Saturday, October 6, 2018

சங்க இலக்கியத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்


இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது.
சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
http://www.tamilvu.org/slet/l1241/l1241dir.jsp?x=31&y=40&sno=31

பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது.
 

இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது.
சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது.
பாடல் 31 - கமழ் குரல் துழாஅய்
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
5 தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகி¡¢க் *கமழ்குரல் துழாஅய்*
அலங்கற் செல்வன் சேவடி பரவி
10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர
இந்த செய்யுளில் ஒரு கோயிலையும் அங்கு செய்யப்படும் விஷ்னு வழிபாட்டையும் கூறுகின்றது. கோயில் கடற்கரையை அடுத்து இருந்தது. பல திசையிலுமிருந்து வந்த மக்கள் கையைத் தலைமேல் கூப்பித் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி வழிபடுவர். கோயில் மணி ஒலிக்கும் போது விரதமிருக்கும் உண்ணா நோன்பிகள் துறையில் நீராடிப் பின் கோவிலில் வழிபாடு செயவார். கண் பொரு திகிரியும் கமழ்குரல் துழாயும் உடைய திருமாலை இவ்வாறு வழிபடுவர். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன் வானுலகத்துக் குபேரனைப் போல இந்த நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன்.நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.
இவ்வாறு கூறப்படும் வழிபாடு நிகழ்ந்த்தாக உள்ள கோயில் பெயர் செய்யுளில் இல்லவிடிலும் இது திருவனந்தபுரம் பத்மநாபரையே குறிக்கும். 
விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டது போலெ சயனக் கோலத்தில் அனந்தமாகக் காட்சி அளிப்பதினாலே தான் ஊர் திரு அனந்தபுரம் என்க் கோயிலின் பெயராலெ விளங்குகின்றது.
பயன் பட்ட நூல்கள் 
1. பதிற்றுப்பத்து
2. குறள் கூறும் சமையம்- காமாட்சி சீனிவாசன் விளியீடு-மடுரைக் காமராசர் பல்கலைக் கழகம்

பதிற்றுப்பத்து 31, *கமழ் குரல் துழாஅய்*துறை: செந்துறைப் பாடாண் பாட்டுதூக்கு: செந்தூக்குவண்ணம்: ஒழுகு வண்ணம்
https://sangamtranslationsbyvaidehi.com/pathitruppathu/
குன்று தலைமணந்து குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனந்தலை யொருங்கெழுந்து ஒலிப்பத்
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார்த் திரு ஞெமர் அகலத்துக்
கண் பொரு திகிரிக் *கமழ் குரல் துழாஅய்*
அலங்கல் செல்வன் சேவடி பரவி
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
மணி நிற மையிருள் அகல நிலா விரிபு
கோடு கூடு மதியம் இயல் உற்றாங்குத்
துளங்கு குடி விழுத்திணை திருத்தி முரசு கொண்டு
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய
வட தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய
பனி வார் விண்டு விறல் வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன பரேர் எறுழ் முழவுத் தோள்
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையை மன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒண்ணுதல் பொன்னின்
இழைக்கு விளக்காகிய அவ்வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர்ச் செல்வி
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து
அடங்கிய புடையல் பொலங்கழல் நோன் தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇப்
புறக்கொடை எறியார் நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்கு அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று நின் தானை
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே.
Pathitruppathu 31, Fragrant Clusters of Basil
In this sand-filled world with mountains
draped by the surrounding oceans,
devotees lift their hands, pray together,
uproar rises, sounds travel to the four distances
of the vast earth, and bright, tall, loud bells are rung.
Those who have made vows not to eat
go to cool water ports and bathe before praying.
They pray to Thirumāl carrying a bright, shining
discus that awes eyes and donning large, fragrant
garlands made with clusters of basil swarmed by bees.
They bow down worshipping his perfect feet
and return to their towns with joy in their hearts.
You are a brave man with a decorated broad chest.
You perform your duties responsibly in battles
seizing battle drums of enemy kings.
You took care of your suffering citizens and brought
to their lives brightness,
like that of the huge moon with bright horns that
dazzles in the sky to remove sapphire-colored darkness.
Your chest is huge like the bright, cold, tall mountains
that lie across the land blocking the north and the south,
whose tall peaks hit rain clouds that spray cold water
with thunder and lightning.
You are like the immensely rich, benevolent Vandan
who established a good name
on this earth surrounded by ocean with white waves.
Your drum-like thick shoulders are as strong as
hanging portcullis gates with wooden cross bars,
hung as protection by those afraid of fierce gods.
Your queen with bee-swarming thick hair, adorned
with earrings that get their brightness from her
gleaming brow, shining gold-jewel-like body, and curved
navel, is a woman of ancient pride and virtue, superior
to celestial women in the skies.  She, chaste like the red
Arunthathi, is the wealth of your ancient city.
Your roaring, huge battle drum beats resound in the
battlefields causing those on land to tremble with fear.
Your warriors wearing tightly-woven palm garlands
and gold war anklets on their strong legs, raise their
lances with their right hands, spring, and attack powerful
enemies who refuse to surrender, quelling their ferocity
in the crowded battlefields.  Your commanders are honorable
men who don’t attack the backs of enemy warriors who run
away in fear from battlefields.  They protect those who are
friends, but are like fierce gods to enemies.
O King who has seen many triumphant battles!  You are
superior in many ways, my lord.
Notes:  விழுத்திணை (13) – அருள் அம்பலவாணர் உரை – சீரிய குடிகள், ஒளவை துரைசாமி உரை – குடிமக்களின் நல்லொழுக்கம்கருவி வானம் (15) – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.
Meanings:  குன்று தலைமணந்து – having many close mountains, குழூஉக் கடல் உடுத்த – surrounded by oceans, மண் கெழு ஞாலத்து – in the sand-filled earth, மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல் – people lifting their hands together and are noisy, மாதிரத்து நால் வேறு – four different directions, நனந்தலை – wide land, ஒருங்கெழுந்து ஒலிப்ப – sound together, தெள் உயர் வடி மணி – bright tall beautiful bells, clear tall cast bells, எறியுநர் – those who hit/ring, கல்லென – with the sound ‘kal’, உண்ணாப் பைஞ்ஞிலம் – group of people who have vowed not to eat, பனித்துறை – cool shores, cool ports, மண்ணி – bathe, வண்டு ஊது – bees swarm, பொலி தார் – splendid garland, திரு – beautiful, ஞெமர் அகலத்து – on the broad chest, கண் பொரு திகிரி – wheels that awe the eyes, wheels that blind the eyes, கமழ் குரல் – fragrant bunch, துழாஅய் அலங்கல் செல்வன் – Thirumal with a swaying thulasi garland, – thulasi, sacred basil, Ocimum sanctum, சேவடி பரவி – worshipping his perfect feet, நெஞ்சு மலி உவகையர் – those happy with a full heart, துஞ்சு பதிப் பெயர – return to the towns where they reside, மணி நிற மையிருள் – sapphire colored darkness, அகல – to leave, நிலா விரிபு – moon spreading light, கோடு கூடு மதியம் – moon with radiating bright lines (horns), இயல் உற்றாங்கு – like that, துளங்கு குடி – suffering citizens, விழுத்திணை திருத்தி – giving good communities livelihood stability like in the past, முரசு கொண்டு – with drums, ஆண் கடன் நிறுத்த – after your finished your manly responsibilities, நின் பூண் கிளர் வியன் மார்பு – your jewel wearing bright wide chest, your wide chest with many jewels, கருவி வானம் – clouds with thunder and lightning, தண் தளி தலைஇய – cold waters spray, வட தெற்கு விலங்கி – blocked between the north and the south, விலகு – blocking, தலைத்து எழிலிய – rising high (peaks) beautifully, பனி வார் – cold, விண்டு விறல் வரை – tall strong mountains, அற்றே – like, கடவுள் அஞ்சி – scared of gods, வானத்து இழைத்த – in the skies, தூங்கு எயில் கதவம் – hanging fort gates (portcullis), காவல் கொண்ட – as protection, எழூஉ நிவந்து அன்ன – high like lifting the wooden barrier, பரேர் – thick, எறுழ் – strong, முழவுத்தோள் – drum like strong shoulders, வெண் திரை முந்நீர் – white waves ocean, வளைஇய உலகத்து – world surrounded by, வண் புகழ் நிறுத்த – good fame to stand, வகை சால் செல்வத்து – with many riches, வண்டன் அனையை மன் நீயே – you are like the benevolent Vandan, வண்டு பட – bee swarming, ஒலிந்த கூந்தல் – thick hair, அறம் சால் கற்பின் – with good honor, குழைக்கு விளக்கு ஆகிய – bright earrings, ஒள் நுதல் – bright forehead, பொன்னின் இழைக்கு விளக்காகிய – luster from gold jewels, அவ்வாங்கு உந்தி – beautiful curved navel, விசும்பு வழங்கு மகளிர் – celestial women who move around in the sky, உள்ளும் சிறந்த செம்மீன் அனையள் – she is the red star that is the best among all of them, Mars, Arunthathi, நின் தொல் நகர்ச் செல்வி – your wife in the ancient town, your wife in your ancient palace, நிலன் அதிர்பு இரங்கல ஆகி – not roar to scare people on earth, வலன் ஏர்பு – climb with strength/on the right, வியன் பணை முழங்கும் – wide panai drums roar, வேல் – warriors with spears, மூசு அழுவத்து – in the crowded battlefield, அடங்கிய புடையல் – tightly woven palm garlands, பொலங்கழல் – gold war anklets, நோன் தாள் – strong legs, ஒடுங்காத் தெவ்வர் – enemies who do not obey, ஊக்கு அறக் கடைஇ – attacked to ruin their enthusiasm, புறக்கொடை எறியார் – they do not attack those who are running away, நின் மறப்படை கொள்ளுநர் – your brave battle warriors with leadership, நகைவர்க்கு அரணம் ஆகி – protection to friends, பகைவர்க்குச்சூர் நிகழ்ந்தற்று – like fierce gods to your enemies, நின் தானை – your warriors, போர் மிகு குருசில் – O king who has seen many battles, நீ மாண்டனை பலவே – you are superior in many ways.

 திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவில் என ச்சில அறிஞர் சொல்வர். 


No comments:

Post a Comment