Friday, August 12, 2022

கொங்கு வேளாள கவுண்டர்கள் அந்தணர் கொண்டு ஹோமம் வளர்த்து திருமணம்

கொங்கு நாட்டார் & காணியாளர் திருமணம் - Jaivanth Selvakumar Gounder


கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமணத்தை நடத்தி வைக்கும் முறையில் அந்தணர் கொண்டு ஹோமம் வளர்த்து அக்னி சாட்சியாகவே திருமணம்

கொங்கு நாட்டார் & காணியாளர் திருமணங்களில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய 96 சீர்களின் வரிசையை மிகுந்த பேரெடுத்த அருமைக்காரரே தனது நூலில் பதிவு செய்துள்ளார்... 96 சீர்களில் 58 ஆவது காணி குருக்களை வைத்து ஓமம் வளர்த்தல்...

 

காணி குருக்கள் இல்லாத பட்சத்தில் கடைசிக்கு வேறு அதிசைவரையோ அல்லது அதுவும் முடியாத பட்சத்தில் வேறு யாரையாவது வைத்து வேட்டல் (வேள்வி) செய்து தான் திருமணம் நடைபெற வேண்டும்...
96 சீர்களில் குதிரை ஏறுதல், வெண்சாமரம் வீசப்படுதல் முதற்கொண்டு உண்டு... முழுவதையும் படித்துப் பாருங்கள்... இது சங்க கால தமிழர் வாழ்வியல் தொடர்ச்சியாகும்...
96 சீர்கள் என்பவை இன்னமும் விரிவாக 108 சீர்களாக கவுண்டர்கள் செய்வதும் உண்டு...




கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமணத்தை நடத்தி வைக்கும் அருமைக்காரர்களுக்குள்ளே டுமீல் கோஷ்டிகள் தங்கள் காழ்ப்புணர்ச்சி தத்துவங்களை சொருக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...
திருமணத்தில் வேள்வியே கூடாது என்பது போன்ற புதிது புதிதாக கதைகட்டுகிறார்கள்... ஒரு சிலர் சில தலைமுறைகளாக திருமணத்தின்போது இதை செய்யாது விட்ட கேவலத்திற்கு மொத்த சமுதாயத்தையும் அவர்கள் போலவே மாற்ற முயற்சிக்கிறார்கள்...
இந்த அவலத்தை சகிக்க மாட்டாது தான் இப்பதிவு...


No comments:

Post a Comment