குன்றக்குடி அடிகளார் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும், அவற்றில் அவர் முழுமையாக ஈடுபடவில்லை.அவர் கட்டுப்பாட்டில் உள்ள திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோயில் போன்றவற்றில் ஶ்ரீருத்ர ஜபம் முதலான வைதிக ஶைவ பரமான விஷயங்களைத் தான் அவர் நடக்க அனுமதி அளித்தார். அவர் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச தேவஸ்தானங்களிலும் தமிழ் வழி அர்ச்சகரை நியமிக்கவில்லை.
மார்க்சிய ஆதீனகர்த்தரின் மழுப்பல்!
"உமது இனத்தார் தவிர வேறு இனத்தாரை ஆதீனம் ஆக்குவீரா?" குன்றக்குடி ஆதீனகர்த்தரிடம் மதுரையில் சின்னப்பா என்ற பேராசிரியர் கேட்டார். "நான் வண்ணார் குலத்தவன், என்னை உங்கள் அடுத்த பட்டமாகத் தேர்ந்து எடுங்கள்" என்று கோரியதற்கு, அந்த மார்க்சிய ஆதீனகர்த்தர் மழுப்பினார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் VHP நடத்திய துறவியர் மாநாட்டுக்கு நந்தனார் மடத்துத் துறவியை அழைக்கக் கூடாது என்று சொன்ன ஈவெரா விசிறி குன்றக்குடி அடிகளார்.
குன்றக்குடி அடிகளார் ஒரு கம்யூனிஸ்ட்.
இந்தோ சோவியத் கலாசாரக் கழகம்(ISCUS), கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற CPI சார்ந்த அமைப்புகளில் கௌரவப் பொறுப்புகளை வகித்தவர்.
CPI ல் பிரிந்து CPM பிரிந்து போனதில் அவருக்கு வருத்தமுண்டு. மேலும் CPM தலைவர்கள் பலர் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்ரமணியன், ஆர்.உமாநாத், டி.கே.ரங்கராஜன் போன்ற பிராமணர்கள் தலைவர்களாக இருந்ததை ரசிக்காதவர்!
1979 ல் எம்.ஜி.ஆர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் மாதம் 750 ரூபாய் வருமானம் (ஆண்டுக்கு 9000/ ரூபாய்) என்று பொருளாதார அடிப்படை கொண்டு வந்த போது அதை வரவேற்ற ஒரே கட்சி CPM.
அப்போது எம்.ஜி.ஆர் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அடிப்படை கொண்டு வந்ததை எதிர்த்து திராவிடர் கழகம், திமுக, CPI (இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) இணைந்து மாநாடுகளை நடத்தினார்கள். அப்போது பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு கூட்டத்தில் பேசியவர் குன்றக்குடி அடிகளார். அப்போது CPI தலைவர் தா.பாண்டியனை "செம்படை தளபதி" என்று அழைத்தார்!
CPM எடுத்த நிலைபாட்டை அடிகளார் தாம் வன்மையாகக் கண்டித்ததற்குக் காரணம் அதன் "பிராமணத் தலைமை" தான் என்றும் பேசினார்.
அடிப்படையில் பெரியாரிஸ்ட் - கம்யூனிஸ்ட் - பிராமண துவேஷி .
சசீந்திர ஆச்சாரி
மீன் விற்றமடாதிபதி இவர், அதை பெருமையாக பேசுபவர்களும் உண்டு.
No comments:
Post a Comment