Saturday, March 22, 2014

திராவிடர்கள் யார்?

எழுதியவர்: சந்தானம் (லண்டன்) சுவாமிநாதன்brahmins 2
‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.                                                                                     இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு                                                                                     யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)
 ‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.                                                                                                               திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!
திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!
ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு”என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?
 சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!
நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!
Rahul_Dravid
கிரிக்கெட் ஆடும் திராவிடன்
கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிரமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.
 இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.
 உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.
 இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்டுள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்! உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.
veda[atasala
திராவிடாசாரியா
அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:
பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு  சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.
(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன் கர்நாடக என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)
அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:
திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.
 திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.
திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்
திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.
நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.
தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.
தென் இந்தியாவில் இருந்து வடகே போன எல்லோரையும் மதறாசி ( மட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.
3_veddahs
Picture of Veddahs (classified as Dravidas)
தமிழ் நாடு — திராவிடம் அல்ல!!!!!
இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
 நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
 தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!
தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.
 திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிகும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லாவே இல்லை என்று சொல்லவே இவ்வ்வளவும் எழுதினேன்.
irula_snake_catching_thehindu_6-9-2009
 Picture of Irulas (classified as Dravidas)
வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லி குழப்புகின்றனர். தமிழர்களோ நாங்கள் குமரிக்கண்டவாசிகள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:
விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.
 சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:
1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு 11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature 21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.
Pictures are taken from various websites;thanks.
swami_48@yahoo.com

4 comments:

  1. எங்கே திராவிடம் யார் திராவிடர்கள் என்ற தலைப்பில் ஏன் கட்டுரை எழுத வேண்டும் என்று என்னை யாரேனும் கேட்க கூடும் இல்லாத ஒன்றை சொல்லி நம்மை ஏமாற்றி வருபவர்களின் முகத்திரயை கிழிக்க
    திராவிடத்தின் எல்லைகள் என்று வடக்கே நர்மதை ஆறு குறிக்கபடுகிறது நர்மதைக்கு கீழ் உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, கேரளா மட்டும் தமிழ் நாடு இந்த மாநிலங்கலில் தமிழ் நாட்டைத்தவிர திராவிடம் என்ற சொல்லும் திராவிட கட்சிகளும் இல்லை அப்படி என்றால் தமிழ்நாட்டில் திராவிடம் இருக்கிறது என்று அர்த்தமா இல்லை தமிழ் நாட்டில் திராவிட மோகம் உள்ளது
    திராவிடம் என்ற சொல்லை இந்தியாவில் புகுத்தியது வந்தேறி கால்டுவேல்ஸ் தான் கால்டுவேல்ஸ் தற்போது உள்ள இந்தியாவை இரண்டாக பிரிக்க செய்த சதி தான் ஆரியம் திராவிடம், ஆரியம் திராவிடம், என்று இரண்டு இனங்கள் இருந்ததற்கு எந்தவித சரித்திர சான்றும் இல்லை சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய படையெடுப்பால் அழியவில்லை இயற்கை சூழ்நிலையால் தான் ஆழிந்ததற்கு சான்று கிடைத்துள்ளது
    வந்தேறி காடுவேல்ஸ் புகுத்திய திராவிடம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எஞ்சி இருக்கிறது என்றால் தமிழ்நாட்டை தமிழன் அல்லாத திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் திராவிடத்தலைவர்கள் ஆள்வதற்காக செய்த சதி
    திராவிடகட்சிகளின் தமிழ் நாட்டை ஆண்ட முதலவர்கள் அண்ணாதுரையும் பன்னீர் செல்வத்தையும் தவிர பச்சை தமிழன் எவரும் இல்லை அவர்களும் சொற்ப காலமே ஆட்சி செய்தார்கள் மேலும் திராவிட எல்லைக்குல் என்று சொல்லிகொள்ளும் எந்தமாநிலத்திலும் தமிழனை முதல்வராக்கமாட்டர்கள் ஆனால் தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்று சொல்லிகொள்ளும் யாரை வேண்டுமானாலும் மக்கள் முதல்வராக ஆக்குவார்கள்
    இதுதான் சதி எடுத்துகாட்டாக ஒன்றை சொல்லுகிறேன் 1921 ம் ஆண்டு திராவிடத்தை தொடங்கிய முதல் கட்சியான நீதி கட்சின் சென்னை மகாண அமைச்சரவை கூட்டத்தில் தாழ்த்த பட்ட மக்களை எல்லாம் ஆதி திராவிடர் என்று அழைப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் கன்னடர்களும் தெலுங்கர்களும் அதை மாற்றி தங்கள் மொழி பேசுபவர்களை ஆதிகன்னடர், ஆதி தெலுங்கர் என்று தீர்மானத்தை மாற்றி விட்டார்கள் அப்போதே தமிழ் தலைவர்களை தவிர யாரும் திராவிடத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை
    இதில் என்ன சதி என்றால் நாம் இன்னும் ஆதி திராவிடர் என்ற பட்டியலில் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொண்டு இருக்கிறோம் வந்தேறி கால்டுவேல்ஸ், கால்டுவேல்ஸ் ஏன் வந்தேறி என்று சொல்லுகிறேன் என்றால் சிந்து சமவெளி நாகரிகத்தின் பொது இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று காடுவேல்ஸ் அவர்களால் சொல்லப்படும் பார்பனர்களை வந்தேறிகள் என்று சொல்லும் திராவிடத்தலைவர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த இஸ்லாமியர்களையும் வியபாரம் நடத்த வந்து நாட்டை பிடித்த கிருஸ்துவர்களும் வந்தேறிகள் தான்
    http://eluthu.com/kavithai/85470.html

    ReplyDelete
  2. இந்திய மொழிகளை நாம் இரண்டு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கலாம்.
    1. இந்தோ ஐரோப்பிய அல்லது ஆரிய மொழிக்குடும்பம். (சமஸ்கிருதம், இந்தி, மராத்தி முதலியன)
    2. திராவிட மொழிகள் (தமிழ், மலையாளம், கன்னடம் முதலியன)

    திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பல்ல. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்று அழைக்கிறார். மட்டுமல்லாமல் காரவேலரின் அதிகும்பா கல்வெட்டு திராவிட சங்காத்தம் அல்லது திராவிட மன்னர் கூட்டமைப்பு என்னும் சொல்லை உபயோகிக்கிறது. இதன் மூலம் திராவிடம் என்னும் சொல் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாதிரியாரின் மூளைக்கோளாறால் உதித்தது அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். (வே.தி.செல்லம் - தமிழக வரலாறும் பண்பாடும்)

    மானுடவியல் அடிப்படையில் இப்போதைய இந்தியாவில் யாருமே சுத்த திராவிடரும் இல்லை, சுத்தமான ஆரியரும் இல்லை. அனைவருமே கலப்பினம் தான்.

    பின்னர் எதற்காக திராவிடம் என்னும் கருத்தியல் முன்னிறுத்தப்பட்டது?

    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் சமூக ஏணிப்படியில் வருணாசிரம தர்மத்தின் உதவியால் மேலிருந்த பிராமணர்களே பெரும்பாலான பதவிகளை ஆக்கிரமித்திருந்தனர். இதனால் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைந்து போனது. மட்டுமல்லாமல் சாதிவெறியும், தீண்டாமையும் மனுதர்மத்தால் மிகுந்திருந்தது. திருவாங்கூர் பகுதியில் சாதி வெறி மிகக் கொடூரமாக இருந்தது. தாழ்த்தப்பட்ட சான்றோர் குலப் பெண்கள் மார்பில் உடை உடுத்தக்கூடாது என்பது சட்டமாகவே இருந்தது. இத்தகைய சாதி வேறுபாடுகளைப் போக்கும் நோக்குடன் எழுந்ததே திராவிடக் கருத்தியல்.

    1921ல் நீதிக்கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி தாங்கள் இன்னும் துல்லியமாக, அதாவது தீர்மானத்தை முன்மொழிந்தவர்கள், வழிமொழிந்தவர்கள் ஆகியோரைப் பற்ற, தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும். மட்டுமல்லாமல் நீங்கள் குறிப்பிடும் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழ் தலைவர்களின் பெயர்களைச் சொன்னீர்களானால் அறிந்து கொள்வேன்.

    சிந்து சமவெளி நாகரிகம் எப்படி அழிந்தது என்பதைப் பற்றிய உறுதியான சரித்திர ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இயற்கைப் பேரழிவு, காலநிலை மாற்றம், அந்நியர் படையெடுப்பு ஆகிய அனைத்துமே கருதுகோள்கள் தான். தாங்கள் குறிப்பிடும் சான்றுகளைத் தெளிவாக விளக்கினால் நலமாயிருக்கும்.

    இனி அந்த மூன்று விஷயங்களுக்கு வருவோம்.

    1.திராவிட இனம் - ஆரிய இனம் என்று இரு வேறுபட்ட இனங்கள் இருந்திருக்கின்றன. அவற்றுக்கான சரித்திர ஆதாரம் தாராளம் - ஏராளம். (ரிக் வேதம் பூர்வ குடிகளைத் தாசர்கள் அல்லது அடிமைகள் என்று அழைக்கிறது.)

    2.திராவிடக் கருத்தியல் தமிழர்களுக்குச் செய்திருக்கும் நன்மைகள் எக்கச்சக்கமானவை. அதனால் தான் தமிழ் இது வரைக்குமாவது நிலைத்து நின்றிருக்கிறது. இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட கெளரவக்குறைச்சலான ஒரு மொழியாக மாறியிருக்கும்.

    3.கால்டுவெல் இந்தியர்களைப் பிரிப்பதற்காக திராவிடக் கருத்தியலை அறிமுகப்படுத்தினாராம். சத்தியமாகச் சொல்கிறேன். நான் சிரித்து விட்டேன். இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஏற்படவேயில்லை. இந்தியர்களைப் பிரிப்பதற்கு ஒரு ஆங்கிலேயர் புத்தகம் எழுதித் தான் காரியம் ஆக வேண்டுமாக்கும்?
    http://eluthu.com/kavithai/85519.html

    ReplyDelete
  3. “பைத்தியக்கராரே உங்களுக்கு என் பதில் நீங்கள் சொன்ன மானுடவியல் அடிப்படையில் இப்போதைய இந்தியாவில் யாருமே சுத்த திராவிடரும் இல்லை, சுத்தமான ஆரியரும் இல்லை. இந்த கருத்தை நான் ஏற்றுகொள்கிறேன் ஆனால் அதில் ஒரு திருத்தம் உங்கள் வாதப்படி வைத்துக்கொண்டால் கூட இப்போதைய இந்தியாவில் அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இதை நிலைதான்”


    தங்கள் முதற்கருத்து ஆரியர் திராவிடர் பிரிவினை என்பது நூற்றாண்டுகள் கடந்த போது மிக மங்கலாகிவிட்டது என்பது தான். ஒத்துக் கொள்கிறேன். இரண்டு இனத்தவர் ஒரே இடத்தில் வாழும் போது கலப்பு ஏற்படாமல் இருந்தால் அதை விட மிகுந்த ஆச்சரியம் எதுவும் இல்லை.

    “இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி 19ம் நூற்றாண்டில் ஏற்படவேயில்லை. என்பது தவறு 19ம் நூற்றாண்டின் கடைசியில் பாரதியார் வ உ சி தேசியவதியாகத்தான் இருந்தனர் .”
    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாரதியாரும், வ.உ.சியும் தேசியவாதியாகத் தான் இருந்தார்கள் என்கிறீர்கள். அந்த 'இறுதி' எதுவென்று நீங்கள் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. நான் அதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். பாரதியார் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத்துவங்கியது 1904ம் ஆண்டில் இருந்து தான். வ.உ.சி 1892ம் வருடத்திலிருந்து திலகரின் கொள்கைகளை ஆதரித்தாலும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடத் துவங்கியது வங்களாப் பிரிவினைக்குப் பின்பு தான். அதாவது 1905ம் ஆண்டுக்குப் பிறகு. ஆனால் கால்டுவெல் 1891ம் வருடத்திலேயே இவ்வுலகிலிருந்து மறைந்து போனார். அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் 1875ம் வருடம் வெளி வந்தது. எனவே பெருகி வந்த தேசிய உணர்ச்சியைக் குறைப்பதற்காக கால்டுவெல் திராவிட ஆரியப் பிரிவினையை மூட்டி விட்டார் என்று சொல்வது அபத்தமானது.

    “1858ல் இந்தியாவில் விக்டோரியா மகராணின் ஆட்சி கீழ் வந்தபோதே இந்தியா என்ற ஒரு தேசிய உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது “

    அடுத்ததாக நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு மகத்தான உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். அதிலிருந்து பெறும் முடிவு இது தான். விக்டோரியாவின் ஆட்சிக்கு முன் இந்தியா என்கிற தேசமோ, தேசியமோ இல்லை.

    “திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பல்ல என்று சொல்லும் தாங்கள் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு என்று நூறாவது ஆண்டு விழா கொண்டாடும் திராவிடதலைவர்களை மறந்துவிட்டீர்கள் “
    திராவிடம் என்னும் சொல் கால்டுவெல்லின் கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் ஆங்கிலத்தில் திராவிடம் என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் கால்டுவெல் தான் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விட்டீர்கள் அல்லது மறைத்து விட்டீர்கள்.


    “திராவிட கருத்து ஏற்ப்படுவத்ர்க்கு முன்னே பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிவிட்டார்” “

    பாரதியார் திராவிடந் தோன்றுவதற்கு முன்பே சாதிகளை ஒழிப்பதைப் பற்றி எழுதி விட்டார் என்கிறீர்கள். திராவிடக் கருத்தின் முன்னோடியான அயோத்திதாசப் பண்டிதரைப் பற்றியும் படித்துப் பாருங்கள்.

    “திராவிட கருத்து ஏற்ப்படாமல் இருந்திருந்தாலும் சதிக்கொடுமைக்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தான் இருக்கும் “

    இங்கே நீங்கள் வரலாற்றாய்வாளர்கள் செய்யக்கூடாத பிழையைச் செய்கிறீர்கள். இதுவரைக்கும் இருந்த வரலாறை வசதியாக மறந்து விட்டு, இப்படியில்லாவிட்டாலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்கிறீர்கள். அப்படிச் சொல்வதற்கு நீங்கள் கடவுள் அல்லவே.

    'ஆரிய இனத்தை பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை தாசயுக்கள் இந்தப் பழங்குடியினர் இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள் என்பதற்கு வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை ' (நாமக்கல் கவிஞர் தமிழ் மொழியும் தமிழ் அரசும்)

    அடுத்ததாக நீங்கள் ரிக் வேதத்தைப் பற்றி நாமக்கல் கவிஞரிடமிருந்து மேற்கோள் காட்டுகிறீர்கள். ரிக் வேதத்தைப் புரட்டிப் பார்த்தியிருக்க வேண்டியது தானே.
    "Thou slewest with thy bolt the wealthy Dasyu" - Rig veda, Book first, Hymn 33:4, praising Indra.
    "நீ செல்வந்தனாகிய தஸ்யுவை உனது வஜ்ராயுதத்தால் கொல்கிறாய்"- ரிக் முதல் புத்தகம் 33ம் துதிப்பாடல், இந்திரனைப் புகழ்வது.
    இதிலிருந்து உங்கள் வாதம் எத்தனை பிழையானது என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
    இதற்கு மேலும் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். அவற்றைக் கொண்டு ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் என்ற கட்டுரையைக் கூட நான் எழுதுகிறேன்.

    http://eluthu.com/kavithai/86057.html

    ReplyDelete
  4. “'வட இந்தியாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவர் கழுத்தை இன்னுஒருவர் நெருக்குவது போன்ற சூழ்நிலை இருக்கலாம் அது போலவே தென் இந்தியாவில் பிராமணர்களும் பிராமணர் அல்லாதோரும் ஒருவரை ஒருவர் எதிர்க்கிறார்கள் என்று கருதவேண்டாம்' இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு எழுதிய கடிதம் ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரிக்கத்தான் நினைத்தார்கள் “

    இர்வின் பிரபுவுக்கு வில்லிங்டன் பிரபு கடிதம் எழுதினார் என்று மொட்டையாகக் குறிப்பிடுகிறீர்கள். எப்போது எழுதினார்? எந்த சூழ்நிலையில் எழுதினார் என்பதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. நானுங்கூட சொல்லிக் கொள்ளலாம், மன்மோகன்சிங் எனக்குக் கடிதம் எழுதினார் என்று.

    “தமிழ் தலிவர்களை தவிர திராவிட நாடு எல்லைக்குள் இருக்கும் மற்ற மாநிலங்கள் ஏன் ஏற்று கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய கேள்வி “
    திராவிடத்தைப் பிற இன மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை நாம் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாம் நியாயப்பூர்வமான ஊகத்தில் வேண்டுமானால் ஈடுபடலாம். திராவிட இயக்கம் பிற மாநிலங்களில் வேரூன்றுவதற்கு முன்னாலேயே ஏற்பட்ட மொழிவழிப் பிரிவினை திராவிட இயக்க வேகத்தை அம்மாநிலங்களில் குறைத்துவிட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    ReplyDelete