Wednesday, May 20, 2020

பொய் தீர் நெறி

உலகம் பொய்; இதை நம்பக் கூடாது.”

'கானல்நீர் பொய்; அதை நம்பி ஏமாந்து போகக் கூடாது.” -

'மலடி மகன் என்பது பொய்; மலடி என்ற பெயரே அவளுக்குக் குழந்தை இல்லே என்பதைக் காட்ட G#]&y&yu ifr?**

இப்படிப் பேசுகிற பேச்சில் மூன்று பொய்கள் வருகின்றன. மூன்றும் பொய் என்று சொன்னுலும் வெவ்வேறு வகையானவை. உலகம் நமக்கு மெய் யாகவே தோன்றுகிறது; அதை எப்படிப் பொய் யென்று சொல்லுவது? ஆனாலும் அதை மாயம் என்று சொல்வோர் இருக்கிருர்கள். அது கிலேயா மையை உடையது என்ற கருத்தில்தான் பொய் என்று சொல்கிருர்கள். மன்னப் பொருளேப் பொய் என்று சொல்வது மரபு. மன்னுதல் என்பதற்கு இருத்தல், கிலேயாக இருத்தல் என்ற இரு பொரு ளும் உண்டு. கிலேயாமையையுடைய பொருளே மித்யை என்று வடமொழியாளர் கூறுவர். அது ஒரு வகைப் பொய். உடல் பொய் என்பதும் இத்த கையதே. -

கானல்நீர் என்பது மற்ருெரு வகைப் பொய். கானல் என்று தெரியாதபோது அது ரோகத் தோற்றுகிறது; அதை நீரென்றே நம்புகிருேம். அது காணல் என்று தெரிந்தவுடன் அது மறைந்து போவதில்லே. நீராகத் தோன்றும் தோற்றம் அப்படியே இருக்கிறது; ஆனால் அதை நீரென்று நாம் நம்புவதில்லை. நாடகத்தில் நடிப்ப வன் தான் ஏற்ற பாத்திரத்தைப் போலவே கடிக்கும் போது, நாம் அந்தக் கோலத்தில் ஈடுபடுகிருேம்; ஆல்ை அவன் அந்தப் பாத்திரமே யல்லன் என்ற உணர்வோடு ஈடுபடுகிருேம். கானலென்று தெரிந்த பிறகும் அதன்கண் நீரைப்போன்ற தோற்றத்தைக் காணுகிருேம்; அந்த கிலே நாடகத்தின் காட்சியைப் போன்றது.

மூன்ருவது வகையான பொய், உண்மையிலே இல்லா தது. இவ்வகைப் பொய்க்கு மலடி மகன், ஆகாயத்தாமரை, குதிரைக் கொம்பு என்பனவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். -

- நெடுங்காலம் கிலேயாததை கிலேக்குமென்று நம்பி வாழ்வதும், ஒன்றை வேருேன்ருக எண்ணி வாழ்வதும், இல்லாததை எண்ணி வாழ்வதுமாகிய மூன்று வாழ்வும் பொய்யைப் போற்றும் வாழ்வென்றே சொல்லி விடலாம்.

இந்த மூன்று வகைப் பொய்யினிடையே வாழ்க் தாலும் மெய்யுணர்வு பெற்றவன் உண்மையை உணர்ந்து மெய்ந்நெறியிலே நடப்பான். கிலேயாத பொருளோடு பழகும்போது அது கிலேயாததென்ற கினைவோடே செயல் செய்வான். இளமை கிலேயாது என்பதை உணர்ந்தால், அது இருப்பதற்குள் நல்ல செயல்களேச் செய்வான். உடம்பு கிலேயாது என் பதை உணர்ந்தால், அது உள்ளவரைக்கும் நல்ல பயனே அடைவதற்குரிய வழியில் அதைப் பயன்படுத்துவான். அது என்றும் இருப்பதாக எண்ணிக் கொள்கையை மறந்து ஈடுபட்டுவிட மாட்டான்.

உண்மைப் பொருளே உணர்ந்தவர்களும் உடம்பைப் பேணுவார்கள்; உணராதவர்களும் பேணுவார்கள். ஆலுைம் இருவர் கிலேக்கும் வேறுபாடு உண்டு. இந்த உடம்பு பெறுவதற்கு அரிய கருவியாக நமக்குக் கிடைத் திருக்கிறதென்று உணர்ந்து, உயிருக்கு உறுதி தரும் துறை, களில் கருவி கரணங்களே இயக்கிப் பயன் பெறுவார்கள் பெரியவர்கள்.

'உடம்பினுள் உத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே'                என்று திருமூலர் கூறுவார்.

உடம்பு நிலையாததென்பதை உணர்ந்து அதை ஒறுத்து அழிப்பது அறிவாகாது. உடம்பு ஐம்பொறிகளே உடையது. ஐம்பொறிகளாலும் நாம் உலகப் பொருள்களே நுகர்கிருேம். அவற்றை மேலும் மேலும் நுகரவேண்டும் என்ற அவா என்றும் அடங்குவதே இல்லை. அதன் பயனுக இந்தப் பிறவி போனுலும் மீட்டும் ஐம்பொறிகளையுடைய உடம்பைப் பெற்று மீட்டும் அந்த நுகர்ச்சியில் ஈடுபடு கிருேம். பிறவி அருமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு மாருக, உடம்பைக் கொண்டே உடம்பு வாராமல் இருக்கும் நெறியில் நடப்பதே அறி வுடைமை. முள்ளே முள்ளால் எடுப்பதுபோல, இந்த உடம்பைக் கருவியாகக்கொண்டே இறைவனே வணங் கியும் வாழ்த்தியும் தியானித்தும் பாசத்தினின்றும் நீங்கவேண்டும். ஐம்பொறிகளேயும் உலகியற்பொருள் நுகர்ச்சியில் ஈடுபடுத்தாமல் இறை யுணர்ச்சியோடு வாழவேண்டும். கண்ணேப் பாராமல் மூடிக் கொள்ள வேண்டும் என்பது அன்று. கண்ணுல் பார்ப்பனவற்றில் இறைவனுடைய எண்ணம் உண்டாக வேண்டும். ஐம் பொறிகளையும் செயற்படாமல் ஒழிப்பது என்பது இயலாத காரியம். அவற்றை மடை மாற்றி இறைவனேடு தொடர்புடைய பொருள்களின் நுகர்ச்சியிலே ஈடுபடுத்த வேண்டும்; அல்லது நுகர்ச்சிப் பொருளில் இறை வனுடைய உணர்வு உண்டாகும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த காட்டில் கடவுள் வழிபாட்டில் ஐம்பொறி களுக்கும் வேண்டிய நுகர்ச்சிகளே வைத்திருக்கிருர்கள். கண்ணினால் பார்க்க ஆண்டவனுக்குப் பல வடிவங் களையும் பல கோயில்களேயும் அமைத்து, பல அலங் காரங்களேச் செய்து, விழாவும் உலாவும் நடத்திப் பார்வையைத் தெய்வ உணர்வுடையதாகச் செய்தார்கள். இறைவனுடைய புகழை இசை கலந்து பாடி, அவன் விளையாடலைச் சொற்சுவை பொருட்சுவை பொருந்த அமைத்து, அவற்றைக் கேட்கச் செய்து செவி நுகர்ச்சியில் இறைவனுணர்வைப் புகுத்தினர்கள். மண மலர் மாலேகளே இறைவனுக்கு அணிந்து, துாபம் காட்டி மூக்குக்கு இறையுணர்வோடு மணம் நுகரும் வாய்ப்பை அமைத்திருக்கிருர்கள். இறைவனது அபிடேகச் சந்தனம் பூசி, திருக்கோயில் நந்தவனக் காற்று அடிக்க, திர்த்த ரோடி உடம்பில் இனிமை பரவப் பரிச நுகர்ச்சியிலே இறைவன் எண்ணத்தை ஏற்றினர்கள். இறைவனுக்கு நிவேதனமாக உணவு வகைகளேச் செய்து அவன் நினைவோடு அவற்றைப் பிரசாதமாக உண்ணச் செய் தார்கள். கொழுக்கட்டை என்ருல் விநாயகரையும், பஞ்சாமிர்தம் தினே மா என்ருல் முருகனையும், களி பிட்டு என்ருல் சிவபெருமானையும், புளியோரை என்ருல் திருமாலேயும் கினேக்க வைத்து மனிதனே மிகுதியாகப் பற்றியிருக்கும் நாச்சுவையிலும் தெய்வ உணர்வை ஊட்டினர்கள்.

ஆகவே ஐம்பொறி நுகர்ச்சிகளே அடியோடு ஒழிக்க வேண்டுமென்று சங்கடப்படாமல், அவற்றை இறை யுணர்வுக்கு ஏற்ப மாற்றுவதல்ை மனம் இறைவனிடம் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிந்தனைகின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணேகின் திருப்பாதப் போதுக் காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர
வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலேயே கின்னே த்
தந்தனேசெங் தாமரைக்கா டனேய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே’’

என்ற அழகிய பாட்டில் மணிவாசகப் பெருமான் அந்த நெறியைக் கொண்டு ஆண்டவன் தம்ம்ை ஆண்ட வகையைச் சொல்லுகிரு.ர்.

நிலையாத பொருள்களிடையே வாழும் நாம், கிலேயுள்ள பொருளின் கினேவை மறக்கும் வகையில் பொறிநுகர்ச் சியில் ஈடுபட்டால் துன்பமே மிகும்; அதற்கு மாருக மெய்ப்பொருளின் கினேவை ஊட்டும் கருவிகளாகப் பொறிகளையும் புலன்களேயும் மாற்றிக் கொண்டால் அப் போது உட்ம்பே நல்வாழ்வுக்குக் கருவியாகிவிடும். அந்த நிலையில்தான்,

'மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே:
                                    என்று திருநாவுக்கரசர் பாடினர்.

நிலையாதவற்ருேடு வாழும் வாழ்வில் பொய்ந் நெறி நீங்கி, மெய்ப்பொருளுணர்வுடன் வாழும் மெய்ந் நெறியில் செல்லும் முறை இது.

இனி, வெறும் தோற்றமாக உள்ளவற்றை நாடகம் பார்ப்பவனைப் போலச் சாட்சியாக நின்று பார்த்து வாழ் வது, இரண்டாவது வகைப் பொய்யினின்றும் நீங்கி ஒழுகும் ஒழுக்கமாகும். இல்லாத பொய்யினின்றும் நீங்குவது மிக எளிது. வெறும் கற்பனேயான அவற்றை எண்ணுமல் இருப்பதே அவற்றினின்றும் நீங்கும் வழி.

இவ்வாறு பொய்ந்நெறி நீங்கிப் பொய்யொழிந்து வாழும் ஒழுக்கம் இறைவன் திருவருளால் உண்டாக வேண்டும். திருவாசகத்தில் மணிவாசகர் பல இடங் களில் பொய் தீர்ந்து மெய் தேர்ந்து வாழும் நெறியைச் சொல்கிரு.ர்.

பொய்யா யினவெல்லாம்
போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி
மிளிர்கின்ற மெய்ச்சுடரே' போற்றிப் புகழ்ந்திருந்து
பொய்கெட்டு மெய்யானுர்’ 'பொய்ம்மை தீர்ந்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு’                                   என்பனவற்றைக் காண்க.

இறைவன் அருள்வழி நிற்பவர்கள் பொய் தீர்ந்த நெறியில் நிற்பார்கள். அவர்களுக்கு கிலேயற்ற இந்த வாழ்க்கையின் இறுதியில் கிலேயான வாழ்க்கை, கிடைக்கும். இதைத் திருவள்ளுவர் ஒரு குறளில் சொல்லுகிருர்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறிநின்ருர் நீடுவாழ் வார்.

பொய்தீர் ஒழுக்க நெறி என்ற ஒன்றை அவர் சொல்கிருர், சமயங்களே மார்க்கம் என்று சொல்வது ஒரு மரபு. மார்க்கம் என்பதும் நெறி என்பதும் ஒரே பொருள் உடையன.

நாம் இப்போது செல்லும் நெறி மேலே சொன்ன மூன்று வகைப் பொய்யோடும் கலந்து வாழும் ஒழுக்க மாக இருக்கிறது. இது தீர்ந்து மெய்யொழுக்க நெறியில் நாம் வாழவேண்டும். பொய்ந்நெறி என்பது கிலேயாத வற்றையும், தோற்றத்தையும், இல்லாதவற்றையும் அவாவி இறைவனே மறந்து வாழும் வகை. அதனால் மேலும் மேலும் பிறப்பே வருகிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளான் ஆம் மாணுப் பிறப்பு (351)
என்பது குறள். பொய்யில் ஈடுபடுவதே மருள் அல்லது மயக்கம்; அதனேயே மாயை என்றும் சொல்வார்கள்.

"மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினர்

பொய்யி லங்கெனப் புகுத விட்டுநீ போவ தோசொலாப் பொருத்த மாவதே' என்று, இந்த அவல வாழ்வை கினைந்து இரங்கிக் கூறுகிருர் மணிவாசகர்.

பொறியின் வழியே சென்று அவாவைப் பெருக்கித் தடுமாறுகின்றவனுக்கு அவற்றின் தொடர்பே இல்லா தவனல்தான் உய்தி கிடைக்கும். பொய்ந்நெறி வாழ்க்கை மாறும்படி அப்பெருமான் ஒருவன் தான் அருள் செய்ய முடியும். அதல்ை பொய்தீர் ஒழுக்க நெறியை, பொறிவாயில் ஐந்து அவித்தானுடைய நெறி என்று சிறப்பித்தார். அவனுடைய தொடர்பின்றி அந்த ஒழுக்கம் வராது. பொறிவாயில் ஐந்தவித்தானுல் சொல் லப்பட்ட நெறி' என்று பரிமேலழகர் கூறுவர். அவனே லட்சியமாகக் கொண்ட நெறி என்று பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும். பொறியென்னும் வாயில் வழியே செல்லும் அவாவைப் பெருக்கிப் பிறவிக் கடலில் வீழ்வது பொய்ந் நெறி. அவ்வைந்தையும் மாற்றி மெய்ந்நெறியில் செல்ல, அவற்றேடு தொடர்பு இல்லாதவனுடைய அருள் வேண்டும்; இறைவன் அத்தகையவன் என்பதைக் காட் டவே, பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று அவனேச் சொன்னர் வள்ளுவர்.

நெறி என்பது வழி. வழிக்குப் புறப்படும் இடம் ஒன்று, செல்லும் நெடிய இடப்பரப்பு ஒன்று, சென்று சேரும் இடம் ஒன்று ஆக மூன்று இருக்கவேண்டும். புறப்படும் இடம் தொடக்கம்; புகும் இடம் லட்சியம்; இடையிலுள்ளதே வழி அல்லது நெறி. இந்தக் குறளில் கூறப்படும் நெறியின் லட்சியம் பொறிவாயில் ஐந்து அவித்தான். அவனே லட்சியமாக உடைய நெறியை அவனது நெறி என்று சொன்னர்; திருச் சிக்குப் போகும் சாலையைத் திருச்சிச் சாலை என்று சொல்வது போன்றது. இது. அந்த லட்சியத்தை அடைய நாம் ஒழுகும் வழியைப் பொய்தீர் ஒழுக்க நெறி என்ருர், நாம் புறப்படும் இடம் பொய்யொழுக்கம். அந்தப் பொய்யை விட்டு மெய்யைச் சேரப் போகிருேம். பொய்தீர் ஒழுக்கம் என்று, புறப்படும் இடத்தை நினேந்து சொன்னர்; லட்சியத்தை எண்ணிச் சொன்னுல், மெய் சேர் ஒழுக்கம் என்று சொல்லலாம். பொய்யை விட்டு மெல்ல மெல்ல அகன்று போகப் போக மெய்யை அனுகலாம். பொய்யைச் சார்ந்திருக்கிற வரைக்கும் நாம் எந்த கிலேயிலும் நிலைத்து வாழ முடியாது; பிறந்தும் இறந்தும் மாறி மாறி ஊசலைப் போலத் திரிவதாகவே நம் வாழ்வு இருக்கும். பொய் திரத் திர அந்த நெறியின் பயன் நம்மை அணுகிவரும். பொய் தீர்ந்தால் அவாத் தீரும்; பிறப்புத் திரும்; இறப்புத் திரும்; மாற்ற மின்றித் தோற்றமின்றி இன்மை யின்றி என்றும் ஒரு படித்தாக நீடு வாழும் வாழ்வு கிடைக்கும். இதனே எண்ணியே, நீடு வாழ்வார்’ என்ருர்.

நாம் இப்போது வாழவில்லை. நிலையில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிருேம். பொய்ந் நெறியில் ஒடும் இந்த ஓட்டத்தை மாற்றிப் பொய்தீர் ஒழுக்க நெறியில் செல்லவேண்டும்; அதற்குரிய லட்சியத்தை அறிந்து அதனே நோக்கிச் செல்ல வேண்டும்.

நெறியில் சென்ருர் என்று சொல்லாமல் கின்ருர் என்பது பொருந்துமா என்ற கேள்வி எழலாம். இங்கே கிற்றலாவது, ஒன்றையே தொடர்ந்து செய்வதைக் குறிப்பது. வெவ்வேறு நெறியில் அடிக்கடி நடையை மாற்ருமல், ஒரே நெறியில் இடையீடு இன்றிச் செல்வதையே நெறி நிற்றல் என்று குறித்தார்.

இடைவிடாது பொய்தீர் ஒழுக்க நெறியிலே ஐந்தவித்தானே லட்சியமாகக் கொண்டு உலகில் வாழ் பவர் என்றும் மாருத நீண்ட வாழ்க்கையாகிய முத்தியை எய்துவர் என்பதே இக்குறளின் பொருள்.

No comments:

Post a Comment