உலக நலன் பொருட்டு எழுப்பப்படும் கோயில் வழிபாடு என்பது பெரும்பான்மையாக சைவர்களுக்கும் வைணவர்களுக்கு மட்டுமே உண்டு.
மற்ற சம்பிரதாயத்தவர்களுக்கு கிடையாது. இங்கு கிடையாது என்றால் முக்கிய பிரதானம் இல்லை என பொருள் கொள்ளவேண்டும்.
ஏகான்மவாதிகளுக்கு ஆலய வழிபாடு உண்டு என்றாலும் பிரதானம் கிடையாது. அதாவது பரார்த்த லிங்க கோயில்களில் இந்த சம்பிரதாயத்தவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. வரலாம் தரிசனம் செய்யலாம்.
அதுபோன்றே வீரசைவர்களுக்கும் முக்கிய பிரதானம் கோயில் வழிபாடு கிடையாது.
அதாவது கோயில் வழிபாட்டில் Just இவர்கள் ஒரு விருந்தாளி. அவ்வளவே...
தமிழகத்தின் முதன்மையான வீரசைவராக விளங்கக்கூடிய ஸ்ரீ ஆதிசிவப்பிரகாசஸ்வாமிகள், தாம் பாடிய #அத்துவிதவெண்பா என்ற நூலில்,
வீரசைவம் என்பவர் யார் - என்பதை நான்கு பாடல்களில் வரையறுக்கின்றார்.
அதில் 36 வது பாடல் கீழ்காணும் படத்தில் உள்ளது..
கற்புடைய மனைவி, பரபுருஷனை பாராதது போல,
வீரம் - எனும் இச்சைவனுக்கு இஷ்டலிங்க பூஜை, இஷ்டலிங்க தரிசனம், இஷ்டலிங்க தீர்த்தம், இஷ்டலிங்க தீர்த்தம், இஷ்டலிங்க பிரசாதம், இஷ்டலிங்க நிஷ்டை, இஷ்ட லிங்க தியானம் என்றே இருக்கவேண்டும்.
கோயில் வழிபாடு எனும் பரார்த்த லிங்கத்திலே அன்பு செலுத்தாத உறுதியே வீரசைவம் எனப்படும் என பாடுகின்றார்.
ஆக, வீரசைவர் என்போர், தமது இஷ்டலிங்த்தை தவிர்த்து கோயில் வழிபாடு செய்வது பிரதானமல்ல. அது அவர்கள் சமய கற்பு நெறிக்கே இழுக்கு என்று புரிந்து கொள்ளலாம்.
கடந்த காலங்களில் வீரசைவர் தங்கள் மடங்களின் இஷ்டலிங்க பூஜை செய்து அதன் வாயிலாகவே சமயங்களை பரப்பினார்களே தவிர ,கோயில் சம்பிரதாயங்களில் பெரிய அளவு வீரசைவர் என்போர் தலையிடுவதில்லை. கோயில் தரிசனம் என்பதையும் ஒரு மரபாக செய்வார்களே ஒழிய, கோயில் வழிபாட்டை முக்கிய பிரதானமாக கொள்ளமாட்டார்கள்.
ஆனால் இன்றைய நிலை....
கோயில் வழிபாட்டுக்குரிய சைவ, வைணவ சமயத்தவரில்,
வைணவ சமயத்தவர்கள் தங்கள் சமயம்,தங்கள் கோயில், தங்கள் ஆலய திருப்பணி என்பவற்றில் வேறு சம்பிரதாயத்தாரை ஒரு சிறிது கூட அனுமதிப்பதில்லை. உதவி பெற்றால் கூட மற்ற சம்பிரதாயத்தாரை ஒர் எல்லையில் நிறுத்துகிறார்கள்.சம்பிரதாய கலப்பு செய்வதில்லை.
ஆனால்
சைவசமயத்தில் ,சைவசமய கோயில்களில், சைவசமய தத்துவங்களில் ,சைவசமய சம்பிரதாயங்களில் மாற்று சம்பிரதாயத்தவர் எந்தளவு உள் புகுந்து குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்பதை சைவர்கள் சிந்திக்க....
கோயில் வழிபாட்டை பிரதானமாக சமய ரீதியாக கொள்ளாத இவர்கள், சைவாலயங்களில், சைவசமய மரபு, சம்பிரதாயங்களில் இன்றைக்கு சட்டாம்பிள்ளை செய்கின்றனர் என்றால்,
அதற்க்கு காரணம்,
பேசவேண்டியவர்கள், கண்டிக்கவேண்டியவர்கள் அமைதிகாப்பதும்..
சைவர்களிடம் கற்புடமை இல்லாமையும், சமய புரிதல் இல்லாமையும், சைவர்களிடம் புகுந்த திராவிட மிஷனரித்துவ வாசமே ஆகும்...
சிவார்ப்பணம்.
No comments:
Post a Comment