Wednesday, August 3, 2022

கோவில்கள் மூலம் கல்வி- மருத்துவம் நடந்ததே இந்திய வரலாறு

 இறைவன் கோவில் என்பது தமிழர்கள் வாழ்வியலின் அங்கம் என்பதை சங்க இலக்கியம் காட்டுகிறது

இராசேந்திர சோழன்‌ - உத்தமாக்ரமும்‌ பிற புதுவை மாநிலக்‌ கல்வெட்டு செய்திகளும்‌

ந. வெங்கடேசன் வில்லியனூர்‌.
(நன்றி: ஆவணம்‌ 30, 2019)

(தமிழகத்தை ஆண்ட சோழ அரசர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அழகிய நரசிங்கப் பெருமாள் ஆலயத்தில் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுக்களின் விவரங்கள்).

எண்ணாயிரம் கல்வெட்டு 1‌:

முதல்‌ இராசேந்திரன்‌ பொ.ஆ 1012 -இல்‌ ஆனாங்கூராகிய இராஜராஜ நல்லூரில்‌ இராஜராஜ விண்ணகர்‌ கோவில்‌ உள்ளது. சபை கூடி அவ்விண்ணகர்‌ எப்பெருமானுக்கு விழா எடுக்கவும்‌, திருவாய்மொழி இசைக்கவும்‌ கல்லூரி செயல்படவும்‌ 45 வேலி நிலங்களைக்‌ கொடையாக அரசன்‌ அளித்தான்‌.
1. நால்வர்‌ நாள்தோறும்‌ இறைவன்‌ முன்பு திருவாய்மொழி இசைக்க வேண்டும்‌. அவர்களுக்கு மூன்று குறுணி நெல்‌ ஊதியமாக அளிக்கப்பட்டது. அதற்காக அரைவேலி இரண்டு மா நிலம்‌ ஒதுக்கப்பெற்றது.
2. மடத்திலிருக்கும்‌ இருபத்தைந்து திருவைணவர்களுக்கு உணவுக்காக, ஓருவேலி நான்கு மா நிலம்‌ ஒதுக்கப்பட்டது.
3. ஆணி அனுஷம்‌ விழா ஏழு நாட்கள்‌ கொண்டாடப்பெறும்‌. அப்போது வரும்‌ ஆயிரம்‌ வைணவர்களுக்கும்‌ விழாவிற்கு வரும்‌ பொதுமக்களுக்கும்‌ அறுபது கலம்‌ நெல்லும்‌ மூன்று கழஞ்சு பொன்னும்‌ ஒதுக்கினர்‌.
4. அரைவேலி இரண்டு மா நிலமும்‌ , சில பொன்னும்‌ ஒதுக்கினர்‌. எதற்காக என்றால்‌, இறைவன்‌ வீதி உலாவிற்கும்‌ தேர்‌ திருவிழாவிற்கும்‌, இறைவர்க்கு ஆடைக்கும்‌ ஆகும்‌ செலவுகளை மேற்கண்ட நில வருவாயிலிருந்து செலவு செய்ய வேண்டியது.
கங்கை கொண்ட சோழன்‌ மண்டபத்திலிருந்து முடிவெடுத்தமை:-
75 மாணாக்கர்‌ ரிக்‌ வேதமும்‌,
75 மாணாக்கர்‌ யசூர்‌ வேதமும்‌,
20 மாணாக்கர்‌ சந்தோக சாமமும்‌,
20 மாணாக்கர்‌ தலவகார சாமும்‌.
உத்தராயணம்‌, தட்சராயணம்‌, ஐப்பசி விஷு சித்திரை விஷு ஆகிய நாட்களில்‌ மணவாள ஆழ்வார்க்கு 108 குடம்‌ நீர்‌ கொணர்ந்து திருமஞ்சனம்‌ செய்வதற்கும்‌, ஆடைக்கும்‌, அமுதுக்கும்‌ நாளொன்றுக்கு நெல்‌ முப்பது கலமாக மேற்கூறிய நான்கு நாட்களுக்கு நெல்‌ 120 கலம்‌ ஒதுக்கப்பெற்றது.
இதுகாறும்‌, கூறப்பெற்ற இனங்களுக்கும்‌ ஆண்டுக்கு நெல்‌ ஆயிரத்து முந்நூற்றுப்‌ பதினாறு கலனே மூன்று குறுணி ஒதுக்கப்பெற்றது.
இனி, இராசேந்திரசோழன்‌ மடத்தில்‌ நாள்தோறும்‌ உணவு உண்ணுகின்ற 12 ஸ்ரீவைணவர்களுக்கு நாளொன்றுக்கு நெல்‌ கலமும்‌,
ஆராதனை செய்கின்ற ஒருவனுக்கு நெல்‌ பதக்கும்‌,
திருவாய்மொழித்‌ திருப்பதியம்‌ பாடுகின்ற ஒருவனுக்கு நெல்‌ முக்குறுணியும்‌,
கோவிலையும்‌, மடத்தையும்‌ பெருக்கித்‌ தூய்மை செய்கின்ற ஒருவனுக்கு நெல்‌ ஐந்து நாழியும்‌;
புருஷ நாராயணன்‌, விக்கிரம சோழன்‌ என்னும்‌ பெயருடைய இரண்டு நந்தவனங்களைப்‌ பராமரிக்கின்ற நால்வர்க்கு நெல்‌ இரு தூணியும்‌
கோவிலுக்கும்‌, மடத்துக்கும்‌ கணக்கெழுதுகின்ற ஒருவனுக்கு நெல்‌ குறுணியும்‌,
காவலன்‌ ஒருவனுக்கு நெல்‌ பதக்கும்‌ ஆக நாள்‌ ஒன்றுக்கு முக்கலனே ஒரு பதக்கு ஐந்து நாழி வீதம்‌ ஆண்டுக்கு ஆயிரத்து நூற்று ஐம்பத்‌ தொன்பதின்‌ கலனே ஐங்குறுணி நெல்லும்‌ ஒதுக்கப்பெற்றது.
வடமொழிக்‌ கல்லூரி:
இருக்கு வேதம்‌ ஓதுவிப்பார்‌ மூவர்‌, யசூர்‌ வேதம்‌ ஓதுவிப்பார்‌ மூவர்‌, சந்தோக சாமம்‌
எண்ணாயிரம்‌ கல்வெட்டு 2:
20 மாணாக்கர்‌ வாஜஸ நேயமும்‌,
10 மாணாக்கர்‌ அதர்வாவும்‌,
10 மாணாக்கர்‌ பெளதானிய கிரியாகல்பா மற்றும்‌ பாடலையும்‌,
230 பிரம்மசாரிகள்‌ அபூர்வ வேதத்தையும்‌
40 ரூபாவதாரவும்‌ .
இவர்களுக்கு 6 நாழி நெல்‌ ஒவ்வொருவருக்கும்‌ ஒரு நாளைக்கு ஒதுக்கப்பட்டது.
25 பேர்‌ வியாகர்ணாவும்‌,
805 பேர்‌ பிரபாகாராவும்‌,
10 பேர்‌ வேதாந்தமும்‌
இவர்‌ 70 பேர்களுக்கு நாள்தோறும்‌ ஓவ்வொருவர்க்கு ஒரு குறுணி இரண்டு நாழி நெல்‌ ஒதுக்கப்பெற்றது.
நம்பிகளுக்கு,
நபாகர்ணம்‌ கூறும்‌ நம்பிகளுக்கு ஒரு கலம்‌ நெல்லும்‌,
பிரபாகரா கூறும்‌ நம்பிகளுக்கு ஒரு கலம்‌ நெல்லும்‌,
வேதாந்தம்‌ நம்பிகளுக்கு ஒரு கலம்‌ ஒரு தூணி நெல்‌ ஒதுக்கப்பெற்றது.
பத்து பேராசிரியர்கள்‌ வேதம்‌ கற்பிக்க,
3 பேராசிரியர்‌ ரிக்‌ வேதம்‌
3 பேராசிரியர்‌ யசூர்‌ வேதம்‌
1 பேராசிரியர்‌ சந்தோக சாமம்‌
1 பேராசிரியர்‌ தலவகார சாமம்‌
1 பேராசிரியர்‌ வாஜச நேயம்‌
1 பேராசிரியர்‌ பெளதானிய கிரியா கல்பா காடாகா.
ஓதுவிப்பார்‌ ஒருவர்,‌ தலகார சாமம்‌ ஓதுவிப்பார்‌ ஒருவர்‌, அபூர்வம்‌ ஓதுவிப்பார்‌ ஒருவர்‌, வாஜஸ நேயம்‌ ஓதுவிப்பார்‌ ஒருவர்‌, போதாயன சூத்திரம்‌ ஓதுவிப்பார்‌ ஒருவர்‌, சந்தியா க்ர்ஷாட, சூத்திரம்‌ ஓதுவிப்பார்‌ ஒருவர்‌ ஆக பன்னிருவர்க்கு நாள்‌ ஒன்றுக்கு தலா தூணி நெல்லாக நாள்தோறும்‌ நான்கு கலம்‌ நெல்‌ ஒதுக்கப்பெற்றது.
வேதூந்த விரிவுரையாளன்‌ ஒருவனுக்கு நெல்‌ கலனே பதக்கும்‌,
மீமாம்சை விரிவுரையாளன்‌ ஒருவனுக்கு நெல்‌ கலமும்‌,
வியாகரண விரிவரையாளன்‌ ஒருவனுக்கு நெல்‌ தூணி குறுணியும்‌,
உரூபாவதாரம்‌ கேட்பிப்பாண்‌ ஒருவனுக்கு நெல்‌ தூணிப்‌ பதக்கும்‌,
மாபாரதமும்‌, ஸ்ரீராமாயணமும்‌ வாசிக்கின்ற ஒருவனுக்கு நெல்‌ இரு தூணிக்‌ குறுணியும்‌
ஸ்ரீமனுசாஸ்திரம்‌ கேட்பிப்பான்‌ ஒருவனுக்கு நெல்‌ தூணியும்‌,
ஸ்ரீவைகானசம்‌ ஒதுவிப்பான்‌ ஒருவனுக்கு நெல்‌ தூணியும்‌
இருக்கு வேதம்‌, அபூர்வம்‌ ஆகியவற்றை ஓதுவார்‌ அறுபதின்மர்‌,
சந்தோக காமம்‌ ஓதுவார்‌ இருபதின்மர்‌,
தலவகார சாமம்‌, அபூர்வம்‌ வாஜஸ நேயம்‌, போதாயன சூத்திரம்‌, சந்தியாஷாட சூத்திரம்‌ ஆகியவற்றை ஓதுவார்‌ ஐம்பதின்மர்‌ ஆக நூற்றுத்‌ தொண்ணூற்றுவர்க்குத்‌ தலா அறு நாழியாக நாள்‌ ஒன்றுக்கு நெல்‌ பதினொரு கலனே இருதூணிப்‌ பதக்கு நானாழியும்‌;
வேதாந்தம்‌ கேட்பார்‌ பதின்மர்,‌ சாத்திரம்‌ கேட்பார்‌ முப்பதின்மர்‌ ஆக நாற்பதின்மர்க்கு நெல்‌ ஐங்கலனே இருதூணிப்‌ பதக்காக நாள்‌ ஒன்றுக்கு நெல்‌ இருபத்தாறு கலனே ஐங்குறுணி
எண்ணாயிரம்‌ கல்வெட்டு 3:
ரூபாவதாரம்‌ கற்றுத்‌ தருவோர்க்கு மூன்று குறுணி நெல்விதம்‌ ஒரு நாளைக்குத்‌ தரப்பட்டது. ஆண்டுக்கு 10, 506 கலம்‌ நெல்‌ செலவிடப்‌ பெற்றது.
பொன்‌ வகையில்‌: வியாகர்ணம்‌ போதித்த பேராசிரியர்க்கு 8 கழஞ்சு பொன்‌ கொடுத்தனர்‌.
12 அத்தியாயம்‌, ஒரு அத்தியாயத்திற்கு ஒரு கழஞ்சு வீதம்‌ 12 அத்தியாயத்திற்கு 12 கழஞ்சு பொன்‌ கொடுத்தனர்‌.
13 பேராசிரியர்களுக்கு, ஒருவர்க்கு லு கழஞ்சு வீதம்‌ 6 லு கழஞ்சு பொன்னை வேத பேராசிரியர்களுக்கு அளித்தனர்‌.
70 சாஸ்திரர்க்கு ரூபாவதாரம்‌ பயின்றவர்க்கு ஒருவர்க்கு லு கழஞ்சு வீதம்‌ பொன்‌ அளித்தனர்‌.
மேற்கூறிய பொன்னும்‌ நெல்லும்‌ 45 வேலி நில வருவாயிலிருந்து ஒதுக்கப்பெற்றது.
அந்நிலங்கள்‌ மாம்பாக்கச்‌ சேரியான பவித்திர மாணிக்க நல்லூரில்‌ உள்ளது. இவ்வூர்‌ ஆனாங்கூராகிய இராஜராஜ நல்லூரின்‌ ஒரு பகுதியாகும்‌. மற்றும்‌ மேல்‌ கூடலூர்‌ புருஷ நாராயண நல்லூரிலும்‌ உள்ளது.
அரசன்‌ இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில்‌ காளி ஏகாம்பரனார்‌ என்பவர்‌ தலைமையில்‌ கூட்டம்‌ கூடி, அரசு ஆவண பொத்தகத்தில்‌ 45 வேலி நிலங்களைப்‌ பயிர்‌ செய்யும்‌ குடிகள்‌ 1/16 மாவுக்கு ஒரு பதக்கு வீதம்‌ செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. நானாழியாக ஆண்டு ஒன்றுக்கு 9525 கலம்‌ நெல்‌ ஒதுக்கப்பெற்றது.

No comments:

Post a Comment