Friday, August 10, 2018

திருவள்ளுவர் நாள் வைகாசி அனுஷம்

கருணாநிதியர் தமிழுக்குச் செய்த தொண்டுகள் -01
1) கருணாநிதியர்,மறைமலையடிகள் தலைமையில் கூடிய சபையின் தீர்மானத்துக்கு அமைவாக,திருவள்ளுவர் ஆண்டு,திருவள்ளுவர் நாள் ஆகியவற்றை தையில் கொண்டாட அரச ஆணை பிறப்பித்தார்.
மறைமலையடிகள் தலைமையில் 1935ஆம் ஆண்டு சபைகூடியது உண்மை. அவர்கள் கொண்டாடியது வைகாசி அனுட்டத்தையேயொழிய, தையை அல்ல!!! அதுவும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாடினரேயொழிய திருவள்ளுவர் ஆண்டையல்ல!!! தையில் திருவள்ளுவர் ஆண்டையும் திருவள்ளுவர் நாளையும் உண்டாக்கியவர் கருணாநிதியரே!!!! ஆனால், தானே தனித்து எடுத்த தீர்மானம் என்பதை தமிழ்கூறு நல்லுலகத்தின்முன் கூறாது; மறைமலையடிகள் தலைமையில் தமிழ்த்தலைவர் எடுத்த தீர்மானம் என்று பொய்மூட்டைகளால் ஊடகங்களை நிரப்பி, மாற்றுக்கருத்துக்கே இடமளிக்காது செய்த கயமை-மறைமலையடிகளால் மட்டுமல்ல, தமிழன்னையாலும் மன்னிக்கமுடியாத துரோகத்தைச் செய்தார் கருணாநிதியர்.
இலங்கையைச் சேர்ந்த திருக்குறள் அறிஞரும் அக்காலத்தில் திருக்குறள் மாநாட்டை நடத்தியவருமான கா.பொ.இரத்தினம் அவர்கள் கருணாநிதியருக்கு அவருடைய பொய்மூட்டைச் செய்திகளை தோலுரிக்குமாறு கடிதம் எழுதினார். ஆனால்; அரசியல் ஊடக பலத்தினால்- மூப்பினாலும் அரசியலாலும் ஒதுங்கியிருந்த கா.பொ,இரத்தினம் அவர்களின் குரல் உலகுக்கு எட்டாது- கருணாநிதியரால் இருட்டடிப்புச்செய்யப்பட்டது.
இங்கு திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் குறித்து விவாதிக்கவிரும்பவில்லை.ஆனால், மறைமலையடிகள்தான் திருவள்ளுவர் ஆண்டை தையில் தொடங்கினாரென்று பொய்ச்செய்திகளைப் பரப்பி; தையில் திருவள்ளுவர் ஆண்டைத் தொடக்கிய கயமைத்தனத்தைத்தான் நாம் சுட்டிக்காட்டுகின்றேன்.
ஆதாரம்:
1955இல் நடந்த மாநாட்டு மலரில் இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் இன்றும் காலத்தால் காக்கப்பட்டு உண்டு.
நன்றிகள்: கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
 






No comments:

Post a Comment