முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். குறள் 559
ஒல்லாது வானம் பெயல். குறள் 559
மு.வ உரை:அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
Translation:Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
Explanation:If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560:
மு.வ உரை:நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
சாலமன் பாப்பையா உரை:காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
Translation:Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
Explanation:If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

திருவள்ளுவர் அரசன் சரியில்லை எனில், நாட்டில் மழை உரிய காலத்தில் பெய்யது நாட்டை அழித்துவிடும் என்றார். ஆனால் அதிலும் கேடு அந்தணர் வேதங்களை மறந்துவிடுவார்கள் என்கிறார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543
நின்றது மன்னவன் கோல். குறள் 543
மு.வ உரை: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
சாலமன் பாப்பையா உரை:அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Translation:Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
Explanation:The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.

இங்கு அந்தணர் நூற்கும் அறத்திற்கும்- இந்நூல்கள் வேதங்களை குறிக்கும் சமஸ்க்ருத அறநூலகளைத்தான் குறிக்கும் என்பது சரியா
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை- சிலம்பின் காலம் பற்றிய ஆய்வு நூல். http://valavu.blogspot.in/2010/05/1-2009-presentation.html
சிலப்பதிகாரம்-15.அடைக்கலக் காதை- சிலம்பின் காலம் பற்றிய ஆய்வு நூல். http://valavu.blogspot.in/2010/05/1-2009-presentation.html
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60…
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல 55
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப்
பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் 60…
அருமறை யாட்டியை அணுகக் கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி 65
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக்
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் 70
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ 75
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து அறநூல்படி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது.
வள்ளுவப் பெருந்தகை வேத ஞான மரபையே போற்றுகிறார்.
No comments:
Post a Comment