கடவுளேத் தெய்வம் என்ற சொல்லால் குறித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும் தெய்வம் என்ற சொல்லே ஆளுகிருர் தொல்காப்பியர்.
திருவள்ளுவர் அச் சொல்லேப் பல இடங்களில் எடுத்து ஆள்கிருர். கடவுள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல இடங்களிற் காணலாம். திருக்குறளிலோ கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பில் மட்டும் அச் சொல் காணப்படுகிறதேயன்றி, நூலுக்குள் ஒரிடத்திலும் வரவில்லை.
தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுளேக் குறிக்கவும் வரும்; தேவர்களேக் குறிக்கவும் வரும். இந்த இரண்டு வகையிலும் திருவள்ளுவர் அச் சொல்லே வழங்குகிருர்.
இன்ப துன்பம் என்னும் இரண்டும் முறையே முன் செய்த கல்வினை தீவினைகளின் பயனக உயிர்களுக்கு வருவன. முன்னே வினையை ஊழ், வினே, விதி, நியதி, பால் என்று பல சொற்களால் சொல்வதுண்டு. திரு வள்ளுவர் ஊழ் என்று தனியே ஒர் அதிகாரமே அமைத் திருக்கிருர். ஊழ் சடமாதலின் அது தானே பயனைத் தராது. ஆதலின் ஊழ்வினேக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை வரையறை செய்வதல்ை கடவுளேப் பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.
'பால்வரை தெய்வம் வினேயே பூதம்
ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57)
என்ற தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேருகவும் வைத்துப் பேசுகிறது. -
திருவள்ளுவர் பால்வரை தெய்வத்தைத் தெய்வம் என்ற பெயரால் இரண்டு இடங்களில் குறிக்கிருர்.
தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)
என்பது ஒன்று. ஆள் வினையுடைமையாகிய முயற்சியின் பெருமையைச் சொல்லும் குறள் இது. ஊழ் மிக வலிது. அதன்படியே யாதும் நிகழும். ஆயினும் முயற்சிக்கும் ஒரளவு பயன் உண்டு என்பதைச் சொல்ல வரும் குறள் இது. பால்வரை தெய்வத்தால் கருதிய பயன் ஆகா விட்டாலும், முயற்சி உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியைத் தரும் என்பது இதன் பொருள். முயன்ற வினே, பால்வகையால் கருதிய பயனேத் தராது ஆயினும், முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும்; பாம் ஆகாது’ என்று பரிமேலழகர் உரை எழுதுகிருர். தெய்வம் என்பதற்குப் பால்வகை யென்று உரை கூறினும் பால்வரை தெய்வத்தையே அது குறித்ததாகக் கொள்ள வேண்டும்.
வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி - தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)
என்னும் குறள் ஊழ் என்னும் அதிகாரத்தில் வரும் இறுதிப் பாட்டு. ஐம்பொறிகளாலும் நுகர்வதற்குரிய பொருள்கள் கோடி சேர்த்து வைத்தவருக்கும் ஊழ் வினேயின்படி நுகர்ச்சி கைகூடுமேயன்றி, அவ்வளவையும் நுகர்தல் அரிதாகும்' என்பது பொருள். இங்கே ஊழ் வினேயை, 'வகுத்தான் வகுத்த வகை’ என்று தெளி வாகச் சொல்கிருர் திருவள்ளுவர். வகுத்தான் ஒருவன் உண்டு; அவன் வகுத்த வகை ஒன்று உண்டு. வகை என்பது பாலாகிய ஊழ். அதை வகுத்தான் பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியம் கூறும் கடவுள்,
ஆகவே, ‘தெய்வத்தான் ஆகா தெனினும்' என்ற குறளில் வரும் தெய்வம் என்பது பால்வரை தெய் வத்தையே குறிப்பதாகக் கொள்வதுதான் பொருத்தமாகும். "இதை நான் எழுதினேன்' என்றும், இது என் கை எழுதியது” என்றும் கருத்தாவுக்கும் கருவிக்கும் உள்ள ஒற்றுமை பற்றிக் கூறுவதுபோல, பால்வரை தெய்வத்தின் செயலேயே பாலின்மேல் ஏற்றிக் கூறுவது உபசார வழக்கு.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (1023)
என்பதிலும் தெய்வம் வருகிறது. குடிசெயல் வகை என்னும் அதிகாரத்தில் உள்ளது இக் குறள். என் குடியின உயரச் செய்வேன் என்று கொண்டு, ஏற்ற வகையில் முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு உதவி செய்ய முன் வரும் என்பது இதன் பொருள். * . .
இங்கும் தெய்வம் என்பது பால்வரை தெய்வம் என்ற கருத்தில் வந்ததே. முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது” என்பது பரிமேலழகர் உரை. கியதியாகிய பாலேத் தெய்வமாகக் குறித்தார் திருவள்ளுவர் என்னும் பொருள்பட உரை எழுதினர் அவர். முன் சொன்ன ஒற்றுமை நயத்தின்படி கியதி என்றது பால்வரை தெய் வத்தை என்றே கொள்ளவேண்டும்.
தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (55)
என்பது பலரும் பலமுறை கூறும் குறள்.
'தன் கொழுநனேயே தெய்வமென்று கருதிப் பிற தெய்வத்தைத் தொழாத கற்புடையவள், பெய்யென்று சொன்ன அளவிலே மழை பெய்யும் என்பது இதன் பொருள். -
தெய்வத்தைத் தொழுவது யாவருக்கும் கடமை யாயினும் கற்புடை மகளிருக்கு அது வேண்டுவதன்று என்ற கருத்தை இது கூறுகிறது. பிற நூல்களும் இந்தக் கருத்தை வற்புறுத்துகின்றன. -
இங்கே, தெய்வம் தொழுவதற்குரியது என்ற கருத்தும் இருக்கிறது. பரிதியார் என்ற உரையாசிரியர் ‘குலதேவதை' என்று பொருள் கூறுவார். தெய்வத் துக்குப் பல உருவங்களும் நாமங்களும் உண்டு. அதனல் பல தெய்வங்கள் என்று சொல்லும் வழக்கு உண்டாயிற்று. வழிவழியே குலத்தினர் வழிபடத் தாமும் வழிபட்டு வரும் கடவுளே, வழிபடு தெய்வம்’ என்று குறிப்பது ஒரு மரபு.
வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு” -
என்று நற்றிணையில் வருகிறது.
'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப’’ என்பது தொல்காப்பியம், பால்வரை தெய்வம் என்று குறிப்பதுபோல, வழிபடு தெய்வம் என்று குறிப்பதும் மரபு. தெய்வம் தொழாஅள்’ என்பதல்ை ஏனேயோர் வழிபடு தெய்வத்தைத் தொழும் வழக்கம் உள்ளவர் என்பதும், கற்புடை மகளிர் கணவரையே வழிபடு தெய்வமாகக் கொள்வர் என்பதும் புலகிைன்றன. .
ஆகவே, தெய்வம் என்பதற்குப் பால்வரை தெய்வம், வழிபடு தெய்வம் என்று பொருள் விரிக்கும் படி திருவள்ளுவர் ஆள்கிருர் என்பதைக் கண்டோம். ஒரு தொடர் கடவுளின் செயலேயும், மற்றென்று அவர் மாட்டுப் பிறர் செய்யும் செயலையும் குறித்து கிற்கின்றன.
திருக்குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தேவர்கள் என்ற பொருளிலும் திருவள்ளுவர் அமைக்கிறர்.
தென்புலத்தார் தெய்வம் . விருந்தொக்கல் தான்
என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை (43)
என்னும் குறளில் தெய்வம் என்ற சொல் வருகிறது. இங்கே தனிப்பெருந் தெய்வமாகிய கடவுளே அது குறிப்பதாகவும் கொள்ளலாம்; தேவர்களேக் குறிப்பு தாகவும் கொள்ளலாம். பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல் வாழ் வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்பது பரிமேலழகர் உரை. அவர் தெய்வம் என்பதற்குத் தேவர் என்று உரை கொண்டார். அதற்கேற்ப விசேட உரையில், தெய்வம் என்பது சாதி யொருமை என்று இலக்கணம் எழுதினர். ஐவர் திறத்தும் ஆற்றும் அறத்தைப் பஞ்ச யக்ஞம் என்பர் வடநூலார்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)
என்னும் குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தெளிவாகத் தேவர் என்ற பொருளிலே திருவள்ளுவர் அமைத்தார். வான் உறையும் என்ற அடையும், தெய்வத்துள் என்பதில் உள்ள பன்மைக் குறிப்பும் அந்தப் பொருளைத் தெளிவாக்குகின்றன. வானுல கத்தில் உறையும் தேவர்களுக்குள் ஒருவனுக வைக்கப் படுவான்’ என்று பொருள் விரிக்கும்போது இது பின்னும் தெளிவாகிறது. -
சிறந்தவனேத் தேவரைப்போல மதிப்பது வழக்காத லின் வாழ்வாங்கு வாழ்பவனைத் தேவருள் ஒருவகை எண்ணும் கிலே அமைந்தது. இவ்வாறே வேறு ஒருவனும் தேவருக்குள் ஒருவகை மதிக்கப்பெறுவான் என்ற கருத்தை வேறு ஒரு குறளில் கூறுகிருர்.
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)
என்பது அக் குறள். குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் வருவது அது. பிறர் மனத்தில் நிகழ்வதை ஐயப்படாமல் உறுதியாக உணரும் ஆற்றல் பெற்றவனே, மனிதனே யானுலும் தேவர்களோடு ஒப்ப மதிக்க வேண்டும் என்பது இதன் பொருள். இங்கும் தெய்வம் என்ற சொல் தேவரைக் குறித்து கின்றது. இவ்வாறு வரும் இடங்களிலெல்லாம், தெய்வம் என்பது தொகுதி ஒருமை என்றே கொள்ள வேண்டும்.
திருவள்ளுவர் ஆறு இடங்களில் தெய்வம் என்ற சொல்லே ஆள்கிருர். ஊழ்வினேயின்படி இன்ப துன்பங்களே வரையறுக்கும் பால்வரை தெய்வம் என்று சில இடங் களிலும், வழிபடு தெய்வம் என்று ஓரிடத்திலும், தேவர் என்று சில இடங்களிலும் பொருள்கொள்ளும்படி அச் சொல் அமைந்திருக்கிறது என்பதை இதுகாறும் சொன்ன வற்ருல் உணர்கிருேம்.
No comments:
Post a Comment