இறந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதற்கு இந்த வாரம் மறுப்பு வந்தமையின் முழுவதையும் பார்ப்போம்.
நமது பாரத அரசு காசு மற்றும் ஸ்டாம்பு வெளியிட திருவள்ளுவர் படம் கேட்க அதை வரைந்து கொடுத்தது ஓவியர் வேணுகோபால் சர்மா என்பவர், ஓவியர் வரைந்த படத்தில் பூனூல் இருக்க கருணாநிதி துண்டை போட்டு மறைக்க சொல்லிட துண்டு வரைந்தார் என கிறிஸ்துவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னதை ஓவியர் மகன் மறுப்பு இந்த வாரம் வந்துள்ளது.
பாரத அரசு ஸ்டாம்பு 1960
ஓவியர் மகன் கருணாநிதியே சொல்லாத விஷயத்தை பீட்டர் அல்போன்ஸ் சொன்னதாய் மறுக்கிறார்.
உண்மையில் கருணாநிதி சொன்னது தான், 2011, தமிழக முதல்வராய் திருவள்ளுவர் தினப் பேச்சில் சொன்னது தான்.
http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1 - சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.
கருணாநிதியின் பேச்சு முழு பொய் -ஸ்டாம்ப் வெளியானது 1960ல். கீழே அக்காலப் படம். ஈ.வி.கே.சம்பத் பேசுகிறார். அண்ணாதுரை அருகே இரண்டாவது பெரும் தலைவர் நெடுஞ்செழியன். ஆனால் தரையில் கருணநிதி. அண்ணாதுரைக்கு பின்பாக ஐம்பெருங்குழு என்பதில் கருணாநிதி கிடையாது.
அந்தக் காலக் கட்டத்தில் கருணாநிதி திமுக கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் கூட இல்லை. கருணநிதி சொன்ன சுய தம்பட்டத்தின் உச்சக் கட்டப் பொய்யை தான் பீட்டர் அல்போன்ஸ் திரும்பி சொன்னார்.
திருவள்ளுவர் படம் உருவான வரலாற்றினைப் பார்ப்போம்.
திருவள்ளுவர் படத்தை வரைய உறுதுணையாய் இருந்து அவருக்கு உதவியர் திரு.மா.இராம.தமிழ்செல்வன் எழுதிய நூல்
திரு.மா.இராம.தமிழ்செல்வன் அவர்கள் இப்படம் வரைய 6 ஆண்டு முன்பு ஒரு பள்ளிக்கு வழங்கிய திருவள்ளுவர் படம்
இந்தப் படத்தில் திருவள்ளுவர் பூனூலோடு தான் உள்ளார். இது ஓவியருக்கு முன்னோடியாய் இருந்திருக்க வேண்டும்.
தமிழ் மரபின் பூனூலை காலனி ஆதிக்க கிறிஸ்துவ அடிமை மதச்சார்பின்மை தூண்டலில் துண்டு போட்டு ஓவியர் மறைக்க சிலபலர் யாரேனும் இருக்கலாம், நிச்சயமாய் அன்று கருணாந்தியாய் இருக்க வாய்ப்பில்லை
திருவள்ளுவரும் பிராமணர்களும்
திருவள்ளுவர் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பல முன் நூல்களைப் பற்றி சொல்லி இருப்பார். இவை பெரும்பாலும் பிராமணர்களின் வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும், அரசனுக்கு தேவையான படை பற்றிய நூல்கள் மற்றும் மருத்துவம் பற்றியவை. வள்ளுவர் காலம் 9ம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பதில் தற்போது பன்னாட்டு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர் பெரும்பான்மை ஏற்கின்றனர்.
வள்ளுவர் கூறும் நாட்டு அரசனின் செங்கோல் பிராமணர்களின் வேதங்களும் தர்ம சாஸ்திரங்களூகு அடிப்படையாய் இருக்க வேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
கொடுங்கோல் மன்னவர் முறையாய் ஆட்சி செய்யாவிட்டால் நாட்டில் உள்ள பசுக்கள் பலன் தராது, பிராமணர்கள் வேதங்களை மறப்பர்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
பிராமணர்கள் வேதங்களை மறப்பர்என்பது வள்ளுவர் நாடின் மிகப் பெரும் கேடு என்கிறார்.
கருணாநிதி தமிழ் சனியன் அதை ஒழிக்கவே திராவிடம் எனப் பேசிய திராவிட நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி வழியில் காட்டுமிராண்டித்தனமாய் மேடையில் நடந்தது.
தமிழினத்தையே இழிவு செய்யும் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின்
No comments:
Post a Comment