Wednesday, October 10, 2018

ரிக் வேத மந்திரங்கள் இயேசுவை துதிக்கிறதா ?

ரிக்  வேத மந்திரங்கள் இயேசுவை துதிக்கிறதா ?
http://worldsanathanadarmam.blogspot.com/2018/08/blog-post_18.html சில கிறிஸ்தவர்கள் இந்துமத வேதமான ரிக் வேதத்தில் இயேசுவை தான் சொல்வதாக குறிப்பிடுகிறார்கள்.இதன் உண்மைகளை இங்கே கொடுத்துளேன் ...

1) ரிக் வேதம் 10:90:2 கூறுகிறது...

'புருஷ எவேதசர்வம் I  யத் பூதம் யச்ச பவ்யம் I
உதாம் ருதத்வஸ்யா ஈசான யதன்னேனதிரேஹதி II

கிறிஸ்தவர்களது விளக்கம்...

அதாவது கடவுளின் தலைப்பேறான மகனே ஆதியில் இருந்ததும்இன்று இருப்பதும்இனிவரப்போவதுமாவான்மனிதர்க்கு அவர்தம் செயல்களுக்கேற்ப கைமாறு அளிக்க அவன் வருவான்.
           
இதன் உண்மையான மொழிபெயர்ப்பு இதோ..

" (யத் பூதம்எது முன்னிருந்ததோ, (யச்ச பவ்யம்எது இனி வரப்போகிறதோ, (இதம்இப்பொதுகாணப்படுவது (சர்வம்எல்லாம் (புருஷ ஏவபரம புருஷனே(நாராயணரே),. மேலும், (அம்ருதத்வஷ்ய)சாகாநிலைக்கு (ஈசானஇறைவனாக இருப்பவரும் - பரம புருஷனே (நாராயணரே). எது (அன்னேன)அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் (அதிரோஹதிமறைவிலிருந்து வெளிப்படுகிறதோஅதுவும் பரமபுருஷனே(நாராயணரே)"

"எது முன்னிருந்ததோ , எது இனி வரப்போகிறதோஇப்பொது காணப்படுவது எல்லாம் பரமபுருஷனே(நாராயணரே). மேலும்சாகாநிலைக்கு இறைவனாக இருப்பவரும் - பரம புருஷனே (நாராயணரே).எது அன்னமயமான இப்பிரபஞ்சத்தால் மறைவிலிருந்து வெளிப்படுகிறதோஅதுவும் பரமபுருஷனே(நாராயணரே)" - ரிக்வேதம் 10.90.2

 என தான் சொல்கிறதுஇந்த அத்தியாயத்தில் தலைப்பே " புருஷாஎனவும் , "நாராயணர்எனவும் சொல்கிறது!

அப்புறம் எப்படி இது இயேசுவை குறிப்பிடுவதாக வரும் ?


2. ரிக் வேதம் 10:90:8

'தம் யஜ்யம் பரிஹிஷி ப்ரெனசஷம்  I புருஷம் ஜாதமக் ரத:I
தேன தேவா அயஜந்தா I ஸாத்யா  ருஷயஷ்ச்ச  யே

கிறிஸ்தவர்களது விளக்கம்...

கடவுளின் தலைப்பேறான இம்மகன் மரத்தாலான பலிக்கம்பத்தில் கட்டப்பட்டு தேவர்கள்அரசர்கள் மற்றும்ஞானிகள் முதலியோரால் பலியாக்கப் பட்டான்நான்கு சுவிசேஷங்களும் கூறுவதுஇயேசு மரத்தாலானசிலுவையில் ஆட்சியாளர்களாலும் (ஏரோதுபிலாத்து), ஞானிகளாலும் (அன்னாஸ்கைப்பாஸ்)அறையப்பட்டார்

இது உண்மையில் வசனம்-8 தான்.  உண்மை மொழிபெயர்ப்பு இதோ..

" (அக்ரத) - முதலில், (ஜாதம்உண்டான, (தம்)  அந்த, (யஜ்யம்யாகத்திற்கேறற, (புருஷம்புருஷனை(நாராயணரை), (பரிஹிஷி)  யாகத்தில், (தேனபுரோஷித்தார்கள்(வலம் வந்தார்கள்), அதனால்ஸாத்யர்கள்(பக்தர்கள்என்கிற, (தேவாதேவர்களும், (ருஷயரிஷிகளும், (யேஎவர்கள் உண்டோ (அயஜந்தா)அவர்கள் யாகத்தை நடத்தினார்கள்"

"முதலில் உண்டான அந்த யாகத்திற்கேறற புருஷனை (நாராயணரையாகத்தில் புரோஷித்தார்கள்(வலம்வந்தார்கள்), அதனால் ஸாத்யர்கள்(பக்தர்கள்என்கிற தேவர்களும்ரிஷிகளும்எவர்கள் உண்டோ அவர்கள்யாகத்தை நடத்தினார்கள்" - ரிக்வேதபுருஷ சூக்தம் 10-90-8
           
இதில் மகன் என எங்கே வருகிறது ? இதில் மரத்தில் அறையப்பட்டதாக எங்கே உள்ளது ?

 இதில் கூறுவது பகவான் நாராயணரை தான் ! ஏனெனில் இந்த அத்தியாயத்தின் தலைப்பே 'புருஷ -நாராயணர்'  என தான் உள்ளது ! இந்த அத்தியாயத்தில் கூறப்படும் எல்லாமே புருஷ (நாரணனாரைதான்குறிப்பிடும்வேறு யாரையும் இது குறிக்காது ! எனவேஇது தவறானது !         


3. யசூர் வேதம் 31:18, ரிக் வேதம் 10:90:16

தாதா புரஸ்தாத் உதாஜஹார சத்ரப்ரவித்வான் ப்ரதிசச்சாதஸ்ர  I
தமேவம் வித்வானம்ருதா  இஹ பவதி I
நான்ய பந்தா அயனாய-வித்யதே

கிறிஸ்தவர்களது விளக்கம்...

இப்பலியே மனிதன் மீட்படையவும்விடுதலையடையவும் உள்ள ஒரே வழிஇம்மனிதனை தியானித்துஅடைவோரும்அவனை இதயத்தில் விசுவசித்து வாயினால் அறிக்கையிடுவோரும் இவ்வுலகிலேயேவிடுவிக்கப்படுவர்மீட்பிற்கு இதைத்தவிர வேறு வழியில்லை.

இது உண்மையில் வசனம் 17 தான் உள்ளது . இந்த ரிக்வேதம் 10.90.17 வசனத்தின் உண்மையானமொழிபெயர்ப்பு இதோ..

"எந்த புருஷனை (நாராயணரைபிரம்மா ஆதியில் பரமாத்மா என கண்டு வெளிப்படுத்தினாரோ , நான்கு திக்குகளிலும்திசைகளிலும் எங்கும் இந்திரன் சிறப்பாக கண்டறிந்தாரோ அவரை (புருஷ-நாராயணரை)இவாறாக அறிபவன் இங்கேயேஇப்பிறவியிலேயே முக்தியடைந்தவனாக ஆகிறான்மோக்ஷத்திற்கு வேறு வழிஇல்லை"  - ரிக் வேதம் 10-90-17

இதில் பிரம்மா தன்னை உருவாக்கிய மூல காரணமான உள்ளவராக பகவான் நாராயணரை (புருஷரைஇங்கேவழிபடுவதை தான் சொல்கிறார் !

இதில்இயேசு எங்கே வருகிறது ? ஏனெனில்இந்த அத்தியாயத்தின் தலைப்பே 'புருஷ - நாராயணர்என்பதுதானே ! இதில் பகவான் நாராயணரை பற்றி தான் கூறுகிறது !

மேலும்இதே புருஷ சூக்தம் (2.6), இரண்டாவது அணுவாகத்தில் வசனம் 6 கூறுகிறதுஇந்த புருஷருக்கு(நாராயணருக்குஹரிதேவியும்லட்சுமி தேவியும் மனைவிகள் என்கிறதே ?

அப்புறம்  எப்படி இந்த புருஷ என்பது இயேசுவை குறிக்கும் ?

எனவேஇதிலிருந்தே எளிதாக அறியலாம்ரிக்வேத புருஷ சூக்ததில் குறிப்பிடும் புருஷ என்பது பகவான்நாரயணரை குறிப்பிடுகிறது !  இயேசுவை அல்ல ! எனவேமேலே கூறியது தவறு என அறியலாம்

1 comment:

  1. How dod some of the sanscrit learned brahmanas accept its defined jesus christ.. ?

    ReplyDelete