800 வருட பழமையான பெருமாள் கோவில் மீது சென்னை மெட்ரோ வழித்தடத்திட்டம். அருகில் உள்ள அம்மன் கோவில் குளத்தில் மெட்ரோ வழித்தட தூண்!
சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது 800 வருடங்கள் பழமையான ஸ்ரீ சுந்திரவரதராஜப் பெருமாள் கோவில். இந்த திருக்கோவிலுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலம் மற்றும் கோவில் குளத்தை ஒரு முஸ்லிம் பார்ட்டி திருட பார்த்தது. பல வருட நீதிமன்ற போராட்டம் பின்பு முஸ்லிம் பார்ட்டி விரட்டப்பட்டது. ஆனால் இந்த நிலங்கள் தாலுக் போர்ட் பெயரில் இருப்பதால் இந்த நிலங்களை கோவிலின் பெயருக்கு மாற்ற முயற்சி நடந்து வருகிறது. கோவில் குளத்தையும் மீட்க முயற்சி நடந்து வருகிறது.
ஸ்ரீ சுந்திரவரதராஜப் பெருமாள் கோவிலின் அருகில் உள்ள காளியம்மன் கோவில் குளமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த குளத்தை மீட்கவும் முயற்சி நடந்து வருகிறது.
நிற்க! நிலைமை இப்படி இருக்க இப்பொழுது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
சென்னை மெட்ரோ ஆற்க்காடு சாலை வழியாக செல்லும் வழித்தடம் 4 ( Corridor 4) திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை கொடுக்க போவதாக சில நாட்கள் முன்பு அறிவித்தது.
விருகம்பாக்கத்தில் தான் கோயம்பேட்டில் இருந்து காளியம்மன் கோவில் சாலை வழியாக வரும் மெட்ரோ வழித்தடம் 5 ( Corridor 5) வில் போல வளைந்து ஆற்க்காடு சாலையில் உள்ள வழித்தடம் 4 கை ( Corridor 4) சந்திக்கிறது.
இங்கு தான் பிரச்சினை எழுகிறது.
முதலில் சென்னை மெட்ரோ வழித்தடம் 5 யை காளியம்மன் கோவில் சாலை மற்றும் சில தனியார் நிலங்கள் வழியாக வழித்தடம் 4 வுடன் சேர்க்க திட்டமிட்டிருந்தது. இப்பொழுது திடீரென்று வழித்தடம் 5 யை கோவில் மீதும், அருகில் உள்ள குளம் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் மீதும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் சிக்கன நடவடிக்கை தான். அரசு பெயரில் உள்ள கோவில் நிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தில் உள்ள கோவில் குளத்தில் மீது வழித்தடம் அமைத்தால் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாமே!
ருபாய் 61,000 கோடி திட்டத்தில் 5 -10 கோடி ருபாயை மிச்சப்படுத்தி இந்துக்களின் மனதை புண்படுத்தி சென்னை மெட்ரோ என்ன சாதிக்க போகிறது?
இந்து அறநிலையத்துறறையோ வழக்கம் போல தூங்குகின்றது!
இதே போலத்தான் முன்பு சென்னை மெட்ரோ, அசோக் நகரில் உள்ள ஸ்ரீ மல்லிகேஸ்வர் கோவிலையே எடுத்து கொள்ள முயன்றது. சிட்டிசன் கார்ட் ரவிச்சந்திரன் போன்ற சமூக ஆர்வலர்களின் முயற்சியால் சென்னை மெட்ரோ திட்டத்தை மாற்றியது.
இப்பொழுது சென்னை மெட்ரோ வழித்தடம் 5 திட்டத்தை மாற்ற உங்கள் உதவி தேவைப்படுகிறது.
கீழே உள்ள மாதிரி மின்னஞ்சல் படிவத்தை வைத்து நீங்கள் உடனடியாக சென்னை மெட்ரோ மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பவும்.
நகலை sivansothu1@gmail.com அனுப்பவும்.
++++++++
https://drive.google.com/file/d/1cZ6hzge-uER9zoa12XpDQzSDrq7Tts5Q/view?usp=drivesdk
+++++++++
மின்னஞ்சல் முகவரி: chennaimetrorail@cmrl.in
நகல்: commr.hrce@tn.gov.in, sivansothu1@gmail.com
Sub: சென்னை மெட்ரோ வழித்தடத்தி 5 னால் VIADUCT 3 ( ECV-02) ஸ்ரீ சுந்திரவரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் குளத்திற்கு பாதிப்பு
அனுப்புநர்:
உங்கள் பெயர்
உங்கள் முகவரி
தொலைபேசி எண்
பெறுநர்:
மேனேஜிங் டைரக்டர்
சென்னை மெட்ரோ லிமிடெட்
பூந்தமல்லி நெடுஞ்சாலை
கோயம்பேடு
சென்னை 107
நகல்:
ஆணையர்
இந்து சமயமஅறநிலையத்துறை
உத்தமர் காந்தி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை 34
ஐயா,
சென்னை மெட்ரோ வழித்தடம் 5 (Corridor 5)VIADUCT 3 ( ECV-02) 800 வருட பழமையான ஸ்ரீ சுந்திரவரதராஜப் பெருமாள் கோவில் மேலும், வழிதட தூண்கள் அருகில் உள்ள அம்மன் குளத்திலும் அமைக்கப்படவுள்ள தங்கள் திட்டத்தை கண்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திருக்கோவிலின் மேல் மெட்ரோ வழித்தடம் செல்வது ஆகம சாஸ்திரத்திற்கு புறம்பானது. கோவில் தெய்வ சக்தியை குறைக்கும் செயலாகும். ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் குளத்தில் தூண்கள் எழுப்பப்பட்டால் அந்த குளத்தை மீட்க முடியாமல் போய்விடும்.
கோவிலுக்கு சொந்தமான நிலம் இப்பொழுது தாலுக் போர்ட் பெயரில் இருந்தாலும் அறநிலையத்துறை சட்டம் பிரிவு 34 படி மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும்
ஆகவே தயவுகூர்ந்து தாங்கள் மெட்ரோ வழித்தடம் 5 (Corridor 5)VIADUCT 3 ( ECV-02) திட்டத்தை மறுபரிசீலனை செய்து கோவிலுக்கும் குளத்திற்கும் பாதிப்பு ஏற்படாதவாறு மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
No comments:
Post a Comment