உப்பு வேலி – இந்தியாவில் அறியப்படாத முள் சுவர்.
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் கொள்ளை அடித்தது 600 லட்சம் கோடிகள், தவறான நிர்வாகத்தால் செயற்கை பஞ்சங்களால் 110 கோடி இந்தியரிக் கொன்றனர், பெரும்பாலும் பட்டியல் இன மக்கள் மற்றும் நிலமற்ற பிற்பட்ட மக்கள். 10 கோடி மக்கள் படுகொலை வரலாற்றில் ஒன்று -உப்பு வேலி
ராய் மாக்ஸாம், ஆங்கிலேய எழுத்தாளர். ஆனால் வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டவர். The Great Hedge of India என்ற இவருடைய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸின் மொழியாக்கத்தில், எழுத்து பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது.
சீனப் பெருஞ்சுவர் போல இந்தியாவிலும் நீளமான மிகப்பெரிய முள்வேலி இருந்துள்ளது ஆனால், அது பற்றி யாருக்குமே தெரியவில்லை என்பது ஆச்சர்யம்.
Roy Moxham என்ற ஆங்கிலேயர் தற்செயலாக வாங்கிய ஒரு புத்தகத்தில் இந்தியாவில் சீனப் பெருஞ்சுவருக்கு இணையாக மிகப்பெரிய புதர்வேலி அமைக்கப்பட்டு இருந்ததையும் தற்போது அது மாயமாகி அது பற்றி யாருக்குமே தெரியாததையும் அறிகிறார். இந்த வேலியின் மிச்சம் எங்காவது இருக்க வேண்டும் என்று இதற்காக இந்தியாவில் தனது பயணத்தைத் துவங்கி அதைப் பல போராட்டங்களுக்குப் பிறகு கண்டு பிடிப்பதே இப்புத்தகம்.
தற்போது மக்கள் அறியாத வரலாற்று உண்மையைக் கண்டறிவது பெரிய சவால் அதோடு அதை இன்னொரு நாட்டில் தேடுவது மிக மிகப் பெரிய சவால். அதை எப்படித் தேடி கண்டறிகிறார், இதில் ஏற்படும் இன்னல்கள், போராட்டங்கள், கிண்டல்கள் என்ன என்பதை இப்புத்தகம் கூறுகிறது.
இவ்வளவு பெரிய வேலி அமைக்கப்பட்டது உப்புக்காக என்றால், படிக்கும் உங்களாலே நம்பச் சிரமமாக இருக்கும். உப்புக்காக இவ்வளவோ பெரிய வேலியா? என்னய்யா நக்கல் அடிக்கிறீங்களா! என்று தான் நினைக்கத் தோன்றும் ஆனால், அது தான் உண்மை.
ஒரு மர்ம நாவலுக்கு இணையாக மற்றும் உப்பு / பஞ்சம் / வரிகள் / இது தொடர்பான நம்ப முடியாத செய்திகளைத் தனது பயணத்தில் / ஆய்வில் திரட்டி இப்புத்தகத்தைக் கொடுத்து இருக்கிறார். இதைத் தமிழில் “சிறில் அலெக்ஸ்” மொழி பெயர்த்து இருக்கிறார்.
பஞ்சத்திலும் உப்பு வரி வசூல்
பண்டைய காலத்தில் உப்புக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை “கிழக்கிந்திய நிறுவனம்” அறிந்து அதற்கு வரி விதித்தது. இந்த வரியின் சுமையைத் தாங்க முடியாத பல ஏழை மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி லட்சக்கணக்கானோர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
உப்பை யாரும் எடுத்துச் சென்று விடக் கூடாது என்பதற்காக இலந்தை முள் உட்படப் பல மரங்களால் நெருக்கமாக உருவாக்கப்பட்டுப் பல ஆயிரம் வீரர்களைக் காவலுக்கு வைத்து இந்த வேலி பாதுகாக்கப்பட்டுள்ளது.
உப்புக்கு வரியால் இருந்த பற்றாக்குறை காரணமாகக் கொள்ளை / கடத்தல் போன்றவைகள் நடந்துள்ளன.
மிரட்டும் உப்புவேலித் தகவல்கள்
14 அடி அகலத்தில் இருந்த 1877-78 ஆண்டுச் சுங்கவேலி குறித்த பின்வரும் தகவல்களைப் படித்தால், உங்களால் நம்பச் சிரமமாக இருக்கும்.
முழுமையான நல்ல
– உயிருள்ள பச்சை புதர்வேலி – 411.50 மைல்கள்
– உயிருள்ளதும் காய்ந்ததும் கலந்த வேலி 298.15 மைல்கள்
– காய்ந்த வேலி – 471.75 மைல்கள்
– கல் அரண் – 6.35 மைல்கள் (முள் வேலி அமைக்க முடியாத இடங்களில் கல் அரண் அமைக்கப்பட்டுள்ளது)
முழுமையற்ற குறைபாடுள்ள வேலி 33.25 மைல்கள்
மொத்தம் 1,521.00 மைல்கள்.
இந்தச் சுங்கப் புதர்வேலியை 1869 ம் ஆண்டு 136 மேலதிகாரிகளும் 2,499 அதிகாரிகளும் 11,288 காவலாளிகளும் மொத்தம் 13,923 பேர் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இது மேலும் பெரிதாகிக் கொண்டே இருந்தது.
சின்னதாகக் கற்பனை செய்து பாருங்கள். 14 அடி அகலத்தில் நெருக்கமான முற்புதர்களைக் கொண்டு 100 மைல்களுக்கு அமைப்பது என்பதே மிகச் சிரமம். இதற்கு இவ்வளவு மனிதவளம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால், இதனால் எத்தனை மக்கள் பாதிப்படைந்து இருப்பார்கள்?!
உப்புப் பற்றாக்குறையால் இறந்த லட்சக்கணக்கான மக்கள்
உப்புச் சத்துக் குறைவால் பல லட்சம் மக்கள் இறந்து இருக்கிறார்கள், விவசாயமே பொய்த்த நிலையிலும் கூடக் கருணையே இல்லாமல் உப்பு வரி செலுத்த கட்டாயபடுத்தப்பட்டுள்ளனர்.
தங்கம் போல இதற்காகக் கடத்தல்களும் கொள்ளைகளும் நடைபெற்றன. உயிர்ப் பலிகள் ஏற்பட்டன.
இந்த வேலி தென்னிந்தியப் பகுதியில் இல்லை.
உப்புக்கு கிராமங்களில் இருக்கும் மதிப்பு
இன்றும் கிராமங்களில் உப்பு மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று வரை காகிதமும் உப்பும் காலில் படக் கூடாது என்றே கூறுவார்கள். காகிதமும் உப்பும் எனக்குக் கடவுள் போலவே போதிக்கப்பட்டு இருக்கிறது. தெரியாமல் பட்டால் மன்னிப்புக் கேட்கும் நிலை உள்ளது.
இது குறித்து இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
நகர மக்கள் காகிதத்தையும் உப்பையும் மிதிக்க நேரிட்டால் அதனால் அவர்கள் மனதில் எந்தச் சலனமும் ஏற்படாது ஏனென்றால், அது சாதாரணப் பொருள் ஆனால், கிராமங்களில் அப்படியல்ல.
இந்தியப் பயண அனுபவங்கள்
ஆசிரியர் இந்த வேலியைக் காண்பதற்காக இந்தியாவில் பல தேடல்களை நடத்தியுள்ளார். இவரின் பயண அனுபவங்களும், இந்தியா குறித்த இவரின் எண்ணங்களும் கருத்துகளும் சுவாரசியமாக இருந்தன. பயணம் எனக்குப் பிடிக்கும் என்பதால், எனக்கு இந்தப் பகுதி ரொம்பப் பிடித்தது.
இவரின் ரயில் பயணங்களும் விமானத்தில் இறங்கிய பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் இவரிடம் “பேருந்து வேலை நிறுத்தம்” என்று பொய் கூறி ஆட்டோவில் அழைத்து சென்றதையும், இவருக்கு தேடலில் உதவியாக இருந்த சந்தோஷ் என்ற இளைஞன் பற்றியும் விவரித்து இருக்கிறார்.
இந்தியர் செய்ய வேண்டிய பணியைச் செய்த ஆங்கிலேயர்
இவரால் இரண்டு முறை இந்தியா வந்து தேடியும் வேலியை கண்டுபிடிக்க முடியாததால், பலரின் கேலிக்கு ஆளாகி மன உளைச்சல் அடைந்து இருக்கிறார் ஆனாலும், நம்பிக்கை இழக்கவில்லை.
பலர் இல்லாத ஒன்றைத் தேடிக்கொண்டு இருப்பதாகக் கூறி அவரின் மன உறுதியைக் குலைக்கிறார்கள்.
இவையல்லாமல் பல வரலாற்றுத் தகவல்கள், பொது மக்கள் ஆங்கிலேயர்களால் பட்ட துன்பங்கள், இந்த வேலி குறித்த தகவல்கள் என்று நமக்குப் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்தியர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு ஆங்கிலேயர் செய்து இருக்கிறார்.
இந்த வேலி கைவிடப்பட்ட பிறகு மக்கள் விவசாயத்திற்காகவும், விறகுக்காகவும், சாலை விரிவாக்கப்பணிக்காகவும் இந்த வேலியை அழித்து இருக்கிறார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இது பற்றியே யாருக்கும் தெரியாமல் சென்று இருக்கிறது.
உப்பு வேலிப் பகுதியில் இருந்த 80 வயதிற்கு (*1997 ல்) மேற்பட்ட ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே இது குறித்துத் தெரிந்து இருக்கிறது.
இப்புத்தகம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறி இருப்பதாவது
“உப்புவேலி” எனும் இந்தப் புத்தகம் அசாத்தியமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது.
சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப் போலப் பிரித்தானிய அரசாங்கத்தின் உள் நோக்கங்களையும் ஆட்சிமுறைகளையும் ஒரு மனிதனின் வெறித்தனமான தேடல் வழியே சொல்லிச் செல்கிறது.
அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன், ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லை என்றால், ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்குக் காண்பிக்கிறது.
தமிழுக்கு மிக முக்கியமான கொடை இந்நூல். எளிய பயண நூல் வடிவில் எழுதப்பட்டுள்ளது இது. ஆனால், நமக்குள் ஒரு முற்றிலும் புதிய சிந்தனைப் போக்கை தொடங்கி வைக்கக்கூடும் என்று கூறி இருக்கிறார்.
புத்தகம் படிக்க எப்படி இருக்கிறது?
இப்புத்தகத்தின் அனைத்துப் பகுதியையும் அனைவராலும் சுவாரசியமாகப் படித்து விட முடியாது. அதிகப்படியான தகவல்கள் சலிப்பை ஏற்படுத்துகிறது அதோடு குழப்பத்தையும் கொடுக்கிறது.
வரலாற்றுச் சம்பவங்களைத் தகவல்களை ஆர்வமாகப் படிப்பவர்களுக்குப் பொருத்தமானது. மற்றவர்களுக்கு இப்படியும் நடந்துள்ளதா?! என்று தெரிந்து கொள்ள உதவும் வரலாற்றுப் புத்தகம்.
இதுவரை எங்குமே படித்திராத வரலாற்றுச் செய்திகளை இதில் படிக்கலாம். அதோடு இனி உப்பு என்றால் எனக்கு இந்தப் புத்தகம் தான் நினைவுக்கு வரும் என்ற அளவிற்கு இதில் உப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது.
Roy Moxham தளம் http://www.roymoxham.com/
புத்தகத்தின் விலை ₹240
லண்டனில் பழைய புத்தகம் ஒன்றை வாங்கியபோது அதில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது வங்காளத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட மாபெரும் வேலி பற்றிய குறிப்பு ஒன்று இருந்திருக்கிறது. வங்காளத்துக்கு வெளியிலிருந்து உப்பைக் கொண்டுவந்தால் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கட்டவேண்டும். அதனைச் செயல்படுத்த அவர்களுடைய சுங்கத்துறை உருவாக்கியிருந்த மிகப்பெரிய வேலி அது. அதுபற்றி மேற்கொண்டு விசாரித்தபோது யாரிடமும் சரியான பதில் இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் பல்வேறு ஆவணங்கள், மேப் வரைபடங்கள், இந்தியாவுக்கு நேரில் வந்து பலமுறை ஃபீல்ட்வொர்க் செய்தல் என்று விரிந்த அவருடைய ஆராய்ச்சி இறுதியில் அந்த மாபெரும் வேலியின் சில எச்சங்களை முலாயம் சிங்கின் எடாவா தொகுதியில் பார்த்ததோடு முடிவுற்றது. அதன் விளைவாக உருவானதுதான் இந்தப் புத்தகம்.
நேற்றைய நிகழ்வில் சிறில் அலெக்சின் அறிமுகம் நன்றாக இருந்தது. இடதுசாரி ஆராய்ச்சியாளர் பால்ராஜ், வரலாற்றாளர் ராமச்சந்திரன் ஆகியோர் புத்தகம் குறித்துப் பேசினர். எனக்கு ராமச்சந்திரனின் பேச்சு பிடித்திருந்தது. ராய் மாக்ஸாமின் புத்தகத்தின் கிழக்கிந்திய கம்பெனியின் காசு ஒன்றின் படம் இருக்கும். அதில் ஒரு புறம் தராசும் அதால் என்ற பாரசீகச் சொல்லும் இருக்கும். மற்றொரு புறம் 4 என்ற எண்ணும் இதயத்தின் படமும் இருக்கும். அதைக் குறித்துக் குறிப்பிடும்போது கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் (4 - ஹார்ட்/ஆட்டின் - புது ஊர்) என்று ஒரு ஊர் இருப்பதை ராமச்சந்திரன் குறிப்பிட்டார். பருத்தி வியாபாரம், பாளையக்காரர்கள், நாடார்கள், கட்டபொம்மன், கிழக்கிந்திய கம்பெனி என்று சில விஷயங்களை ராமச்சந்திரன் மேலோட்டமாகக் குறிப்பிட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்று எனக்கு ஓரளவுக்குப் புரிந்தது. ஒருவேளை அவர் இதனை எங்காவது எழுதியிருக்கக்கூடும். சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் இது என்று நினைக்கிறேன். வரலாற்றை நாம் தீர்க்கமாக ஆய்வு செய்யவேண்டும். நிறைய பழைய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர்வது அவசியம்.
யுவன் சந்திரசேகர் மிகுந்த நகைச்சுவையுடன் பேசினார். அரங்கு முழுவதையும் குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்தார். சிறில் அலெக்ஸின் மொழிபெயர்ப்பில் பல அருமையான தமிழ்ச் சொற்கள் வந்திருப்பதையும் சில இடங்களில் ஜெயமோகனின் டச் இருப்பதையும் குறிப்பிட்டார். ஜெயமோகன் ராய் மாக்ஸாம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுத்தார். கடந்த சில தினங்களாக ராய் மாக்ஸாமுடன் நேரத்தைச் செலவிட்டதில், அவரைப் பற்றித் தான் அறிந்துகொண்டதாக மூன்று விவரங்களைச் சொன்னார். (1) எதையுமே இயல்பான நகைச்சுவையோடு பேசுவது. (2) எந்த விதத்திலும் உயர்வு நவிற்சி வந்துவிடக்கூடாது என்று மட்டுப்படுத்தி உண்மை நிலையை மட்டும் வெளிப்படுத்தவேண்டும் என்ற விருப்பம். (3) உயர்மட்டத்தினரின் டாம்பீகத்தைச் சிறிதும் ஏற்க விரும்பாத தன்மை.
ராய் மாக்ஸாம் பேசும்போதும் பின்னர் கேள்வி பதில் நேரத்தின்போதும் பல விஷயங்களைச் சொன்னார். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின்போது பல லட்சம் பேர் இறந்துபோயினர். அதில் எவ்வளவு பேர் உப்பின் போதாமையால் (உப்பு வரியால்) செத்துப்போனார்கள் என்று சொல்ல முடியாது. உப்பின்மீதான வரி பல நேரங்களில் ஏழைக் குடும்பங்களின் இரண்டு மாத வருமானமாகவும் சில நேரங்களில் ஆறு மாத வருமானமாகவும்கூட இருந்திருக்கிறது. இந்திய மேட்டுக்குடியினரே உப்புவரியை அதிகரிக்கச் சொல்லியிருக்கின்றனர். போர்த்துக்கீசியர்கள் மிக மிகக் கொடுமைக்காரர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் ஆங்கிலேயர்கள்தான் அதிகம் இந்தியர்கள் இறக்கக் காரணமாக இருந்திருக்கின்றனர்.
உப்புக்காக ஒரு பிரம்மாண்ட வேலி
https://en.wikipedia.org/wiki/Inland_Customs_Line
http://www.giriblog.com/2015/07/uppuveli-book-review.html
https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7010312.ece
https://indiraparthasarathy.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF/
No comments:
Post a Comment