Wednesday, May 20, 2020

வானோர் -திருவள்ளுவர்

இம்மை, மறுமை, வீடு என்று மூன்று கிலே களேச் சொல்வது ஒரு மரபு. இம்மை என்பது இந்த உலக வாழ்வு; மறுமை என்பது இந்த உலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு. அந்த வாழ்வு சொர்க்க இன்ப வாழ்வாகவும் இருக்கலாம்; நகரத் துன்ப வாழ்வாகவும் இருக்கலாம். அதன்பின் மீண்டும் இங்கே வந்து உயிர் பிறக்கும்; அல்லது வீட்டை அடையும். வீடு என்பது மீட்டும் பிறப்பு இறப்புக்களில் அகப் படாமல் என்றும் மாருமல் உள்ள இன்ப வாழ்வு. இதையே மோட்சமென்றும் முக்தியென்றும் சொல்வார்கள். இவ்வுலகில் நல்வினை செய்தவர்கள் தேவ லோகத்தில் சொர்க்க இன்பம் பெற்று நல்வினைப் பயன் முடிந்தபின் வீடு பெறுவார்கள். சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். - -                                     (346) என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

இந்த உலகத்துக்கும் வீட்டுலகத்துக்கும் இடையே இன்ப வாழ்வை உடையதாக இருப்பது அமரருலகு.

அங்கே வாழ்கிறவர்கள் தேவர்கள். அமரருலகைப் பற்றியும் பல செய்திகளைத் திருவள்ளுவர் சொல்கிருர், புண்ணியம் புரிந்தவர்கள் அந்தப் புண்ணியப் பயனே நுகரத் துறக்கம் செல்வார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’

என்பது கம்பர் வாக்கு. புண்ணியம் என்பது கல்வினே. கல்வினை பல வகைப்படும். திருவள்ளுவர், இன்னது செய் தார் அல்லது இன்னபடி வாழ்ந்தார் துறக்கம் அடைவார் என்று பல குறள்களில் சொல்கிரு.ர்.

கற்புடைய பெண்டிரும், விருந்து ஒம்புவாரும், அடக்க முடையவரும், பிறர் பொருளேத் திருடாதவரும் தேவருல கத்தை அடைவார்கள் என்கிரு.ர்.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. . (58)
(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.)

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)
(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
(களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.1

மனிதர்களேவிடத் தேவர்கள் உயர்ந்தவர்கள். ஆதலின் யாரையேனும் சிறப்பித்துச் சொல்லும் போது அவர்களுக்கு உவமையாகத் தேவர்களேச் சொல்வார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)                                   என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413)                          செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்ருது புத்தேள் உலகு (234)
என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

வேறு ஒரு குறளில் புகழ் இம்மையிலும் புத்தேளுலகு மறுமையிலும் பெறுவதற்குரியவை என்பதை எதிர் மறை வாயிலாகக் குறிப்பிக்கிருர். மானம் இழத்து தன்னே இகழ்வார் பின்னே சென்று வழிபட்டு கிற்றல் மிகவும் இழிவானது. மனிதன் புகழுக்காக ஒன்று செய்யவேண்டும்; இல்லேயானல் அமரருலக வாழ்வுக்காகவாவது ஒன்று செய்யவேண்டும். மானம் இழந்து கிற்றலால் இந்த இரண்டுமே இல்லையாகி விடும். அப்படி இருக்க, அத்தகைய செயலைச் செய்வது ஏன்?-இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிருர் திரு வள்ளுவர். - -

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. - (966)
உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத்துக் குறிப்பாக அமைந்திருக்கிறது.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற - (213)
என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு
நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)
(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) -

உவமை சொல்லும்பொழுது உயர்ந்த பொருளையே எடுத்துக் கூறவேண்டும். தாமரை போன்ற முகம் என்னும்போது முகத்தைக் காட்டிலும் சிறந்தது தாமரை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே அந்த உவமை எழுகிறது.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே’ என்று உவமையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆதலின் இங்கே புலவியின்பின் வரும் இன்பத்தைச் சொல்ல வந்த தலைவி, அது தேவருல கத்திற் பெறும் இன்பத்தினும் சிறந்ததென்று சொல் கிருள். தேவருலக இன்பமே எல்லா வகை இன்பத் துக்கும் அளவு கோலாக சிற்றலே அவள் கூற்றுக் காட்டு கிறது.

பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் ஒன்றில், எவ்வளவு பெரியவகை இருந்தாலும் பெண் வழிச் செல்கிறவனுக்குப் பெருமை இல்லே’ என்பதைச் சொல்கிறது.

இமையாரின் வாழினும் பாடிலரே. இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். (906)
[தம் மனைவியினுடைய மூங்கிலேப் போன்ற தோளுக்கு அஞ்சுகிறவர்கள் தேவர்களேப் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவ ராவார்கள்.)

இங்கே மிக்க பெருமையோடு வாழ்பவர் என்பதை? குறிக்க, இமையாரின் வாழினும்’ என்கிருர். ஆதலின் தேவராக வாழ்வது பெருமைப்பட வாழ்வதற்குத் தலேயளவு என்பது புலகிைறது.

எல்லா வகையாலும் சிறந்த வாழ்வை உடைய தேவர்கள் சுதந்தரம் உடையவர்கள்; தாம் விரும்பிய யதை விரும்பியவாறே செய்யும் உரிமையும் ஆற்றலும் பெற்றவர்கள். இதைக் கயமை என்னும் அதிகாரத் தில் வரும் ஒரு குறள் புலப்படுத்துகிறது. இழிகுணம் உடையவர்களாகிய கயவர்களைப்பற்றிக் கிண்டலாகப் பேசும் குறள் அது.

கயவர் தேவர்களேப் போன்றவர்கள். ஏன் தெரியுமாக் தேவர்கள் தம் மனத்துக்கு விருப்பமானதைச் செதுவார்கள். கயவரும் அப்படித்தான் செய்கிறர்கள்’ என்கிருர், -

தேவர் அனயர் கயவர்; அவரும்தாம்
மேவன செய்தொழுக லான். - (1370)
தேவர்கள் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ் கிறவர்கள் என்ற உண்மையை உளம் கொண்டு பாடியது இது.

இத்தகைய தேவர்களே உலகத்தினர் வழிபடுகிரு
ர்கள். கோயில் கட்டிப் பூசை செய்கிருர்கள். நாள் தோறும் செய்வதற்குப் பூசை என்றும், சில சிறப்பான காலங்களில் செய்வதற்கு விழா என்றும் பெயர். இவற்றை முறையே கித்தியம் என்றும் நைமித்திகம் என்றும் வடமொழியில் சொல்வார்கள். விழா வெடுத்தும் பூசனை ஆற்றியும் தேவர்களே வழிபடுவது அவசியம் என்பது திருவள்ளுவர் கொள்கை. மழை வளம் உலக வாழ்வுக்கு இன்றியமையாதது என்று சொல்ல வந்த அவர், 'மழை இல்லாவிட்டால் தேவர்களுக்கும் விழாவும் பூசையும் நடவா என்கிரு.ர்.

சிறப்பொடு பூசனை செல்லாது, வானம்
வறக்குமேல் வாளுேர்க்கும் ஈண்டு. (8)
தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழாவொடு கூடிய பூசை நடவாது, மழை பெய்யாதாயின்’ என்பது பரிமேலழகர் உரை. மழை பெய்யாக்கால் வரும் குற்றம் கூறுவார் முற்பட நான்கு வகைப்பட்ட அறங்களில் பூசை கெடும் என்ருர்’ என்று மணக்குடவர் எழுதினர்.

 'மண்ணின்மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை யாற்ற மிக்கபெரும் பசியுலகில் விரவக் கண்டு’

என்று சேக்கிழார் இந்தக் கருத்தை எடுத்து ஆள் கிறார்.

எரியோம்பி வேள்வி செய்து அவிவழங்கித் தேவர்களே வழிபடுவது ஒரு முறை. அவ்வாறு வேள்வியிற் கொடுக்கும் அவியையே உணவாகக்

கொள்பவர்கள் அவர்கள். செவிச் செல்வமாகிய கேள்வியை உடையவர்களின் சிறப்பைச் சொல்ல வந்த திருவள்ளுவர், அவர்கள், 'அவியுணவின்

ஆன்ருரோடு ஒப்பார் நிலத்து (413) என்ருர், அவி யாகிய உணவைப் பெறும் பெரியோர்’ என்று தேவர் களேச் சொல்கிருர். செவிச் செல்வம் உடையாரின் சிறப்பைக் குறிக்கத் தேவர்களே உவமையாக்குகிறார். ஆதலின் தேவர்கள் சிறப்புடையவர்கள் என்ற எண்ணத்தோடு சொல்கிருர். அவ்வாறு சொல்லு கையில் அத்தேவருக்குரிய அடைகளும் அவர்களின் சிறப்புக்குக் காரணமாகவே இருக்க வேண்டும். தேவர்கள் அவியுணவு கொள்பவர்கள் என்பது அவர் களேச் சிறப்புத் தோன்றக் கூறியதேயன்றி வேறு ஆகாது. ஆகவே, அவியுணவு கொடுத்தலும் சிறப்பு என்னும் உண்மையும் அதனோடு இணேந்து புலை கிறது.

தேவர்களே அமரர், ஆன்ருேர், இமையார், தேவர், புத்தேளிர், வானேர், விசும்புளார் என்னும் சொற்களால் கூறுவர் திருவள்ளுவர்.

இதுவரையில் கூறியவற்ருல் தேவருலகம் இன்ப வாழ்வை உடையதென்றும், நல்வினே செய்வார் அவ்வுலக வாழ்வு பெறுவாரென்றும், அவ்வாழ்வு மிகச் சிறந்ததென்றும், பெருமைக்கும் இன்பத்துக்கும் 2- 6յ16Ծ3ԼԸ)tԱ T 5 எடுத்தாளும் உயர்வுடையதென்றும், அதற்கும் மேற்பட்டது வீடென்றும் அறிந்துகொள் ளலாம். தேவர்கள் நல்லவர்களேத் தம் உலகத்துக்கு வரவேற்பவர்கள் என்பதும், சுதந்தர வாழ்வுடையவர் என்பதும், இவ்வுலகத்தார் எடுக்கும் விழாவும் செய்யும் பூசையும் உடையவர் என்பதும், வேள்வியில் தரும் அவியுணவைப் பெறுபவர் என்பதும் தெரியவரு கின்றன.

கடவுளேயும் தெய்வங்களேயும் தேவர்களையும் பற்றித் திருவள்ளுவர் கூறிய செய்திகளைப் பார்த்தோம். அணங்கு, தென்புலத்தார் என்று வேறு சிலரை அங்கங்கே அவர்

குறிக்கிரு.ர். -

. மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)

என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிருர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.
தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்ருங்
கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)

'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.

No comments:

Post a Comment