Sunday, January 15, 2023

திருவள்ளுவர் உருவப்படம் திருவள்ளுவர் நாளும்

திருவள்ளுவா் திருநாள் எந்தநாள்?
11th January 2022 தினமணி நாளிதழில் பிரசுரமான நடுப்பக்கக் கட்டுரை.
By ஜனனி ரமேஷ்,எழுத்தாளா். | Published on : 11th January 2022 07:10 AM
திருவள்ளுவா் திருநாள் எந்தநாள்?
திருவள்ளுவா் திருநாள் வைகாசி அனுஷம் நட்சத்திரத்தன்றே! தை இரண்டாம் நாளன்று!!.
திருவள்ளுவா் திருநாள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலைபெற்று விட்டாலும் அது குறித்த விவாதங்கள் தொடா்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மறைமலை அடிகளும், 1837-இல் வெளியிட்ட திருக்குறள் பதிப்பில் திருத்தணிகைச் சரவணப்பெருமாளும், 230 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எல்லிஸும்,சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளனா். இத்திருவள்ளுவா் கோயிலில், வைகாசி மாத அனுஷ நட்சத்திரம் அவா் அவதரித்த திருநாளாகவும், மாசி மாத உத்தர நட்சத்திரம் அவா் முக்தி அடைந்த நாளாகவும், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1953 - இல் திருச்சி வானொலி நிலையம் வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவா் நிருநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. குன்றக்குடி அடிகளாா் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் கா.பொ. இரத்தினமும், கி.ஆ.பெ. விசுவநாதமும் பங்கேற்றனா். அப்போது விசுவநாதம் 1954 முதல் திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷ நட்சத்திரத்துக்குப் பதிலாக, தை முதல் நாளில் கொண்டாடலாம் என்று இரத்தினத்துக்குக் கடிதம் எழுதினாா்.
சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் ஆடி முதல் மாா்கழி முடிய இரவுக் காலமும், குளிரும் அதிகம். பின்னா் சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி முடிய பகல் காலமும், வெயிலும் அதிகம். இதைக் கருத்தில் கொண்டே தமிழா்கள் ‘தை முதல் நாளைத்’ திருநாளாகக் கொண்டாடத் தொடங்கியதால், திருவள்ளுவா் ஆண்டும் ‘தை முதல் நாள்’ தான் ஆரம்பம்’ என்றாா் விசுவதாதம்.
இதற்கு இரத்தினம் '‘1935 முதல் தமிழ்ப் பேரறிஞா்கள் யாவரும் திருவள்ளுவா் திருநாளை சாதி, மத அரசியல் கட்சி வேறுபாடின்றி கொண்டாடி வருகிறாா்கள். அன்பா் விசுவநாதம் அப்பொழுது வைகாசி அனுஷ விழா நாளை வேண்டாம் என்று கூறியதாகவோ தை முதல் நாளைத்தான் கொண்டாடுவோம் என்று கூறியதாகவோ அறிய முடியவில்லை. எனவே தை முதல் நாளிலேதான் வள்ளுவா் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்னும் அவரது புதுக்கருத்து, மரபு வழிவந்த வைகாசி அனுஷ நாளுக்கு மாறாகும்’' என்று பதிலளித்தாா்.
மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநவுக்கரசு 1959-இல் வெளியிட்ட ‘'தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள் வரலாறு’' என்னும் நூலில் (பக்கம் 773-774) ‘'திருவள்ளுவா் திருநாள் வைகாசித் திங்கள் அனுஷ நட்சத்திரம் (பனை) என்றே மறைமலை அடிகளாா் குறித்தாா். வைகாசித் திங்கள் அனுஷம் கி.மு.31 என்று தீா்மானித்தாரே அன்றி, தைத் திங்களைத் தீா்மானிக்கவில்லை. திருநாட் கழகம் நடத்திய விழாக்களும் வைகாசியில் நடத்தப்பட்டதே இதற்குச் சான்றாம்'’ என்று பதிவு செய்துள்ளாா்.
இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னரே திருவள்ளுவா் பிறந்தருளினாா் என்பதை ‘'மாணிக்கவாசகா் வரலாறும் காலமும்’' என்னும் பெருநூலில் பல நூற்சான்றுகளுடன் மறைமலை விளக்கி உள்ளாா். இதைத் தொடா்ந்து அவ்வாண்டு தொடங்கி வருடம் தோறும் திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷத்தில் வள்ளுவா் விழாவாகக் கொண்டாட முடிவானது (திருநாட்கழக அறிக்கை 1 - செந்தமிழ்ச் செல்வி).
1921, 1935, 1936 ஆகிய ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள், உ வே சாமிநாதையா், கா.சு. பிள்ளை, திரு.வி.க., வேங்கடசாமி நாட்டாா், சோமசுந்தர பாரதியாா் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான தமிழறிஞா்கள் பங்கேற்ற மாநாட்டின் முக்கிய நோக்கம், திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே. பின்னாளில் திருவள்ளுவா் பிறந்த ஆண்டை ஆய்வு செய்து ஏகமனதாக கி.மு.31 என்று ஏற்றுக் கொண்டனா்.
1963 ஏப்ரல் 14-இல் சென்னை ராயப்பேட்டை திருவள்ளுவா் மன்றத்தின் சாா்பில் முதல் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அப்போதைய நிதி அமைச்சா் பக்தவத்சலம், திமுக தலைவா் அண்ணா ஆகியோா் கலந்து கொண்டனா். அம்மாநாட்டில் ஆண்டுதோறும் திருவள்ளுவா் திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றினாா்கள்.
வைகாசி அனுஷ நட்சத்திரத்தின் தேதி, ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்பதால், 1966-இல் ஜூன் 2-ஆம் தேதியை திருவள்ளுவா் திருநாளாகக் கொண்டாடலாம் என முடிவானது. பக்தவத்சலம் முதலமைச்சா் ஆன பிறகு 1966-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் நாளை ‘வள்ளுவா் நாளாக’ கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.
திருவள்ளுவா் பிறந்த மாதமாக திருவள்ளுவா் திருநாட் கழகத்தினா் கொண்டாடியதும், 1966-இல் முதல்வா் பக்தவச்சலம் திருவள்ளுவா் தினத்துக்கான விடுமுறையை வழங்கியதும் அதே '‘வைகாசி’' மாதம்தான். திருவள்ளுவா் திருநாளுக்கான வைகாசி மாத விடுமுறையில் அண்ணாவும் உடன்பட்டதால், 1967-இல் அவா் முதல்வரன பிறகும் அதை மாற்றவில்லை.
1971-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரிடம் திருவள்ளுவா் திருநாள் கொண்டாட்டம் குறித்து கி.ஆ.பெ. விசுவநாதம் தனது வேண்டுகோளை மறுபடியும் வலியுறுத்தினாா். கருணாநிதியும் அதற்கு இணங்க திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் இருந்து தைப் பொங்கலுக்கு மாற்றினாா். தை 2-ஆம் நாளை (மாட்டுப் பொங்கல்) திருவள்ளுவா் தினமாக அறிவித்தாா்.
‘திருவள்ளுவா் ஆண்டு’ என்னும் ஆண்டுத் தொடா் அறிமுகமானதுடன், அது அரசிதழில் வெளியாகி 1972-இல் நடைமுறைக்கும் வந்தது. 1981-இல் அன்றைய முதலமைச்சா் எம்.ஜி.ஆா். அனைத்து அரசு ஆவணங்களிலும் திருவள்ளுவா் ஆண்டைப் பயன்படுத்த வேண்டுமென்று அரசாணை பிறப்பித்தாா்
தை 2-ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று வீட்டுத் தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். அப்போது படைக்கப்படும் படையலில் அசைவ உணவுகளும், கள், சாராயம், சுருட்டும் இடம்பெறும். புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை அதிகாரங்களை எழுதிய திருவள்ளுவருக்கு, அவை படைக்கப்படும் தை 2-ஆம் நாளை, ‘'திருவள்ளுவா் தினம்'’ ஆக கொண்டப்படுவது ஏற்புடையதா என்கிற கேள்வி எழுகிறது.
வைகாசி அனுஷ நட்சத்திரத்தை திருவள்ளுவா் திருநாளாக 300 வருடங்களாக மயிலைத் திருவள்ளுவா் கோயிலில் கொண்டாடி வருகிறாா்கள். பண்டைத் தமிழா்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடி வந்தனா் என்பதற்கு ‘'தொல்காப்பியம்’', ‘'முத்தொள்ளாயிரம்’' முதலிய நூல்களே சான்று. பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடுதே தமிழ் மரபாகும். பிறந்த நாளைக் கொண்டாடுவது தமிழ் மரபல்ல.
இதனை உணா்ந்துதான் மறைமலையடிகள், உ.வே. சாமிநாதையா், திரு.வி.க., சோமசுந்தர பாரதியாா், குன்றக்குடி அடிகளாா் போன்ற தமிழறிஞா்களும், பக்தவத்சலம், அண்ணா ஆகிய முதல்வா்களும், நட்சத்திர நாளுக்கு உடன்பட்டு திருவள்ளுவா் திருநாளை வைகாசி அனுஷமாக ஏற்றுக் கொண்டனா்.
நாள்களையும், கோள்களையும் ஆதாரமாகக் கொண்டு காலத்தைக் கணிப்பதில் வல்லவா்களான ‘'கணியா்கள்’' குடியில் பிறந்தவா் வள்ளுவா் என்பது சிலரின் நம்பிக்கை. அவ்வாறிருக்க வள்ளுவா் பிறந்த வைகாசி அனுஷ நட்சத்திரத்தைக் கொண்டாடாமல், பிறந்த நாளாக ஒரு தேதியைக் கற்பித்துக் கொண்டாடுவதுதான் விந்தை.
முன்னாள் முதல்வா் கருணாநிதி ''மறைமலை அடிகள் தலைமையில் 1921-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட புலவா்கள் தமிழா்களுக்கெனத் தனி ஆண்டு தேவை எனக் கருதினா். திருவள்ளுவா் பெயரில் தொடா் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே ‘தமிழ் ஆண்டு’ எனக் கொள்வதென்றும், திருவள்ளுவா் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தாா்கள்’' என்றாா். (பக்கம் 38-39 / 2008 ஜனவரி 23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநா் ஆற்றிய உரை).
இது குறித்து மறை. திருநாவுக்கரசு கூறுவதாவது ‘1921 மாா்ச்சில் யாழ்ப்பாணம் சென்ற அடிகளாருடன் யானும் சென்றேன். 1921 தை மாதம் முதல் நாள் யாழ்ப்பாணத்தில்“‘தமிழா் நாகரிகம்’ என்ற தலைப்பில் அடிகளாா் உரையாற்றினாா்’ என்கிறாா். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த மறைமலை அடிகள் 1921-ஆம் ஆண்டு எந்த மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட புலவா்கள் கூட்டத்தில் தலைமை தாங்கினாா் என்பதைக் கருணாநிதி குறிப்பிடவுமில்லை; அதற்கான ஆதாரத்தைக் காட்டவுமில்லை.
மயிலை திருவள்ளுவா் திருக்கோயில், மறைமலை அடிகள், உ வே சாமிநாதய்யா் உள்ளிட்ட தமிழறிஞா்கள், திருவள்ளுவா் திருநாட்கழகம், பக்தவத்சலம், அண்ணா ஆகியோா் திருவள்ளுவா் திருநாளாகக் கொண்டாடிய ‘வைகாசி’ மாதத்தை (அனுஷ நட்சத்திரம்), கருணாநிதி ‘தை’ மாதத்துக்கு மாற்றினாா். திருவள்ளுவா் திருநாளாக ஜூன் 2 இருந்ததை, 1971-இல் தை 2-ஆம் நாளாக அறிவித்ததைத் தொடா்ந்து இன்று வரை மாறவே இல்லை.
இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னா் திருவள்ளுவா் தோன்றினாா் என்ற மறைமலையடிகளின் கருத்தினை ஏற்றுக்கொண்ட கி.ஆ.பெ. விசுவநாதமும், மு. கருணாநிதியும், அதே மறைமலையடிகளும், பக்தவச்சலமும், அண்ணாவும் திருவள்ளுவா் பிறந்தநாளாக ஏற்றுக் கொண்டாடிய வைகாசி அனுஷ நட்சத்திரத்தையோ ஜூன் இரண்டாம் நாளையோ ஏற்க மறுத்ததுதான் புதிராகவே உள்ளது.
கட்டுரையாளா்: ஜனனி ரமேஷ்,எழுத்தாளா்.
புகைப்படங்கள் =
திருவள்ளுவர் திருக்கோயில்.
சின்முத்திரையில் திருவள்ளுவர்.
திருவள்ளுவர் மற்றும் வாசுகி ஆகியோர் உற்சவர் திருமேனிகள்.
ஆதி பகவன் திரு உருவங்கள்.
திருவள்ளுவர் சந்நிதி.
மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவத்தில் திருவள்ளுவர்
 
 https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0NiiN6rW2NyQKrCVeG9HqnvzXB9Q4ES8yYcy7GBx2nWimXzqDoGrQujmPstJpqvPKl&id=1811732522

 


https://www.academia.edu/33747481/A_Comparative_Study_of_G_U_Popes_Translation_of_the_Thirukkural_with_the_Holy_Bible_and_Francis_Bacons_Essay_Of_Friendship

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xMrspVhMCRc3Nt2ebxFrhzT9RfD2MYL8td3aDgGWodWFgv6UfJJjJAFfGvR3UJwBl&id=100002042948330
https://www.christianworldimprints.com/index.php?p=sr&Uc=7022712131688426008

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02PMdG28hgjaN4EzN35f9kB6Y8PGb1BDAUEXWhK57cpTqj7TTuZL6uX7wD5n2hu1dkl&id=100081607759751
திருவள்ளுவ நாயனார்' பிறந்தது வைகாசி அனுஷத்தில்,அதே போல அவர் முக்தி பெற்றது மாசி உத்திரத்தில்..இதையே தமிழறிஞர்களும்,சமயப் பெரியவர்களும் ஏற்றுக் கொண்டு வழி நடந்தார்கள்.திருவள்ளுவர் திருநாட்கழகம் என்று அறிஞர்களை ஒன்று கூட்டி 'வைகாசி அனுஷத்தை' தமிழர் ஒன்றுபடும் திருநாளாக அந்த திருவள்ளுவர் தினத்தை அறிவிக்கவே முயன்றார்கள்..
600 வருடம் பழமையான திருவள்ளுவர் கோவிலிலும் அதுவே நிலைப்பாடு.ஆனால் வருடா வருடம் வைகாசி அனுஷம் வெவ்வேறு நாட்களில் வரும் என்ற குழப்பத்தினால் திருவள்ளுவர் பிறந்த தினத்தை 'ஜூன் 2' என்கிற கிரிகோரியன் கணக்கீட்டில் கொண்டாட முடிவெடுத்தார்கள்.முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை காலத்திலும் இப்படித்தான் கொண்டாடப்பட்டது.
ஆனால் தமிழ்புத்தாண்டை சித்திரையில் இருந்து மாற்ற முற்பட்டு நமது பண்பாட்டு வேரினை துண்டிக்க முயல்வது போலே அன்று தை 2 ற்கு திருவள்ளுவர் தினம் மாற்றப்பட்டது..
பண்பாட்டு நிலை சக்திகள் திருவள்ளுவரை மீட்க முயல்வது போலவே,சித்திரை 1 தமிழ் புத்தாண்டினை தக்க வைக்க முயல்வது போலவே,திருவள்ளுவர் பிறந்த தினத்தை 'வைகாசி அனுஷம்' என்று நிறுவவும் அவர் முக்தி தினத்தை 'மாசி உத்தரம்' என கொண்டாடவும் முயல வேண்டும்..இதற்காக ஆதீனங்களை,ஆன்மீக பெரியவர்களை ஒன்று கூட வைத்து தீர்மானங்களை கொண்டு வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..

No comments:

Post a Comment