திருவள்ளுவர் முழுமையான ஆஸ்திகர். வள்ளுவர் மெய் அறிவு என இறை ஞானத்தை குறிக்கிறார். திருவள்ளுவர் இந்தியத் தத்துவ ஞான மரபில் ஊறியவர். அவர் நாம் இப்பூமியில் வாழும் வாழ்வு(ஆயுள் - நிலைக்கும் காலம்) மிகவும் குறுகிய காலம், இறந்து பிறந்து இறந்து என வாழும் வாழ்வை
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
நாம் இப்படி பிறந்து இறந்து பிறந்து வாழக் காரணம் என்ன ? வள்ளுவர் இறைஅறிதலை மெய் அறிதல் என சிறப்பு அதிகாரமாய் வைத்துள்ளார்.
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
மீண்டும் பிறக்கும் இந்த நிலை கடக்க என்ன வழி?
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10:
மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து வாழும் பிறவிப் பெருங்கடல் தாண்ட இறைவனின் திருவடியைப் பற்ற வேண்டும்.
மனிதன் கல்வி கற்பதே உலகைப் படைத்த இறைவனை உணர்ந்து அவர் திருவடியைப் பற்றிக் கொள்ளவே
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:
கடைசிக்கு காலத்தில் அறம் செய்வோம் என்று இருக்காமல் நாள்தோறும் அறம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தல் இறக்குங் காலத்தில், உயிருக்கு அழியாத துணையாக இருக்கும்.
வள்ளுவர் இறை என்ற சொல்லையும், தெய்வம் என்ற சொல்லையுமே பயன்படுத்தி உள்ளார். தெய்வம் என்பதை சில குறட்பாக்களில் புகழோடு வாழ்ந்த மாந்தரையும் குறிக்கிறார்.
கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை, இறைவன் என்ற சொல்லாடிசைப் பயன்படுத்தினாலும், இறைமாட்சி என அரசனுக்கு உரிய பண்புகள் அதிகாரத்திற்கு பயன் படுத்தி உள்ளார்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
கற்க வேண்டிய வற்றைக் பெரியவர்களிடம் கற்று --இவ்வுலகில் மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. குறள் 4: விருப்பு வெறுப்பு (தேர்ந்தெடுக்கப் பட்டவன், என் கதையை ஏற்பவர் மாடுமே) என்பது இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் 5:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. குறள் 7: தனக்கு ஒப்புமை இல்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: அந்தணர் போற்றும் வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.. குறள் 134: பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். குறள் 560: காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். குறள் 28: நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).
No comments:
Post a Comment