Sunday, March 23, 2014

கற்கால மனிதர்கள் பழநி மலைக் குகையில் வரைந்த ஓவியங்கள் கண்டுபிடிப்பு

http://www.dinamalar.com/news_detail.asp?id=939820
24_03_2014_003_025_001
பழநி: பழநி அருகே பாப்பம்பட்டி மலைக்குகையில், 20 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கற்கால மனிதர்களால், பாறைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழநியைச் சேர்ந்த தொல்லியியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆர்வலர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் பாப்பம்பட்டி மலைப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டனர். 
இதில் 20 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கற்கால மனிதர்கள் பாறைகளில் வரைந்துள்ள ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது: பாப்பம்பட்டி மலைக்குகையில் வெள்ளை, ரத்த சிகப்பு, மஞ்சள் நிறத்தில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். வெள்ளை நிறத்தில் மான், மாடு, யானை, கொக்கு, மனிதர்கள் வேட்டையாடுதல் போன்ற ஓவியங்களும், ரத்தசிகப்பு நிறத்தில் மிகவும் சிதைந்த நிலையில் ஒருசில குறியீடுகளுடன் ஓவியங்களாக வரைந்துள்ளனர். இவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதில், மஞ்சள் நிற ஓவியங்களில், ஒரு விலங்கு "டைனோசர்' போன்ற தோற்றத்துடன், தடித்தவால், நான்கு கால்கள், முதுகில் திமிலுடன் காணப்படுகிறது. 
இது ஏறத்தாழ 20ஆயிரம் முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த விலங்கினமாக இருக்கலாம். இதைப்போலவே அன்மையில், திருமலை வனப்பகுதியில் ஒரு ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என்றார்.
24_03_2014_003_031

No comments:

Post a Comment