that yield benefits, and streams 
running down its sides!  Your citizens live happily without 
diseases since rains fall every year without ceasing.

May you live for thousands of years with your beautiful queen,
her flowing dark hair with natural fragrance without any added
scents, resembling that of rainy season’s jasmine, her pretty
eyes like night-blooming flowers that are removed from ponds,
wide, darting and moist, and her wide arms like bamboo that
grows on splendid stream beds where swaying glory lilies
blossom.

Notes:  கேள்வி (1) – ஒளவை துரைசாமி உரை – வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாகக் கேட்கப்படும் முறைமையுடையதாகலின், கேள்வி எனப்பட்டது.  நெஞ்சம் (1) – பழைய உரை, அருள் அம்பலவாணர் உரை – இந்திரியங்களின் வழியோடாது உள்ளடங்கிய தூய நெஞ்சம், ஒளவை துரைசாமி உரை – ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றும் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் தாளை வணங்குதவென்பதாலும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுவதற்குரிய ஞானமும் வீடுபேறும் சிறப்புடைய அருநூலாதல் பற்றி ஆகமத்தை நெஞ்சம் என்றார்.  மிதி அல் செருப்பின் (23) – மிதித்து நடக்கப் பயன்படுத்தப்படும் செருப்பு அல்லாத செருப்பு மலையை உடைய, வெளிப்படை, owning Ceruppu Mountain which is not the ceruppu worn on the feet.  பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரை (27-29) – கொக்கின் வேட்டைக்கு அஞ்சாத மீன் இல்லாது மீனின் பெயரையுடைய சிறப்பான நாட்டில் பகைவர் தோற்பதற்கு காரணமாக குறுக்கிட்டு கிடக்கும் நேரே உயர்ந்த நெடிய மலையாகிய அயிரை மலை, வெளிப்படை, lofty blocking Ayirai Mountain that has been the reason for defeating enemies which has the same word as a fish that does not fear storks that search for prey.  குவியல் கண்ணி (24) – அருள் அம்பலவாணர் உரை – குவிதலுடைய கண்ணி, ஒளவை துரைசாமி உரை – பல வகைப் போர்க் கண்ணி. 

Meanings:  சொல் – books on words, பெயர் – books on interpretations/meanings, நாட்டம் – books on astrology, desire to find out, கேள்வி – Vedas, நெஞ்சம் – a controlled heart, holy books, என்று ஐந்து உடன் போற்றி – thus praise these five, அவை துணை ஆக – with the help of those, எவ்வம் – sorrow, சூழாது – not considering, விளங்கிய கொள்கை – bright principles, great principles, காலை அன்ன சீர் சால் வாய்மொழி – great noble truthful words like the dependable morning sun, உருகெழு மரபின் – with fierce traditions, கடவுள் பேணியர் – to worship god, கொண்ட தீயின் சுடர் எழுதோறும் – whenever ritualistic fires are lit and flames rise up, விரும்பு மெய் பரந்த – desire in the mind spread on the body, பெரும் பெயர் – very famous, very beneficial, ஆவுதி – ritualistic smoke, வருநர் வரையார் வார வேண்டி – for those who come to him to eat without limit, விருந்து கண் மாறாது – those who do not go away to other donors, உணீஇய – to eat (செய்யுளிசை அளபெடை), பாசவர் – meat sellers, ஊனத்து அழித்த – cut on meat cutting boards, வால் நிணக் கொழுங் குறை – white colored fat, குறை – chopped meat, குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்ப – it is noisy when the meat is roasted (in a hot pot with oil), கடல் ஒலி கொண்டு – like ocean sounds, செழு நகர் நடுவண் – in the middle of the rich mansion, அடுமை – cooking, எழுந்த – rose, அடு நெய் – heated ghee, ஆவுதி – smoke, இரண்டு உடன் கமழும் நாற்றமொடு – with the smells from both smokes (from the palace and from the sages), வானத்து – in the sky, நிலைபெறு கடவுளும் – eternal/stable gods in the upper world, விழைதக – to desire, பேணி – protecting, ஆர் வளம் – very fertile, பழுனிய – abundant, ஐயம் தீர் சிறப்பின் – with splendor without doubt, மாரி அம் கள்ளின் – with fine toddy poured like rain, போர் வல் யானை – elephants trained in fighting battles, போர்ப்பு உறு முரசம் கறங்க – battle drums covered with leather roar, ஆர்ப்புச் சிறந்து – with loud noises, நன்கலம் தரூஉம் – give fine ornaments (தரூஉம் – இன்னிசை அளபெடை), மண்படு மார்ப – oh lord with a chest that has touched the sand, முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் – herdsmen with many cows wearing jasmine flower strands, புல் உடை வியன் புலம் – wide lands with grass, பல் ஆ பரப்பி – cattle herds are spread, கல் உயர் கடத்து இடை – in the forests where the mountains are lofty, கதிர் மணி பெறூஉம் – they obtain sparkling gems (பெறூஉம் – இன்னிசை அளபெடை), மிதி அல் செருப்பின் – with not the walking slippers but with  the Seruppu Mountain, பூழியர் கோவே – oh king of Pūliyars, குவியல் கண்ணி – wearing heaps of garlands, wearing various kinds of war garlands, மழவர் மெய்ம்மறை – body shield to warriors, பல் பயன் – many benefits, தழீஇய – surrounded, embraced (செய்யுளிசை அளபெடை), பயம் கெழு – with benefits, நெடுங்கோட்டு – tall peaks, நீர் அறல் மருங்கு – water flowing side, வழிப்படா – not going up, பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு – stork with a the ability to look from afar desiring to hunt for fish, அஞ்சா – does not fear, சீர் உடைத் தேஎத்த – in a famous country (தேஎத்த – இன்னிசை அளபெடை), முனை கெட – ruining enemies in wars, விலங்கிய – blocking, நேர் – perfect, straight, உயர் – lofty, நெடுவரை – tall peaks, அயிரைப் பொருந – oh king who owns Ayirai mountains, யாண்டு பிழைப்பறியாது பய மழை சுரந்து – since the beneficial rains fell every year without making the mistake of stopping, நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக – people lived without diseases for a long time, மண்ணா வாயின் – even without adornment, even without fragrant oils, மணம் கமழ் கொண்டு – with fragrance spreading, கார் மலர் கமழும் – rainy season flowers aroma, தாழ் இருங்கூந்தல் – hanging dark hair, ஒரீஇயின போல – like those that were removed (ஒரீஇயின – சொல்லிசை அளபெடை), இரவு மலர் நின்று – flowers that bloom at night, திருமுகத்து – on her beautiful face, அலமரும் பெருமதர் மழைக்கண் – moving big beautiful moist eyes, அலங்கிய காந்தள் – moving glory lilies, இலங்கு நீர் அழுவத்து – on the splendid stream shores, வேய் உறழ் பணைத்தோள் – bamboo like wide arms (உறழ் – உவம உருபு, a comparison word), இவளோடு – with her, ஆயிர வெள்ளம் வாழிய பலவே – may you live for many thousand years (பலவே – ஏகாரம் அசை நிலை, an expletive)

# 21 பாட்டு 21
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர் சால் வாய்மொழி
உரு கெழு மரபின் கடவுள் பேணியர்			5
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை			10
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி			15
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர்			20
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு		25
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து			30
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்		35
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணை தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே
# 21 பாட்டு 21
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு
சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த 
மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் 
நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!