Monday, October 1, 2018

சைவ சித்தாந்தம் நால்வருணக் கோட்பாடு நன்மைப் பயப்பதே

சைவ சித்தாந்தம் -நால்வருணக் கோட்பாடு நன்மைப் பயப்பதே 
20 ம் நூற்றாண்டில் கூட தமிழ் அறிஞர்களில் பலரும் கடந்த காலங்களில் “சைவ சித்தாந்தம்தான்” தமிழர்களுடைய “தனிபெரும் தத்துவம்” என்று எழுதியும் பேசியும் வந்துள்ளனர், வருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்தத்தைப் பயிலும்படி தூண்டியது. அப்படி பல வருடங்களாக சித்தாந்த நூல்களைப் படித்தேன். அப்பொழுது இவர்களுடைய கூற்றுக்கள் உண்மையானவைகள் அல்ல என்பதையும் அரசியல்அதிகாரம் சார்ந்த முழக்கங்கள் என்பதையும் அந்த நூல்களில் உள்ள பல செய்திகள் எனக்கு புலப்படுத்தின.
(உலகில் கம்யூனிசமும் - இஸ்லாமும் உள்ள எந்த நாட்டிலும் நேர்மையான கருத்து  உரிமை இல்லை. இத்தோடு கிறிஸ்துவமும்  சேர்ந்து உலகில் செய்த படுகொலைகளே அதிகம்)

சமஸ்கிருத நூல்களில் “பேரூரைகள்”(பாஷ்யங்கள்) பல உண்டு. ஆனால் தமிழ் நூல்களில் ஒரே ஒரு பேரூரைதான் காணப்படுகிறது. அதை எழுதியவர் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிவஞான முனிவர்” என்பவர். இவர் தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கண நூல்கள் அனைத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழ் காப்பியங்களிலும் சைவ சித்தாந்த நூல்களிலும் வடமொழி இலக்கணத்திலும் இந்திய தத்துவ நூல்களிலும் தர்க்க நூல்களிலும் பெரும் புலமைப் படைத்தவராக உள்ளார் என்பதை அவர் எழுதியுள்ள நூல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இத்தகைய பெரும் ஆற்றல் நிறைந்த சிவஞான முனிவர் எழுதிய “சிவஞானபோதப் பேரூரை”யில் உள்ள “சிறப்புப்பாயிரத்திற்கான” விளக்க உரை பகுதியில்,

“சூத்திரர் என்னும் பொதுப்பெயரே பற்றிச் சற்சூத்திரரையும் அசற்சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர்; மனிதர் என்னும் பொதுப்பெயரே பற்றி மறையோரையும் அவ்வாறு சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர் போலும் என்று ஒழிக.” என்று எழுதுகின்றார்.
இதே பகுதியில் இவர் நால்வருணக் கோட்பாட்டில் சூத்திரர்கள் கீழானவர்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் தானும் சூத்திரராக இருப்பதால் சூத்திரர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்.
1.சற்சூத்திரர் 2.அசத்சூத்திரர்
அதாவது சற்சூத்திரர் என்பது தூய்மையான சூத்திரர். அசத்சூத்திரர் என்பது இழிவான சூத்திரர். இப்படி சொல்வதை அந்தக் காலத்திலேயே அறிவுள்ள சிலர் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளனர். அந்த மறுப்பாளர்களை நோக்கி இவர் கூறும் பதிலில் இவ்வுலகின் தேவர்களான பார்ப்பனர்கள் மனிதர்களாகிய உங்களை போன்றே வடிவத்தில் இருப்பதனால் பூதேவர்களான பார்ப்பனர்களையும் உங்களைப் போன்ற அற்ப மனிதர்கள் என்று கூறுவீர்களோ? என்று நகைத்து எழுதுகின்றார்.
பொ வேல்சாமி  குறிப்பு
“சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்” வெளியிட்டுள்ள “சிவஞானபோதப் பேரூரை” நூலில் இருந்து படங்களைத் தந்துள்ளேன்.

Sowmiya Narayanan சைவ சித்தாந்தம் வர்ண அமைப்பை மறுத்தது/ ஏற்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது பலரின் விழைவு; தாங்கள் கொடுத்துள்ள தரவு அதை உடைக்கும்...
செந்தலை கவுதமன் பார்ப்பன,வடமொழிச்சார்பு சமத்துவ,தமிழ்ச்சார்பு எனத் தமிழர்அறிவுமரபு இருகூறாகப் பிரிந்து நிற்பது நெடுங்கால வரலாறாக உள்ளது.

தமிழறிவாளர்கள் எனும் பொதுப்பெயருக்குள் பதுங்கிநிற்கும் சமத்துவமறுப்பாளர்களை அடையாளம் காண்பது கடினம்; காட்டுவது அதைவிடக்கடினம் ! 


தொடர்ந்து நடக்கும் தங்கள் 
தமிழ்ச்சார்புத் தெளிவுப்பணியைப் புரிந்துகொள்வதற்கும் முதிர்ச்சி வேண்டும். 
புரிந்துகொள்வோர் எண்ணிக்கை உயர்வதும் தங்கள் உழைப்பின் பயன் உயர்வதும் - இன்றைய சூழலில் மிகவும் தேவை.

'கேள்போல் பகைவரை' 
அடையாளம் காட்டும் 
ஆழமான பணி தொடரட்டும்.
பா.முத்து மாணிக்கம் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே....
என்பதும் ஒருசூத்திரர் அருளியதே அதையும் உள்ளடக்கி காலம் கடந்து நிற்பது சைவசித்தாந்தமே.....


தமிழன் ஆரியன் என இன்னும் எத்தனை காலம் கத்தி வயிறுவளர்ப்பீரோ?!.



No comments:

Post a Comment