Sunday, September 9, 2018

சம்ஸ்கிருத மொழியும் தமிழும்

இந்தியா உலகின் நாகரீகத் தொட்டில் என தொல்லியல் நிருபிக்கிறது. சிந்து - சரஸ்வதி நாகரீகம் என்பது 3 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பில் இருந்தது.  ஹரியானாவின் பிர்ரானா எனும் பகுதி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் 9500 வருடம் முன்பானவை என அறிவியல் பூர்வமான ஆய்வுகள் நிருபித்துள்ளது.
சம்ஸ்கிருத மொழியின் இலக்கண நூல் பாணினியின் அஷ்டாத்யாயி இது பொமு 4ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது, உலகின் மதிப்புமிக்க பல்கலைக் கழகங்கள் அனைத்தும் சம்ஸ்கிருத  மொழியினை ஆராய்கிறது.  மொழியியலின் உச்ச கட்ட இலக்கணம் எனப் பன்னாட்டு பல்கலை கழக மொழியியல் அறிஞரும் ஏற்கின்றனர்.
சம்ஸ்கிருதம் அறிவியக்கத்துக்குரிய மொழி. அதற்காகவே ஆக்கப்பட்டது.   சம்ஸ்கிருத  அறிவியக்கத்தை                                                                                          1.வேதங்கள் உருவான காலகட்டம்                                                                                            2.ஆறுதரிசனங்கள் தோன்றி தொகுக்கப்பட்ட காலகட்டம்                                              3.உபநிடதங்கள் உருவான காலகட்டம்                                                                                                4. இதிகாசங்களும் ஆரம்பகட்ட புராணங்களும் தொகைநூல்களும் உருவான காலகட்டம் 5. பிறமொழி நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டதும் சமணநூல்கள் எழுதப்பட்டதும் பெருங்காவிய இயக்கம் நிலைகொண்டதும் மொழியியல் மற்றும் இலக்கண நூல்கள் உருவானதுமான காலகட்டம்.                                                                                                                6. பிற்கால வேதாந்தங்கள் உருவான காலகட்டம் என பல தனி அறிவியக்கங்களாகப் பிரிப்பதுண்டு.
சம்ஸ்கிருதம் பண்டைய இந்தியாவின் ஞானக் களஞ்சியத்தின் மொழி.  அந்த ஞானக் களஞ்சியம் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மொழிகளுடன் உரையாடிக் கொண்டு  ருக்கிறது. இந்தியாவின் எந்த மொழி இலக்கியத்தை அணுகி அறிய வேண்டுமெனிலும் அதற்கு சம்ஸ்கிருதம் தேவை. சம்ஸ்கிருதம் ஓர் அறிவியக்க மொழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும்.

சம்ஸ்கிருதம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை உலக அளவில் மிக அதிகமான அறிவியல் நூல்களைக் கொண்ட அறிவியல் மொழியாகவே இருந்துள்ளது. கணிதம், வானவியல், மருத்துவம், சிற்பவியல் என அதிலுள்ள பெருநூல்கள் இன்றும் அறிவியலாளர்களால் பயிலப்படுபவை, ஆராயப்படுபவை. இன்றும் இங்கே புழங்கும் மருத்துவமும் சிற்பவியலும் சம்ஸ்கிருதக் கலைச்சொற்கள் இன்றி செயல்பட முடியாதவையாகவே உள்ளன.

பாரதம் எங்கும் அசோகர் கல்வெட்டுகள் 26 உள்ளதில் பெரும்பாலானவை வடமொழியில் உள்ளது, இங்கு வடமொழி என்பதை பிராகிருதம் எனப் படும்; பிராகிருதம் பேசு மொழி; அம்மொழியின் செம்மை செய்யப்பட்ட இலக்கிய மொழியே சம்ஸ்கிருதம், சற்றே திரிந்த வடிவம் பாலி எனப்படும். 

வெள்ளைக்காரக் கிறிஸ்துவப் பாதிரிகளால் உலகின் உச்ச கட்ட நாகரீகச் சிறப்பு மொழியை செய்யும் ஆற்றல் இந்தியருக்கு கிடையாது, ஐரோப்பியர் இங்கு வந்து தான் செய்திருக்க வேண்டும் எனும் ஒரு மூட நம்பிக்கையீல் எழுந்ததே ஆரியர் வருகை படையெடுப்ப் எனும் நச்சுப் பொய் ஊகங்கள்.

சம்ஸ்கிருதம் அதன் அறிவியல் முக்கியத்துவத்தை இழந்து ஐநூறாண்டுகள் ஆகின்றன. அதுவும் இயல்பே. நூறாண்டு முன்வரை ஜெர்மன் மொழியே தத்துவத்துக்கான மொழி. இன்று இல்லை. இன்று நவீன அறிவியலுக்கான உலகளாவிய மொழி ஆங்கிலமே.

தமிழ் மொழி எழுத்துக்களில் மெய் எழுத்தில் கடைசியில் "ழ ள ற ன" என உள்ளது, அதாவது, தமிழிற்கே சிறப்பான எழுத்துக்கள் கடைசியில் வைக்கப் பட்டுள்ளது,  இது வடமொழி எழுத்துக்களைத் தான் தமிழ் இணைந்து வளர்ச்சி பெற்றது என மொழியியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள் தெரிவிக்கிறது, தமிழ் பழமையான கல்வெட்டுகள் மிகச் சிறியவை - எல்லா எழுத்துக்களும் அதாவது உயிர்-12; மெய்-18 என அனைத்திற்கும் தனி உரு பெற்றது பொ 4ம் நூற்றாண்டு இறுதி அல்லது 5ம் நூற்றாண்டு ஆரம்பம் தான்.
சங்க இலக்கிய நூல்கள் என்பது பொமு 200 முட்தல் பொஆ 600 வரையிலும், அதன் பின்பு தொல்காப்பியமும் பதிநெண்கீழ்கணக்கு நுல்ல்களும் பக்தி இலக்கியங்களும் உருவாகின, திருக்குறள் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்தது. இவை அனைத்துமே வடமொழியினிடம் பெற்றும் கொடுத்தும் வரையப் பட்டுள்ளது; 

தமிழில் 40% சொற்கள் வட மொழி சொற்கள், சம்ஸ்கிருதத்தில் உள்ள சொற்களில் 33% தமிழ் சொற்கள் என இருமொழி பன்னாட்டு பல்கலை கழக அறிஞர்கள் தெளிவாக்குகின்றனர்.
 மக்கள் மொழியான தமிழில் அறிவியக்கம் ஒன்று ஈராயிரமாண்டுகளாக நிகழ்ந்து வந்திருக்கிறது. 
தமிழிலும் தொடர்ந்து ஓர் அறிவியக்கம் இருந்துள்ளது. 1. திணைப்பிரிவினைகள் மற்றும் அதை ஒட்டிய வாழ்க்கைநோக்கு உருவான சங்க காலகட்டம். 2. பௌத்த சமண சிந்தனைகளின் செல்வாக்குடன் உருவான நீதிநூல்கள் மற்றும் காப்பியங்களின் காலகட்டம். 3. சைவ வைணவப் பெருமதங்கள் தத்துவார்த்த அடிப்படையை திரட்டிக்கொண்ட பக்திகாலகட்டம். 4. மூலநூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட, மருத்துவம் போன்றதுறைகளில் மூலநூல்கள் பல உருவான மரபின் இறுதிக்காலகட்டம் 5.பாரதிக்குப்பின் உருவான நவீன காலகட்டம் என அவ்வறிவியக்கத்தை பிரித்துப்பார்க்கலாம்.

No comments:

Post a Comment