Wednesday, May 20, 2020

கடவுள் பொருள் சேர் புகழ்

பொருள் சேர் புகழ்

மனிதனுடைய உடம்பிலுள்ள கருவிகள் இரண்டு வகைப்படும். அறிகருவி, செய்கருவி என்பவை அவை; ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்று கூறுவர். நகாக்கு, சுவையுணர் கருவியாக இருக்கும் போது ஞானேந் திரியமாகிறது; பேசும் கருவியாக இருக்கும்போது கர்மேந் திரிய மாகிறது. விலங்கினங்களுக்கு வாய் உண்ணு வதற்கே பெரும்பாலும் பயன்படுகிறது. மனிதனுக்கோ உண்ணும் நேரம் சிறிது; உரையாடும் நேரம் பெரிதாக இருக்கிறது. -

பேசுவதனால் வாய் சிறப்புப் பெறுகிறது; உண்ணு வதனால் அன்று. நம்மைக் காட்டிலும் பெரிய கவளத்தை விழுங்கும் பெரிய வாயையுடைய யானையை அதன் வாயின் பெருமையைக் கொண்டு யாரும் வாயுள்ள பிராணியாகச் சொல்வதில்லை. மனிதன் ஒருவனே வாயுள்ள பிராணி; மற்றவை யாவும் வாய் இல்லாப் பிராணிகளே. விலங்குகளுக்கெல்லாம் வாய் இருந்தாலும் உரைக்கும் வாய் இல்லே. உரைக்கும் வாயே வாய் என்னும் பெருமைக்கு உரியதாதலின் உண்ணும் வாய் பெற்றும் விலங்குகளே வாயில்லாப் பிராணிகள் என்று சொல்கிருேம். மனிதன் பெற்ற பெருவரம் வாயினுற் பேசும் ஆற்றல். அதை அவன் வளர்த்துக் கொண்டு வந்திருக்கிருன். ஒருவன் ஏதேனும் ஒரு கருவியோ, பொருளோ வைத்திருந்தானுளுல் அதைக் கொண்டு மிகச் சிறந்த பயனே அடைவதுதான் அறிவுக்கு அழகு. மனிதன் பெற்ற கருவிகளுக்குள் சிறந்தது வாக்கு என்ருல்,  அதனேக் கொண்டு மிகச் சிறந்த பயனைப் பெறவேண்டும்; பயனுள்ள பேச்சைப் பேசவேண்டும்.

வாக்கினல் நிகழும் குற்றங்களே கால் வகையாகப் பிரிப்பார்கள். திருவள்ளுவரும் அந்த நால்வகைக் குற்றங்களையும் அகற்ற வேண்டும் என்று நான்கு அதிகாரங்களில் கூறுகிருர். பொய்கறல், புறங்கறுதல், இன்னத கூறல், பயனில கூறல் என்பவை அந்த நான்கு குற்றங்கள். பயனற்ற சொற்களைக் கூறுபவனே மனிதனென்று சொல்லாதே, மனிதப் பதர் என்று சொல் என்று ஒரு குறளில் கூறுகிருர். பயனில வற்றைப் பேசி ஆற்றலையும் காலத்தையும் வீணக்கக் கூடாது என்பதிலிருந்து, பயனுள்ளவற்றையே கூற வேண்டும் என்ற கருத்தைப் பெறலாம். பயனில சொல்லாமை என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறளில் இந்த இரண்டு கருத்தையும் ஒருங்கு வைத்துச் சொல்கிரு.ர்.
KVJ%2BThiruvadi%2B17.png
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற்  பயன்இலாச் சொல். (200)

ஏனேயவர்கள் செய்யும் செயலைக் காட்டிலும் சிறப்பான பயனுடைய செயலேச் செய்வது அறிவுடைய பெரியார் இயல்பு. ஆதலின் மற்றவர்கள் ஒரளவு பயனு டைய சொற்களைச் சொன்னல், அந்தப் பெரியவர்கள் பெரும் பயனே யுடைய சொற்களேயே சொல்வார்கள். பெரும்பயன் இல்லாதவற்றைப் பேச மாட்டார்கள். இதனேயும் வள்ளுவர் கூறுகிருர்:

அரும்பயன் ஆயும் அறிவுடையார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல், (199)

இதன் உரையில் பரிமேலழகர், அறிதற்கரிய பயன்களாவன வீடு பேறும், மேற்கதிச் செலவும் முத லாயின. பெரும்பயன் இல்லாத எனவே, பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன என்று விளக்கம் தந்தார். -

ஆகவே, அரிய வரமாகிய பேசும் ஆற்றலைப் பெற்ற மனிதன் உயர வேண்டுமானல், பெரும்பயனே யுடையவற்றைப் பேச அந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதன் பெறும் வாழ்க்கைப் பயன்கள் நான்கு, அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. அவற்றுள் முடிந்த முடிபான பயன் வீடு பேறு. அந்த லட்சியத்தை கினேவில் இருத்தியே காம் வாழ வேண்டுமென்பது இந்த நாட்டினர் கொள்கை. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வீடு பெறுவதற்குரிய படிகளாக இருப்பவை. இன்பம் என்பது ஒருவன் ஒருத்தியோடு மனம் ஒன்றி இல்லற வாழ்க்கையில் பிணிப்புண்டு இன்புறுவது. அதையும் வீட்டை அடைய ஒரு வழியாகவே கொள்வர். ஆதலின் மனித வாழ்வில் அவன் செய்யும் செயல்கள் யாவும் அவனுடைய இறுதி லட்சியமாகிய வீடு பேற்றுக்கு மாருக அமையாமல், அதற்குத் துணையாகவே அமைய வேண்டும்.

அப்படியானுல் அவனுடைய பேச்சும் அந்த நெறியில் இருக்க வேண்டும் என்று தனியே எடுத்துச் சொல்ல வேண்டுமா? இறைவன் திருவருளேப் பெற்று வீடுபேறு அடைய வேண்டும்; அந்த அருளைப் பெறும் வகையில் நம் வாக்கு அல்லது பேச்சு இயங்க வேண்டும். இரு வினேயும் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற்று வீடு பெறும் வகையில் கம் வாக்குப் பயன் பெற வேண்டும்.

கடவுள் வாழ்த்தில் மன மொழி மெய்களால் இறை வனே வழிபட வேண்டுமென்று வள்ளுவர் சொன்னதைப் பார்த்தோம். மொழி வழிபாட்டை வற்புறுத்துவது,

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)             என்னும் குறள். -

"மயக்கத்தைச் சேரும் இருவகை வினைகளும், இறைவ னது உண்மையான புகழை விரும்பினவர்களிடம் அடையா’ என்பது இதன் பொருள். கல்வினே, தீவினையாகிய இரண்டுமே பிறப்புக்குக் காரணமானவை. தீவினை இரும்பு விலங்கால்ை, நல்வினை பொன்விலங்கு போன்றது. இரண்டும் விலங்குகளே. இரண்டு வினைகளும் அற்ருல்தான் முத்திப் பேறு கிடைக்கும். ஆதலின், 'இருள் சேர் இருவினே' என்ருர். அவை சேராவிடின் ஞானம் உண்டாகும். அதனுல் இறைவன் திருவருள் அநுபவம் கிட்டும். -
KVJ%2BThiruvadi%2B18.png
இந்த கிலேயைப் பெறும் வழிகளில் ஒன்று, இறைவ னுடைய பொருள்சேர் புகழை விரும்பிக் கூறுதல். புரிதல் - விரும்புதல்; இங்கே விரும்பிக் கூறுதல்.

வள்ளுவர் இறைவன் புகழை, பொருள்சேர் புகழ் என்ருர். இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழ்' என்று பரிமேலழர் உரை வகுத்தார். பொருள் என்பது உண்மையைக் குறிக்கும் சொல்லாக இங்கே நின்றது. சொல்லுக்குரிய அர்த்தத்தையும் பொருள் என்று கூறலாம். பேசும் சொல்லுக்குரிய பொருள் எதுவோ, அந்தப் பொருள் நாம் சொல்லும் இடத்தில் நன்ருகப் பொருந்த வேண்டும். அப்போதுதான் அது பொருள் பெற்ற சொல் ஆகும், கண் இல்லாதவனேச் செந்தாமரைக் கண்ணன் என்று சொல்கிருேம். செந்தாமரைக் கண்ணன் என்ற தொடர், பொருள் இல்லாதது அன்று; அதற்குப்பொருள் உண்டு. ஆனல் அந்தப் பொருளேயும் குருடனுடைய இயல்பையும் வைத்துப் பார்த்தால் பொருந்துவதில்லை. அப்போது அது பொருளுடைய தொடரானலும், பொருள் இல்லாத் தொடர் ஆகிவிடுகிறது.

நாம் எவ்வளவோ பேரைப் புகழ்கிருேம். அந்தப் புகழை அவர்களும் ஏற்றுக்கொள்கிருர்கள். அது அவர் களுக்குப் பொருந்துவதாக இருந்தால் அது பொருளுடைய புகழாகும். இல்லையானல் அது பொருள் இல்லாப் புகழ் ஆகிவிடும். ஈகை, வீரம், செயற்கருஞ் செயல் செய்யும் ஆற்றல் முதலியவற்றை உடையவர்களே நாம் புகழ்ந்து பாராட்டுகிருேம். புகழ் பல வகையாளுலும் ஈகையால் விளேயும் புகழே சிறந்தது.

உரைப்பார் உரைப்பவை

எல்லாம் இரப்பார்க் கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - (232) என்பது குறள். ஈவாரைக் கொண்டாடுவது உலக மக்க ளின் இயல்பு. -
KVJ%2BThiruvadi%2B19.png
ஈகையென்னும் இயல்பு யாவரிடத்தும் இருப்பதில்லை. ஈகைக்குரிய பொருள் இருந்தும் ஈயாமல் உள்ளவர் பலர். ஈவதற்குரிய மனம் இருந்தும் பொருளின்மையால் ஈயா தார் பலர். பணமும் மனமும் இருந்தும் ஈய வகை யில்லாமல் திண்டாடுவோர்களும் இருக்கின்றனர். எல்லாப் பொருளேயும் படைத்தவன் இறைவன். அவன் மக்களைக் கருவியாகக் கொண்டு, பெறுவோருக்குப் பொருள் கிடைக்கச் செய்கிருன். இரப்பவர்க் கீய வைத்தார்’ என்பது அப்பர்தேவாரம், - -  ஒரு பொருளே ஒருவர் கொடுத்தால் கொடுத்தவரை நன்றியுடன் புகழ்வது முறை என்ற அறிவு நமக்கு இருக்கிறது. ஆனல் கொடுத்தவரை இயக்கிக் கொடுக்க வைத்தவனே மறந்து விடுகிருேம். நெடுந் தூரத்திலுள்ள ஊரிலிருக்கும் நண்பன் ஒருவன் தன் தோழனுடைய வறிய கிலையை அறிந்து ஐம்பது ரூபாய் தபால் மூலம் அனுப்பு கிருன். அந்த மணியார்டரைத் தபால் சேவகன் கொணர்ந்து கொடுக்கிருன். பணத்தை எண்ணி அவன் கொடுக்கி, வறியவன் பெற்றுக்கொள்கிருன். கண் முன்னே பணத்தைத் தருகிறவன் தபால் சேவகன்தான்; இது பிரத்தியட்சம். அவனுக்கு நன்றி கூறுகிருன் வறியவன். ஆல்ை பணம் பெற்றவன் அறிவுடையவனதலால், பணத்தை நேரிலே கொடுத்தவன் வாயிலாக உதவி புரிந்தவன், அதாவது அதனை அனுப்பியவன், தன் நண்பன் என்பதை உணர்கிருன். அவன் நேரே இருந்து பணத்தைக் கொடுக்காவிட்டாலும், மறைவிலிருந்து அனுப்பியதல்ை தான் பணம் தன்னை அடைந்தது என்ற உண்மையை அவன் ஊகித்து உணர்கிருன். தாமதம் செய்யாமல் பணத்தைக் கொணர்ந்து கொடுத்த தபால்காரனுக்கு நன்றி தெரிவித்தவன், தன்னுடைய உள்ளத்து உணர்ச் சியை யெல்லாம் கொட்டிப் புகழ்ந்து ஒரு நெடுங்கடிதத் தைத் தன் நண்பனுக்கு எழுதுவான் அல்லவா? அப்படி எழுதினுல்தானே அவனே உண்மையாக நன்றியறி வுடையவன் என்று சொல்லலாம்? தபால்காரனிடம் நன்றி கூறின அளவிலே அவனுடைய கடமை தீர்ந்துவிட்ட தாகுமா? ஒருகால் தபால்காரனுக்கு நன்றி தெரிவிக்காமல் போனலும், பணம் அனுப்பிய நண்பனுக்கு நன்றி யறிவு காட்டும் கடிதத்தை எழுதாமல் இருப்பது மனிதத் தன்மைக்கே இழுக்கானது. அவனுக்கு உய்வே இல்லை.

இவ்வாறே, உலகில் நமக்கு உபகாரம் செய்கிறவர் களைக் கருவியாக்கி, அந்த ஈகையை நிகழ்த்துவதற்கு மூலமாய், மறைவில் இருந்து வழங்குபவன் இறைவன். அவன் திருவுள்ளம் இல்லாவிட்டால் நம் கையிலுள்ள பொருளே நமக்குப் பயன்படாது; பிறர் கைப்பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? .

நாம் ஒரு பொருளேப் பெற்றதற்குரிய நன்றியறிவும் இறைவனேச் சேருவதுதான் முறை. மற்றவை, கருவிகளுக்குக் காட்டுகிற நன்றி. இறைவனகிய மூலப்பொருளைப் புகழ்வதுதான் பொருள் உடையது. நன்ருக எழுதின எழுத்தாளனது பேணுவைப் பார்த்து, 'இது ஆகிவந்த பேணு’ என்று சொல்வது வழக்கக் தான். ஆணுல் அப்படிச் சொல்வது, எழுத்தாள னுக்குரிய புகழைக் குறைப்பதில்லை. உண்மையில் எழுத்தாளன் கைப்பட்டதனுல்தான் அந்தப் பேணு வுக்கே மதிப்பு உண்டாயிற்று. அது வெறும் கருவி தான்.

நமக்கு உபகாரம் செய்யும் யாவரும் இறைவனுடைய அருளாணக்கு ஏற்பவே அது செய்கிருர்கள். ஆதலின் அவர்கள் கருவிகளைப் போன்றவர்கள். கருவியைப் புகழ்ந்து கருத்தாவை மறக்கிறவர்கள் சொல்கிற சொல்லுக் குப் பொருள் உண்டா? அந்தச் சொல் பொருத்தமாக இருக்குமா? -

- ஆகவே, எவன் எல்லா உபகாரங்களுக்கும் மூலமாக கின்று அருளுகிருனே, அவனத்தான் புகழ வேண் டும். அந்தப் புகழே மெய்ப்புகழ், பொருள் சேர் புகழ்.

ஈகை மாத்திரம் அன்று; புகழுக்குரிய எந்தச் செயலே யும் செய்வதற்கான வாய்ப்புகளை அருளுகிறவன்  இறைவன். அவனே தனிநாயகனாக கின்று எல்லா வற்றையும் இயக்குகிருன். பெரிய கோயிலே ஒரு பெரு வள்ளல் கட்டுகிரு.ர். அற்புதமான சிற்ப வேலைப் பாடுகளுடன் அங்தத் திருக்கோயில் அமைகிறது. அப்படி அமைத்த சிற்பியை யாவரும் பாராட்டுவார்கள். ஆயினும் அந்தச் சிற்பி கூவி வாங்கி வேலை செய்தவன். அவன் பெறும் புகழைவிட ஆலயத்தைக் கட்டுவித்த வள்ளலுக்கே மிகுதியான புகழ் சாரும். அந்தக் கோயிலே யார் சுட்டிப் பேசினலும், அந்த வள்ளல் கட்டிய கோயில் என்று சொல்வாரே யன்றி, சிற்பி கட்டியது என்று கூறமாட்டார். உண்மையில் சிற்பி ஒருவன் மாத்திரம் தனி நின்று அந்தக் கோயிலைக் கட்ட முடியாது. பல பல துனேவர்களேயும், தொழி லாளர்களேயும் வைத்துக்கொண்டு கட்டியிருப்பான். அந்த ஆலயம் கிறைவேறும்படி செய்த செயலில் ஒவ்வொரு வருக்கும் பங்கு உண்டு. யாருக்கும் தனியே புகழ் இல்லை. ஆனால் வேறு யாருக்கும் பங்கு போடாத புகழ், கட்டுவித்த வள்ளலுக்குக் கிடைக்கிறது. வேலை செய்தவர்களுடைய நிக்னவு எளிதில் மறந்து போகும். வள்ளல் வினேவு என்றும் இருக்கும். இதுவே இயல்பு; இதுவே முறை. -

அவ்வண்ணமே பல பல செயல்களால் புகழ் பெறுகிறவர்களுக்கு அப்புகழைப் பெறும் உரிமை சிறி தளவே உண்டு. அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது உண்மையானுல், எல்லாவற்றையும் செய்விக்கும் இறைவனுக்கே பங்கு போடாப் புகழ் சார வேண் டும். அதுதான் உண்மையான புகழ், பொருள் சேர் புகழி. -

இறைவன் ஒருவனே புகழத் தக்கவன் என்னும் கருத்தை அப்பர் சுவாமிகள், :
KVJ%2BThiruvadi%2B20.png
'பொன்ளுைய் மணியானப்
போக மானுய் பூமிமேல் புகழ்தக்க
பொருளே நின்னை என்னுணுய் என்னணுய்
என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே’’

என்ற திருப்பாட்டில் புலப்படுத்துகிருர்.

இறைவனுடைய புகழைப் பாடுவாருக்கு உண்மை யையே கூறும் தகுதியும், பயனுடையவற்றையே பேசும் நிலையும், இனியவற்றையே உரைக்கும் தன்மையும் அமை கின்றன. அதனால் அவர்கள் இறைவன் திருவருளேப் பெறுகிருர்கள்.

பொய்அஞ்சி வாய்மைகள் பேசிப்

புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சின் அப்புறத் தானும்

ஆரூர் அமர்ந்த அம் மானே’’ என்பதில் திருநாவுக்கரசர் இக்கருத்தை அருளினர். இறைவன் திருவருளால் இருவினையும் அறும்; வீடு பேற்றை எளிதில் அடையலாம். இவற்றை எண்ணியே திருவள்ளுவர்,

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

என்ற அருமைத் திருக்குறளேப் பாடினர்.

பழைய நூலாகிய பரிபாடலில் திருமாலப் புகழும் ஒரு பாட்டில், -

'இருமை வினேயும் இல ஏத்துமவை' என்ற அடி வருகிறது. ஏத்தும் ஆன்மாக்கள் இரு வினேயும் இல்லாதவர்களாகிரு.ர்கள் என்ற கருத்தை உடையது அது. -
KVJ%2BThiruvadi%2B20.png
திருஞான சம்பந்தப் பெருமான் மாகறல் பதிகத்தில்,

சாயவிர லூன்றிய இராவணன்

தன்மைகெட நின்றபெருமான் ஆயபுகழ் ஏத்தும் அடியார்கள்வினை யாயினவும் அகல்வ தெளிதே' என அருளினர். திருக்குறட் கருத்து அதில் செறிந்திருப் பதைக் காணலாம்.

No comments:

Post a Comment