Saturday, July 16, 2022

சங்க இலக்கியம் & திருக்குறள் போற்றும் சனாதன‌ வழி

 சங்க இலக்கியம் & திருக்குறள் போற்றும் சனாதன‌ வழி

புறநானூறு 367, பாடியவர்: ஔவையார்,

பாடப்பட்டோர்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான் மாவெங்கோ, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல்

தமிழக மூவேந்தர்கள் சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,  சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒன்றாக் கலந்து கொண்டபோது பாடியது. பாட்டுத்தொகை நூல்களில் இந்த ஒரே பாடலில் தான் மூவேந்தர்கள் பற்றிய பாடல்

 சேர-சோழ &பாண்டிய மூவேந்தர் பற்றி ஔவையார்

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே 
உரை: வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள்  தினமும் உலக நன்மைக்கு  வளர்க்கும் வேள்வி முத்தீயைப்  (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம்)   போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! 
O kings who ride in chariots with flags and own
victorious white umbrellas, beautiful to behold
like the three flames of the virtuous, twice-born
Brahmins who have subdued their senses through
their will!  This is what I understand!  May your
living days be splendid!  May they be brighter than
the stars in the sky!  May they be more than the
raindrops from the dark thundering clouds! (Prof: Vaidehi Lambert Translation)

சங்க இலக்கியம்  போற்றும் சனாதன‌ வழி

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா; நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத;  வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி; கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்; கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சி வாழ்மக்களும், சோழ தலைநகர் உரையூர் வாழ்மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

நல்ல அரசாட்சி செய்யும் மன்னவர் வழிகாட்டும் வள்ளுவர்  


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
அந்தணர்கள் வேதங்களிற்கும், அதனின் செயல் வழி காட்ட எழுந்த நீதி நூல்களிற்கும் அடிப்படையாக இருக்க வேண்டியதே நல்ல அரசாட்சி செய்யும் மன்னவர் செங்கோல்
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
\
 மோசமான கொடுங்கோல் மன்னவன் ஆட்சியின் மோசமான தீமை என்ன‌
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.  குறள் 560: கொடுங்கோன்மை
மன்னவன் சரியானபடி ஆட்சி செய்யவில்லை எனில் பசுக்கள் பலன் தராமல் குறையும், பிராமணர்கள் வேதம் ஓதாமல் மறந்து விடுவர்.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

பூமாதேவியை திருவள்ளுவர் "நிலம் என்னும் நல்லாள்" எனப் போற்றுகிறார்.  
இறைவன் வணக்கம் செய்வது போலே பஞ்ச பூதங்களை போற்றுவது மெய்யியல் மரபு. இறைவனை சிறப்பாக பூஜைகள் செய்து திருவடியை தன் தலையால் வணங்காதவன் ஐம்பொறிகள் பயன் இல்லாதது போல என்கிறார்.
நால்வேதத்து
அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை
நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல கொல்?
யா பல கொல்லோ? - புறநானூறு 15
அதாவது “குற்றமில்லாததும் உயர்ந்ததுமான வேதத்தில் சொல்லியவாறு சுள்ளியும், பொரியும், நெய்யும் இட்டுப் பலவிதமான சிறப்புகள் கொண்ட யாகங்கள் செய்து, நீ நிறுவிய தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா,நீ பங்குபெற்ற போர்க்களங்களின் எண்ணிக்கை அதிகமா என்று பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்த்து வியக்கிறார் புலவர் நெட்டிமையார்.

No comments:

Post a Comment