Saturday, August 6, 2022

திருவஞ்சைக்களம் சேரமான் பெருமாள் நாயனார் - சுந்தரமூர்த்தி நாயனார் தோழர்

சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களம் கோவிலில் இருந்து வெள்ளை யானையில் கைலாயம் செல்லத் தொடங்க தோழர் சேரமான் பெருமாள் குதிரையில் தொடர அனுக்கிரகம் செய்தவை பெரிய புராண பாடல் தரும் புராண வரலாற்று கதை
 கேரளா வரலாற்று அறிஞர்கள் இந்த சேர அரசர் 'இராம ராஜசேகர வர்மா' (பொஆ870 -884)என கணித்து உள்ளனர். இவர் சைவர், இவருடைய தந்தை 'ஸ்தாணு ரவி குலசேகரன்' (பொஆ844-870) எனும் குலசேகர ஆழ்வார்.
 கொடுங்கல்லூர் பகுதி முழுவதும் கடலுக்குள் இருந்தவை 8ம் நூற்றாண்டு இறுதியில் கடல் உள்வாங்கிட(இதே காலத்தில் கிழக்கே கடல் வெளியே வர பல்லவர் கால சாளுவன் குப்பம் முருகன் கோவில் கடலில் மறைந்தது) உருவான நிலப்பரப்பு என இந்திய தொல்லியல் துறை அகழாய்வு நிரூபித்து உள்ளது.



இந்த சேரமான் பெருமாள் சிற்பம் தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது. 'திருக் கையிலாய ஞான உலா' என முழுவதும் வெண்பாவில் பாடிய நூல் உள்ளது; இதில் இரண்டு திருக்குறள்(பொஆ9ம் நூற்றாண்டு முதல் காலாண்டு) கையாளப்பட்டுள்ளது.  இவர் பெயரிலான ஆதிஉலா எனும் நூலின் மொழிநடை சொல் பயன்பாடு கொண்டு அதை 11ம் நூற்றாண்டு நூல் என்பர் தமிழியல் அறிஞர்.



சேரநாட்டு மகோதையபுரத்து மன்னனாகவும் மிகச்சிறந்த சிவனருட்செல்வராகவும் திகழ்ந்த சேரமான் பெருமாளைப் தொடர்ந்து பார்த்து வருகிறோம், அதன் நிறைவுப் பதிவாக அழகிய சேரமான் பெருமாள் ஓவியத்துடன் இந்த சுவைமிகுந்த செய்தியைப் பார்ப்போம்.
சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார், தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார் என்பது பெரியபுராண செய்தி.
இவர் கயிலை பாடியதாக நம்பப்படும் நூல் திருக்கயிலாய ஞான உலா அல்லது ஆதியுலா, தமிழில் பாடப்பெற்ற முதல் உலா நூலாக ஆதியுலா கருதப்படுகிறது, பார்புகழும் மன்னனாகவும் சிறந்த தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்திருக்கிறார் சேரமான் பெருமாள்.
தலைவன் உலா வர அவனைக் கண்டு பேதைமுதல் பேரிளம் பெண்வரை பல வயதுடைய பெண்கள் தலைவன் மேல் மையல் கொண்டு மனதை பறிகொடுத்து நிற்பதை பாடுவது உலா, இந்த இலக்கியத்தை அழகாக தமிழில் செய்த சேரமான் பெருமாள் அதில் இரண்டு திருக்குறட் பாக்களை அப்படியே கையாண்டிருக்கிறார் என்பது சுவையான செய்தி.
இந்த ஆதியுலாவின் அடிகள் (136-138) அரிவை பெண் அலங்கரித்துக்கொண்டு நிற்பதைப் பற்றிக்கூறுகிறது இதில் "இல்லாரை' (752) என்று தொடங்கும் பொருட்பால் குறள் அப்படியே இடம் பெற்றுள்ளது













"இல்லாரை எல்லாரும் எள்குவார் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு' என்னும் -சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள்'' (136-138) ஆதியுலா
பேரிளம்பெண்ணின் வருணனையில் காமத்துப்பால் குறளை (1101) அப்படியே சேரமான் பெருமாள் மேற்கோள் காட்டியுள்ளார்.
"பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல்
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள' என்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள்'' (172-174)
இந்த குறிப்பு மிகவும் அறிதானது, திருக்குறள் மிகவும் சிறப்பாக சேரமான் காலத்தில் வழங்கப்பெற்றிருந்ததும், இருகுறட் பாக்கள் சேரமான் பெருமாள் நாயனாரின் புலமையை மட்டுமன்றித் திருக்குறள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினையும் நமக்கு காட்டுகின்றன.
தாராசுரம் கோவில் சிற்பம்



வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam - VVS

டிமாத ஸ்வாதி நாளில் !
ஒரு ஆடி மாத ஸ்வாதி நட்சதிரத்தில் சுந்தரர் வெள்ளை யானையிலும் சேரமான் பெருமாள் வெள்ளைக்குதிரையிலும் திருவஞ்சைக்களத்தில் இருந்து கயிலை சென்றதாக நம்பிக்கை, நமது பக்கத்தில் சேரமான் குறித்து எழுதிய பதிவுகளின் தொகுப்பு இதோ இந்த ஆடிமாத ஸ்வாதி நாளில் !
"உடைய நம்பிக்கு ஒல்லென்றருளினபடி" - சோழ சிற்பிகள் வடித்த #சேரமான் 1
"செரமான் பெருமாள் கதை" - தாராசுர சிற்பமும் கல்வெட்டும்!!
சோழ சிற்பிகள் வடித்த #சேரமான் - 2
பாண்டியர் ஆட்சியில் திருப்பூந்துருத்தி சேரமான் பெருமாள் சிற்பம் - சில இலக்கிய குறிப்புகள்!
“அஞ்சைக்களத்தில் இருந்து கயிலைக்கு” - சேரமான் பெருமாள் சிற்பங்களும் ஓவியமும் ! #சேரமான் 4
திருக்குறளை மேற்கோள் காட்டிய சேரமான் பெருமாள் !
சேரமான் 5

No comments:

Post a Comment