மாநில பாடத்திட்டத்தில் முழுவதும் கட்டுக் கதைகள்
தமிழ்நாடு 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஈ.வெ.ராமசாமியார் பற்றிய குறிப்பு.
வைக்கம் போராட்டம்
‘ சமூக ஏணிப்படிகளில் உள்ள கீழ்நிலைச் ஜாதிகளில் உள்ள “ புலையர்கள் “ அன்றைய உயர் ஜாதி “ நம்பூதிரிகளிடமிருந்து “ 90 அடிகள் தள்ளி நின்றும் , நம்பூதிரிகளின் ஜாதியை விட கீழே உள்ள “ நாயர் ‘’ ஜாதி மக்களிடம் இருந்து 64 அடிகள் இருந்தும் தள்ளி நிற்க வேண்டும் என்ற சட்டங்கள் இருந்தன . இத்தகைய சட்டங்களை மீறுபவர்கள் மீது தண்டிக்கப்படும் சூழலும் இருந்தது. இந்த சமூகச் சூழலின் பின்னணியிலிருந்து , ‘ வைக்கம் ஆலயத் தெரு விலக்கம் ‘ பற்றிய விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் .
இந்த நிலையை மாற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியான ஈழவ சமூகத்தின் தலைவரான திருவிதாங்கூரைச் சார்ந்த T K மாதவன் அவர்கள் உறுதி பூண்டார் . 1923 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற “ இந்திய தேசிய காங்கிரஸ் “ இன் மகாசபை கூட்டத்தில் வைக்கம் ஆலய தெருப் பிரச்சனையை எடுத்துக்கூறி, ஒரு சத்தியாக்கிரக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசிட; “ மஹாத்மா ” காந்தி போராட்டத்துக்கு தன் ஆசி சொல்லி அனுமதி அளித்தார் .
இந்தப் போராட்டம் , பின்னர் வந்த ‘ ஆலய நுழைவுப் போராட்டம்’ அல்ல , மாறாகத் தாழ்த்தபட்ட மக்கள் உட்பட ஆலய மதில் சுவரை ஒட்டிய தெருக்களை , அனைத்துப் பிரிவு மக்களும் பயன்படுத்திக் கொள்ள நடக்க இருக்கும் போராட்டம் ஆகும் . '1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் போராட்டம் ஆரம்பம் ஆனது . இந்தப் போராட்ட வடிவம் பின் வருமாறு இருந்தது :
மூன்று சத்தியாகிரகிகள் - ஒரு புலையர் , ஒரு ஈழவர் மற்றும் ஒரு நாயர் ஆகிய மூவரும் அமைதியாகத் தெருவைக் அடைத்துள்ள அடைப்பை மீறி செல்வர் . இதில் நாயரை மட்டும் அனுமதித்த காவல்துறை , மற்ற இரு ஜாதியைச் சேர்ந்தவர்களை மேலே செல்ல அனுமதிக்கவில்லை . மீறிச்செல்ல முயற்சி செய்த போது , மூவரையும் காவல்துறை கைது செய்து சிறையில் தள்ளியது . இது முடிந்தவுடன் , அடுத்த அணி . அந்த அணி , கைது செய்யபட்டப் பிறகு அடுத்த அணி . .இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் இருந்து வந்த தொண்டர்கள் கலந்து கொண்டு கைதானார்கள் .
இந்த தொண்டர் அணியில் ஒருவராகத்தான் , அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்த ஈ.வே. ரா வும் கலந்து கொண்டு சிறை சென்றார் .
ஈவெராவை கேரளா வைக்கம் போராட்டத்தில் ஒவ்வொரு நாள் ஒரு தலைவர் என ஒருநாள் மட்டுமே அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவு கீழ்ப்படிய கலந்து கொண்டார். வைக்கம் போராட்ட முயூசியத்தில் ஈ.வெ.ரா பெயரோ, படமோ கூட வைக்கும் அளவிற்கு பங்கு இல்லை.
ஈரோட்ட்டில் ஈவெரா- குடும்பம் கீழான பல கோவிலில் ஒன்றில் கூட பட்டியல் சமூகம் அனுமதிக்கவே இல்லை. தமிழகத்தில் பட்டியல் சமூகத்தை கோவில் நுழைவு மதுரை வைத்தியநாத ஐயர் நடத்தியபோது அதை ஜாதிவெறி பிடித்து எதிர்த்தவர் ஈவெரா.
ஈ.வெ.ராமசாமியார் வாழ்நாளில் ஒரு ஆதிக்க ஜாதி வெறியராக பட்டியல் சமூக மக்களை இழிவு படுத்தியும், தமிழின் மூத்த தொல்குடி அந்தணர்கள் மீது நாசிய கொலை வெறிப் பேச்சுகள் பேசியதற்காக ஜெயிலும் சென்றவர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஈ.வெ.ரா பேச்சு & அறிவற்ற செயல் மூடத்தனமானது
ஈ.வெ.ராமசாமியார் திருச்சியில் இறைவன் பிள்ளையார் சிலை உடைத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது சந்திக்க தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. //ஈ.வெ.ராமசாமியார் பேச்சு மென்மையாக கூறுவதனால் மூடத்தனமானது செயல் அறிவற்றது தொடர்ந்தால் கைது எனத் தீர்ப்பு
எந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றார் ? வைக்கம் சத்யாக்கிரத்திற்கா ? எந்த மக்கள் தமிழில் பாராட்டி பெயர் வைத்தனர் ?
No comments:
Post a Comment