முப்புரம் எரித்த திரிபுராந்தக மூர்த்தி - சங்க இலக்கியங்களில் சிவன்
இது பறக்கும் கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் கொண்ட தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற்காக எடுத்த கோலம்.
ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல புறம் 55
உயர்ந்த இமய மலையைப் வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல்
மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!
வடமொழி மகாபாரத்தின் அநுஷாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் இறைவன் திரிபுரம் எரித்த புராணம் விளக்கப் பட்டிருக்கிறது.
கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.
திருபுராந்தகர் சந்தனச் சிற்பம் (மைசூர்)
கலை வடிவங்களில் மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர், கொடித்தூண், காஞ்சி கைலாசநாத கோயில் சிற்பம், வடக்குச்சுவர், சோழர்கால கோயில்களின் தேவகோட்டங்கள், நாயக்கர் காலத்தில் தூண்கள் என்பவற்றில் காணலாம்.
கொடும்பாளூர் விமானத்தில் திரிபுர தகனக் காட்சி
தஞ்சைக்கோயில் கருவறையின் மேல் நிலையில் திரிபுராந்தகர் புராண வரலாற்றுத் தொடர் சிற்பம்.
சிதம்பரக் கோயில் கலைக்கோபுரங்களில் திரிபுராந்தகர் தேவியுடன் வில்லேந்தி நிற்கும் கோலம்.
திருநல்லம் கோணேரிராசபுரம் கோயிலுக்கு செம்பியன் மாதேவி திரிபுராந்தகரையும் தேவியையும் செப்புத்திருமேனியாக வழிபாட்டிற்காகத் தானமளித்திருக்கிறார்.

No comments:
Post a Comment