இயேசு
கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?
ஏசு பிறப்பு வருடம்
அறிய சுவிசேஷக் கதைகள் உள்ளவற்றினை ஆராய்வோம். ஏசுவின் மரணத்திற்கு 40 வருடம்
கழித்து முதலில் வரையப்பட்ட மாற்கு சுவியில் ஏசு பிறப்பு கதைகள் இல்லை, பவுல்
கடிதங்களிலும் இல்லை.ஏசு பற்றி அவர் சமகாலத்தவர்
யாரும் எழுதிடாத நிலையில் நம் ஒரே தரவு[i]
சுவிசேஷக் கதைகள் மட்டுமே, இவற்றில் ஏசு பிறப்பு வருடம் குறிக்க உதவும்
அனைத்தையும் இணைத்துப் பார்ப்போம்.
மத்தேயு
சுவிசேஷக் கதை பிறப்பு வருட குறிப்புகள்
மாற்கு
சுவி கதையைத் தழுவியே மற்ற சுவி கதைகள்; இதில் மத்தேயு காட்டும்
கதைப்படி, பெரிய [ii]ஏரோது
ஆட்சி செய்யும் காலத்தில் வெளிநாட்டு
ஜோதிடர்கள் யூதர்கள் ராஜா பிறப்பு நட்சத்திரம் பார்த்து வந்தார்கள் எனும் கதையில்
ஜெருசலேம் வந்து ஏரோதைக் கேட்க யூதப் பாதிரிகள் தொன்மக்கதை வசனம்படி[iii]
பெத்லஹேமில் என்றிட- அவர்கள் அவ்வூர் செல்ல
மீண்டும் நட்சத்திரம் வழி காட்டியதாம். வெளிநாட்டு ஜோதிடர்கள் திரும்பி வராமல் அவர்கள் நாடு சென்றிடவே ஏரோது பிறந்த யூத ராஜா எனும் குழந்தை கொலை செய்ய - இரண்டு
வயதுகுட்பட்ட அனைத்து குழந்தைகளைல் கொலை செய்தாராம்.
பெரிய
ஏரோது மரணத்திற்கு 2 ஆண்டு முன்பாக[iv] பெத்லஹேமில் தச்சரை வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்பிற்கு[v]
மகனாய் ஏசு பிறந்தார் எனக் குறிப்பு காட்டி உள்ளார்.
பொ.மு. முதல் நூற்றாண்டில் பெரிய
ஏரோது[vi] இஸ்ரேலை ரோமிற்கு
கீழாக ஆண்டு வந்தான். மரணம் பொ.மு. 4 இல்.
மத்தேயு கதைப்படி ஏசு பொ.மு. 6 - 7 இல்
பிறந்திருக்க வேண்டும்.
லூக்கா சுவிசேஷக் கதை பிறப்பு வருட
குறிப்புகள்.
லுக்கா சுவி கதையில்
நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் [vii]ஜோசப்
யூதேயாவை சிரியாவின் கவர்னர்[viii]
ஆட்சி செய்த போது மக்கள் தொகை[ix]
கணக்கெடுப்பிற்காக[x]
நாசரேத்திலிருந்து பெத்தலகேம் சென்றபோது
இயேசு பிறந்ததாக கதை.
மக்கள்
தொகை கணக்கெடுப்பு எப்போது?
பெரிய
ஏரோது மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு[xi]
யூதேயா ஆர்கிலேயு[xii]
கீழும், கலிலேயா அந்திப்பா கீழும் பிலிப்பு
கீழ் மீதம் என ஆனது. ஆர்கிலேயு ஆட்சியில் ஜெருசலேமில் பொகா 6ல் பஸ்கா பண்டிகைபோது[xiii]
கலிலேயன் யூதா தலைமையில்[xiv] நடந்த
ஓர் கலவரத்தை சரியாக அடக்கவில்லை என ரோம் தன் நேரடி ஆட்சி கீழ் யூதேயா கொணர்ந்தது,
முதலில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆண்டார். ரோம் ஆட்சி
வரிகளை ஏற்ற, மக்கள் தொழில் சொத்துக்களை அறிய மக்கள் தொகை
கணக்கெடுப்பு கிரேனியு தலைமையில், அதாவது பொ.கா. 7-8ல் தான் நடந்ததாம்.
சென்சஸ் என்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
கலிலேயாவின் ஜோசப் பெத்லஹெம் வந்து மாட்டுத்தொழுவத்தில் பிறப்பு. மக்கள் தொகை கணக்கெடுப்பு
பொ. ஆ. 7 அல்லது
8 இல் நடந்தது.
லூக்கா கதைப்படி ஏசு பொ. ஆ. 7 - 8 இல் பிறந்திருக்க வேண்டும்.
மத்தேயுவின் ஏசுவிற்கு 13- 14 வருடம்
பின்பு லூக்காவின் இயேசு பிறந்தாராம்.
ஏசுவின் முன்னோர் பரம்பரைப் பட்டியல் கூறும்
கதை.
இயேசுவை, தாவீது பரம்பரையினர் எனக் காட்ட
மத்தேயு 1:1-14லிலும், லூக்கா 3:23-38லும் புனைந்து தரப்
பட்டுள்ளது.
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த
யாக்கோபு மகன் ஜோசப் மகனாக
ஏசு பொ.மு. 6இல் பிறந்தார். இவர் ஆப்ராகாமிலிருந்து 41ஆவது தலைமுறை
|
லூக்கா
கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த
ஏலி மகன் ஜோசப் மகனாக ஏசு பொ.கா. 6இல் பிறந்தார். இவர்
ஆப்ராகாமிலிருந்து 57ஆவது தலைமுறை
|
ஒரு தலைமுறை 25 வருடம்
எனில் மத்தேயுவின் 41ஆவது தலைமுறை யாக்கோபு மகன் பெத்லஹேமின் ஜோசப் மகனான இயேசுவிற்கு 400 ஆண்டுகள்
பின்பு லூக்காவின் ஏலி மகன் நாசரேத்தில் வாழ்ந்த ஜோசப் மகனான ஏசு பிறந்து வாழ்ந்திருக்க வேண்டும்.
ஞானஸ்நானம் பெற்றதும் ஏசுவின் வயதும்
இயேசு கலிலேயாவிலிருந்து
யூதேயா வந்து யோவான் ஸ்னானகரிடம்[xv]
பாவமன்னிப்பு[xvi]
ஞானஸ்நானம் பெற வந்தது பற்றி லூக்கா கூறுகையில் அவருக்கு 30ஐ
ஒட்டிய வயது என்றும், அந்த வருடம் திபேரியஸ்[xvii]
சீசரின் 15வது ஆண்டு என இரு குறிப்பு தருகிறார்.
திபேரியஸ் சீசர் பதவி பொஆ14ல் ஏற்றார் என்கையில் பொமு29ல் ஏசுவிற்கு வயது 30 எனில் ஏசு பிறப்பு பொமு1 என ஆகும்.
சர்ச்
பிதா இரேனியூஸ் குறிப்பு
2ம் நூற்றாண்டை சேர்ந்த முக்கியமான சர்ச் பிதா
இரேனியூஸ் ஏசுவின் மரணத்தின் போது அவர் வயது 50க்கும் மேல்[xviii]
என அவருடைய நூலில் எழுதி உள்ளார், அவர் இதற்கு யோவான் சுவி
கதையில் உள்ள ஒரு [xix]வசனத்தை
மேற்கோள் காட்டவும் செய்துள்ளாராம்.
நாம் மேலே பார்த்த
விவரங்களில் மத்தேயுவின் காதை குறிப்பு பொமு 6- 7
லூக்காவின் சென்சஸ் என்பது
பொஆ7-8
லூக்கா இயேசு இயக்க ஆரம்பம் குறிப்புப்படி பொமு1
சர்ச் பிதா இரேனியூச் பொஆ13-14
இதில் எதுவாக இருக்கலாம் என்பதை கூற கூறுவதற்கு
எதற்குமே மூலச்சுவடி கிடையாது; ஆரம்பகால
சர்ச் பாரம்பரியம்[xx]
என்பது ஏசு ஞாஸ்நானம் பெற்றதில் தொடங்கி ஈஸ்டர் அன்று பரலோகம் சென்றார் எனும் செவெ
வழிக் கதைகளே சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசுவை அறியவில்லை என்பது தெளிவாகும்.
தற்போது பெரும்பாலான
பைபிளியல் அறிஞர்கள் பொமு 6 -7ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள்
பிறந்த தேதி நிச்சயமாய்
டிசம்பர் மாதம் இருக்க இயலாது - லூக்கா
கதைப்படி - இரவில் அறுவடை பயிரைக் காக்க எனில் அது செப்டம்பராய் இருக்கலாம்
[i] What Can be established about Jesus depends
almost without exception on Christian tradition especially on the materials
used in the compostion of Gospels of Mark, Matthew and Luke; which reflects the
outlook of the later church and its faith in Jesus. Encyclopedia Britanica
Vol22 Page-336.
[ii] மத்தேயு 2:1 ஏரோது
அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது
கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ‘ யூதர்களின் அரசராகப்
பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை
வணங்க வந்திருக்கிறோம்
[iv] மத்தேயு 2:16ஞானிகள்
தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க்
கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன்
சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு
உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
[vi] http://en.wikipedia.org/wiki/Herod_the_Great
[ix] Who is who in New Testament – Page-21
[x] Jesus was born before the death of Herod(4BCE) Whereas the only
Census known in the period took place 10 -13 years later; while Quirinius was
Roman Governor of Syria. This has suggested the alternate theory, that Jesus
who was a Galilean, was born in Nazareth, the story of Birth in “David City” of
Bethlehem developed later to justify, the claim that it fulfilled the Prophecy
of Micah(5:12-15) that the Messiah was to issue from the House of David Page-
449, Pictorial Biblical Encyclopedia
[xi] லூக்கா 2:1 அக்காலத்தில் அகுஸ்து
சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி
சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்
தொகை கணக்கிடப்பட்டது.
[xii] மத்தேயு 2:22
[xiii] The Real Jesus, F.F.Bruce, Page-38
[xv]லூக்கா 3:3 யோர்தான்
நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன்
மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான்.
[xvii] லூக்கா 3:1 திபேரியு இராயன் அரசாண்ட
பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது
[xviii] CHURCH FATHERS: Against Heresies, II.22 (St. Irenaeus)
- thirty Æons are not typified by the
fact that Christ was baptized in His thirtieth year: He did not suffer in the
twelfth month after His baptism, but was more than fifty years old when He
died. (http://www.newadvent.org/fathers/0103222.htm as viewed
on 09.10.2018)
[xix] யோவான் 8:57 57 யூதர்கள் இயேசுவிடம், “என்ன சொன்னாய்? நீ
ஒருபோதும் ஆபிரகாமைப் பார்த்திருக்க முடியாது. உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட
ஆகவில்லையே!” என்று கேட்டனர்.
[xx]
There
seems to be no doubt that the infancy narratives of Matthew and Luke were later
additions to the original body of the Apostolic catechesis, the content of
which began with the advent of John the Baptist and ended with the ascension.
New Catholic Encyclpedia Vol5t-14, page-299
And again David (says) thus concerning the sufferings of Christ: Why did the Gentiles rage, and the people imagine vain things? Kings rose up on the earth, and princes were gathered together, against the Lord and his Anointed. For Herod the king of the Jews and Pontius Pilate, the governor of Claudius Caesar, came together and condemned Him to be crucified. For Herod feared, as though He were to be an earthly king, lest he should be expelled by Him from the kingdom. But Pilate was constrained by Herod and the Jews that were with him against his will to deliver Him to death: (for they threatened him) if he should not rather do this than act contrary to Caesar, by letting go a man who was called a king … Again He says in the Twelve Prophets: And they bound him and brought him as a present to the king. For Pontius Pilate was governor of Judaea, and he had at that time resentful enmity against Herod the king of the Jews. But then, when Christ was brought to him bound, Pilate sent Him to Herod, giving command to enquire of him, that he might know of a certainty what he should desire concerning Him; making Christ a convenient occasion of reconciliation with the king.[Proof 74, 77] http://stephanhuller.blogspot.com/2010/08/why-did-irenaeus-identify-pontius.html
ReplyDelete