Sunday, October 14, 2018

இளையராஜா பேச்சு எதிர்த்து வழக்கு பைபிள் கதைகளுக்கு ஆதாரம் உள்ளதா





பெங்களூரு நீதிமன்றத்தில் இளையராஜா மீது வழக்கு

2018-09-19@ 00:56:25



பெங்களூரு: பெங்களூருவில்  இயங்கிவரும் இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் இயக்கத்தின்  தலைவர் கிரிகோரி அசோக் ஆரோக்கியசாமி சார்பில் வக்கீல்  பி.என்.மஞ்சுநாத் பெங்களூரு 8வது மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இசை அமைப்பாளர்  இளையராஜா, சில மாதங்களுக்கு  முன் தமிழ் டிவி சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று  பேசும்போது, கிறிஸ்த வர்களின் புனித நூலான வேதாகமத்தில்  சொல்லப்பட்டுள்ள கருத்துகள், கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக  இருக்கும் ஏசுவின் இரண்டாம் வருகை உள்பட பல விஷயங்களை விமர்சனம்  செய்துள்ளார். அவரின் இந்த பேச்சு கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் மனதை  காயப்படுத்தியுள்ளது. மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ள  இளையராஜா மீது 295 (ஏ) மற்றும் ஐபிசி 500 ஆகிய பிரிவின் கீழ் சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 9ம்  தேதிக்கு ஒத்திவைத்தது. 

No comments:

Post a Comment