Saturday, December 17, 2022

சங்க கால சேரன்‌ செங்குட்டுவன் காலமும், தொல்காப்பியம், திருக்குறள் காலமும்

சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து நூல் சேர அரசர்களை பற்றிய செய்தி- கதைகளை பெருமளவில் கூறுவது

சங்க இலக்கியத்தில் பதிற்றுப்பத்து நூல் சேர அரசர்களை பற்றிய செய்தி- கதைகளை பெருமளவில் கூறுவது புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு 3 பரம்பரை சேர அரசர்கள் பெயர்களை கூறுகிறது என வரலாற்றூ அறிஞர்கள் பெரும்பான்மை கருது ஒற்றுமை உள்ளது. 

புகழூர் (கரூர் அருகே) கல்வெட்டு சங்க கால சேர மன்னர்கள் மூன்று தலைமுறையை(சேரன் செங்குட்டுவன் முன்னோர்) வரிசையாக கூறுவதாக வரலாற்று அறிஞர்கள் இடை கருத்து ஒற்றுமை உள்ளது. இந்த சேர அரசர்கள் வெளியிட்ட பிராமி எழுத்து பொறித்த காசுகள் உள்ளதையும் நாம் இந்த இணைப்பில் காணலாம்

  https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-kollirumpurai-coins-280455



சேரன்‌ செங்குட்டுவன் பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்து - 5ம் பத்து புலவர்.பரணர் பாடியதில் உள்ளது. இந்தப் பத்துப் பாடல்களில் இல்லாத ஒரு செய்தி/கதை, பத்தினி தெய்வத்டிற்கு சிலை எழுப்ப இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்தார் என பதிற்றுப்பத்து - 5ம் பத்துபதிகம்

 

இந்த கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 முதல் 243(CE) என்பதாக அறிஞர்கள் குறிக்கிறார்கள் https://en.wikipedia.org/wiki/Cenkuttuvan

சேரன் செங்குட்டுவன் காலம் 243 முடிகிறது என்றால் அதற்குப் பிறகு 10 தலைமுறைகள் ஆட்சி செய்தனர் எனில் மேலும் 250 ஆண்டுகள் வருகிறது அதாவது 5ம் நூற்றாண்டு இறுதிவரை செய்த சேர அரசர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இதற்கு பிறகான  சில அரசர்களைப் பற்றியும் மற்ற பாடல்களில் உள்ளது என்று அறிஞர்கள் கருத்து, எனில் சங்க காலம் 6ம் நூற்றாண்டு தாண்டி தொடர்ந்தது.
சங்க இலக்கியங்களைஅதிலும்  எட்டுத்தொகை நூல்கள் இவை பல புலவர்கள் சேர்ந்து பாடிய பாடல்களை ஒன்று சேர்ந்து தொகுத்தவை ஆராய்ச்சி அறிஞர்கள் பரிபாடல் கலித்தொகை மிகப் பிற்காலத்தை அதில் உள்ள மொழியியல் கூறுகள் மாற்றங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தது என கூறியுள்ளனர் பரிபாடலின் காலம் என்ன என்று பார்ப்போம்
இந்தியாவில் எங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் உள்ள காலத்தை குறிப்பதற்கு உதவும் மிக முக்கியமான வழிகாட்டி நூலான L.T. சாமிக்கண்ணு பிள்ளை ஆராய்ச்சிபடி பரிபாடல் 11-ல் புது புனல் கூறும் வருடம் 634 ஆகும் 
பரிபாடலை காட்டிலும் கலித்தொகை மொழி வளர்ச்சி மாற்றன் அது பிந்தையது என்பது அறிஞர் தெளிவு


தொல்காப்பியம் பரிபாடல் & கலித்தொகைக்கு இலக்கணம் கூற்கிறது; ஆனால் குறு வெண்பா மட்டும் உண்டு, குறள் இல்லை. எனவே தொல்காப்பியம் கலித்தொகைக்கு பிந்தியது, திருக்குறளிற்கு முந்தையது
பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் "எ""ஒ" இல்லை. 5ம் நூற்றாண்டு வரை உயிர் எழுத்து 8 தான்.  தமிழில் மொத்தம் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 ஆகும், ஆனால் கல்வெட்டுகள்ளில் ஆரம்பங்களில் உயிர் எழுத்து  8 மட்டுமே, பின் 10 உள்ளது, அதே போலவே மெய் எழுத்துக்களும்,


சிலப்பதிகாரம் நூல் என்பதே கண்ணகியை இந்த பத்தினி தெய்வமாக காட்டி இந்த தெய்வ உருவத்து கண்ணகிக்கு சேரன்‌ செங்குட்டுவன் கோவில் கட்டியதே ஆகும்


வடவர் உட்கும் வான் தோய் வெல் கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்,
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான் நவில் கானம் கணையின் போகி,  5
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி,

இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு,
மாறா வல் வில் இடும்பின் புறத்து இறுத்து,
உறு புலி அன்ன வயவர் வீழச்  10
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி,
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங்கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி, வெந்திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து,
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக்  20
கெடல் அருந் தானையொடு,
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம் அமைந்த,
காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
He defeated a noble Aryan king of great renown, to get a stone to make Pathini Goddess a statue, going rapily like an arrow going through a windy forest, washed it in the Ganges whose waters come from many sweet waterfalls,  and seized and brought many fine breeds of cattle herds with calves.

#

 அரசர்

1

சேரமான்‌ கருவூர்‌ ஏறிய ஒள்வாள்‌ கோப்பெருஞ்‌ சேரல்‌ இரும்பொறை

2

சேரமான்‌ அந்துவஞ்சேரல்‌ இரும்பொறை

3

சேரமான்‌ பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்‌ (என்றபெருஞ்சேரலாதன்

4

சேரமான்‌ செல்வக்‌ கடுங்கோ வாழியாதன்

5

சேரமான்‌ பெருங்கடுங்கோ(பாலை பாடிய)

6

,இளங்கடுஙகோ (மருதம்‌ பாடிய)

7

சேரமான்‌ குடக்கோ நெடுஞ்சேரலாதன்

8

பல்யானைச்‌ செல்கெழு குட்டுவன்

9

சேரமான்‌ தகடூர்‌ எறிந்த பெருஞ்சேரல்‌ இரும்பொறை

10

களங்காய்க்‌ கண்ணிநார்‌ முடிச்சேரல்

11

செங்குட்டுவன்

12

சேரமான்‌ இளஞ்சேரல்‌ இரும்பொறை

13

ஆடுகோட்பாட்டுச்‌ சேட்‌ சென்னி சேரலாதன்

14

சேரமான்‌ யானைக்‌ கண்சேய்‌ மாந்தரஞ்‌ சேரல்‌ இரும்‌ பொறை

15

சேரமான்‌ கோக்கோதை மார்பன்

16

சேரமான்‌ மாறிவெண்கோ

17

சேரமான்‌ குட்டுவன்‌ கோதை

18

சேரமான்‌ கோட்டம்பலத்துத்‌ துஞ்சிய மாக்கோதை

19

சேரமான்‌ கணைக்கால்‌ இரும்பொறை

20

தெறியவில்லை

21

சேரமான்‌ வஞ்சன்






No comments:

Post a Comment