Wednesday, July 6, 2022

தசாவதாரக் கோயில்

 


தசாவதாரக் கோயில்

விஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் (Vishnu Temple), குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது. இக்கோயில் ஏறத்தாழ கி பி 500-ஆம் ஆண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.[2] பண்டைய இந்து சமயக் கோயில்களில் இன்றளவும் உள்ள மணற்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயில் வளாகத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் அழகிய சிற்பங்களும் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளது.[3] இக்கோயில் குப்தர்களின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை ஆராய உதவும் ஆதாரங்கள் அதிகம் கொண்டதாகும்.[4] இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது.[5] இக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.[5]

இந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.[2] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

No comments:

Post a Comment