Friday, August 10, 2018

கருணநிதியும் இலங்கை பிரிவினைவாதிகளும்

https://www.facebook.com/jay.ganeshan/posts/1266194060183424
திமுக தலைவர் கருணாநிதி கடும் சுகவீனம் அடைந்ததிலிருந்து அவரது மரணம் வரையிலான இந்த 2 வாரங்களையும் சமூக ஊடகங்களை திமுக சார்பு கருத்தியலாளர்கள்,உடன்பிறப்புக்கள் கனகச்சித்தமாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை பார்க்கமுடிகிறது. 

தமிழ்நாட்டின் கடந்த 100 ஆண்டுகால தேர்தல், சமூக அரசியலை பொறுத்தவரையில் மிக மிக முக்கியமான ஆளுமை அவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவரின் அரசியல் வாழ்க்கையில் இருக்கும் சில கறுப்பு பக்கங்களையும் நாசூக்காக வெள்ளையடிக்கும் வேலைகளை திமுக சார்பு அறிவுஜீவிகள் செய்யும்போது எதிர்வினையை நாம் செய்யவேண்டியது அவசியமாகிறது. அதனால் அவரின் மரணசடங்கு முடியும்வரை அமைதியாய் இருந்துவிட்டு இந்த பதிவை எழுதுகிறேன். 

இறந்தவரை விமர்சிக்கலாமா என்ற கேள்வி உங்களில் யாருக்கும் எழுந்தால் என்னுடைய பதில் ஆம் என்பதே. அவரின் குடும்பத்தாரின் சோகத்தில் நேற்றுவரை நாமும் பங்குகொண்டிருந்தோம். இன்று முதல் பழையபடி கடந்த 80 ஆண்டுகால தமிழ்நாட்டின் அரசியல் , சமூக தளங்களில் பெரும் influence ஐ ஏற்படுத்திய நபர் என்பதால் அவரின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து விமர்சனம் செய்வது அவசியமானது. 
அறிவுடமையானது. இந்த விதி சகல தலைவர்களுக்கும் பொருந்தும். இந்த பதிவில் நான் எடுத்துக்கொண்ட subject எனக்கு நன்கு பரிச்சயமான இலங்கையின் ஆயுதப்போராட்டம் பற்றியது. கடந்த இரண்டு வாரங்களில் மேற்சொன்ன அறிவுஜீவிகள் கருணாநிதியை அப்பழுக்கற்றவராக காட்டுவதற்காக விடுதலை புலிகளின் மீது சேறு பூசி , இலங்கையின் ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை அவருக்கு ஏற்றாற் போல திரித்து வளைத்து கதை சொல்லியிருந்தார்கள். புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பது 30 ஆண்டுகால வரலாறு. அது பல்வேறு aspect களில் அணுகப்படவேண்டியது. அதை ஒரு கட்டுரையில் எழுதுவது சாத்தியமில்லை. அதனால் அவர்களுடைய வரலாற்றில் ஒரு சிறிய பகுதியான 1983- 1987 வரையிலான காலப்பகுதியை எடுத்து கொள்கிறேன். 

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் எழுதி 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது ‘விடுதலை’ என்ற நூல். அந்த நூலில் மேலே சொன்ன அந்த காலகட்டங்களில் புலிகளுக்கும் எம்.ஜி. ஆர் இற்கும் இடையிலான உறவை பற்றியும் ராஜீவ் காந்திக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவு பற்றியும் முதல் இரு அத்தியாயங்களில் ஆவணப்படுத்தியிருப்பார். அவைகளை அப்படியே படமாக இதில் பதிவு செய்துள்ளேன். அந்த இரு அத்தியாயங்களின் ஊடாக அன்றைய தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலையையும் , புலிகளின் தலைவர் பிரபாகரன் அதை எதிர்கொண்ட விதத்தையும் தெரிந்துகொள்ளலாம்.  -க.ஜெயகாந்த்




































 


No comments:

Post a Comment