தமிழகத்தின் பஞ்சாங்க வானியல் ஆய்வில் புகழ்பெற்ற பேரறிஞர். எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை (1865 -1925) ஒரு நீதிக்கட்சி அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர். கோள்நிலை கொண்டு நாளைக் கணக்கிடுவதில் வல்லுநர்.
சாமிக்கண்ணு பிள்ளை தன் Panchang And Horoscope நூலில் பரிபாடல் -11ம் பாடலில் உள்ள வானியல் தோற்றக் குறிப்புகள் பொஆ.634ம் ஆண்டு ஜுன்-17 நாளினைக் குறிக்கிறது என விளக்கம் கீழே.
நவீன விஞ்ஞான அல்மனாக் கூறுவதும் பஞ்சாங்கக் கணக்கோடு பொருந்துகிறது
2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. வாராந்தர நிகழ்சில்; இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO)விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார். இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.
பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி, கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். .
No comments:
Post a Comment