Sunday, September 9, 2018

உலக நாடுகளில் கருத்து சுதந்திரம் வெறுப்பு அச்சுறுத்தல் பேச்சிற்கு கிடையாது

2005 - 2006 இல் அமெரிக்கா.. ஈராக்கிற்கு எதிராக போர் தொடுத்திருந்த காலகட்டத்தில்.. ஒரு இந்திய மாணவன் பெயர் ‘விக்ரம் புத்தி’.. புர்டியூ யூனிவர்சிட்டியில் பிஹெச்டி படிப்பவர்.. அமெரிக்க ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, அவர்களின் மனைவிகள் பற்றி சில வெறுப்புச் செய்திகளைப் பரப்பினார். “ஜார்ஜ் புஷ் ஐ கொலை செய்து அவர் மனைவியை கற்பழிக்க வேண்டும்” என்பதுதான் அந்த வெறுப்புச் செய்தியின் சாராமஸம்.

இந்த ஒரு அறிக்கைக்காக ‘விக்ரம் புத்தி’ உடனடியாக கைது செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த வெறுப்பு பேச்சுக்கான தண்டனையாக 5 ஆண்டு கடுங்காவலும் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 வருடங்கள் நன்னடத்தைக்கான சோதனை வைக்கப்பட்டு அதை அமெரிக்க அதிகாரிகள் மேற்பார்வையும் செய்தனர்.
கோர்டில் நீதிபதி, விக்ரம் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கோ, உப ஜனாதிபதிக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு தண்டனை கொடுத்ததன் காரணம் ஒரு அச்சுறுத்தலை வெளிப்படுத்தியதே குற்றம் என்பதனாலேதான் என்றனர். அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை மேல் மட்டத் தலைவர்களை கொல்ல நினைப்பது கூட சட்டப்படி குற்றம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதே போல லண்டனில் (UK) போன வருடம்... அதன் பிரதமர் தெரஸா மே அவர்களுக்கு ஒரு பங்களாதேஷியால் அச்சுறுத்தல் நிகழலாம் என்று சந்தேகப்பட்ட ஒரே காரணத்தால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த பங்களாதேஷியைப் பற்றி எல்லா விவரங்களையும் குடைந்து எடுத்து அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் அவர்களின் சந்தேகத்தின் அடிப்படை மட்டுமே.
இது போலவே, வளர்ந்துவரும் நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக கைது என்பது பல சமயங்களில் நடந்துள்ளன. யூகே, ப்ரான்ஸ், பல ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டப்படித் தேர்ந்தெடுத்த தங்களின் தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் சந்தேகத்திற்கு சிறிதும் இடமளிக்காமல், எந்த விதத்திலும் அவர்கள் சமரசம் செய்து கொள்ளாமல் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள்.
விளையாட்டுக்காகக் கூட தலைவர்களையோ, அதிகாரிகளையோ கொலை செய்வது பற்றி பேசியோ எழுதியோ செய்தால் கண்மூடித் திறப்பதற்கு முன் கம்பி எண்ண வேண்டியிருக்கும். அந்த பேச்சுகளை கேலியாகவோ, கிண்டலாகவோ, வேடிக்கை என்றோ எடுத்துக் கொள்ளாமல் உண்மையான அச்சுறுத்தல் என்கிற பாணியிலேயே கையாண்டு, தண்டனையும் வழங்குவர்.
ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடுகளில்தான் அதிக அளவில் பேச்சு சுதந்திரம் இருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்..!
இந்தியாவில் மட்டும்தான், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய திட்டமிட்ட தீவிரவாதிகளை (இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள்) மற்ற கட்சியினரும் பிற அறிவுஜீவிகளும் வெட்கமில்லாமல் ஆதரிக்கிறார்கள். அவர்களை புரட்சியாளர்கள் என்றும், புனிதமானவர்கள் என்றும் ஒரு சில அறிவுஜீவிகளும், மீடியாக்களும், சமூக ஆர்வலர்களும், சில பல வக்கீல்களும் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்திலுள்ள மற்ற நாடுகளில், எவன் ஒருவன்... துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், 8000 ரவுண்டு புல்லட்டுகள் வாங்கி அல்லது சேகரித்து... பொது ஊர்வலத்தில் பிரதமரைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தானோ, அல்லது செய்தது தெரிய வந்ததோ.. உடனே அவனை சிறையில் தள்ளி வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருப்பதற்கு ஏற்பாடும் செய்திருப்பார்கள். ஆனால்... நம் நாட்டில்..?
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது... எந்த அளவு நம் இந்திய நாட்டில் பத்திரிகையாளர்கள் என்னும் போர்வையில் நக்ஸலைட்டுகள் ஊடுறுவி.. தீவிரவாதிகளுடன் சில பொலிடிகல் லாபிகளை செய்கின்றார்கள் என்பதையும், அதனால் இதுவரை ஏற்பட்ட சமரசங்களையும், கொலைகளையும், வெளிநாட்டவர்களின் ஊடுறுவல்களையும், மாற்று மதத்தவர்களின் ஆதிக்கத்தையும் உணர்ந்து புரிந்து அதற்கு ஏற்ப நம் சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே.
இந்தியாவில் மட்டுமே... பொதுவாழ்வில் இருக்கும் பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு தீவிரவாதத்தை ஆதரிப்பது என்பது. அதுவும் இந்தத் தீவிரவாதம் இஸ்லாமியமாகவோ, மோவோயிஸ்டாகவோ இருந்துவிட்டால்... இவர்களின் கூச்சல் வானத்தையே உடைத்து எடுத்துவிடும். இதற்கு அவர்கள் வைத்த பெயர் பேச்சுரிமை..!

No comments:

Post a Comment