Saturday, March 15, 2014

சங்க இலக்கியத்தின் காலம்

சங்க இலக்கியம் என்பது  பத்துப்பாட்டும்  எட்டுத்தொகையும். எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இதற்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்தவை -பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை &  தொல்காப்பியம்.
   
பிற சான்றுகள்
சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன எனும் ஒரு கதை இறையனார் அகப்பொருளுரை  பொ.கா.8ம் நூற்றாண்டில் அதை நடுநிலை ஆராய்ச்சியாளர் ஏற்க எவ்வித ஆதாரமும் இல்லை.  
 
சங்க இலக்கியத்தின் காலம்:                                                                                                  சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆயினும் இதன் முன்பின் காலம் நிச்சயமாய் காணலாம்.
நந்தர்: நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 5 ஆம், 6 ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டைஆண்டுவந்தனர். சிசுங்க மரபைச் சேர்ந்த மன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு மகனே நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. மகாபத்ம நந்தா என்னும் பெயருடன் இவன் அரசு கட்டில் ஏறினான். தனது 88 வயது வரை வாழ்ந்து ஆட்சி புரிந்ததால், சுமார் 100 ஆண்டுகள் வரை நிலைத்திருந்த இந்த அரச மரபினரின் காலத்தில் பெரும்பகுதி இவன் ஆட்சிக்காலத்துள் அடங்குகிறது. நந்தப் பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது. நந்தப் பேரரசு பின்னர் மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியனால் தோற்கடிக்கப்பட்டது.
அகநானூறு 251, மாமூலனார்
நாம் படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்ற வண்
தங்கலர்- வாழி, தோழி!-
மாமூலனார்- தலைவியின் பிரிவுத் துயரைத் தேற்ற கூறுவதாக- நந்தரின் பெரும்செல்வத்தை பெறும் நிலையில் இருந்தாலும் உன் துயர் கேட்டால் வேறு ஊரில் தங்காது திரும்புவார்.
அகநானூறு – 265.
4.பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை  5
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
22வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
புகழ் பெற்ற பாடலிபுத்ரத்தின்  நந்தர் கங்கைகரையில் ஒளித்து வைத்துள்ள செல்வத்தையா திரட்டிவரப்போகிறார் என தலைவி அலுத்துக் கொள்கிறாள்.

அகநானூறு 281, மாமூலனார், பாலை திணை – தலைவி சொன்னது
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
எண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்

மோரியர்:

மௌரியப் பேரரசு சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது. கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது. எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்படலில் உள்ளது.
கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.[1]
வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.[2] இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.[3][4]
அகநானூறு 69, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், 
10.  விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன்பு னை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும்,
நந்தர் விண்ணைத் தொடுமளவு நீண்ட குடை கொண்ட தேரில் வந்த இரும்புச் சக்கரம் கொண்ட தேர் செல்ல வெட்டிக் குடைந்த கணவாய் கடந்து என் காதலர் சென்றார் என்கிறாள்.
அகநானூறு 251, மாமூலனார், 
,
10  தெம் முனை சிதைத்த ஞான்றை; மோகூர்
பணியா மையின், பகை தலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்,
மோகூர் பணியாததால், புதிய மோர்யர் பகையுள்ளத்தோடு, பெரும் படையோடு, தங்கள் தேர் சக்கரம் உருண்டு செல்ல அருவி பாயும் மலைப்பாதையை குறைத்து வழி அமைத்தார்கள்.
அசோகர் மைசூர் கல்வெட்டு சேர, சோழ , அடியமான்(சதியபுத்ர), பாண்டியர் எனக் குறிக்கிறது. பாண்டியர் பின் பலம் பெற அதியன் குறைந்ததை நாம் பாடல்களில் காணலாம்.இதே செய்தி கீழுள்ள பாடல்களில் காணலாம். இங்கே வம்ப மோரியர்- புதிதாக எழுந்த என்பதால்  இவை பொ.மு.4ம் நூற்றாண்டினது என்பது திண்ணம்.
அகநானூறு 281, மாமூலனார்
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
எண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
புறநானூறு 175, பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்
பாடப்பட்டோன் : ஆதனுங்கன்
,
5. 
என் யான் மறப்பின், மறக்குவென் – வென் வேல்
விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத் தன்ன, நாளும்

Hathigumpha Inscription:The inscriptions date back to the 1st century BCE. It faces straight towards the rock Edicts of Ashoka at Dhauli, which is situated at a distance of about six miles.

காரவேலன் எனும் கலிங்க அரசன் (பொ.மு.176-163) தன் 11ம் ஆண்டில் 113 ஆண்டு ஹதிகும்பா கல்வெட்டு 113 ஆண்டு நீடித்த தமிழர் கூட்டணியை தோற்கடித்தார் என்கிறது.
இப்படி பல்வேறு நிலையில் உள்ள ஆதாரங்கள் கொண்டு சங்க இலக்கிய காலம் பொ.மு.500 – பொ.கா. 50 எனத் தெளிவாகக் கூறலாம்.

No comments:

Post a Comment