Sunday, December 21, 2025

சங்க இலக்கியத்தில் ராவணன் கலித்தொகை- 38 -இராவண அனுக்கிரக மூர்த்தி

 இராவண அனுக்கிரக மூர்த்தி; கலித்தொகை- 38 காட்டும் உவமை செழிப்பான நாட்டைக் காட்ட உவமையாக கூறப்பட்டு உள்ளது. 

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5

இமய மலையை வில்லாக வளைத்த சிவபெருமான், ராமபிரான் முன்னோர் மோட்சத்திற்காக  கங்கை ஆறு பூமிக்கு  பாய தன் தலை மேல் ஏற்றதால் ஈரமான சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை அரக்கர் தலைவன் இராவணன் தொடி அணிந்திருந்த தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அம்மலையை எடுக்க முயல; முடியாமல் துன்புற்றான். அதுபோல ஒரு நிகழ்வு. வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை. மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி முழங்கியது. இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன் நீ. நாட! கேள்.  

 
ராமாயண உத்திர காண்டத்தில் இந்த கதை உண்டு. தன் கை சிக்கிய போது தசக்ரீவன் பெருத்த கூச்சல் எழுப்பியதால் ராவணன்( உயர் குரலோன்) எனப் பெயர் வந்தது

திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்- இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே” 

ராவணன் கைலாய மலை மீது தன் புஷ்பக விமான பரக்க இயலாமல் போக அங்கு இருந்த நந்தியிடம் காரணம் கேட்க சிவபெருமான் - உஅமை அம்மையோடு உள்ளதைக் கூற - ராவணன் கேலி செய்ய நந்தி குரங்குகளால் அழிவாய் எனச் சாபம் கொடுத்தார், ராவணன் கைலாயத்தையே தூக்க முயல அங்கு இருந்த உயிர்கள், குலுங உமை அம்மையும் கலங்க சிவபெருமான் தன் விரலால் அழுத்த - ராவணன் உண்மை உணர்ந்து வருந்து சிவபெருமானை வணங்கி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிட, சிவபெருமானிடம் தன் நித்திய வணக்கத்திற்கு ஆதம லிங்கம் தர - அதை எடுத்துச் செல்லும் வழியில் கோகர்ணத்தில் கீழே வைக்க அங்கேயே அந்த லிங்கம் உள்ளதாம்.

1. ராவண அனுக்கிரக மூர்த்தி

2.  கம்போடியாவில் பந்தியாய் சிரே 10ம்  நூற்றாண்டு  சிவாலய சிற்பம்

3 எல்லொரா சிற்பம்

4.  திருவண்ணாமலை

5. ஹொய்சாளர் அளபேடு

No comments:

Post a Comment