Sunday, May 31, 2020

திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்துவ திராவிட கூட்டணியும் பரப்ப உதவும் வேசி ஊடகங்களும்

 தினமலர் மே.24 2020வாரமலரில் அந்துமணி என்ற பெயரில் படித்ததில் கேட்டதில் பிடித்தவை என எழுதும் கட்டுரையில் ஏற்படுத்திய 69ல் வெளிவந்த புத்தகத்திற்கு இப்போது விளம்பரம் கொடுக்கிறார். அந்த புத்தகம் சாந்தோம் கத்தோலிக்க சர்ச் பெரும் பணத்தில் தேவநேயப் பாவாணர் கீழான ஒரு பெரும் கிறிஸ்துவர் குழு எழுதியவற்றை சிஎஸ்ஐ சர்ச் கீழான தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் உதவி விரிவுரையாளர் மு.தெய்வநாயகம் பெயரில் வெளிவந்தது. திருக்குறளை கீழமை செய்ய கிறிஸ்துவ-திராவிடக் கூட்டணியின் முதல் வெளிப்படை நூல் அது.
நாம் அந்துமணி ஆசிரியர் படித்ததில் பிடித்தது என்பதை பார்ப்போம்

1. பலியிடல் கூடாது – திருக்குறள்
ஏசு பிறப்பின் போது பறவை கொலைப் பலி தரப்பட்டது,  ஏசு மரணமே விவிலியக் தெய்வ கதாப்பத்திர கர்த்தருக்கு மிருகக் கொலைபலி கொடுக்க  வந்தபோது மரண ரோம் ஆட்சியில் கைது ஆகி மரண தண்டனிஅயில் ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார் என்பது கதை.
கிறிஸ்துவம் பொருத்தவரை ஏசுவின் மரணம் நரபலி எனப்படும், அதாவது இந்த பூமியில் மனிதன் இறக்க காரணம் ஆதாம் செய்த பாவம், ஏசு ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தமையால் ஆதாம் பாவம் போனதாம் எனக் கதை, ஆனால் ஏசு சீடர் உட்பட எல்லோருமே மரணம் அடைவது அந்த ஏசு ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் மரணதண்டனையில் செத்தமை வெற்று பாவி மனிதன் என நிருபிக்கும்.  

2.மதுவை யாவரும் நீக்க வேண்டும் 
யோவான் சுவி கதையில் ஏசு தண்ணிரை சாராயம் ஆக்கிட மேரி மக்களுக்கு பரிமாறினார் எனக் கதை. ஏசுவின் உடம்பு ரத்தம் என சாராயம் ஊற்றி இன்றும் சர்ச்களில் பாதிரியாகளால் தரப்படுகிறது. ஏசு தன்னைப் பற்றி கூறுகையில் மக்கள் தன்னை பெருந்தீனிக்காரன் மற்றும் மொடாசாராயக் குடியன் என்பதாக சுவிசேஷக் கதை

3. மறு பிறவி இல்லை – திருக்குறள்
வள்ளுவர் கடவுள் வாழ்த்தின் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவன் திருவடி பற்றினால் மட்டுமே என்றார். பிறவி பெருங்கடல் என்றால் என்ன

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழித்தல் போலும் பிறப்பு
அவா- ஆசை அது தூண்ட நாம் செய்யும் செயல்களே மீண்டும் பிறக்க வைக்கும் விதை
மனிதன் இந்த வாழ்க்கையில் ஆசைப் படவேண்டும் எனில் மீண்டும் பிறவாமை என்பதே, மற்ற எல்லாம் கிடைக்கும்.
கற்று முயற்சி செய்து இறைவனின் மெய்ப்பொருளைக் காண்பது மீண்டும் பிறக்காது மீண்டு இப்பூமியில் பிறக்காத வழியினை அறியவே.
மீண்டும் பிறப்பு எனும் பேதைமையை நீக்க வீடுபேறு எனும் சிறப்பான நிலை அடைய இறைவன் என்ற செம்பொருளை இறைவன காண்பதற்கே அறிவு
திருவள்ளுவர் மறு பிறவி இல்லை என ஒருவர் சொன்னால் அவரது அறிவைதான் சந்தேகிக்க வேண்டும் 

4. தகாத மோகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று – திருக்குறள்
பைபிள் கதைப்படி ஏசுவை தாவீது ராஜா மகன் எனப்படும், பைபிள் கதையில் தாவீது ராஜ திருமணமான 3 பெண்களை அபகரித்து கணவர்களை கொன்றது உள்ளது, மத்தேயு சுவிசேஷக் கதைப்படி தாவீது ராஜா யூத வீரன் உரியாவின் மனைவி பெத்சாபாள் உறவில் பிறந்த சாலமோன் வரிசையில் தான் ஏசு பிறந்தர், ஏசு எப்படி பெருந்தீனிக்காராகவும் சாராயம் மொடாக் குடியரோ அது போலே பல பெண்கள் அவரோடு சுற்றினர் என உள்ளது, ஆனால் உறவு பற்றி குறிப்பு இல்லை, தாவீது குமாரன் என பிறன் மனைவியை அபகரித்த ஏசுவைப் போற்றி வள்ளுவர் பெயரை சொல்வது கூட கேவலம், பிறன்மனை நோக்கா பேராண்மை என்பது வள்ளுவம்.
தேவநேயப் பாவாணர் முன்னிலையில் கருணாநிதி குடும்ப 



தெய்வநாயகம் பெயரில் ஆன இந்த முயற்சிக்கு பின்பலமாய் இருந்தது 20ம் நுற்றாண்டில் திருக்குறளிற்கு உரை என பல அறிஞர்களும் போட்டி போட்டு எழுதிய முறையற்ற உரைகளே காரணம். 
திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்துவ நூலிற்கு கருணாநிதி அணிந்துரை கொடுத்தமையை விடவும் அவர் உரையால் வள்ளுவத்தை இழிவு செய்தது அதிகம், எனவே அந்த அணிந்துரையால் பயன் இல்லை.  

1969: “திருவள்ளுவர் கிருத்துவரா?” வெளியிடப் படுகிறது. மு.கருணாநிதி “மதிப்புறை” அளித்துப் பராட்டுகிறார்.
டேவிட் சாலமன் (Dr. David Solomon) 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற கையழுத்துப் பிரதியை வீ.ஞானசிகாமணிக்கு கொடுக்கின்றார்11.
1970: “ஐந்தவித்தான் யார்?” வெளியிடப்படுகிறது. கே.அப்பாதுரை, தன்னுடைய முன்னுரை “ஆற்றல் சான்ற ஆராய்ச்சி ஏடு” என்ற தலைப்பில் கொடுக்கிறார்! அணிந்துரை அளித்தது ஆ.சத்தியசாட்சி!
1971: வான் எது?
1971 நீத்தார் யார்?.
1972: சான்றோர் யார்?
ழு பிறப்பு-?
திருக்குறளிற்கும் கிறிஸ்துவத்திற்கும் தொடர்பே இல்லை.
ஏசு சபை பாதிரியாரும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.  திருக்குறளில் கிறித்தவம் என கட்டுரை திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழக திருக்குறள் மாநாட்டில் படித்தார். 
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை.

ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93  திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974, Edited by Dr.N.Subbu Reddiyar

இரண்டாம் உலக தமிழ் மாநாடு நடந்த போது திருக்குறளை அதிகம் ஆய்வு செய்வது பக்தி மடங்கள் என்பதை மாற்ற குறள் பீடம் என தமிழக பல்கலைக் கழகங்கள் இணைந்து அமைத்ததில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் திருக்குறளீன் சமயம் என்பதை ஆராய் இலங்கையில் சைவராய் பிறந்து கிறிஸ்துவராய் மதம் மறியிருந்தவர் நேர்மையான ஆய்விற்கு பெயர் பெற்ற புலவர்.செல்வி.காமாட்சி சீனிவாசன் செய்திட அவர்"திருக்குறளும் விவிலியமும், குறள் கூறும் சமயம் மற்றும் குறள் கூறும் சமுதாயம் என 3 நூல்கள் தந்த பேரறிஞர். பைபிளை ஆய்வு செய்கையில் கிறிஸ்துவம் மனிதக் கற்பனை என அதை விட்டார் என்கிறது நூல் பதிப்பாசிரியர் செய்தி.

குறள் கூறும் சமயம் நூலில் புலவர்காமாட்சி சீனிவாசன்-  மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது."  – குறள் கூறும் சமயம் பக்கம்-216

1974ல் ஏசு சபை பாதிரியாரும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம் ஆய்வுக்கட்டுரை தந்து குறள்பீடம் வள்ளுவர் கிறிஸ்துவர் இல்லை என்ற போதும் சர்ச் திராவிஷத் துணையோடு மு.தெய்வநாயகத்திற்கு முனைவர் பட்டமும் வாங்கப்பட்டது- விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்- ஒப்பாய்வு என குப்பைக்கு முனைவர் பட்டம் 1985ல் வழங்கவும் பட்டது, ஆனால் அதைக் கொடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-அந்த முனைவர் ஆய்வு கையேடு தகுதி அற்றது என சுற்றறிக்கையும் விட்டது
”இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”

தெய்வநாயகம் பெயரில் தேவநேயப் பாவாணர் கீழான குழு செய்த மோசடி முனைவர் பட்டம் வந்த நிலையிலும் இன்னுமொரு நடுநிலை கிறிஸ்துவ அறினர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  துணை முதல்வரும் தமிழ் உயர் ஆய்வுத்துறை தலைவர் பேராசிரியர்.ப.ச.ஏசுதாசன்-எழுதிய  திருக்குறளும் திரு விவிலியமும்(2000CE) நூலில்
திருவிவிலியக் கருத்துக்களைத் தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல.  
திருவள்ளுவர் கிறித்தவரா நூல் தொடர்ந்து தேவநேயப் பாவாணர் குழு தெய்வநாயகம் பெயரில் மேலும் 5 நூல்கள் கருணாநிதி ஆட்சி ஆசியோடு வெளிவந்தன, 20ம் நூற்றாண்டு திராவிஷ உளறல் பொருள் கொண்ட உரைகள் கொண்டு திருக்குறளை கிறித்தவம் என்றிட துணிந்தனர்; தேவநேயப் பாவாணர் முன்னிலையில் கருணாநிதி குடும்ப முரசொலி சேர்ந்து 2 நாள் மாநாடு 1972ல் சென்னை தேனாம்பேட்டையில் 6தலைப்பில் 6புலவர் என வழக்காடுமன்றம் நடந்ததாம், எல்லா குழுவிலு 2 - 3 கிறிஸ்துவர், 1௨ நாத்திக திரவிஷர் என நடந்த முறையே பார்வையாளரில் தமிழர் முகம் சுளிக்க, பாவாணர் மற்றும் நடத்திய சர்ச் எல்லாருமாய் இந்த மாநாடு பற்ற்ய செய்திகளை முழுமையாய் மறைத்தனர். மாநாடு வரவேற்பு குழுவில் இருந்த புலவர் என்.வி.கலைமணி 2005ல் மலேசியா திருக்குறள் மாநாட்டு போட்டி கட்டுரையாகவும், பின் தன் நூலிலும் எழுத திருக்குறள் கிறிஸ்துவமாக்கும் கூட்டணியில் பாவாணர் பங்கு வெளிவந்தது.

1972 மாநாடு திராவிஷ உரையாளரால் கிறிஸ்துவப் பொருள் செய்தல், அவர்களைப் போலவே என்பதால் பெரிய அளவில் கண்டிக்க இயலவில்லை

திராவிஷக் கிறிஸ்துவக் கூட்டணி 
மோசடி முனைவர் கையேட்டிற்கு மதிப்பு தர சென்னை பல்கலைக் கழகத்தில் சாந்தோம் சர்ச் காசில் உருவாக்கப்பட்ட "தமிழ் கிறிஸ்துவத் துறை" தலைவராக முனைவர் கு.மோகனராசுவை நியமிக்க செய்தனர். மோகனராசு திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் எனினும் ஒஉர் முழுமையான் திராவிஷ நச்சுக்களின் அடிமை, அவர் தலைமையில் 2 கருத்தரங்குகள் நடக்க    

ஆனால் நாம் மேலும் பார்த்தால் தெய்வநாயகம் பெயரில் மேலும் 5புத்தகங்கள் அடுத்த 3 வருடத்தில் வருகிறது, தேவநேயர் திருக்குறள் மரபுரை என மிகவும் கீழ்த்தரமான் சொற்களால் தமிழரின் தொல்குடி அந்தணரையும், பரிமேலழகரையும் நாகரீகமற்ற நச்சு சொற்களால் ஆங்காங்கே திட்டும் ஒரு மனிதத்தன்மையற்ற உரை, பல இடங்களில் உரை நன்றாய் இருப்பினும், அடிப்படி நச்சுப் பொய்கள் எனும் கிறிஸ்துவ மதவெறியால் அது எடுபடாமல் போனதும் உண்மை.

ஆனால் நாம் மேலும் பார்த்தால் தெய்வநாயகம் பெயரில் மேலும் 5புத்தகங்கள் அடுத்த 3 வருடத்தில் வருகிறது, தேவநேயர் திருக்குறள் மரபுரை என மிகவும் கீழ்த்தரமான் சொற்களால் தமிழரின் தொல்குடி அந்தணரையும், பரிமேலழகரையும் நாகரீகமற்ற நச்சு சொற்களால் ஆங்காங்கே திட்டும் ஒரு மனிதத்தன்மையற்ற உரை, பல இடங்களில் உரை நன்றாய் இருப்பினும், அடிப்படி நச்சுப் பொய்கள் எனும் கிறிஸ்துவ மதவெறியால் அது எடுபடாமல் போனதும் உண்மை. 1972ல் பாவாணர் மேற்பார்வையில்
சிலபல அறிஞர் கலந்து கொள்ளவில்லை, எல்லாஆஅறு குழுவிலும் 2 கிறிஸ்துவர் 1 நாத்திகர் என அமைத்ததும் சிலபலர் வராத நிலையில் மேலும் தங்கள் நச்சை வழிமொழிவோரை போட பார்க்க வந்த தமிழர் பலர் வருத்தமாய் கூச்சலிட திருவள்ளுவர் காலத்தை செயற்கையாய் பின் தள்ளி =எனவே வள்ளுவர் தோமா கால்த்திற்கு முன்பானவர் எனவே இந்த விவிலியம்-குறள் பொருத்தி பார்த்தல் தேவையற்றது என முடிக்கிறார், வள்ளுவத்தில் கிறிஸ்துவத்திற்கான அடிப்படை கொள்கை ஒன்று கூட இல்லை என கிறிஸ்துவ மதவெறியர் தேவநேயர் சொல்லவில்லை.

 கிறிஸ்துவ ஏசு சபை பாதிரியும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் S.J.ராஜாமாணிக்கம் திருக்குறள் கிறித்தவம்  இல்லை என்றும் மு.தெய்வநாயகம் ஆய்வு முறைகள் மோசடியானவை எனவும் கட்டுரை.

 

பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)

திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்



“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL


திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL

திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்

புலவர் கலைமணி - தன் நூல் திருக்குறள் சொற்பொருள் சுரபி 2006ல் பதிட்டார். 




இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.
திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார்.


வள்ளுவத்தின் வேர் கடவுள் நம்பிக்கை.

கல்வி கற்பதின் பயன் நிறைவான அறிவின்னர் உலகின் தொடக்கமான இறைவன் திருவடி பற்றவே- அந்த இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக்கடலை கடக்க இயலும்.
திராவிட நச்சுக் கயமை உரைகளின் சான்று
மு.கருணாநிதி உரை- வாலறிவன் என்பதை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் குறள் 10- இறைவன் என்பதற்கு -தலையானவனாக இருப்பவன்

நாட்டின் அரசிற்கு வள்ள்வம் கொடுக்கும் அடிப்படையும் - பண்டைய முதல் உரையான மணக்குடவர் உரையும்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.  

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362:அவாவறுத்தல்
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  குறள் 36: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு வரும் பிறவிகளும் துணை ஆகும்.




யூத பைபிள்படி பலி கொடுப்பது எனில் இஸ்ரேலின் தெய்வ காதாபாத்திரம் கர்த்தர் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் யூத ஆலயத்தில் லேவியர் ஜாதி தலைமைப் பாதிரி பாதிரி கூடார வாசலில் கொடுத்தால் மட்டுமே பலி.


 பைபிள் கதையில் எகிப்தின் இஸ்ரவேலர்கள் குழந்தைகளை விட்டு, எகிப்தின் அப்பாவி குழந்தைகளை மட்டும் படுகொலை செய்த இஸ்ரேலின் தெய்வம் யாவே கர்த்தர் கதாபாத்திரத்திற்கு ஆண்டுதோறு பஸ்கா பலி தர ஏசு வந்தபோது மரண ரோம் ஆட்சியில் கைது ஆகி மரண தண்டனிஅயில் ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார் என்பது கதை. ஏசு மரணமே விவிலியக் கதாப்பத்திர கர்த்தருக்கு மிருகக் கொலைபலி கொடுத்தார் என

மத்தேயு 5:19  “ஒருவன் மோசே சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனை ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான்.





Friday, May 22, 2020

வானுலகம்

சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்
குயர்ந்த உலகம் புகும். - - (346)
என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’ என்பது கம்பர் வாக்கு.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. . (58)
(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு. (86)
[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.)

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். (121)
(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. (290)
களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413) செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்ருது புத்தேள் உலகு (234)
என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. - (966)
உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத்துக் குறிப்பாக அமைந்திருக்கிறது.

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவி னல்ல பிற - (213)
என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு
நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)
(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) 


தேவர்களே அமரர், ஆன்ருேர், இமையார், தேவர், புத்தேளிர், வானேர், விசும்புளார் என்னும் சொற்களால் கூறுவர் திருவள்ளுவர்.

மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)
என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிருர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.
தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்ருங்
கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)
'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது - குறள் 101

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 18

தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் - குறள் 19

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து - குறள் 353

முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் - குறள் 559

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 1192

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். குறள் 1016:
மு. வரதராசன் உரை:நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. குறள் 1012:
மணக்குடவர் உரை:உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல்லார்க்கும் வேண்டும்; தலைமக்களுக்கு விசேடமாக வேண்டுவது நாணுடைமை. இது நாணம் வேண்டுமென்றது.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. குறள் 1018:நாணுடைமை
மு. வரதராசன் உரை:ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. குறள் 1019: நாணுடைமை
மணக்குடவர் உரை:ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.
பரிமேலழகர் உரை:கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவன் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும். (நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.).

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.குறள் 1020:நாணுடைமை
மணக்குடவர் உரை:மனத்தின்கண் நாணமில்லாதார் இயங்குதல், மரப்பாவை கயிற்றினாலே இயங்கி உயிருள்ளதுபோல மயக்குமதனை ஒக்கும். இது நாணமில்லாதார் மக்களல்லரென்றது.




Wednesday, May 20, 2020

கற்பக மலர்

 
அமுதம், கற்பகம், காமதேனு, சிந்தாமணி ஆகிய வற்றை நாம் நேரில் அறியர்விட்டாலும் நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி அவை அடிபடு கின்றன. மிகவும் சுவையுள்ளதாக இருந்தால், 'அமுதம் போல இருக்கிறது” என்று சொல்லுகிருேம். அமுதத்தைப் பற்றின கதை நமக்குத் தெரியுமேயன்றி அதை யாரும் கண்டதும் இல்லை; சுவைத்துப் ப்ார்த்ததும் இல்லை. பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு என்ற ஒன்றைப் பூகோள நூலில் அடிக்கடி படிக்கிருேம். நாடுகளின் வெப்பதட்ப நிலைகளையும் அவற்றின் அமைப்புக்களையும் தெரிந்து கொள்வதற்கு அந்த நடுக்கோட்டை வைத்துக் கணக்குப் போடுகிருேம். ஒருவன் அதை நேரிலே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று, கணக்கையெல்லாம் வைத்துக்கொண்டு புறப்படுகிருன். அவன் அதைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது. தொலேயாடி, நுண்ணுடி என்ற விஞ்ஞான விசித்திரப் படைப்புக்களாகிய கண்ணுடி  கனயெல்லாம் எடுத்துச் சென்று பார்த்தாலும் அந்தக் கோட்டைக் காண முடியாது. காரணம் என்ன? அப்படி ஒரு கோடே இல்லை.

இல்லாத ஒன்றையா சின்ன வகுப்பிலிருந்து, ஈக்வேடர், பூமத்திய ரேகை, நில நடுக்கோடு என்று வெவ்வேறு பெயரால் சொல்லித் தருகிருர்கள்? அது பூமியில் இல்லே. விஞ்ஞானிகளுடைய கற்பனையில் இருக்கிறது. அதை ஒருவகை அளவாக வைத்திருக்கிரு.ர்கள். அந்தக் கோடு கற்பனையாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு போடும் கணக்கும் அதனுல் தெரிந்து கொள்ளும் உண்மை களும் கற்பனைகள் அல்ல.

ஒரு வகையில் அமுதம், கற்பகம், காமதேனு என்பன யாவும் கற்பனை என்னும் பாற்கடலில் தோன்றின என்றே சொல்லலாம். சுவையான பொருளுக்கு அமுதம் என்பது தலையளவு; அது ஒரு கற்பனே. கேட்டதையெல்லாம். தருவதற்கு ஒரு கற்பனைப் பொருள் உண்டு; அது கற்பகம். அது, தான் இருந்த இடத்தில் வந்து கேட்பவருக்கு வேண்டியதைக் கொடுப்பது. காமதேனுவோ கேட்பவர் உள்ள இடத்துக்குப் போய்க் கொடுப்பது. இந்த மூன்று கற்பனைப் பொருளையும் வைத்துப் படர்ந்த் புராணக் கதைகள் பல. - -

மனிதனுக்கு இந்த உலகத்தில் விரும்பினவை. எல்லாம் கிடைப்பதில்லை. ஆசையை மட்டுப்படுத்திக் கொண்டு தனக்குக் கிடைக்கக்கூடியதாக இருப்பதையே விரும்பிலுைம், பல சமயங்களில் கிடைப்பதில்லை. ஏழை பணம் வேண்டுமென்று விரும்புகிருன்; அவனுடைய ஆசை பத்து ரூபாய்; அது ஒரு பெரிது அன்று; ஆலுைம் அவனுக்கு அது கிடைப்பதில்ல்ே, வியாபாரி லாபத்துக்கு, ஆசைப்படுகிருன்; அது நியாயமான ஆசை, கிடைக்கக் கூடியதையே அவன் அவாவுகிருன். ஆலுைம் பல சமயங்களில் அவனுக்கு அது கிடைக்கிறதில்லே. ஆசை கிறைவேருமல் ஏமாந்து போவதே உலகில் பெரும் பாலோரின் இயல்பாக இருக்கிறது. -

இத்தகைய குறைபாடுடைய மனிதன் கேட்டன. வெல்லாம் வாழ்க்கையில் கிடைக்காவிட்டாலும், எல்லா வற்றையும் தரும் பொருள் ஒன்று எங்கோ இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டான். கற்பனை செய்யும் ஆற்றல் அவனுக்கு இருப்பதால் அவன் அதை வளரவிட்டு அமுதத்தையும் கற்பகத்தையும் காமதேனுவையும் உரு வாக்கினன்.

கற்பகம் எப்படி இருக்கும்? புராணங்களில் அதன் வருணனை வருகிறது. அது பொன்னிறமாக இருக்குமாம். அதன் தளிர் பொன்னிறம்; அதன் மலர் பொன்னிறம். கேட்டதெல்லாம் தருமாம்.இந்திரனுக்குச் சொந்தமானதாம். போகங்களிலெல்லாம் உயர்ந்தது இந்திர போகம். வளவாழ்வின் தலை யெல்லே அது. அந்த வாழ்வுக்குத் துணையாக இருப்பது கற்பகம். கற்பகம் ஒரு மரம் என்றும், பல மரங்களுக்குக் கற்பகம் என்ற பெயர் உண்டென்றும் வேறு வேருகச் சொல்வதுண்டு. அதைப் பற்றிய ஆராய்ச் சியில் இப்போது இறங்க வேண்டாம். கற்பகம் என்பது மரம் என்று தெரிந்துகொண்டால் போதும்.

மரம் என்ருல் அதில் இலை, பூ, காய், கனி ஆகிய உறுப்புக்கள் இருக்க வேண்டும் அல்லவா? கவிஞர்கள் தங்கள் நூல்களில் பல இடங்களில் கற்பகத்தைக் கொண்டுவந்து நட்டு அதன் பூங்கொம்பையும் மலரையும் கனியையும் காட்டுகிருர்கள்.

கற்பக மலர் "கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று சேக்கிழார் பாடுகிருர். 'கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை’ என்பது திருவிசைப்பா. கற்பகத்தைக் கண்ணுரக் கண்டேன் யானே’ என்று அப்பர் திருவாய்மலர்ந் தருளுகிருர். எல்லாம் உவமையும் உருவகமுமாக உள்ளவை.

கற்பக மலர் ஒன்றை ஒரு புலவர் காட்டுகிருர். மற்ற மலர்களுக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. உலக மரங்களின் மலர்கள் வாடும். கற்பக மரத்து மலர் வாடா தாம். எவ்வளவு நாளானுலும் புலராதாம். கோடையிலும் குளிரிலும் நிற்கும். நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள், யுகம் என்று காலக் கணக்கு எவ்வளவு ஆலுைம் நிற்கும்; மலர்ச்சி மாருது மணத்துடன் நிற்கும். மலருக்கு மலர்ச்சி, மென்ம்ை, தண்மை, மணம், தேன் இருத்தல் இலக்கணம். கற்பக மலரிலும் இவை உண்டு. அதிலும் தேன் பிலிற்றும். இந்த இயல்புகளிலே குன்ருத அந்த மலர் தளிரி னிடையே தோன்றுகிறதாம். அந்தத் தெய்வத் திருமலரைப் புலவர், . .

. . -குன்ருத • , செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்,

என்று சொல்கிருர்.

எதற்காக அந்தத் தெய்வத் திருமலரைக் கொண்டு வருகிருர்? கற்பனையிலே வளர்ந்த அதனை உண்மையாக நமக்கு முன் உள்ள மலர் ஒன்றைக் காட்டி, "இது கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல இருக்கிறது, பாருங்கள்’ என்கிருர். கற்பக மலரை நாம் கண்டதில்லை. அதன் இயல்புகள் கற்பனையால் தெரிந்து கொண்டவை. அது கற்பனேக் கற்பக மலர்; இது உண்மைக் கற்பக மலர். அதுதான் திருக்குறள்.

-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். .

கற்பக மலர் கற்பகத்தின் பூங்கொம்பிலே பூத்தது. இந்தக் குறள் மலர் வள்ளுவர் திருவாயிலே மலர்ந்தது; 'திருவாய் மலர்ந்தருளினர்' என்று சொல்வது வழக்கம் அல்லவா? திருவள்ளுவராகிய கற்பகம் நெடுநாள் மன்னு வது. எப்படிக் கற்பகம் மக்கள் உள்ளத்தில் நினைவாக மன்னுகிறதோ, அப்படி அப்புலவர் புகழுடம்போடு மக்கள் உள்ளத்தே மன்னுகிருர். அவர் திருக்குறள் ஒன்றுதான பாடியிருப்பார்? இந்த ஒரு நூலைத்தான் அவர் எழுதினர்; அது உலகப் புகழ் பெற்றுவிட்டது” என்று அபிமானத்தால் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் கால் வீசி நடக்க முடியுமா? பல பல நூல்களே இயற்றிப் பிறகே இந்த அரிய நூலே அப்புலவர் வழங்கியிருக்க வேண்டும். அந்த நூல்க ளெல்லாம் மலர் தோன்றுவதற்கு முன் தோன்றிய தளிர்களாக இருக்க, கடைசியில் வந்த குறளோ தளிர் களுக்குப் பின் மலர்ந்த மலரைப்போல விளங்குகிறது. செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்' என்று அடைகளுடன் புலவர் சொல்வது குறளுக்கும் பொருத்த மாக இருக்கிறது.

தெய்வத் திருமலர் என்பது கற்பகத்தின் உயர்வைக்

குறிக்கிறது. அந்தத் தெய்வத் தன்மை வள்ளுவருக்கும் உண்டு. தெய்வப் புலமைத் திருவள்ளுவர்” என்று புலவர்கள் மிகவும் மதிப்புடன் அப்புலவரைச் சொல்வது வழக்கம். தெய்வத் திருவள்ளுவர்', தேவர் திருவள்ளுவர்” (திருவள்ளுவமாலை, - 1, 19, 39, 41,49) என்று திருவள்ளுவ மாலையில் புலவர்கள் பாராட்டியிருக் ஒருர்கள். திருக்குறளுக்கு ஈடும் எடுப்பும் இல்லாத அரிய உரையைச் செய்த பரிமேலழகர், ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் 5T GŪT எடுத்துக்கொள்ளப்பட்டது. என்று உரை எழுதத் தொடங்கும்போது அவதாரிகையிலே எழுதுகிரு.ர். - .

திருக்குறளைக் கற்பக மலராகச் சொன்ன புலவர் தாம் அப்படிச் சொல்வதற் குரிய காரணங்களையும் சொல்கிருர்; கற்பக மலருக்கும் திருக்குறளுக்கும் பொது வாக உள்ள இயல்புகளே எடுத்துக் கூறுகிருர்,

கற்பக மலர் என்றும் வாடாதது. திருக்குறளும் என்றும் புலராதது. நூல்கள் பல வகைப்படும். பல நூல்கள், இயற்றிய ஆசிரியர் காலத்திலே மங்கி மறைந்து போகும். சில நூல்கள் ஆசிரியர் மறைக் தாலும் தாம் மறையாது ஆசிரியருடைய புகழை கிலே காட்டிக்கொண்டிருக்கும். இப்போது அச்சில் வரு கின்ற எல்லாமே நூல்கள் என்றுதான் பேசப்படு கின்றன. தினசரிப் பத்திரிகையும் அச்சிட்டதுதான். ஆனல் அதன் வாழ்வு ஒரே ஒரு நாள்; சில சமயங் களில் காலப்பதிப்பை மாலைப் பதிப்பு மங்கச் செய்து விடுகிறது. அதன் காகிதம் அதற்குள் கிழிந்து விடு கிறதா? எழுத்து மங்கிவிடுகிறதா? அல்லது தமிழ் எழுத்து வேறு ஏதாவது எழுத்தாக மாறிவிடுகிறதா? ஒன்றும் இல்லை. ஆனாலும் முதல் நாள் செய்தித் தாளாக மதிப்புப்பெற்ற அது மறுநாள் புளி மடிக்கும் காகிதமாகி விடுகிறது. அதில் உள்ள எழுத்தின் பயன் போய்விடுகிறது. - -

நூல்களிலும் சில மாதங்களே வாழ்பவை உண்டு. திருக்குறள் தோன்றிக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு கள் ஆகிவிட்டன. அது இன்னும் உருப்படியாக விளக்கத் தோடு கிலவுகிறது. என்றும் புலராத நூல் அது என்று சொல்வதற்குத் தடை என்ன?

சில நூல்கள் பழமையைப் புலப்படுத்திக் கொண்டு "கிற்கும்; அவற்றை இக்காலத்தில் பயன்படுத்திக் கொள் ளாமல் இருப்பார்கள். மொகெஞ்சதடோவில் ஒரு பழைய சிப்புக் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் அருமையாகப் பாது காப்போம். அந்தக் காலத்துச் சீப்பு என்று பெருமை யாகப் பேசுவோம். அதைக் காட்சிச் சாலேயில் வைத்து உலகத்தாருக் கெல்லாம் காட்டுவோம். ஆனால் அதை நாம் சீப்பாக உபயோகப்படுத்த மாட் டோம். இப்போது எத்த்னேயோ நாகரிகமான சீப் புக்கள் வந்துவிட்டன. மொகெஞ்சதடோச் சிப்புப் பழமைப்பொருள்; புதுமைப் பொருளோடு ஒன்ருக கின்று பயன் தராது. காலம் அதைப் பயன் அற்றதாக்கி விட்டது. - - .

நூல்களிலும் சில, பழமையின் அடையாளமாக வைத்திருப்பனவாக இருக்கலாம்; ஆல்ை இந்தக் காலத்தின் நடைமுறைக்குப் பயன்படாமல் இருக்கும். திருக்குறள் அத்தகையது அன்று. எத்தனே ஆண்டுகள்  சென்ருலும் மங்காமல் நின்று மலர்ச்சியுடன் விளங்கும் கற்பக மலரைப்போல, எல்லாக் காலத்திலும் பயன் தந்து விளக்கத்துடன் நிலவுகிறது.

யாணர்நாட் செல்லுகினும் நின்று அலர்ந்து என்று பாடுகிருர் புலவர். . .

யாணர் என்பதற்குப் புதுவரவு என்று பொருள். காலம் போய்க்கொண்டே இருக்கிறது. காலத்துக்கு ஏற்பப் புதிய புதிய கருத்துக்களும் வழக்கங்களும் நாகரிகப் பாணிகளும் தோன்றிக் கொண்டே இருக் கின்றன. அந்த மாற்றத்தில் அடிபட்டுப் பல நூல்கள் இறந்து போகின்றன. புதிய புதிய கருத்துக்களும் கொள்கைகளும் நம்பிக்கைகளும் வந்தாலும் திருக் குறள் பயனின்றி ஒழியாமல் கிற்கிறது. கால வெள்ளத் தோடு போகாமல் கிலேகிற்பதோடு இன்றும் அலர்ந்து, 'மலர்ச்சி பெற்று, மனித வாழ்க்கைக்குப் பயன் தருவதாக மணந்து விளங்குகிறது. காலத்துக்கு ஏற்றவகையில் விரிவு பெற்று நிலவுகிறது. - -

- இதற்கு ஏதாவது தக்க காரணம் இருக்க வேண்டும். காலத்தால் மனிதனுடைய புறக்கோலங்களே மிகுதியாக மாறுகின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி நம்முடைய நாடு இப்போது இருக்கவில்லை. அக்காலத்தில் இருந்த அமைப்போடு நம் ஊர்கள் இருக்க வில்லை. பழங்காலத்தில் சில துளைகளேயே சாளரமென்று சொல்லி வைத்து வாழ்ந்த வீடுகளைப்போல நம் வீடுகள் இப்போது இல்லை; பெரிய பெரிய சன்னல்களே வைத்து வீடு கட்டுகிருேம். நம்முடைய ஆடைகளில்தான் எத்தனை மாற்றம்! மகளிர்களுடைய ஆடைகளில் மாதத்துக்கு ஒரு பாணி; நாளுக்கு ஒரு மோஸ்தர். நாம் உண்ணும் உணவில் எத்தனையோ பொருள்கள் புதியனவாகப் புகுந்திருக்கின்றன. பிஸ்கோத்து பழங்காலத்தில் இல்லை. ஒரு காலத்தில் மிளகாயே இந்த நாட்டில் இல்லை என்ருல் வியப்பாக இருக்கிறதல்லவா?

நம்முடைய உடம்பிலேகூட மாற்றங்கள் நிகழ்கின்றன. தலைக் கோலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக் கின்றன. நம்முடைய பேச்சில், எண்ணங்களில் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏற்ற புதிய கருத்துக்களும் புதிய கற்பனைகளும் வந்துவிட்டன. ஆதலின் யாணர் நாள் (புதிய காலம்) இது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். புதிய முயற்சிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் பழமையை யாராவது சுட்டிக் காட்டினல்,

'அதெல்லாம் பழைய காலம், சுத்தக் கர்நாடகம், பத்தாம் பசலி!” என்று எள்ளி நகையாடுவதைப் பார்க்கிருேம்.

இப்படி, காலத்துக்குக் காலம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில அடிப்படையான செயல்களும் கருத்துக்களும் அப்படியே நிற்கின்றன. உடையில் மாற்றம் வந்தாலும் உடை உடுத்துவதாகிய செயல் அப்படியே இருக்கிறது. உணவில் புதிய சேர்க்கைகள் வந்தாலும் வாயால் உணவை உண்பது என்ற அடிப்படையை மாற்றவில்லை. பெண்களே குழந்தைகளைப் பெறுவது என்பதை மாற்ற முடியவில்லை. . -

இவற்றைப் போலவே மனித சாதியின் வாழ்வில் அடிப்படையான கருத்துக்கள் இருக்கின்றன. மகளிர் கற்புகெறியைப்பற்றி ஒவ்வொரு காட்டினருக்கும் ஒவ்வொரு முறை இருக்கலாம். மணம் புரிவதில் வேறுபாடு இருக்கலாம். ஆனல் ஆண், பெண்ணே மணந்து மக்களேப் பெறுதல் என்பது உலகத்துக்கே பொதுவானது; இடத்தால் வேறுபடாத செய்தி. அப்படியே காலத்தால் வேறுபடாததும் உண்டு. இரவு நேரங்களில் இருளேப் போக்கி வெளிச்சத்தை உண்டாக்கப் பல உபாயங்களே மனிதன் கண்டுபிடித்தான். விளக்கு வந்தது. புதுப் புது முறைகளில் விளக்குகளே நாம் கண்டு பிடித் திருக்கிருேம். குண்டு விளக்குப் போய்க் குழாய் விளக்கு வந்திருக்கிறது. அதுவும் போய் வேறு வகை விளக்கு வரலாம். ஆனல் பகலில் நமக்கு ஒளிதரும் கதிரவனில் மாற்றம் இல்லை. நம்மால் மாற்றம் செய்யவும் இயலாது. எல்லா இடத்துக்கும் எல்லாக் காலத்துக்கும் பொதுவான ஒளியாக நிலவுகிறது அது .

அதுபோலவே கருத்துலகத்திலும் பெரும்பான்மை யான மக்களுக்குப் பல காலத்துக்குப் பயன்படும் கருத்துக்கள் உண்டு. அவற்றைச் சிந்தித்து வகைப் படுத்தித் தொகுத்து உரைத்தால் அந்தக் கருத்துக் கருவூலம் கால வெள்ளத்தில் மாயாமல் சாயாமல் கிலே நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய கருத்துக் கருவூலக்தான் திருக்குறள். அதனால் அது, யாணர் நாட் செல்லுகினும் நின்று விளங்குகிறது.

மக்களுக்குப் பயன்படும் பொருள்களிலும் சில வகை உண்டு: அவசியத்தினுல் கொள்வன, விரும்பிக்கொள்வன, அவசியத்தாலும் விருப்பத்தாலும் கொள்வன என்று அவற்றை மூன்ருகப் பிரிக்கலாம். நோய் வந்தவனுக்கு மருந்து அவசியம்; அதை நோயாளி உண்ணுகிருன்; ஆனல் அதை அவன் விரும்பி உண்ணுவதில்லை.

பனம்பழத்தை ஒரு சிறுவன் விரும்பி உண்ணுகிருன்; ஆணுல் அது நன்மை பயப்பதில்லே; அதல்ை அவசியம் அன்று. பால் அவசியமானது; நன்மை பயப்பது; விரும்பி உண்பது.

நூல்களிலும் இந்த மூன்று வகை உண்டு. அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை, பயன்

படுபவை என்பன நீதி நூல்கள், சட்டங்கள், இலக்கணங்கள் முதலியவை. இவற்றை விரும்பிப் படிப் பவர் அரியர். சில வசை இலக்கியங்கள், காமச்

சுவை தரும் மட்டரக நூல்கள் என்பவற்றைப் பலர் விரும்பிப் படிக்கலாம். ஆனால் அவை அவசியமானவை அல்ல; நல்ல பயனேத் தருவனவும் அல்ல. கவிதை நூல்கள் பயன் தருவன; இனிமையை உடையன; அதல்ை படிக்கும் தகுதி உடையோர் விரும்பிப் படிப்பதற் குரியன.

சுருக்கமாகச் சொல்லப் போனல் பயன் தருவன, பயனும் இனிமையும் தருவன என்று நல்ல நூல்களேப் பிரித்துவிடலாம். வேதம், ஆகமம், சட்டம் எல்லாம் முதல் வகையைச் சேர்ந்தவை. காப்பியம், நல்ல கதைகள் பின் வகையைச் சேர்ந்தவை. -

திருக்குறள் சிறந்த நீதி நூல். பல காலத்துக்கும் பல இடத்துக்கும் பொதுவான உண்மைகளைச் சொல்வது. அதனுல் பயனுடையது. பல காலம் நின்று மலர்ச்சி பெறுவது. அந்த அளவில் அது கின்றிருந்தால் அதன் பெருமைக்கு ஒர் அளவு இருக்கும். அதற்கு மேலும் அதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது கவிதையாகவும் அமைந்திருக்கிறது. கவிதை பயனேடு இனிமையையும்  தருவது; திருக்குறள் கவிதை நூலாக இருப்பதல்ை அதில் பயனும் இனிமையும் ஒருங்கே இருக்கின்றன.

பழைய இலக்கண உரையாசிரியர்கள், பாலும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று’ என்று ஒரு வாக்கியத்தை எடுத்துக் காட்டுவார்கள். சுவை தரும் பொருள்; அதோடு பயன் தரும் பொருள்' என்பது அதன் கருத்து. பாலுக்குப் பதில் தேனே வைத்து, தேனும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று என்று நாம் புதிய வாக்கியம் ஒன்றைச் சொல்லிப் பார்க்கலாம். தேனும் உடம்புக்கு நலம் தருவதுதானே? தேன் இனிமை யானது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தேன் என்றவுடன் அதன் இன்சுவைதான் நம் நினைவுக்கு வரும். படிக்கப் படிக்க இனிமை உடைய கவிதை யாகவும், பொருள் உணர உணர நலம் பயக்கும் நீதி நூலாகவும் விளங்குவது திருக்குறள். அதற்கு இனிமையும் பயனும் உடைய தேனை உவமை சொல்லலாம் அல்லவா?

திருக்குறளேக் கற்பக மலராகச் சொன்ன புலவர், அது அம் மலரைப்போல், தேன்பிலிற்றும் நீர்மையது' என்று. சொல்கிருர். அது சுவையான கவிதை வடிவில் அமைந்தது; சொற்சுவை பொருட் சுவைகளைப் பெற்றது; மனித சாதியை உயர்த்தும் கருத்துக்களைச் சொல்வது.

இந்த இருவகைத் தன்மையும் திருக்குறளில் இருப்பதைத் திருவள்ளுவ மாலேயில் மற்ருெரு பாட்டுச் சொல்கிறது.

ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்ருேர் 

உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

உண்மையைச் சொல்வது மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்ல வேண்டும். அதுதான் இலக்கியம். கலேகள் இன்பந்தரும் இயல்புடையனவாக இருக்க வேண்டும். அவற்றின் முதல் இலக்கணம் அது. எல்லாக் கலேகளிலும் உயர்ந்தது கவிதைக் கலை. ஆதலின் இன்பத் தைத் தருவதில் அது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். திருக்குறள் கவிதையாகவும் இருந்து இன்பத்தைத் தருகின்றது. மலரில் தேன் இருப்பதுபோல அந்த நூலில் கவிதைச் சுவையும் இருக்கிறது.

இதுவரைக்கும் கூறியவற்ருல் திருக்குறள் என்றும் மங்காத திட்பம் உடையது, கால வெள்ளத்தில் சாயாமல் கின்று மக்கட் சாதிக்கு நலம் தருவது, அவ்வக் காலத்துக்கு ஏற்ற வகையில் பொருள் விரிவு பெற்று கிற்பது, கவிச் சுவையையுடையது என்பவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனே இயல்புகளேயும், அது கற்பகத்தின் மண நிறை நறை மலர் போன்றது என்ற உவமையால் சொல்லிவிட்டார் புலவர்.

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் - நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

(புலராது - வாடாமல். யாணர் - புது வரவு. நீர்மைய

தாய் - இயல்பையுடையதாய். போன்ம் போலும். மன்

நில பெற்ற, திருக்குறளின் சிறப்பைச் சொல்லும் தனி நூல் ஒன்று உண்டு. திருவள்ளுவ மாலே என்று அதற்குப் பெயர். வேறு எந்த நூலுக்கும் சிறப்புப் பாயிரமே தனி நூலாக இல்லை. ஐம்பத்து மூன்று பாடல்களால் அமைந்த அந்த நூலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரால் பாடப் பெற்றதாகப் பெயரைச் சேர்த்திருக்கிருர்கள். அசரீரி, நாமகள், இறையனர் ஆகிய தெய்வங்களும் பாராட்டிப் பாடியனவாக முன்று பாடல்கள் தொடக்கத்தில் இருக் கின்றன. என்றும் புலராது” என்ற இப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனுt என்று காணப்படுகிறது. மதுரையில் இருக்கும் ஆலவாய் இறையனராகிய சோமசுந்தரக் கடவுளே இதைப் பாடியதாகப் பழங் காலத்தில் சொல்லி வந்தார்கள். இறையனர் அகப் பொருள் என்ற இலக்கண நூலின் ஆசிரியரும், 'கொங்கு தேர் வாழ்க்கை’’ என்ற குறுந்தொகைப் பாடலின் ஆசிரி யரும் அந்த இறையனரே.

ஆலவாய் இறையனராகிய தெய்வமே இந்தப் பாட்டைப் பாடினரா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் இப்போது புக வேண்டாம். பாட்டு என்னவோ மிகவும் அருமையாக இருக்கிறது; இலக்கியப் பண்புகளேக் கவிதைச் சுவையோடு சொல்வதாக அமைந்திருக்கிறது. அதைப் பாடியவர் இன்று தெய்வமாகிவிட்டார் என்று சொல்வதில் நமக்கு ஒரு தடையும் இல்லே. உண்மையைச் சொல்லும் வாக்குத் தெய்வ வாக்கு என்று உபசாரமாகக் கொள்வது வழக்கம். -

தேவர்களுக்குக் கிடைத்த கற்பக மலரை நாம் அறியோம்; அது கற்பனைக் கற்பகத்தில் மலர்ந்தது ஆல்ை இந்த இறையனர் காட்டும் கற்பகத்தின் தெய்வத் திருமலர் நாம் காணக் கிடைக்கிறது; கற்று இன்புறத்தக்க பொலிவோடு விளங்குகிறது. அதன் மணத்தையும் தேனேயும் இனி ஒரளவு நுகர்ந்து பார்க்கலாம்.