டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்-
(டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம். VII)
ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரின் மனத்தை மகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வு வக்கிரப் பட்டுப் போனதின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.
‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து ) என் முடிவுகள் பின்வருமாறு:
பின்வருமாறு:
1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4. வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே.பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே
No comments:
Post a Comment