தெய்வ வகை
திருவள்ளுவர் பொதுவாகத் தெய்வம் என்று குறிக்கும் இடங்களைப் பற்றி முன் கட்டுரையில் ஆராய்ந்தோம். அந்தச் சொல்லால் முழுமுதற் கடவுளேக் குறிப்பதும், தேவர்களேக் குறிப்பதும் உண்டென்பதை அறிந்தோம்.
இப்போது, குறிப்பிட்ட சில தெய்வங்களேப் பற்றி அவர் கூறும் செய்திகளேக் கவனிப்போம்.
திருமாலே இரண்டிடங்களில் குறிக்கிருர் திருவள்ளுவர். அடியளந்தான், தாமரைக் கண்ணுன் என்று இரண்டு தொடர்களால் சுட்டுகிறார் அப்புலவர் பெருமான்.
மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு - (610) என்பது ஒரு குறள்.
தன் அடியாலே எல்லா உலகையும் அளந்த இறைவன் எவற்றை அளந்தானே அவை அனைத்தையும் சோம்பல் இல்லாமல் முயற்சி செய்யும் அரசன் அடைவான்’ என்பது இதன் பொருள்.
இங்கே திருமாலேச் சுட்டியது போலவே திருஞான சம்பந்தப் பெருமானும் திருத்துங்கானே மாடத்துத் திருப்பதிகத்தில், -
'மலர்மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்
தாய அடியளந்தான் காண மாட்டாத் - த&லவர்க் கிடம்போலும்’ - (9)
என்னும் பாசுரத்தில் 'தாய அடியளந்தான் என்று கூறுகிருர். இந்தக் குறளில் திருமால் திரிவிக்கிர மாவதாரம் எடுத்து உலகை அளந்த செய்தி வருகிறது.
தாம்வீழ்வார் மென்ருேள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்னன் உலகு (1103)
என்பது திருமாலேக் கூறும் மற்ருெரு குறள். இது காமத்துப்பாலில் வருகிறது. தலைவியோடு இன்புற்ற தலைவன் தான் பெற்ற இன்பத்தை எண்ணிக் கூறும் கூற்ருக அமைந்தது இது. தாம் விரும்பும் மகளிரது மெல்லிய தோளில் துயின்று பெறும் இன்பத்தினும் திருமாலின் உலகத்தில் பெறும் இன்பம் இனியதோ? என்பது இதன் பொருள். ஜம்புலன்களையும் நுகர் வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் ம்ெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல் வருந்தாமல் எய்தலாமோ, அவற் றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம் என்று பரிமேலழகர் உரை விரித்தார்.
இங்கே திருமாலேத் தாமரைக் கண்ணுன் என்று கூறி, அவனுறையும் உலகம் பேரின்பம் தருவதென்ப தைக் குறிப்பாற் பெற வைத்தார். தாமரைக் கண்ணுன் என்பதற்கு மணக்குடவர் இந்திரனென்றும், காளிங்கர் பிரமன் என்றும் பொருளுரைத்தனர். இந்திரனத் தாமரை போன்ற கண்ணுன் என்று சொல்வது மரபன்று; இந்திரனுலகு என்று உரைப்பாரும் உளர்; தாமரைக் கண்ணன் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மை யறிக’ என்று பரிமேலழகர் அதை மறுத்தார். தாமரைக்கண்ணன் என்பதில் உள்ள கண் என்பதற்கு இடம் என்று பொருள் கொண்டு, தாமரையாகிய இடத்தில் உள்ளவன் என்பதல்ை பிரமனேக் குறிப்பதாகக் கூறினர் காளிங்கர். இன்பம் தருவது பிரமனுலகு என்று சொல்வது பெரு வழக்கு அன்ருதலின் அந்த உரையும் பொருந்தாது. திருமாலேப் புண்டரீகாட்சன் என்றும் கமலக் கண்ணன் என்றும் கூறுவது மரபு. அதனை ஒட்டியே தாமரைக் கண்ணுன் என்ருர் திருவள்ளுவர்.
திருமாலின் தேவியாகிய திருமகள் செல்வத்துக்குத் தெய்வமென்றும், அந்தப் பிராட்டியின் திருவருளால் பொருள்வளம் உண்டாகும் என்றும் கூறுவது இந்நாட்டு tDffl { • திருக்குறளாசிரியரும் செல்வம் உண்டாகும் என்று சொல்ல வரும் சில இடங்களில் திருமகள் வருவாள் என்று சொல்கிரு.ர்.
விருந்து ஓம்பி இல்வாழ்க்கையை நடத்துகிறவ ரிடத்திலும், பிறர் பொருளே வெஃகாதவரிடத்திலும், சோம்பலின்றி முயற்சி செய்பவரிடத்திலும் திருமகள் சே வாள் என்கிருர்.
முகம் விரும்பி கல்விருந்தினரைப் பேணுபவருடைய வீட்டில் மனம் குளிர்ந்து திருமகள் தங்குவாளாம்.
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல். - (84)
அறம் இன்னதென்று அறிந்து, பிறர் பொருளே விரும்பாமல் இருப்பவர்களே, எவ்வாறு அடைய வேண்டுமோ அந்த வகையை அறிந்து திருமகள் அடைவாளாம்.
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு. (179)
திருமகள் இன்னுர் இன்னுரை விட்டு நீங்கி விடுவாள் என்பதையும் சில இடங்களில் சொல்லுகிரு.ர். அழுக்காறு என்ற பாவி திருமகளே ஒட்டிவிட்டு நரக வாதனையில் செலுத்திவிடும் என்பது ஒரு குறளின் கருத்து,
அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
ஓர் அரசனிடம் ஒருவன் துணையாய் நின்று அவனுடைய அதிகாரியாக இருக்கிருண். மிகவும் உண்மை யாக உழைக்கும் அவனே அயலாளுக "}া ও ঠা கினேப்பானைல் அவ்வரசனிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். -
வினைக்கண் வினையுடையான் கேண்மைவேருக
நினைப்பான நீங்கும் திரு. (519)
பரத்தையர் தொடர்பு, கட்குடி, சூதாடுதல் ஆகிய மூன்றையும் உடையவர்களிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். . .
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (519)
திருமகளுடைய தமக்கையை முகடியென்றும், தவ்வையென்றும் கூறுவர். வறுமையும் துன்பமும் அவள் இருக்கும் இடத்தில் இருக்குமாம். திருமகளேயும், தவ்வையையும் ஒருங்கே கூறும் குறட்பாக்கள் இரண்டு உண்டு. பொருமைக்காரனிடமிருந்து திருமகள் நீங்க, அங்கே அவளுடைய தமக்கை வந்து குடி. புகுவாளாம்.
அவ்வித் தழுக்கா றுடையானச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (167)
அழுக்காறுடையவனேத் தன் தமக்கைக்குக் காட்டி, 'நீ இவனிடமே இரு' என்று சொல்லிவிட்டுத் திருமகள் நீங்குவாள் என்று நயமாகச் சொல்லுகிரு.ர்.
சோம்பல் உள்ளவனிடம் முகடி ഉ.ജി)i-്. சோம்பல் இல்லாமல் முயற்சி செய்பவனிடம் திருமகள் தங்குவாளாம்.
மடிஉளாள் மாமுகடி என்ப; மடிஇலான் தாள்உளாள் தாமரையி னுள். - (617)
‘கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவார் அறிந்தோர்’ என்பது பரிமேலழகர் உரிை. .
சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936)
என்று தனியே மூதேவியைக் குறிக்கும் குறள் ஒன்று உண்டு. அங்கே சூதை முகடியாக உருவகித்தார்.
மேலே சொன்ன குறட்பாக்களால் திருமகள் செங்கிற முடையவளென்பதும், தாமரை மலரில் உறைபவ ளென்பதும், செல்வத்துக்குத் தலைவி என்பதும் பெறப் பட்டன. தவ்வையாகிய மூதேவி கரிய நிறமுடையவ ளென்பதையும், திருமகளுக்கு மூத்தவளென்பதையும் உணர்கிருேம். செய்யவள், செய்யாள், தாமரையினள், திரு என்ற பெயர்கள் திருமகளுக்கு வழங்கும் என்பதையும் அறிந்துகொள்கிருேம்.
உலகத்தைப் படைப்பவனேப் பிரமன் என்று புராணங்கள் கூறும். படைப்பு, காப்பு, அழிப்பு என்ற மூன்று தொழில்களில் முதலாவது படைப்பு. பிரமனே எல்லாருடைய தலையிலும் எழுதி விதிக்கின்ருன் என்று கூறுவார்கள்; அதனுல் விதி என்ற பெயரும் அவனுக்கு வழங்கும். இந்த இரண்டையும் இணைத்து ஒரு குறளில் பிரமனே கினேக்கிருர் திருவள்ளுவர்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (1063)
‘உலகைப் படைத்தவனகிய பிரமன், ஒருவன் இரந்து அதனுல் உயிர் வாழ்வதை விரும்பி விதித்தானுல்ை, அந்தப் பிரமனும் எங்கும் திரிந்து கெட்டுப் போவானுக!' என்று பிரமனேச் சபிக்கிருர் வள்ளுவர். இங்கே விதித்தலேயும் உலகை இயற்று தலையும் அவனுடைய செயல்களாகக் குறிப்பித்தலேக் காண்க. . .
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377) என்ற குறளில் வரும் வகுத்தான் என்பது பால்வரை தெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளாமல், பிரமனேச் சுட்டியதாகக் கொள்வதும் பொருந்தும். -
பிறவிக்குக் காரணமாக இருப்பவன் பிரமன் என்றுள்ள மரபைப் போலவே, இறப்புக்கு ஒருவன் காரணமாக இருக்கிருன் என்பதும் ஒரு மரபு. அவனேக் கூற்று என்றும் கூற்றம் என்றும் திருவள்ளுவர் சொல்கிரு.ர். உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துவதனுல் கூற்று என்ற பெயர் வந்தது. - -
தவம் புரிபவர்கள் கூற்றுவனையும் வெல்லும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பதைப் பல பெரியார்கள் கூறியிருக் கிருர்கள். இந்தக் கருத்தை,
கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு (269) என்ற குறளில் கூறுகிருர். இதற்கு, தவத்தான் வரும் ஆற்றலேத் தலைப்பட்டார்க்குக் கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்’ என்று பரிமேலழகர் உரை கூறினர். மணக்குடவர், குதித்தல்-தப்புதல். இது மார்க்கண்டேயன் தப்பிற்ை போல என்றது என்று எழுதினர்.
கொல்லாமையை விரதமாகக் கொண்டவனுக்கு வாழ்நாள் இடையே கூற்றுவனது துன்பம் வராது என்று ஒரு குறளில் குறிப்பித்தார்.
கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று. - (326)
முழு ஆயுளும் வாழ்வார் என்பது இதன் கருத்து. பரிமேலழகர் இந்தக் கருத்தைப் பின்வருமாறு விளக்குவார்: மிகப் பெரிய அறம் செய்தாரும் மிகப் பெரிய பாவம் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அநுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்; படாளுகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார், வாழ்நாள் மேற் கூற்றுச் செல்லாது என்ருர். செல்லாதாகவே காலம் நீட்டிக்கும்; நீட்டித் தால் ஞானம் பிறந்து உயிர் வீடுபெறும் என்பது கருத்து.'
கூற்றம் இறப்பைத் தரும் என்பதை, கூற்றத்தைக் கையால் விளித்தற்ருல் ஆற்றுவார்க் காற்ருதார் இன்ன செயல் (894) என்பதிலும் குறிப்பித்தார்.
கூற்றம் மாற்ற முடியாத பெருவலிமையுடையது என்பதை, மாற்ருருங் கூற்றம்’ என்று தொல்காப்பியர் குறிப்பதனுல் உணரலாம். திருவள்ளுவர்,
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் - ஆற்ற லதுவே படை (765) என்ற குறளில் குறிப்பாக அதைப் புலப்படுத்தினர்.
உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) பண்டறியேன் கூற்றென் r
பதன; இனியறிந்தேன் (1083) என்பவற்றில் உருவக வகையிலும், -
கூற்றமோ கண்ணுே பிணையோ (1085)
என்பதில் உவமையாகவும் கூற்றத்தைச் சொல்கிருர்.
இதுவரையில் கூறியவற்ருல் முழுமுதற் கடவுளே அவருக்குரிய பண்புகளால் கடவுள் வாழ்த்தில் எடுத்துரைத்து, பிற இடங்களில் தெய்வம் என்றும் அவரைக் கூறிய திருவள்ளுவர் திருமால், திருமகள், முகடி, பிரமன், கூற்றுவன் ஆகிய தெய்வ வகை களேப் பற்றியும் கூறியிருக்கிருர் என்பதை அறிந்தோம். அவர் கூறும் மற்றத் தேவர்களைப் பற்றி அடுத்தபடி பார்ப்போம்,
No comments:
Post a Comment