Wednesday, October 2, 2019

கீழடி பானை கீறல் பிராமி எழுத்துக்களும் - தொல்காப்பியமும் & வேதங்களும்

இன்றுவரை கிடைத்துள்ள அனைத்து தமிழ் பிராமி கல்வேட்டுகளையும் தொகுத்து அவற்றின் எழுத்து உருக்களின் படம்

பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் "எ""ஒ" இல்லை. 5ம் நூற்றாண்டு வரை உயிர் எழுத்து 8 தான்.  தமிழில் மொத்தம் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 ஆகும், ஆனால் கல்வெட்டுகள்ளில் ஆரம்பங்களில் உயிர் எழுத்து  8 மட்டுமே, பின் 10 உள்ளது, அதே போலவே மெய் எழுத்துக்களும், முழுமையாய் உரு பெற்றது பொஆ 5ம் நூற்றாண்டில் தான்.
வடமொழிக்கு குறில் "எ" "ஒ" இல்லை ,  எனவே தனி உரு உருவாக்கப் படவில்லை.  தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெள்ளிவாகிறது.
இவற்றின் அடிப்படையில் மிகத் தெளிவாய் தொல்காப்பியம் எழுத்திலக்கணம் பொஆ 8ம் நூற்றாண்டிற்கு முன் எழுதப் பட்டு இருக்க இயலாது என்பது மிகத் தெளிவாகும்.

 தமிழ் மெய் எழுத்துகளிலும், பின்னர் உயிர் மெய்யிலும் சிறப்பு எழுத்துக்கள் "ள" "ற" "ன"; இவை வட மொழியில் கிடையாது, எனவே தான் தமிழுக்கே தனியாய் இவை பீனர் உருவாகியவை ஆதலால் கடைசி எழுத்துக்களாய் சேர்த்தார் தொல்காப்பியர்  என பல அறிஞர்கள் கூறியதை பேராசிரியர் சு.இன்னாசி அவர்கள் தன் எழுத்தியல் நூலில் கூறுவார்.  இதற்கு மாறாக தமிழ்-திராவிஷ உணர்வாளர்களால் தமிழ் எழுத்துக்கள் வடமொழி எழுத்திலிருந்து தான் உரு பெற்றது என்பதை ஏற்க இயலாமல் போக, கே.பி.அறவாணன் ஒரு போலி ஆய்வு கட்டுரை படித்தார், ஆனால் ஆய்வுலகம் ஏற்கவில்லை என்கிறார் பேராசிரியர்.
(வடமொழி என்கையில் சமஸ்கிருதம் என்பதைவிட அதன் பேச்சு வழக்கு மொழியான பிராகிருதத்தையே குறிக்கும்)
மிகவும் பழமையான வடமொழி கல்வெட்டுகளில் வடமொழியின் 33 மெய் எழுத்திற்க்கும் உரு உள்ளது.
வடமொழியின் எழுத்துருவை தான் தமிழ் பகிர்ந்து கொண்டது என பன்னாட்டு அறிஞர் ஏற்பர்


தொல்காப்பியம் காலம்
இன்று  உள்ள அனைத்து கல்வெட்டு, செப்பேடுகள், யாப்பு இலக்கண வலர்ச்சி கொண்டு பார்த்தால் தொல்காப்பியம் பொஆ 700 முன்பு செல்லாது, திருக்குறள் 9ம் நூற்றாண்டு தான் வரும். சங்கப் பாடல்களில் யாப்பிலும், மொழியியலிலும் திருமுருகாற்றூபடாஇ, கலித்தொகை, பரிபாடல் 6 - 7 நூற்றாண்டுக்கும் முன் தள்து நேர்மையான ஆய்வு கிடையாது. 
வேதங்களின் காலம்
சிந்து சரஸ்வதி நதி நாகரீகம் என்பது -ஆரம்பகால இடம் என்பது ஹரியானாவின் பிர்ரானா என்ற இடம், இது குருக் ஷேத்ரம் அருகே உள்ளது - அங்கு கிடைத்த பொருட்களின் கரிமம் 14 சோதனைபடி 9500 வருடம் தொன்மையானது  -சிந்து பாகிஸ்தானில் இருக்க  3 லட்சம் சதுர கிலோமீ இட அளவு  பரப்பு கொண்ட நாகரீக அதன் பெயரால் அழைப்பதே சரி. மேலும் ஹரப்பாவின் பெருவீழ்ச்சி வெள்ளத்தினால் பொமு1900ல் முடிகிறது. 

வேதங்களில் பல இடங்களில் சரஸ்வதி பாடப் படுகிறது, பழமையான ரிக் வேதத்தின் மொழியியல் அடிப்படையில் அறிஞர்கள் பிரித்த் 5 மண்டலங்கள் பெருமளவில் சரஸ்வதி நதி வரண்டு போவதற்கும் முன்பானவை, அவற்றில் அவை ஓடுபவையாகவும், பிந்தியவை நினைவின் வர்ணனை என அறிஞர்கள் தொல்லியலோடு பொருத்தி காட்டுவர்.

வேள்வியின் யக்ஞ  கூடம் என சங்க இலக்கியம் கூறும் யூப சாலை காளிபங்கனில் (ராஜஸ்தன்)   6000 வருடம் முன்பே கிடைத்துள்ளன.

"மொழி பற்றும் -மொழி வெறியும்", மார்க்சீய அறிஞர் வானமாமலை என ஒரு கட்டுரையில், தனிநாயகம், பாரதி தாசன், மனோன்மணியம் சுந்தரனார் போன்றோர் எழுத்துகளில் பெருமளவில் உணர்வு அடிப்படையில் வரலாற்று புரிதல் இன்றி பிரிவினை வாதம் வளர்க்கப்படுகிறது எனத் தெளிவாக கூறுவார்.

இன்று சற்றும் நேர்மையில்லாத தரவுகள் அடிப்படையில் பேசாமல் தமிழ் பற்றாளர் வேடமிடுவோர் அறிய வேண்டியது, இன்று தமிழை ஆராயும் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு அறிஞர் எவரும் அர்த்தமற்ற வேர் சொல் ம்மூலம் ந்நிருப்க்கும் உளறல், முச்சங்க தொன்மங்களை நம்புதல், குமரிக் கண்டம் போன்ற வர்கள் நூல் கட்டுரைகளை ஏற்பதே இல்ல்லை.








1 comment:

  1. பாதுகாக்கப்படவேண்டிய பதிவு

    ReplyDelete