சமண மதத்தில் உலகைப் படைத்த தெய்வன் - தெய்வ வணக்கம் இல்லை
அருங்கலச்செப்பு ஒரு சமண தமிழ் நீதி நூல். இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது.
'வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
பாழ்பட்ட தெய்வ மயக்கு'
31 - அருங்கலச்செப்பு
சாத்தனும் சமணமும்
ஆயுதம் தாங்கிய கடவுளர் வழிபாட்டைச் சமணம் ஒப்புவதில்லை.
ஆயுதம் தாங்கிய கடவுளர் வழிபாடு சமண நூல்களில் ‘மித்யாத்வம்’ என்று கூறப்பட்டுள்ளது.
சாத்தனின் கையில் செண்டு எனும் ஆயுதமும்,
இருபுறமும் தேவியரும் உண்டு.
பன்மொழிப் புலமை வாய்ந்த ஆசார்ய ஹேமசந்த்ரர் [11ம் நூற்0] கூர்ஜரத்தில் வாழ்ந்த சமணத் துறவி.’ ‘கலிகால ஸர்வஜ்ஞர்’ என்ற பட்டம் பெற்றவர். அவர் ஆயுததர தேவ ஆராதனைகளை ஆதரிக்கவில்லை.
Ācārya Hemacandra decries the worship of such Gods –
“These Gods tainted with attachment and passion; having women and weapons by their side, favour some and disfavour some; such Gods should not be worshipped by those who desire emancipation”
Worship of such gods is considered as mithyātva or wrong belief leading to the bondage of karmas. However, many Jains are known to worship such gods for material gains.
தமிழ்ச் சமண நூல்கள் யாதொன்றிலும் சாத்தனைப் போற்றும் பாடல் கிடையாது; சாத்தன் முக்கியமான கடவுள் என்றால் அவர் போற்றப்பட்டிருக்க வேண்டும் இல்லையா?
சிலம்பு சாவக நெறிசார் கண்ணகி சாத்தனை வழிபட்ட செய்தி சொல்லவில்லை; ஆனால் சாவகநெறி சாராத அவளது தோழி தேவந்தி சாத்தனை வழிபட்டதாகச் சொல்கிறது.
யோகம் போற்றும் ஸநாதநத்தில் யோகோபவிஷ்ட நிலையில் தெய்வங்களை வழிபடும் வழக்கம் உண்டு. யோக பட்டத்துடன் தென்முகக் கடவுள், ஆஞ்ஜநேயர், நரசிம்மர், சாத்தன் போன்ற தெய்வங்கள்.
No comments:
Post a Comment