Sunday, August 7, 2022

இந்தியக் தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கையா

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட வெங்கையா தேசியக் கொடியின் பல மாதிரிகளை வடிவமைத்தார். 1921 ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் மகாத்மா காந்தி ஒரு வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தார். மகாத்மாவுக்கு பிங்காலி வெங்கையா வழங்கிய பதிப்பில் இரண்டு கோடுகள் ( சிவப்பு மற்றும் பச்சை) மற்றும் மையத்தில் காந்திய கதர் ராட்டை சக்கரம் இருந்தது. காந்தியின் ஆலோசனையின் பேரில், வெங்கய்யா கொடியில் ஒரு வெள்ளை பட்டையைச் சேர்த்தார். அந்த தினத்தில் இருந்து தான் இந்தியாவிற்கான கோடி மூவர்ணக் கோடியாக மாறியது.

1921 முதல் அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பிங்காலி வெங்கையா கொடி முறைசாரா முறையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது மகாத்மாவின் அகிம்சை சுதந்திர இயக்கத்தின் சின்னமாக மாறியது.
1947-இல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத் அவர்களைத் தலைவராகவும் மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி. ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரையும் குழுநபர்களாகக் கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதித்தது. 23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம் மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 14, 1947-இல் முடிவடைந்தது. அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் கொடியைச் சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன் இருந்த சக்கரத்திற்கு பதில், சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப் பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி முதல் முதலாகச் சுதந்திர இந்தியாவில் ஆகஸ்ட் 15, 1947-ஆம் நாள் கொடியேற்றப்பட்டது. 

இந்திய தேசியக் கொடிஅமைப்பை இறுதியாக்க 74பேர் கொண்ட குழு அமைத்திட அவர்கள் காங்கிரஸ் பயன்படுத்திய மூவர்ணக் கொடியில் இருந்த ராட்டைக்கு பதிலாக தர்ம சக்கரம் மாற்றப்பட்டது, இந்த மாற்றத்தை குழுவினர் முடிவு; தனிநபர் சுரையா தியாப்ஜி என அரசாங்க ஆவணத்தில் இல்லவே இல்லை. சுரையா பத்ருதின் தியாப்ஜி பிரதமர் அலுவலகத்தில் ஐசிஎஸ் அதிகாரி, கணவர் பத்ருதின் தியாப்ஜி பாம்பே முதல் தலைமை நீதிபதி என எல்லாம் சமூக வலைதளங்களில் உள்ள செய்திகள் எல்லாமே கட்டுக் கதைகளே.

No comments:

Post a Comment