Friday, May 22, 2020

வானுலகம்

சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். - - (346)
என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’ என்பது கம்பர் வாக்கு.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. . (58)
(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.)

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)
(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413) செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்ருது புத்தேள் உலகு (234)
என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. - (966)
உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத்துக் குறிப்பாக அமைந்திருக்கிறது.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற - (213)
என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு
நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)
(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) 


தேவர்களே அமரர், ஆன்ருேர், இமையார், தேவர், புத்தேளிர், வானேர், விசும்புளார் என்னும் சொற்களால் கூறுவர் திருவள்ளுவர்.

மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)
என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிருர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.
தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்ருங்
கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)
'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - குறள் 101

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 18

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 19

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து - குறள் 353

முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் - குறள் 559

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 1192

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். குறள் 1016:
மு. வரதராசன் உரை:நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. குறள் 1012:
மணக்குடவர் உரை:உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018:நாணுடைமை
மு. வரதராசன் உரை:ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. குறள் 1019: நாணுடைமை
மணக்குடவர் உரை:ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.
பரிமேலழகர் உரை:கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.குறள் 1020:நாணுடைமை
மணக்குடவர் உரை:மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.




No comments:

Post a Comment