Tuesday, March 4, 2014

திருக்குறளும் கிறித்துவின் விவிலியமும்

பல ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் ஒரு தமிழாசிரியர், அவர் திருக்குறள் ஆர்வலர், ஒரு திருக்குறள் மன்றத்தில் பல மாதங்கள் வாராந்திர்க் கூட்டங்களில் தொடர் சொற்பொழிவு செய்து வந்தார்.
அஙுகு திருக்குறளையும் பைபிளையும் ஒப்பிட்டு பார்த்து சொற்பொழிவு ஆற்ற, திரு. ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தவர் பேசுவதாக ஏற்பாடு நடந்தது.
என் நண்பர், தானே இரண்டையும் பொருத்தி வேறுபாடுகளை பல சொற்பொழிவுகளில் பேசினார். என்னிடம் சிலவற்றை விவாதிப்பார்.
அந்தப் பேராசிரியர் ஒரு நூல் எழுத உள்ளார் என்ற செய்தி வந்தவுடன் நான் நண்பரிடம் நிறைய பேசிய போது, என் நண்பர் கூறினார்-முதலில் பைபிளோடு குறளை ஒப்பிட்டுப் பேச தெய்வநாயம் தொடர்பு கொள்ளப்பட, அவர் சற்றும் ஆர்வம் காட்டாததால் இந்தப் பேராசிரியர் தேர்ந்தெடுக்கப் பட்டார், இத்தலைப்பு வருகிறது என்பதால் பல வாரங்கள் நான் திருக்குறள் அறங்கள் கிறுஸ்துவத்துக்கு முரண் எனக் காட்டினேன், விவிலிய வாக்கியங்கள் தேர்ந்தெடுக்க உங்கள் உதவியும் ந்ன்றாகப் பயன்பட்டது, அதையும் பேராசிரியர் கேட்டார் என்றார்.
நான் மேலும் பல வரலாற்று ரீதியிலான நூல்களின் பக்கங்களின் ஜெராக்ஸ் எடுத்து; ரோம் சர்ச் வரலாற்றுப் பதிவுகளின் மிகவும் பழைமையானவைப்படி தாமஸ், மத்தேயூ, பிலிப் போன்ற சீடர்கள் மதப் பிரச்சாரப் பணியில் ஈடுபடானல் ஜெருசலேமில் சாதாரணமாக இறந்தனர் என்பதக் காட்டினேன். பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”

பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்


முடிவாக -
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்
That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL.

1 comment:

  1. தோமாவும் தமிழ்நாடும் – ஓர் அரைகுறை ஆய்வரங்கம்

    http://tamizhthoothu.com/2013/10/23/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93/

    ReplyDelete